Thursday, October 7, 2010

இருமணியோசை

தங்கமணிகள் பற்றி ரங்கமணிகளும், ரங்கமணிகள் பற்றி தங்கமணிகளும் புலம்பாத நிமிடங்கள் மிகக்குறைவு. சில தைரியசாலிகள் (தங்கமணியோ/ரங்கமணியோ பதிவுகள் படிக்க மாட்டாங்க என்ற நம்பிக்கையில்) அந்தப் புலம்பல்களை பதிவேற்றுவார்கள். இருமணிகளின் ஸ்பெஷல் இங்கே.

இந்தக்காலத்துல வெங்காயம் உரிக்கிறதுக்கும், உருளைக்கிழங்கு வேகவைக்கறதுக்குமே க்ளாஸ்/க்ராஷ் கோர்ஸ் நடத்துறாங்க. அப்படி இருக்கும்போது ரங்கமணி/தங்கமணிகளைப் பற்றி புரிந்துக்கொள்ள வகுப்புகள் போவது தப்பா என்ன? M.Sc Wifeology - A Complete course நடத்திருக்கார் சுரேஷ்.

பகல்ன்னா இரவு இருக்கும். இன்பம்ன்னா துன்பமும் இருக்கும். சரி வெறியாகாதீங்க. Wifeology கோர்ஸ் இருந்தா Husbandology கோர்ஸ் இருக்காதா என்ன? புதுகை அக்கா எடுக்கும் ஹஸ்பண்டாலஜி வகுப்புகள் இங்கே. பெனாத்தலாராவது முடிச்சிட்டாரு. ஹஸ்பண்டாலாஜி பாடங்கள் முடிவதாய் தெரியவில்லை:)

திருமணமாகதவர்களுக்கு எச்சரிக்கையெல்லாம் விடும் ஆதியோட வார்னிங் மெசேஜ்கள் இவை. அத்தனையும் சொந்தக் கதை சோகக் கதைதான்.

மணிகளின் மனதில் ஓடுவதைப் படம் பிடித்துக் காட்டும் பதிவுகள் அப்பாவி தங்கமணியினுடையவை.

ஏன், எதுக்கு, எப்படி, எங்க, எதனால இந்தக் கேள்விக் கணைகளை நேரம் கிடைக்கும்போதெல்லாம் தொடுத்துகிட்டே இருக்கனும். எப்படியெல்லாம் ரங்கமணிய கோர்த்துவிடலாம்ன்னு ஐடியா தர்றாங் சைனைடு கவுஞ்சர் விதூஷ்.

தராசு அண்ணே எப்பவாச்சும் தங்கமணி பக்கத்துல இல்லாதபோது தைகிரியமா பத்தே பத்து கேள்விகள் கேட்பார்.

அண்ணனுக்கு என்னோட எதிர் கேள்விகள் இங்கே.

அப்படியே ஒரு கம்பேரிஷன் ஆராய்ச்சி.

15 comments:

  1. ஹஸ்பண்டாலாஜி பாடங்கள் முடிவதாய் தெரியவில்லை//

    அதெல்லாம் முடிக்க மாட்டோம். அப்பப்ப எதிர் பதிவுகள் போட்டு டெர்ரரா இருப்போம்ல :))

    லிங்க் கொடுத்ததுக்கு நன்றி வித்யா

    ReplyDelete
  2. ஆஹா..... சூப்பர் டாபிக்!

    ReplyDelete
  3. நல்ல அறிமுகங்கள்!

    ReplyDelete
  4. தலைப்பே கவிதையாக்கிட்டீங்க

    ReplyDelete
  5. அருமையான ஹஸ்பண்டாலாஜி பாடங்கள்..சூப்பர் வித்யா.

    ReplyDelete
  6. சுவாரஸ்யத்திற்கு குறைவில்லாத வித்தியாசமான வகைப்படுத்துதல் வித்யா!!

    ReplyDelete
  7. கலக்குறீங்க.
    வாழ்த்துக்கள் வித்யா

    ReplyDelete
  8. ரெம்ப நன்றிங்க வித்யா என்னோட லிங்க் இங்க குடுத்ததுக்கு

    நெறைய wifeology மக்கள் பத்தியும் தெரிஞ்சுக்க வாய்ப்பு குடுத்ததுக்கு நன்றிங்கோ... சூப்பர் தொகுப்பு... (ஆஹா... நம்ம சப்போர்ட்க்கு ஆளுக இருக்காங்கப்பா... சூப்பர்...)

    ReplyDelete
  9. விதவிதமாய்
    வித்தியாசமாய்
    அறிமுகம் செய்யும்
    வலைச்சர ஆசிரியருக்கு
    வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  10. வித்யா சுப்பரா போய்க்கிட்டிருக்கு, வாழ்த்துக்கள்ம்மா.

    ReplyDelete
  11. நல்லா இருக்கு.

    என் பதிவையும் நீங்க தேர்ந்து எடுக்கன்னும்னா நான் என்ன செய்யணும்?

    நல்ல பதிவா எழுதனும்னு சொல்லாதீங்க. வாய்ப்பே இல்லை:))))

    ReplyDelete
  12. ’வித்யா’சமான அறிமுகங்கள்..!! :-))

    ReplyDelete
  13. // ’வித்யா’சமான அறிமுகங்கள்..!! :-))

    //

    என்னமா ஃபீல் பண்ணி கூவுறாய்யா :)))

    வித்யாசமான பின்னூட்டம் :)

    ReplyDelete
  14. காமெடிக் கலக்கல்ஸா கோர்த்துக்கொண்டு வருகிறீர்கள்.

    என் இணைப்பையும் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete