Wednesday, October 6, 2010

போவோமா ஊர்கோலம்

பரபரப்பான வேலைகள். சலிப்பூட்டும் ஒரே மாதிரியான வாழ்க்கை முறை. எந்திரத்தனமாய் கடிகார முள்ளோடு சேர்ந்து சுழல வேண்டிய நிர்ப்பந்தம். இப்படியிருக்கும்போது ஒரு நாளோ, ஒரு வாரமோ எந்த விதமான பிக்கல் பிடுங்கல்களும் இல்லாமல் முடிந்தவரை இயற்கையை அனுபவிப்பது தனி சுகம் தானே. அந்த அனுபவத்தை பளிச்சென்ற புகைப்படங்களோடும், அழகான வார்த்தைகளோடும் பகிர்ந்துக்கொள்வது இன்னும் சிறப்பு. அப்படி ஊர் சுற்றிய அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் சில வலைத்தளங்கள் இங்கே.

ராமலக்‌ஷ்மி மேடம் புகைப்படங்களாலேயே காதில் புகை வரவைப்பார். இவர் தளம் முழுவதும் விரவிக் கிடக்கும் படங்கள் கண்ணுக்கும் மனதுக்கும் இதமாக இருக்கின்றது. சாம்பிளுக்கு காட்டிய தண்ணி இங்கே.

நான் துளசி டீச்சரின் தளத்தைப் பார்க்கும்போதெல்லாம் ஏதாவது ஒரு பயணக் கட்டுரையின் பகுதிகள் இருக்கும். நேரிலேயே பார்த்த அனுபவம் கிடைக்கும்.

வீடு திரும்பல் மோகன் குமாரின் கூர்க் பயணம். அழகாக பகிரப்பட்ட பயண அனுபவங்கள்.

பாளையங்கோட்டையிலிருந்து அமெரிக்கா சென்று கொஞ்சம் வெட்டிப் பேச்சு பேசும் சித்ரா சில சமயங்களில் அமெரிக்காவை சுற்றிக் காட்டுகிறார்.

வளைகுடாவில் பொழைப்பப் பார்த்துக் கொண்டிருக்கும் கேவிஆர் உலக அதிசயத்தை போட்டோல சுத்தி காமிச்சிருக்காரு.

நாகை சிவாவின் இந்தப் பதிவு பாலைவனப் பூக்களை கொள்ளை அழகோடு காட்டுகின்றது.

இவற்றோடு என் பங்கிற்கு ஊர்சுற்றிய அனுபவங்கள்.

17 comments:

  1. அருமை.சுற்றி பார்த்துவிட்டு வருகிறேன்,வித்யா.

    ReplyDelete
  2. Thank you very much....... I am happy. :-)

    ReplyDelete
  3. ஆகா அருமை...வித்யா. நிறைய பார்க்க இருக்கிறது....பார்த்துவிட்டு வருகிறேன். நன்றி, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. அடடா...! நானுமா? நன்றி வித்யா

    ReplyDelete
  5. துளசியக்காவின் பதிவு, ஊர்சுற்றிப்பார்க்க திட்டமிடுறவங்களுக்கு ஒரு வரப்பிரசாதம். எல்லா அறிமுகங்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  6. காட்டிய தண்ணியை சிலாகித்துப் பகிர்ந்திருப்பது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி வித்யா:)! மிக்க நன்றி. மற்றவருக்கும் வாழ்த்துக்கள்!

    வலைச்சர வாரம் சிறப்பாக அமைய உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  7. அட.... !

    நன்றிங்கோ :)

    ReplyDelete
  8. உலகம் சுற்ற வழி காட்டியதற்கு நன்றி. துளசி டீச்சரின் தளத்தை நான் பார்ப்பதுண்டு.முத்துச்சரமும் இடையிடையே பார்ப்பேன். மற்றவற்றை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி

    ReplyDelete
  9. ஊர்சுற்றிகளைக் கண்டுக்கிட்டதுக்கு நன்றி வித்யா.

    இடம்பெற்ற அனைவருக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  10. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. துளசி டீச்சர் பற்றி அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி!!!

    ReplyDelete
  12. கேவிஆர் தளத்தில் புகைப்படங்கள் அற்புதம்!!!

    ReplyDelete
  13. நாகை சிவா
    எத்தனை அழகான பூக்களின் தொகுப்பு

    நன்றி வித்யா சிறப்பான அறிமுகங்களுக்கு!!!

    ReplyDelete
  14. அன்பின் வித்யா

    அழகான இடுகை - பயணக்கட்டுரைகள் தொகுத்த வைதம் நன்று. சந்தடி சாக்கிலே கடைசியா ஊர் பொறுக்கி வேற . நல்லாவே இருக்கு அத்தனை சுட்டிகளும். நகைச்சுவையோட.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  15. கமு கபி ரசி தேன்.........

    ReplyDelete
  16. பயணங்கள் அனைத்தும் அருமை..

    ReplyDelete
  17. சிம்பிளா அழகா தொகுத்திருக்கீங்க ..!! :-)

    ReplyDelete