உங்களின் அமோக வரவேற்புக்கு நன்றி நண்பர்களே!
கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்தமானதுதான். கவிதைகள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற வட்டத்தில் அடைத்துக் கொள்வதையும், அடைக்கப் படுவதையும் மவுனமாகவே பார்த்துக் கொண்டு விலகும் எனக்கு..
புரியாத கவிதைகளை உடலில் சுருக்கங்கள் விழுந்து ஏதும் பேசாது ஆழப் பார்க்கும் ஒரு வயதான மனிதர் போலவும், புரிந்தவைகள் இரு கைகள் நீட்டி ஓடி வரும் குழந்தைகளைப் போலவுமே உணர்கிறேன். அப்படி நிறைய இங்கே வாசித்திருந்தாலும் நான் படித்த சில பூக்கள் உங்கள் பார்வைக்கு..
புறப்படும் இடமும்
சேரும் இடமும் ஒன்றுதான் என்றாலும் எல்லோருடைய ரயிலும் ஒன்றல்ல..என்று முடியும்
பி.ஆர்.மஹாதேவனின் ரயிலும் ரயில் சார்ந்த நிலமும். இந்தக் கவிதைகளின் சில வரிகள் எனக்குள் ஏதேதோ சிந்தனைகளைத் தூண்டிவிட்டன!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாளைப் போவான் என்ற பெயரில் எழுதும் நண்பரின் பக்கம் இரைச்சலும் இரைச்சல் சார்ந்ததும். ஆழமாய்ப் படிக்கும், கிடார் வாசிக்கும் அழகான ஆறு விரல்கள் கொண்ட விப்ரோவில் வேலை செய்யும் இளைஞன் / வலை ~ சினேகிதன்.:-)
அவரின் சமீபத்திய புனிதம் என்ற கவிதையின் சில வரிகள்..
புனிதம் புணர்ந்த புனிதமும் புனிதம்
புனிதமும் புனிதமும் வன்மமாய்ப் பொருந்துகையில்
புனிதம் உடைக்கிற புனிதமும் புனிதம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அடுத்து கொற்றவை ~ சாவின் உதடுகள் என்ற வலைப்பூவின் பெயரில் எழுதும் இவரின் கவிதைகள் உங்கள் புருவம் உயர்த்தவைக்கும்.இவரின் கல்லெறியும் குளம் என்ற கவிதையிலிருந்து மீண்டும் புனிதம் பற்றிய சில வரிகள்..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திரு.குமரகுருபரனின் ~ குமார சம்பவத்தில் எதுவும் நிகழாத போது
என்ற கவிதை முடியும்போது..
இந்த மழைக் காலம் முடியும் முன்
கொஞ்சம் பூக்களையாவது சேகரித்து கொள்ளலாம்
நம்முடைய மரித்தல் குறித்த கடைசி சடங்குகளுக்காக
நம் காதல் குறித்து யாரேனும் விசாரித்தால்
முகமன் சொல்லி மறுத்துவிட்டு வாயேன்..
கொஞ்சம் பூக்களையாவது சேகரித்து கொள்ளலாம்
நம்முடைய மரித்தல் குறித்த கடைசி சடங்குகளுக்காக
நம் காதல் குறித்து யாரேனும் விசாரித்தால்
முகமன் சொல்லி மறுத்துவிட்டு வாயேன்..
என்று சொல்லி நமக்குள் ஏதேனும் புதிதாய் துவக்குகிறது!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திரு.தா.அகிலன் அவர்களின் கனவுகளின் தொலைவு வலைப்பக்கத்தில் நிகழாக் கவிதையில் சில வரிகள்..
என் கவிதையின் கரங்கள்நீண்டபடியிருக்கின்றன சொற்களைத்தேடி….
தாயின் இறகுகளை நீங்கித் தப்பும் ஒர் தனியன் குஞ்சைப்போல சிக்கிக்கொள்ளாது தப்பியலைகின்றன சொற்கள்..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இதுபோக நிறைய நண்பர்கள் கவிதைகளில் சொக்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள். வலைச்சரத்திலும் அவர்கள் அதிகம் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். அதிகம் முன்னிருத்திக்கொள்ளாத சிலரையே நான் இங்கே பகிர்ந்துள்ளேன். :))
நன்றி நண்பர்களே,
மீண்டும் சந்திப்போம்.
டிஸ்கி::
(வலைச்சரத்திலேயே 50 இடுகைகள் எழுதிவிடுவேனோ என்று பயமாய் இருக்கிறது! ) ::-))
.
நன்றி ஷங்கர்ஜீ. எல்லோருமே புதியவர்கள்...
ReplyDeletenalla pagiruvu shankar
ReplyDelete500 கூட எழுதலாமே?
ReplyDelete500 கூட எழுதலாமே?
ReplyDeleteஎல்லா கவிதைகளுமே நன்றாக உள்ளன.
ReplyDeleteநன்றி.
அடப்பாவிகளா... தூங்கிட்டு இருந்த நேரத்தில்... என்னென்னமோ நடந்து போச்சே......!!
ReplyDeleteஇன்னும் ஒரு வாரத்துக்கு இங்கனதான் டேரா!!!
சீனா, ஜப்பான், கொரியான்னு யாரு வந்தாலும் எதிர்கொள்வான் இந்த வீரன் என்பதை எடுத்துச் சொல்லி.. கும்மியை ஆரம்பிக்கிறேன்.
[[ சீனா சார், ஆட்களை தேர்ந்தெடுக்கும் முன்னாடி, அவங்க என்னாண்ட மோதியிருக்காங்களான்னு மொதல்ல பார்த்துக்கங்க. :) ]]
//இந்தக் கவிதைகளின் சில வரிகள் எனக்குள் ஏதேதோ சிந்தனைகளைத் தூண்டிவிட்டன!//
ReplyDeleteஇதெல்லாம்.. ரொம்ப ஓவரா தெரியலையா பலா??!! நமக்காவது... சிந்தனையாவது!! :) :)
இந்தப் பதிவு எதுவும் தமிழில் இல்லாததால்... ஏரியாவை காலி செய்து வெய்ட்டிங்!!
ReplyDeletenalla arimukam.
ReplyDeleteதேடியெடுத்த பொக்கிஷங்கள். அறிமுகங்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் சங்கர்!!
ReplyDeleteயாரையும் தெரியல,போய் தான் படிக்கனும்
ReplyDeleteநன்றி அண்ணே
வாழ்த்துக்கள் நண்பரே...
ReplyDeleteஅருமையான தேர்வு.... இது வரை யாரும் அறிமுகப்படுத்தாதவர்கள் இப்படித்தான் அறிமுகப்படுத்தவேண்டும்... உங்கள் பணியை சிறப்பாக இருக்கிறது... இன்னும் புதியவர்களை எதிர்பார்க்கிறேன்....
அறிமுகங்கள் அசத்தல் சேம் பிளட்...
ReplyDeleteசிக்னல் நல்லாருக்கும்போது மிஸ்ட் கால் கொடுங்க! பேசலாம்!
வாழ்த்துக்கள்.
பிரபாகர்...
இரயில் கவிதை மிகவும் இரசிக்கக்கூடியதாக இருந்தது
ReplyDeleteவாழ்வின் எதார்த்தத்தை அழகாக சொல்லியிருக்கார்
நன்றி அறிமுகத்திற்கு
"புரியாத கவிதைகளை உடலில் சுருக்கங்கள் விழுந்து ஏதும் பேசாது ஆழப் பார்க்கும் ஒரு வயதான மனிதர் போலவும், புரிந்தவைகள் இரு கைகள் நீட்டி ஓடி வரும் குழந்தைகளைப் போலவுமே உணர்கிறேன். " இந்த நிலை தான். நன்றாய் சொன்னிர்கள் . புதிய அறிமுகத்தில் புதிய நண்பர்கள் நன்றி
ReplyDeleteசங்கர் அண்ணே... எல்லாம் சூப்பர்
ReplyDeleteகொற்றவை அவர்களின் பதிவுகளை ஏற்கனவே படித்திருக்கிறேன்... மற்ற பதிவுகள் எனக்கு புதியது...
ஷங்கர்ஜி, அருமையான அறிமுகங்கள்.
ReplyDeleteஇதில் பகிர்ந்திருக்கும் கவிதை வரிகளே நம்மை அத்தளத்திற்கு நகர்த்துகிறது. நன்றி பாஸ்!
இவர்கள் எனக்கு புதியவர்கள்.. உங்களுக்கு என் நன்றிகள் ...
ReplyDeleteஎல்லா கவிதைகளுமே நன்றாக உள்ளன.
ReplyDeleteநன்றி.
ஷங்கர் எல்லாருமே புதிய அறிமுகம்.
ReplyDeleteஅருமையான தேர்வுகள்.... வாழ்த்துக்கள்!
ReplyDeleteரயில் கவிதை டாப்
ReplyDeleteஎல்லாருடைய கவிதையும் சூப்பரா இருக்குங்க..
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.. :-)))
நீங்கள் அறிமுக படுத்திய ஒரு சிலர் தான் எனக்கு தெரியும் .
ReplyDeleteபுதிய அறிமுகங்கள் எல்லோர் பதிவையும் படிக்க தூண்டும் உங்கள் விளக்கங்கள் அருமை,நன்றி.