Thursday, August 5, 2010

என்னைச் சுற்றி சில நடனங்கள் - வலைச்சர வியாழன்..

ஆதிகாலத்தில் ஒரு தீயை உருவாக்க எத்தனை எத்தனை சிரமங்கள்?, விலங்குகளிலிருந்தும், இருளிலிருந்தும், உணவுக்காகவும் அதனை அணையாமல் பாதுகாத்து என!! சரக்கென்று தீக்குச்சி கொண்டு உரசி தீ உருவாக்கும்போது சிக்கிமுக்கிக் கல் நினைவுக்கு வருமா என்ன?

ஆனாலும் கொஞ்சம் நின்று, நிதானித்து நம்மைப் பார்ப்பது என்பது மிகவும் ரசனையான ஒன்று என்பதை அறிவீர்களா? இரவு வானில் மெல்ல நட்சத்திரங்களூடே ஒரு பொழுது கழித்து எத்துனை நாட்களாயிற்று?

ஒரு குவளைத் தண்ணீர் என்றாவது மெதுவாய் ருசித்து அருந்தி இருக்கிறீர்களா? எல்லாமும் அவசரம், தொலைக்காட்சி கண்டவாரே உணவு, சாப்பிடும்போதே வேறொன்றின் நினைவு, புற ஒலிகளில் தொடர்சியாய் என அலை பாயும் மனதும் அது நகர்த்தும் நாமும் என வாழ்வு ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. இருப்பினும் சில நேரம் நம்மையும் அறியாது சூழலில் ஒன்றிணையும் தருணம் என்பது ரசிக்கக் கூடியதாய் உள்ளது.


அப்படி ரசித்தவர்களில் சிலர்





தமிழ்ப் பறவையின் மீண்டும் மீண்டும் நான்..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


மழை பற்றிய மோகத்தை கதையாகச் சொல்லிய மீனாட்சி நாச்சியாரின் மழை தெய்வம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


வெட்டிக்காடு என்ற பெயர் கொண்ட வலைப்பூவில் எழுதும் திரு.ரவிச்சந்திரன் அவர்களின் தேடுகிறேன் என்ற இந்த இடுகையில் தனது கிராம வாழ்வின் ஏக்கத்தை / மாறுதலை படம் பிடிக்கிறார்.




அடுத்து மைத்துளிகள் என்ற வலைப்பூவில் எழுதும் மாதங்கி அவருடைய சமீபத்திய இடுகை ரப்பர் பந்து. இவர் ஆங்கிலத்திலும் சிறப்பாக எழுதுகிறார்.



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அடுத்து ஆதி மனிதன் அவர்களின் Economy Class = மாட்டுவண்டி தன் முதல் விமானப் பயணத்தை சுவைபட எழுதி இருக்கிறார்..:)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


ஆரண்ய நிவாஸ் ஆர்.ராம மூர்த்தி அவர்களின் மலரும் நினைவுகள் படியுங்கள் சுவாரஸ்யமான ஒரு கேரக்டர் இடுகை.:)


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சில பணிகள் காரணமாக காலை பதிவேற்ற முடியவில்லை. மன்னியுங்கள் மக்களே.



மேலும் பல சுவாரஸ்யங்களோடு மீண்டும் சந்திக்கிறேன்,





அன்புடன் ,
ஷங்கர். :)



.

18 comments:

  1. நல்ல அறிமுகங்கள் அண்ணே

    ReplyDelete
  2. அருமை நண்பரே. படித்துவிடுவோம்.

    ReplyDelete
  3. நன்றி!...படிக்கிறேன் ஒவ்வொருவராக....

    ReplyDelete
  4. எல்லோருமே நான் அறியாதவர்கள் . அறிமுகத்துக்கு நன்றி ஷங்கர்

    ReplyDelete
  5. சுவாரஸ்யங்கள் தொடரட்டும் !

    ReplyDelete
  6. நல்ல நல்ல தளங்கள். பல நேரங்களில் படிக்க தவறுகிறோம். நஷ்டம் என்னவோ வாசிப்பாளர்களுக்கு தான். நன்றி அறிமுகம் செய்தமைக்கு.

    ReplyDelete
  7. ஷங்கர் இரண்டு மூன்று நாட்களாகவே ஏதோ ஒரு நிர்ப்பந்த அவசரம் உங்களிடம் இருந்தது நன்றாகவே தெரிந்தது.

    தெளிவான பாதையில் முன்னேறுங்கள்.

    ReplyDelete
  8. மிகவும் சுவாரசியமான பகிர்வு..நன்றி

    ReplyDelete
  9. எனது பக்கத்திற்கு வந்ததற்கும், அறிமுகப்படுத்தியதற்கும் நன்றிகள் பல...
    மற்ற அறிமுகங்களையும் படித்துவிடுகிறேன்...

    ReplyDelete
  10. எல்லோரும் எனக்கு அறிமுகம்தான் என்றாலும் .. இது வித்தியாச அறிமுகம் பாராட்டுகள்

    ReplyDelete
  11. எல்லோருமே நான் அறியாதவர்கள் . அறிமுகத்துக்கு நன்றி ஷங்கர்

    ReplyDelete
  12. சிலர் எனக்கு தெரியாதவர்கள். இன்னும் கொஞ்சம் எழுதலாமே நண்பரே

    ReplyDelete
  13. //ஷங்கர் இரண்டு மூன்று நாட்களாகவே ஏதோ ஒரு நிர்ப்பந்த அவசரம் உங்களிடம் இருந்தது நன்றாகவே தெரிந்தது.
    //

    எனக்கும் அந்த டவுட் இருந்துச்சிங்க. இல்லைன்னா.. என் பதிவுக்கு லிங்க் கொடுத்து ஒப்பேத்த வேண்டிய நிலைமை வந்திருக்குமா?

    ReplyDelete
  14. ரவி, ஆரண்யநிவாஸ், ஆதி மனிதன் இப்படி எனது பல நண்பர்கள் பற்றி எழுதிருக்கீங்க மகிழ்ச்சி

    ReplyDelete
  15. //ஒரு குவளைத் தண்ணீர் என்றாவது மெதுவாய் ருசித்து அருந்தி இருக்கிறீர்களா? //

    இந்த கேள்வியே நிறைய உணர்த்திய மாதிரி இருந்தது:)

    ReplyDelete
  16. ஆதி மனிதனின் விமானப் பயணம் அருமை :)

    ReplyDelete
  17. //எனக்கும் அந்த டவுட் இருந்துச்சிங்க. இல்லைன்னா.. என் பதிவுக்கு லிங்க் கொடுத்து ஒப்பேத்த வேண்டிய நிலைமை வந்திருக்குமா?//

    இல்லைனா என் பதிவுக்கு லிங்க் குடுத்துருங்கண்ணே......

    ReplyDelete
  18. முதலில் அறிமுகத்தை படித்து விட்டு அதோடு போக மனதில்லாமல் அவர் எழுதிய மற்றவைபடித்து திரும்ப வந்து அடுத்த அறிமுகம் என்று நீண்டு கொண்டே போகிறது . எனவே அறிமுகப் படுத்தியவருக்கு தாமதமான பாராட்டுக்கள்

    ReplyDelete