Sunday, September 26, 2010

சூப்பர் ஜெய்லானி - வாங்க கலக்க வாங்க சரவண குமரன்

அன்பின் சக பதிவர்களே

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியராகப் பொறுப்பேற்ற அருமை நண்பர் ஜெய்லானி, ஏற்ற பொறுப்பினை மன நிறைவுடன் நிறைவேற்றி நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் வித்தியாசமான முறையில் - தினம் ஒரு தலைப்பாக - பதிவர்களை அறிமுகப்படுத்தி உள்ளார். முன்னுரை அறிமுகம் முடிவுரை என மூன்று பகுதிகளாகப் பிரித்து அழகாக சரத்தினைத் தொகுத்திருக்கிறார்.

சென்ற வாரத்தில் ஏழு இடுகைகள் இட்டு, ஐநூற்று எண்பது மறு மொழிகள் பெற்று, நூற்றி இருபது இடுகைகளை அறிமுகப் படுத்தி உள்ளார். சாதாரணமாக - ஆசிரியர்கள் இவ்வளவு பதிவர்களை அறிமுகப் படுத்துவது கிடையாது. இவ்வளவு அறிமுகங்கள் செய்ய வேண்டுமென்றால் - அத்தனையையும் படித்திருக்க வேண்டும். சுட்டிகள் - இடுகைகளின் தொடர்பு அறிமுகத்தில் அளிக்க வேண்டும். அது அவர்களின் கடும் உழைப்பினை வெளிப்படுத்துகிறது. வழக்கமான, அவரது சொந்த வலைப்பூவில் எளிதாக இடும் இடுகைக்கு உழைப்பதை விட இங்கு அதிகம் உழைத்திருக்கிறார்.

நண்பர் ஜெய்லானியினை பாராட்டி, நல்வாழ்த்துகளுடன் விடை அளிப்பதில் பெருமை அடைகிறேன்.

அடுத்து நாளை செப்டம்பர் 27ம் நாள் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் நண்பர் சரவணமுமரன். இவர் குமரன் குடில் என்னும் பதிவினில் எழுதி வருகிறார். இவர் ஒரு சாதாரண தமிழனாக வாழ விரும்புபவர் - வாழ்பவர். இவர் பெங்களூரில் மென்பொருட்துறையில் பணி புரியும் ஒரு தென் தமிழக இளைஞர். பெரும்பாலும் எழுதுவதை விட வாசிப்பதில் அதிக ஆர்வமுடையவர். வாசிப்பின் தாக்கம் எழுதத் தூண்டி எழுதவும் செய்கிறார்.

நண்பர் சரவண குமரனை வருக ! வருக ! ஆசிரியப் பொறுப்பேற்க வருக ! என வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் சரவனா குமரன்
நட்புடன் சீனா

13 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. வணக்கம் சரவண குமரன். வருக...

    ReplyDelete
  3. சீனா ஐயா! நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை! நண்பர் ஜெயலானியின் உழைப்பும், அவர்காட்டிய ஆர்வமும், அவரின் நகைசுவை உணர்வும் என்னைப் போன்றோரை மெய் மறக்கச் செய்து விட்டது. அவரின் கடும் உழைப்பிற்குப் பாராட்டுக்கள்.

    நண்பர் சரவண குமரன் அவர்களும் சிறப்பாக ஆசிரியர் பணியைச் செய்ய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரியப் படுத்திக்கொள்கின்றேன்.

    தைரியமாக களம் இறங்குங்கள் நண்பா! நாங்க எல்லோரும் சப்போர்ட்டுக்கு இருக்கிறோம்.

    ReplyDelete
  4. நன்றி நண்பர்களே!!!

    ReplyDelete
  5. மிகவும் நன்றி... .!!

    சரவண் குமரன் வாங்க வாங்க ..!!

    ReplyDelete
  6. அன்பின் நண்பருக்கு வணக்கம் இந்த வார ஆசிரியர் பணி மிகவும் சிறப்பாக அமைவதற்கு என் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் சரவன குமாரன் சார்

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் சரவணகுமரன்.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. //அவரது சொந்த வலைப்பூவில் எளிதாக இடும் இடுகைக்கு உழைப்பதை விட இங்கு அதிகம் உழைத்திருக்கிறார்.//

    உண்மை! சொந்த வேலையை விட்டு, சொந்த டீவீ சேனலை விட்டுவிட்டு எவ்வளவு நேரம் செலவழித்து இப்படி ஏழு நாளும் எழுதியிருப்பார் என அடிக்கடி யோசிக்கிறேன். Well Done ஜெய்லானி பாய்!

    வருக வருக சரவண ண்ணா!!

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் கூறிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...

    ReplyDelete
  13. உழைப்பாளி ஜெய்லானிக்கு வாழ்த்துக்கள்;
    சரவணகுமரன் வருக, அறிமுகங்கள் தருக!

    ReplyDelete