Wednesday, August 4, 2010

தப்புத் தாளங்கள்..(வலைச்சர புதன்)



வணக்கம் நண்பர்களே,



எத்துனையோ விடைகிடைக்காத கேள்விகள் இருக்கின்றன இப்பூவுலகில் கிடைத்த விடையை தவறவிட்டு கேள்வியுடன் தேடி அலையும் நாம் ஆறறிவு
என்ற பட்டம் சுமப்பது என்பது என்ன ஒரு விந்தை? நாகரீகம், அறிவியல், வியாபாரம் என கடந்து வந்த பாதையை மறந்த / மறக்க அவசரப்படும்
ஒரே உயிரினம் நாமாகத்தான் இருக்க முடியும்.

அதில் முழு மூச்சாக இப்பொழுது நடந்துகொண்டிருப்பது விவசாய புறக்கணிப்பு அல்லது விளை நிலங்கள் அழிப்பு. அரிசியில் கிட்டத்தட்ட ஆயிரம் வகைகள் இங்கே இருந்திருக்கிறது. பாரம்பரிய விவசாயமுறைகள் அழித்து ரசாயண விஷங்கள் கொட்டி தாய்ப்பால் வரை கலந்த அரசியல்/விஞ்ஞானம்/ விவசாயிகளின் அறியாமை என நாம் இழந்த முக்கியமான ஒன்றின் சிறு துளி இது.

விதைகளே இல்லாத மலட்டு விவசாயத்திற்கான அரசியல் அழுத்தங்கள் மிக வேகமாகவே பரவிக்கொண்டிருக்கிறது. நிமிண்ட நிமிண்ட புழுவும் சீறுமே! இயற்கை விவசாயம் எனும் பாரம்பர்ய முறை இப்பொழுது களை கட்டுகிறது. பஞ்சகவ்யா, வேப்பம்புண்ணாக்கு, மண்புழு உரம், வேளாண்காடுகள், இயற்கை காக்கும் மரங்கள், ரசாயணம் புறக்கணித்து இயற்கை முறையில் அமோக விளைச்சல் என தொலைத்த விஷமில்லா விவசாயத்தினை தேடிக்கண்டுபிடித்து சிலாகித்துக் கொண்டிருக்கிறான் விவசாயி.

ஒரு நாளேனும் நாம் சாப்பிடும் சாப்பாடானது கடைகளில், இயந்திரங்களில் தயாரிக்கப்படுவதில்லை அது ஒரு விவசாயி என்றழைக்கப்படும் சக மனிதனால் இரவு பகல் பாராது கண்விழித்து பாதுகாத்து பிரசவிக்கப்படுகிறது என்று நாம் உணர்ந்தால் உணவென்பது நமக்கு நிச்சயம் இறைவனாகும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


வாழை இலையே பேப்பரில் வந்துவிட்டது ஒரு கொடுமைதான். போகட்டும் உணவிடும் விவசாயிக்கு நன்றி சொல்லி தலை வாழை இலை போட்டு எப்படி சாப்பிடவேண்டும் என்பதைத் தாமரை(ச்) செல்வன் சொல்லி இருப்பதை கொஞ்சம் இங்க பார்த்துடலாம்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


அப்படியே விழியும் செவியும் ~ பிரபாவின் அது போல வருமா?’ என்ற இடுகையும் கூடவே ஊடகங்களில் ’விலங்குகள்’ என்ற இடுகையில் மனித சுய நலத்தையும் கேள்விகேட்கிறார். கல் தடுக்கி விட்டது, டேபிள் இடித்து விட்டது என்று சொல்பவர்கள் படிக்கவேண்டிய இடுகை. :-))

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~




சதுக்கபூதம் அவர்களின் விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்கள் வலைப்பூவில் பூண்டுக்காய் ஒரு திருவிழா.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


திருநெல்வேலி மாநகராட்சியில் உணவு ஆய்வாளராகப் பணிபுரியும் திரு.அ.ரா.சங்கரலிங்கம் அவர்களின் வலைப்பூ உணவு உலகம் என்ற தலைப்பில் இருக்கிறது. இவரின் சமீபத்திய இடுகை கலப்பட காய்கறிகள் கலக்குது பாருங்கள்!


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~



நண்பர் ஹாலிவுட்பாலாவின் ~ அக்கரைச் சீமையில் - Food, Inc என்ற இடுகைகள் படித்தால் மக்களின் உணவு மோகம் அல்லது பசியை பணமாக்க விரும்பும் மனித விலங்கின் தந்திரங்கள் உங்களுக்கு அதிர்ச்சியைத் தரலாம்!


சாப்பிடும் உணவில் விழிப்புடன் இருப்போம். இயற்கை சார்ந்தவைகளுக்கு முன்னுரிமை கொடுப்போம்.



விவசாயியை நிம்மதியாய் பயிரட வைக்கவில்லையெனில் ஜகம் அழியும்!!



மீண்டும் சந்திப்போம்!!


அன்புடன்,
ஷங்கர்..

26 comments:

  1. வாழ்த்துக்கள் ஷங்கர்.

    விவசாயம் தொடர்பான குறிப்புடன் நண்பர்கள் அறிமுகம் அருமை.

    hi me the First....

    Pinnutta neram iravu 11.10 (Abu Dhabi)

    ReplyDelete
  2. விவசாயியை நிம்மதியாய் பயிரட வைக்கவில்லையெனில் ஜகம் அழியும்!!


    ....நல்ல பயனுள்ள விழிப்புணர்வு பதிவுகளை அறிமுகப் படுத்தி இருக்கீங்க... ரொம்ப நன்றி.

    ReplyDelete
  3. நல்ல அறிமுகங்கள் சங்கர்.

    ReplyDelete
  4. நல்ல பயனுள்ள பதிவுகளை அறிமுகப்படுத்தி இருக்கீங்க...

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அன்பின் ஷங்கர்

    அருமையான அறிமுகங்கள் - தேடிப்பிடித்து அறிமுகம் செய்தது நன்று. அததனையும் சென்று பார்த்தேன் - நல்ல இடுகைகள்.

    நல்வாழ்த்துகள் ஷங்கர்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  6. மூன்று நாட்களின் தலைப்புக்களும் தகவல்களும் அருமை.

    ReplyDelete
  7. இந்திய தேசத்துக்கு எது ஆதாரமோ....அது பற்றிய பதிவுகள் பற்றி பேசியிருப்பது மிக்க அருமை சங்கர்.....சுட்டிகளை படிக்கிறேன்..!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. அறிமுகப்படுத்திய பதிவுகள் அருமையானவை. நன்றி.

    ReplyDelete
  9. இன்னிக்கு ரொம்பவே அருமையான பதிவுகளை அறிமுகப்படுத்தி இருக்கீங்க.

    இனிய பாராட்டுகள்.

    ReplyDelete
  10. எது தேவையோ, அதை வலியுறுத்தி உள்ளீர்கள்.

    ReplyDelete
  11. விவாசாய‌த்தை ப‌ற்றி ந‌ல்ல‌ அறிமுக‌ங்க‌ள் ஷ‌ங்க‌ர்ஜி.... வாழ்த்துக்க‌ள்.

    ReplyDelete
  12. ஆஹா.. இதுக்குத்தான் நேத்து ஏரியாவில் சுத்திகிட்டு இருந்தீங்களா?? :) :)

    ReplyDelete
  13. இனி வரும் காலங்களில் உணவு, தண்ணீர் இரண்டுக்கும்தான் சிரமப்படுவோம்..
    தேர்ந்த அறிமுகங்கள்..அனைவருக்கும் பாராட்டுக்கள்...

    ReplyDelete
  14. உங்களைப்போல ஆட்கள் இருப்பதால் தான் என் போன்ற அற்பர்களையும் உலகம் தெரிந்து கொள்கிறது. மிக்க நன்றி. உங்கள் திருக்கண்களால் என் பதிவையும் ஒரு முறை மேயுங்களேன்.
    mathisutha.blogspot.com

    ReplyDelete
  15. நல்ல அறிமுகங்கள்

    ReplyDelete
  16. வழக்கமான பதிவர்களில் இருந்து தனிப்பட்டு விவசாயம் தொடர்பாக எழுதியிருப்பது
    பாராட்டுதலுக்கு உரியது.
    அறிமுகங்களும் அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. //உங்களைப்போல ஆட்கள் இருப்பதால் தான் என் போன்ற அற்பர்களையும் உலகம் தெரிந்து கொள்கிறது.//

    ஆமாங்க எசமான்... ஆமாங்க எசமான்

    ReplyDelete
  18. பாலா கொஞ்சம் முந்திக்கிட்டீங்க போலிருக்கு-

    இப்பத்தான் ஆணியெல்லாம் கழட்டு உள்ளே வரமுடிஞ்சது.

    பாலா உங்க Food பதிவு ஏற்கனவே நான் பார்த்த பதிவு தான். தமிழ்மணத்தோட சண்டைக்கு போன மாதிரி என்னோட வராதீங்க. தலைப்பை தமிழில் வைக்க தேர்ந்தெடுக்க கஷ்டமா இல்ல நல்லாயிருக்காதுன்னு நீங்களே முடிவு செய்யுறீங்களா?

    அப்புறம் இன்னோன்னு. இந்த பதிவ நீங்க தான் எழுதினீங்களா? இல்ல மண்டபத்துல யாராவது?

    ஒரே வார்த்த அற் பூதம்.

    ReplyDelete
  19. ஏன் ஷங்கர் கொஞ்சம் அவசரமோ?

    கொஞ்சம் அலைண்மெண்ட் பார்க்கலாமே?

    ReplyDelete
  20. அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்... சங்கர் அசத்தல் தொடரட்டும்...

    ReplyDelete
  21. மோதிர கையால் குட்டு, உங்கள் அறிமுகம். நன்றி. வாழ்த்துங்கள் வளர்கிறேன்.

    ReplyDelete
  22. // இந்த பதிவ நீங்க தான் எழுதினீங்களா? இல்ல மண்டபத்துல யாராவது?//

    ஷங்கர்... ஜோதிஜி கேக்கறாரில்ல? வந்து ஒழுங்கா பதில் சொல்லுங்க!!

    //பாலா உங்க Food பதிவு ஏற்கனவே நான் பார்த்த பதிவு தான்.//

    நீங்க அதன் ரெண்டாவது பாகத்தில் கமெண்ட் போட்டிருக்கீங்க ஜி. :)

    ReplyDelete
  23. ஒரு விசயம் பற்றிய அக்கறையும் அதை தேடி அதற்குரிய பதிவுகளும் என அருமை.

    ReplyDelete
  24. ரொம்ப வித்யாசமான தேர்வுகள்

    ReplyDelete