படைப்பாற்றல் : உங்களுக்குள் புதைந்திருக்கும் தனித் திறமைகைளில் சிலவற்றை வெளிக்கொணரும் எண்ணத்தில் 'எங்கள்' வலைச்சர நண்பர்கள் 'இது நம்ம ஏரியா'னு சொல்லிக் கிட்டு வாசகர்கள வெச்சு கலக்குறாங்க. எனக்குள் இருக்கும் திறமைகளைக் கூட அவர்களால் வெளிக்கொணரப் பட்டது. நம்ப முடியலன்னா வாங்க. இந்தக் கடை எப்பவுமே தொரந்துதான் இருக்கும். நீங்களும் அதோட ஐக்கியமாகிடுவீங்க.
நினைவாற்றல் : இந்த ஆற்றல் குறைந்திருந்தால் பிரச்சனைதான். தேர்வெழுதும் மாணவர் முதல் வீட்டில் / நம் வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்களுக்கு ஞாபக சக்தி ரொம்ப முக்கியம். நண்பரொருவர் இயற்கைப் பொருட்கள் நினைவாற்றலை கொடுக்கும்னு சொல்லுறாரு பாருங்க. அட அதுக்குக் கூட ஒரு எல்லை இருக்குதாம் சொல்லுறாரு வேற நண்பர். அவர் சொல்வதைப் பார்த்தால், நினைவாற்றல் அதிகமா இருந்தாலும் கஷ்டம்தானாம். நம்பலேன்னா இதப் படிச்சுப் பாருங்க தெரியும் சங்கதி.
செயலாற்றல் : "சந்தோசம் உடம்பில இல்ல உள்ளத்திலதான் இருக்கு" - சொல்லுறாரு சோமசுந்தர். அட ஆமாம்...மனசில, செயல் படுத்தணும்னு உறுதியா இருந்தா ஒடம்புக்கு அபரிமிதமான ஆற்றல் வந்துடும்னு நிருபிச்சிட்டாறு, ஒரு செயல் வீரர். எதுக்கும் சோர்வடையாம முயற்சி செஞ்சா, பலன் கண்டிப்பா கெடைக்கும்.
நினைவாற்றல் : இந்த ஆற்றல் குறைந்திருந்தால் பிரச்சனைதான். தேர்வெழுதும் மாணவர் முதல் வீட்டில் / நம் வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்களுக்கு ஞாபக சக்தி ரொம்ப முக்கியம். நண்பரொருவர் இயற்கைப் பொருட்கள் நினைவாற்றலை கொடுக்கும்னு சொல்லுறாரு பாருங்க. அட அதுக்குக் கூட ஒரு எல்லை இருக்குதாம் சொல்லுறாரு வேற நண்பர். அவர் சொல்வதைப் பார்த்தால், நினைவாற்றல் அதிகமா இருந்தாலும் கஷ்டம்தானாம். நம்பலேன்னா இதப் படிச்சுப் பாருங்க தெரியும் சங்கதி.
செயலாற்றல் : "சந்தோசம் உடம்பில இல்ல உள்ளத்திலதான் இருக்கு" - சொல்லுறாரு சோமசுந்தர். அட ஆமாம்...மனசில, செயல் படுத்தணும்னு உறுதியா இருந்தா ஒடம்புக்கு அபரிமிதமான ஆற்றல் வந்துடும்னு நிருபிச்சிட்டாறு, ஒரு செயல் வீரர். எதுக்கும் சோர்வடையாம முயற்சி செஞ்சா, பலன் கண்டிப்பா கெடைக்கும்.
இயற்கையா குணமாகக் கூடிய நோய் வந்தா முடிஞ்சவரை வேதியப் பொருட்கள் அடங்கிய மாத்திரை, மருந்துகளை தவித்து இயற்கை மூலிகை மூலம் உடலைப் பேணுவோம்னு சொல்லுறாங்கே எனக்கு தெரிஞ்சு ரெண்டு பேரு. ஒருத்தரு, இந்த பிணி வந்தா இந்தந்த காய் கனிகள் மற்றும் இயற்கை பொருட்களைக் கொண்டு தீர்வுகாணும்படி சொல்லுறாரு.
அடுத்தவரு இந்த மாதிரி எழுதி இருக்காரு.. எனக்கு ரொம்ப பயனுள்ளதா இருந்திச்சி.. நீங்க ஒரு தடவை படிச்சுப் பாருங்க.. சமயத்துல ஒங்களுக்கும் பயனுள்ளதா இருக்கலாம்.
அடுத்தவரு இந்த மாதிரி எழுதி இருக்காரு.. எனக்கு ரொம்ப பயனுள்ளதா இருந்திச்சி.. நீங்க ஒரு தடவை படிச்சுப் பாருங்க.. சமயத்துல ஒங்களுக்கும் பயனுள்ளதா இருக்கலாம்.
- இந்தாளு இருக்குறாரே எல்லாருகிட்டேயும் பிரியமா இருக்குறவரு. அவரு பின்னூட்டத்துல எப்படி புகுந்து விளையாடுறதுன்னு வரிஞ்சு கட்டிக்கிட்டு எழுதினதை பிடிச்ச / பாத்த எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சி. அது மட்டும் இல்லை.. இந்த பதிவுக்கு அவர்சொன்னத வெச்சு பின்னூட்டம் போட்ட எல்லாருக்கும் சூப்பரா ஸ்டைலா தலைப்புப் படம்செஞ்சு கொடுத்தாரும். என்னோட வலைப் பதிவுல இருக்குறது அவரு பரிசளிச்ச படம்தான். அதே பிரியத்தோட அவருக்கு பின்னூட்டம் போட்டுட்டு வாங்க,
....... மத்ததலாம் அப்புறம் பாக்கலாம்.
இது நம்ம ஏரியா அறிமுகத்துக்கு நன்றி. இதைப் பார்த்து இன்னும் பல பேர் அங்கு பங்கேற்க வருவார்கள் என்று நம்புகிறோம். அறிமுகப் படுத்தப் பட்டுள்ள எல்லாப் பக்கங்களுமே நல்ல பக்கங்கள். எந்த வலைப் பக்கம் போனாலும் அங்கு Chitra கமெண்ட் கண்டு ஆச்சர்யப் பட்டு போகிறேன். அவர் பார்க்காத வலைப்
ReplyDeleteபக்கங்கள் மிக மிகக் குறைவாகத்தான் இருக்கும்!
அனைத்தும் நல்ல அறிமுகங்கள்..
ReplyDeleteரொம்ப தேடியிருப்பீங்க போலிருக்கே..
@ ஸ்ரீராம்.. உங்கள் வலைப்பூவை மறக்க முடியுமா ? எது 'எங்கள்' உடையது ஆச்சே..
ReplyDeleteசித்ரா மேடம் பற்றி நீங்கள் சொன்னது உண்மைதான்.
எப்படித்தான் அவருக்கு நேரம் கிடைக்கிறதோ ?
@ //வெறும்பய said...
ReplyDeleteஅனைத்தும் நல்ல அறிமுகங்கள்.. //
நன்றி.
// ரொம்ப தேடியிருப்பீங்க போலிருக்கே..//
கிட்டத்தட்ட, சரியாகச் சொன்னீர்கள் .
நீங்க சொன்னதைப் பார்த்து வசந்த பின்னூட்டத்தை போய் பார்த்து ஆச்சரியப்பட்டு நானும் ஒரு படம் கேட்டு வந்துள்ளேன்.
ReplyDelete// ஜோதிஜி said...
ReplyDeleteநீங்க சொன்னதைப் பார்த்து வசந்த பின்னூட்டத்தை போய் பார்த்து ஆச்சரியப்பட்டு நானும் ஒரு படம் கேட்டு வந்துள்ளேன். //
உங்களுக்கு இந்த அறிமுகம், பயனுள்ளதாக இருந்தது கேட்டு மனம் மகிழ்ந்தது. வலைச்சரத்தில் நோக்கமே, உங்களுக்குத் தெரியாத பதிவுகளையும், பிரபலமான பயனுள்ள பதிவுகளை அறிமுகம் செய்வதே. (என்ன சீனா சார் சரியா ?)
தெரியாத எல்லாமே எனக்கு புதுசான அறிமுகங்கள்
ReplyDeleteஎனக்குத் தெரிந்த முகங்கள் தான். ஆனாலும் உங்கள் அறிமுக வரிகள் சூப்பர்.
ReplyDeleteபுதுப்புது அறிமுகங்கள்...
ReplyDeleteமாது - கலக்கல் - புதுப் புது அறிமுகங்கள் - பயனுள்ள பதிவுகள் - வசந்த் எல்லாம் சூப்பர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஅனைத்தும் நல்ல அறிமுகங்கள்.
ReplyDelete//....... மத்ததலாம் அப்புறம் பாக்கலாம்.///
ReplyDeleteஎப்போன்னு சொல்லுங்க அப்போ வரேன்
தெரிஞ்ச விஷயத்தை தெரியாதவங்களுக்கு தெரியற மாதிரி எழுதத் தெரிஞ்சிருக்கு, உங்களுக்கு!
ReplyDelete:)
மாதவன் சார்,என்னுடைய பதிவையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.
ReplyDelete:-)
நல்லா இருக்குங்க
ReplyDeleteஇன்றைக்கு எல்லா அறிமுகங்களும் அருமை.. வலை வீசி பிடிச்சிருக்கீங்க போல இருக்கு..
ReplyDeleteஞாபக சக்தி ஜோக் & வசந்த்தின் பின்னூட்ட ஐடியாவும் கலக்கல்.. இனிமேல் பின்னூட்டத்தில் படமா போட்டுத் தள்ளிட வேண்டியது தான்... :)
இன்னைக்கு எஸ்.கே மருத்துவக் குறிப்புகள் சொல்லுவாரா? #டவுட்டு
ரொம்பவே தேடி தேடி பிடிச்சி இருக்கீங்க’
ReplyDeleteஅனைத்தும் அருமை.
வாழ்த்த்துக்கள்
சிறப்பான அறிமுகங்கள்! அறிமுகம் செய்து வைக்கும் விதம் புதுமை!
ReplyDeleteஇது நம்ம ஏரியா, எங்கள் பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! தங்களின் பணி மென்மேலும் சிறப்படையட்டும்!
ReplyDeleteJustin's Blog-கிற்கு வாழ்த்துக்கள்! தங்களின் பணி மென்மேலும் சிறப்படையட்டும்!
ReplyDeleteBlog Union பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! தங்களின் பணி மென்மேலும் சிறப்படையட்டும்!
ReplyDeleteMugamoody பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! தங்களின் பணி மென்மேலும் சிறப்படையட்டும்!
ReplyDeletepoludhayanithi சித்த மருத்துவம் பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! தங்களின் பணி மென்மேலும் சிறப்படையட்டும்!
ReplyDeletesidhan சித்த மருத்துவம் பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! தங்களின் பணி மென்மேலும் சிறப்படையட்டும்!
ReplyDeleteப்ரியமுடன் வசந்த் பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! தங்களின் பணி மென்மேலும் சிறப்படையட்டும்!
ReplyDeleteBest wishes!
ReplyDeleteநான் வந்துட்டேன்
ReplyDelete// இம்சைஅரசன் பாபு.. said...
ReplyDeleteதெரியாத எல்லாமே எனக்கு புதுசான அறிமுகங்கள் //
உங்களுக்கும் புதியதாக அமைந்ததா? நன்று.. நன்று...
நன்றி பாபு.
//கலாநேசன் said...
ReplyDeleteஎனக்குத் தெரிந்த முகங்கள் தான். ஆனாலும் உங்கள் அறிமுக வரிகள் சூப்பர்.//
நன்றி.. கலாநேசன்.
சிறிது கற்பனை கலந்து சொந்த நடையில் எழுதினேன்
//அன்பரசன் said...
ReplyDeleteபுதுப்புது அறிமுகங்கள்...//
புதுப் புது அறிமுகத்துல
புதுப் புது அர்த்தங்கள் இருக்கும்...
போய் படிங்க..பயன் படும்.. (நன்றி)
அனைத்துமே சிறப்பான அறிமுகங்கள்....
ReplyDeleteஅண்ணன ப்ரியமுடன் வசந்த் அவர்களை அறிமுகப்படித்தியதற்கு சிறப்பு நன்றிகள்...
தொடரட்டும் உங்கள் பணி.....
// சே.குமார் said...
ReplyDeleteஅனைத்தும் நல்ல அறிமுகங்கள். //
அதேபோல எல்லாம் நல்ல நல்ல , பயனுள்ள செய்தியாக இருக்குமென நம்புகிறேன்.
நன்றி.. குமார்.
//cheena (சீனா) said...
ReplyDeleteமாது - கலக்கல் - புதுப் புது அறிமுகங்கள் - பயனுள்ள பதிவுகள் - வசந்த் எல்லாம் சூப்பர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா //
உங்கள் அன்பிற்கு நன்றிகள், சீனா சார்.
ஏதோ.. உங்கள் வலைச்சரத்துக்கு கெட்ட பேரு வராம பண்ணிக்கிட்டு இருக்கேன்னு நெனைக்கிறேன்.
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDelete//....... மத்ததலாம் அப்புறம் பாக்கலாம்.///
எப்போன்னு சொல்லுங்க அப்போ வரேன் //
இன்னிக்கு சாயந்திரமே ஒரு சிறப்பு பதிவு, வலைச்சரத்துல போடலாம்னு இருக்கேன்... சுமார் நாள் அஞ்சு மணிபோல போடுவேன்.. மறக்காம வந்துடுங்க ரமேஷ்..
// பெயர் சொல்ல விருப்பமில்லை said...
ReplyDeleteதெரிஞ்ச விஷயத்தை தெரியாதவங்களுக்கு தெரியற மாதிரி எழுதத் தெரிஞ்சிருக்கு, உங்களுக்கு!
:) //
என்ன சார் ஏதாவது பழைய விசு படம் பாத்திட்டு வர மாதிரி இருக்கு..
நல்ல வேளை "தெரிஞ்ச விஷயத்தை, (எதுதத்) தெரியாதவன் எழுதின மாதிரி இருக்கு" ன்னு சொல்லாம விட்டீங்களே..
நன்றி பெ.சோ.வி.
//malgudi said...
ReplyDeleteமாதவன் சார்,என்னுடைய பதிவையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.
:-) //
நன்றி, மால்குடி.
நா 'மன்னார்குடி', நீங்க 'மால்குடியா' ?
'மால்குடி டேஸ்' நல்ல நாவல்.. டி.டி ல புரியாத பாழியில 80 கல்ல பாத்த்ருக்கேன்..
// கல்பனா said... "நல்லா இருக்குங்க" //
ReplyDeleteநன்றி கல்பனா
// அனு said...
ReplyDeleteஇன்றைக்கு எல்லா அறிமுகங்களும் அருமை.. வலை வீசி பிடிச்சிருக்கீங்க போல இருக்கு..//
ஆமாம் ரெண்டு நாளு தேடுரதுக்கே சரியாப் போச்சு..
//ஞாபக சக்தி ஜோக் & வசந்த்தின் பின்னூட்ட ஐடியாவும் கலக்கல்.. இனிமேல் பின்னூட்டத்தில் படமா போட்டுத் தள்ளிட வேண்டியது தான்... :) //
நீங்க பின்னூட்டத்துல இனிமே கலக்கலாம்.. (நீங்க வசந்த் போஸ்ட முன்னரே படிக்க வில்லையா, நம்ப முடியலியே ! )
மறந்திடாதீங்க.. நீங்களும் வலைப்பூ ஆரம்பிச்சு ஒருத்தர கலாய்க்கணும்... நீங்களே அப்படி சொன்னீங்க.
// இன்னைக்கு எஸ்.கே மருத்துவக் குறிப்புகள் சொல்லுவாரா? #டவுட்டு //
எஸ். கே., அனு சொல்லுறது ஒங்க காதுல விழுந்திச்சா / விழுதா ?.
//Jaleela Kamal said...
ReplyDeleteரொம்பவே தேடி தேடி பிடிச்சி இருக்கீங்க’
அனைத்தும் அருமை.
வாழ்த்த்துக்கள் //
நன்றி ஜே.கமால்.
//எஸ்.கே said...
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள்! அறிமுகம் செய்து வைக்கும் விதம் புதுமை! //
எஸ்.கே. உங்களைப் போன்றோர் தரும் ஊக்கம்தான்.
இன்றும் அனைத்துப் பதிவுகளுக்கும் செண்டு படித்துவிட்டு பின்னூட்டமிட்டதற்கு நன்றிகள்
//Chitra said... Best wishes! //
ReplyDeleteThanks Chitra.
// Sriram said "எந்த வலைப் பக்கம் போனாலும் அங்கு Chitra கமெண்ட் கண்டு ஆச்சர்யப் பட்டு போகிறேன்."
Madhavan Said "
சித்ரா மேடம் பற்றி நீங்கள் சொன்னது உண்மைதான்.
எப்படித்தான் அவருக்கு நேரம் கிடைக்கிறதோ ?"//
எப்படித்தான் உங்களுக்கு நேரம் கிடைக்கிறதோ ?
// Arun Prasath said..." நான் வந்துட்டேன் "
ReplyDeleteவருகைக்கு நன்றி.. படிச்சீங்களா? இப்ப கருத்த சொல்லுங்க..
//மாணவன் said... "அனைத்துமே சிறப்பான அறிமுகங்கள்....
ReplyDeleteஅண்ணன ப்ரியமுடன் வசந்த் அவர்களை அறிமுகப்படித்தியதற்கு சிறப்பு நன்றிகள்...
தொடரட்டும் உங்கள் பணி..." //
நன்றி மாணவனே.. பயனுள்ளதாக இருந்ததா ? மிக்க மகிழ்ச்சி.
மருத்துவ குறிப்பு 1:
ReplyDeleteகிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.
மருத்துவ குறிப்பு 2:
ReplyDeleteசூட்டினால் உண்டாகும் இருமலுக்கு
மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.
மருத்துவ குறிப்பு 3:
ReplyDeleteஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.
மருத்துவ குறிப்பு 4:
ReplyDeleteஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
குறிப்பு 5:
ReplyDeleteதேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.
பயனுள்ள மருத்துவக் குறிப்புகள், எஸ்.கே. Thanks.
ReplyDeleteமுதல் குறிப்பை படிக்கும் பொது வடிவேலு, ஒரு படத்தில் 'பாட்டிக்கு' நெற்றியில் '10' போட்டது ஞாபகம் வருகிறது..
50
ReplyDeleteகுறிப்பு 6:
ReplyDeleteபால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.
குறிப்பு 7:
ReplyDeleteதேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.
குறிப்பு 8:
ReplyDeleteவேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.
மாதவன்.....இன்னிக்கு வசந்த் தவிர எல்லாமே புதுசுதான், கிரேட்!
ReplyDeleteகுறிப்பு 9:
ReplyDeleteஇளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.
குறிப்பு 10:
ReplyDeleteகை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
எங்கள் கிரியேசன்ஸ் ப்ளாக் நல்லா இருக்கு ..
ReplyDeleteபடம் எல்லாம் போட்டிருக்காங்க ..!!
நினிவாற்றல் ப்ளாக் எனக்கு புதுசு ..
ReplyDeleteஅதான் WELCOME TO JUSTIN'S BLOG.
@எஸ்.கே
ReplyDeleteஒரு டவுட்டு கேட்டது தப்பா போச்சே..
ராமசாமி அண்ணன் சொன்னது மாதிரி வசந்த் தவிர எல்லோருமே புதுசு ..
ReplyDeleteஉண்மைலேயே உங்கள் உழைப்பு பாராட்டப்பட வேண்டியது அண்ணா .!!
இவ்ளோ புதிய முகங்களை தேடிக்கண்டுபிடிக்கிறது சிரமம் .. !!
@ அனு
ReplyDeleteஏதோ என்னால முடிந்தது!:-))
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteமாதவன்.....இன்னிக்கு வசந்த் தவிர எல்லாமே புதுசுதான், கிரேட்! //
நன்றி, ராமசாமி.
ஈவினிங் மறுபடியும், வாங்க... ஒரு ஸ்பெஷல் போஸ்ட் வெயிட்டிங்..
// கோமாளி செல்வா said...
ReplyDelete" எங்கள் கிரியேசன்ஸ் ப்ளாக் நல்லா இருக்கு ..
படம் எல்லாம் போட்டிருக்காங்க ..!!
எங்கள் கிரியேசன்ஸ் ப்ளாக் நல்லா இருக்கு ..
படம் எல்லாம் போட்டிருக்காங்க ..!!"
------------
"நினிவாற்றல் ப்ளாக் எனக்கு புதுசு ..
அதான் WELCOME TO JUSTIN'S BLOG. " //
"எலேய்.. நீ வட வாங்கினதும் போயிடுவனு நெனைச்சேன்...
எப்ப படிக்கக் கத்துக் கிட்ட ?"
// கோமாளி செல்வா said...
ReplyDelete"ராமசாமி அண்ணன் சொன்னது மாதிரி வசந்த் தவிர எல்லோருமே புதுசு ..
உண்மைலேயே உங்கள் உழைப்பு பாராட்டப்பட வேண்டியது அண்ணா .!!
இவ்ளோ புதிய முகங்களை தேடிக்கண்டுபிடிக்கிறது சிரமம் .. !! "//
ஒக்கே.. ஒக்கே..
ஈவினிங் வீட்டுப் பக்கம் வந்திட்டுப் போ..
//அனு said...
ReplyDelete@எஸ்.கே
ஒரு டவுட்டு கேட்டது தப்பா போச்சே..//
ஆமாம் மேடம்...
என்னதான் புத்திசாலியா இருந்தாலும், அப்பப்ப அடக்கி வாசிக்கணும்..
// எஸ்.கே said...
ReplyDelete@ அனு "ஏதோ என்னால முடிந்தது!:-))" //
நீங்க தொடருங்க, எஸ்.கே.
நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எது வேணாலும் செய்யலாம்..
அறிமுகத்திற்க்கு மிக்க நன்றி மாதவன் சார்!
ReplyDeleteயோவ் இராம்சாமி நானும் புதுசுதான்யா ஆவ்வ்வ்வ்வ்வ்
// ப்ரியமுடன் வசந்த் said...
ReplyDeleteஅறிமுகத்திற்க்கு மிக்க நன்றி மாதவன் சார்!
யோவ் இராம்சாமி நானும் புதுசுதான்யா ஆவ்வ்வ்வ்வ்வ் //
யூ ஆர். வெல்கம், வசந்த் :-)
@ மாதவன்.,
ReplyDelete// ஈவினிங் மறுபடியும், வாங்க...
ஒரு ஸ்பெஷல் போஸ்ட் வெயிட்டிங்.. //
சொன்னா கேளுங்கப்பா..
என்னை பத்தியெல்லாம் ஸ்பெஷல்
போஸ்டிங் போடாதீங்கப்பா..
நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காது..
ம்ம்.. நான் வேண்டாம்னு சொன்னாலும்
நீங்கல்லாம் கேக்கவா போறீங்க..?!!
எல்லாம் பாசக்கார பயபுள்ளங்க..!!
ஆசிரியர் : 1869ல் என்ன நடந்தது?
ReplyDeleteசர்தார் : எனக்கு தெரியாது சார்.
ஆசிரியர் : மடையா! அந்த வருடம்தான் காந்திஜி பிறந்தார். சரி, அடுத்த கேள்வி!
1873ல் என்ன நடந்தது?
சர்தார் : காந்திஜிக்கு நாலு வயசு சார்!
கைடு : சார், சார். அந்த சேர்ல உட்காராதீங்க. அது திப்பு சுல்தானோட சேர்.
ReplyDeleteசர்தார் : ஒன்னும் பிரச்சனையில்லை. அவர் வந்த உடனே நான் எழுந்திருச்சிருறேன்
சர்தார்ஜி : நேத்து நான் டிரெய்ன்ல TTR-ஐ ஏமாத்திட்டேன் தெரியுமா?
ReplyDeleteநண்பர் : எப்படி ?
சர்தார்ஜி : டிக்கெட் வாங்கினேன், ஆனா நான் பிரயாணமே செய்யலயே!
சர்தார்ஜி இரண்டு தாள்களை சரிபார்த்துக்கொண்டிருந்தார். அங்கு வந்த நண்பர் சர்தார்ஜியிடம் கேட்டார்.
ReplyDeleteநண்பர் : என்ன செஞ்சுக்கிட்டு இருக்கே?
சர்தார்ஜி : ஜெராக்ஸ் எடுத்தேன். எழுத்துப்பிழை இருக்கான்னு சரி பார்த்துட்டுருக்கேன்.
சர்தார்ஜி அடிக்கடி சமையலறைக்குள் நுழைவதும், சர்க்கரைப் பாட்டிலை எடுத்துப் பார்ப்பதுமாக இருந்தார். இதைக் கவனித்த அவரது மனைவி கேட்டார், “என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?”
ReplyDelete“டாக்டர் அடிக்கடி சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்”.
75!!
ReplyDeleteசர்தார்ஜி கடைக்காரரிடம், “உங்களிடம் வாங்கிய ரேடியோ ஜப்பான் தயாரிப்பு இல்லை. நீங்கள் பொய் சொல்லி என்னிடம் அதை விற்றுவிட்டீர்கள்!” “
ReplyDeleteஇல்லைங்க.. அது சோனி ரேடியோ, ஜப்பான் தயாரிப்புதான்”
“அப்ப ஏன், ஆன் பண்ணவுடனே ஆல் இந்தியா ரேடியோன்னு சொல்லுது?”
ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது.. ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.
ReplyDeleteமறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது.. அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது.. " மாமியாரின் அன்புப் பரிசு.."
ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவரும் ஒரு மாருதி கார் வென்றார்.." மாமியாரின் அன்புப் பரிசாக..".
மூன்றாவது மருமகனோ oru சர்தார் அவருக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி வரை காப்பாத்தவே இல்ல.. மாமியார் கடைசியா பரிதாபமா 'லுக்கு' உட்டப்ப சொன்னான்.. "போய்த் தொலை.. எனக்கு கார் வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்..பொண்ணா வளர்த்து வச்சிருக்க..?" மாமியார் செத்துட்டுது..
மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் பாரின் கார் நின்னுச்சு.." மாமனாரின் அன்புப் பரிசு" என்ற அட்டையோட...!
//." மாமனாரின் அன்புப் பரிசு" என்ற அட்டையோட...! //
ReplyDeleteஎன்ன ஒரு ஆணாதிக்கம்!!
ஒரு ஊரில் ஒரு முட்டாள் பணக்காரர் இருந்தார். அவர் பெரிய பங்களா ஒன்று கட்டினார். அவை பார்வையிட தன் நண்பர்களுக்கு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார். வந்திருந்தவர்கள் அனைவரும் பங்களாவின் அழகை வெகுவாக பாராட்டினர். பின்பு பங்களாவின் பின்புறம் சென்று பார்த்தனர். அங்கு மூன்று நீச்சல் குளங்கள் இருந்தது. அனைவரும் ஆச்சர்யத்துடன் எதற்காக 3 நீச்சல் குளங்கள் என்று கேட்டனர். அதற்கு அந்த பணக்காரர் ஒன்று வெந்நீர் குளியல் வேண்டும் என்பவர்களுக்காக, மற்றொன்று குளிர்ந்த நீர் வேண்டும் என்பவர்களுக்காக என்றார். அனைவரும் வெந்நீர் சரி, தண்ணீர் சரி. காலியாக இருக்கின்றதே அது எதற்கு என்று கேட்டனர். அது நீச்சல் தெரியாதவர்களுக்காக என்றார்
ReplyDelete//அனு said...
ReplyDelete//." மாமனாரின் அன்புப் பரிசு" என்ற அட்டையோட...! //
என்ன ஒரு ஆணாதிக்கம்!!//
இங்கேயுமா???!!!
சாண்டாசிங் : இந்த பீர்ல நிறம் இல்லை.
ReplyDeleteபாண்டாசிங் : இந்த பீர்ல சுவை இல்லை
தாராசிங் : இந்த பீர்ல திடம் இல்லை
ஒயின்ஸ்ஷாப் காரர் : அட! மக்குகளா…இப்ப நான் குடுத்தது பீர் இல்ல கலக்குறதுக்கான சோடா.
ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார் நம்ம சர்தார்ஜி.
ReplyDeleteமுதல்நாளில் கேண்டீனுக்கு ஃபோன் செய்கிறார்.
"எனக்கு சீக்கிரமா ஒரு ஸ்ட்ராங்கான காபி கொண்டாப்பா"
எதிர்முனை ஆக்ரோஷமாகப் பதிலளிக்கிறது, "ஏ முட்டாளே! நீ தவறான நம்பருக்கு டயல் செஞ்சிருக்கே. நான் யார் தெரியுமா?"
"எனக்குத் தெரியாது"
"நான் இந்தக்கம்பெனியின் மேனேஜிங் டைரக்டர்"
சர்தார் அரண்டுபோனாலும் குரலை உயர்த்துகிறார், "இடியட்…நான்சென்ஸ். நான் யார் தெரியுமா?"
மேனேஜிங் டைரக்டர் கோபமாக "தெரியாதுடா"
டக்கென்று போனை வைக்கிறார் சர்தார். "அப்பாடா..பொழச்சேன்"
ப்ரொபசர் பான்டா தியேட்டரில் மீண்டும் மீண்டும் டிக்கட் வாங்கிக் கொண்டிருந்தார்.... டிக்கட் கவுண்டரில் இருந்தவர் கேட்டார்....:ஏன் ஒரே படத்திற்கு மீண்டும் மீண்டும் டிக்கட் வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள்"?
ReplyDelete"கதவருகில் ஒரு பைத்தியம் நின்று கொண்டு என் டிக்கட்டை ஒவ்வொரு முறையும் கிழித்து விடுகிறது...."
ஒரு மன நல மருத்துவமனையில் டாக்டர் ஒருவர் மூன்று பைத்தியங்களுக்கு அவர்கள் குணமடைந்து விட்டனரா என்று அறிய ஒரு டெஸ்ட் வைத்தார்....மூன்று பேரையும் தண்ணீர் இல்லாத ஒரு நீச்சல் குளத்தின் டைவிங் பலகைக்கு அழைத்துச் சென்று குதிக்கச் சொன்னார்...
ReplyDeleteமுதல் பைத்தியம் குதித்து விட்டு காலை உடைத்துக் கொண்டது...
இரண்டாம் பைத்தியம் குதித்து விட்டு கையை உடைத்துக் கொண்டது..
மூன்றாவது "இல்லை டாக்டர் நான் குதிக்க மாட்டேன் " என்றது.. மகிழ்ச்சியடைந்த டாக்டர் "வாழ்த்துக்கள் நீங்கள் குணமாகி விட்டீர்கள் போல தோன்றுகிறது....சரி ஏன் குதிக்க மாட்டேன் என்றீர்கள்?" என்று கேட்டார்...
"அது வந்து டாக்டர் எனக்கு நீச்சல் தெரியாது"
எழுபது வயதான முல்லா நசுருதீன் தன் தொண்ணூறு வயதான தந்தையை அழைத்துக் கொண்டு ஒரு மனநல டாக்டரிடம் வந்தார்....
ReplyDelete"டாக்டர்....எங்க அப்பா தினமும் நிறைய நேரம் பாத் ரூமில் ஒரு வாத்து பொம்மையை வைத்துக் கொண்டு தண்ணீரில் விளையாடுகிறார்" என்றார்....
டாக்டர் " முல்லா..பாருங்கள் இது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை....வயதானவர்கள் குழந்தை போல ஆகி விடுகிறார்கள்....அவர் பிறரை தொந்தரவு செய்யாத வரை இது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை" என்றார்...
முல்லா "ஆனால் டாக்டர், அது என்னுடைய வாத்து பொம்மை" என்றார்....
இன்னும் 15 இருக்கின்றது!
ReplyDeleteஒரு அரசியல்வாதி தன் நாயை மிகவும் விரும்பினார்....
ReplyDeleteஒரு நாள் தானே அதற்கு பிஸ்கட் வாங்க கடைக்குச் சென்றார்... கடைக்காரனைப் பார்த்து "ஏம்பா, இங்கே நாய் பிஸ்கட் கிடைக்குமா?" என்றார்....
"இருக்குங்க , இங்கயே சாப்பிடறீங்களா இல்ல பார்சல் பண்ணவா? "
@எஸ்.கே
ReplyDeleteஉங்க ஜோக்ஸ் எல்லாம் சூப்பர்.. இப்படியே தொன்னூற்று ஒன்பது வரைக்கும் கொண்டு போங்க.. 100ல வந்து வடையை கப்புன்னு பிடிச்சுக்கறென்...
ஒரு நாள் விரக்தியடைந்த மனிதன் ஒருவன் ஒரு மன நல டாக்டரிடம் வந்து "டாக்டர்,,,யாருமே என்னைக் கண்டு கொள்வதில்லை...நான் என்னவோ அங்கே இல்லாதது போல் நடத்துகிறார்கள்....ஒரு காற்றைப் போல,,,என் இருப்பையே யாரும் பொருட்படுத்துவதில்லை....நான் மிகவும் புறக்கணிக்கப் பட்டது போல் உணர்கிறேன்...தயவு செய்து உதவுங்க" என்றான்...
ReplyDeleteடாக்டர் தன் உதவியாளரை அழைக்கும் மணியை அழுத்தி "அடுத்த பேஷண்ட் ப்ளீஸ்" என்றார்...
முல்லா நசுருதீன் ஒரு நாள் ஒரு வீட்டின் கதவை தட்டினார்...
ReplyDelete"என்னங்க நேத்து இங்க நடந்த பார்ட்டிக்கு என் சிநேகிதன் வந்திருந்தானா?" என்றார்...
"ஆமாம்"
"குடித்து விட்டு எல்லாரையும் ரகளை செய்தானா?"
"ஆமாம்"
"பெண்கள் மீது இடித்தானா?"
"ஆமாம்"
"சத்தம் போட்டு சாமானெல்லாம் உடைத்தானா?"
"ஆமாம்"
"அப்புறம் கடைசி கேள்வி...அவன் கூட நானும் இருந்தேனா ?"
டாம் தன் மானேஜரிடம் சென்று "சார் நாளைக்கு மத்தியானம் லீவு வேணும் ...பாட்டி இறந்துட்டாங்க..." என்றான்
ReplyDelete"டாம் இதையே தான் மூணு மாசத்துக்கு முன்னாடியும் சொன்னாய்! லீவெல்லாம் கொடுக்க முடியாது" என்றார் மானேஜர்...
"ஆனால் சார் எங்க தாத்தா அதுக்கப்பறம் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டார்"
ஒரு நாள் அரசாங்க அலுவலகம் ஒன்றில் கண்காணிப்பாளர் பார்வையிட வந்தார்...
ReplyDeleteஒரு டேபிளில் இரண்டு பேர் சும்மா உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார்...
அதில் ஒருவனைப் பார்த்து " உனக்கு என்ன வேலை?" என்றார் ...
"ஜாயின் பண்ணி ஆறு மாசம் ஆச்சுங்க...இன்னும் சும்மா தான் உட்கார்ந்திருக்கேன் " என்றான்
இன்னொருவனைப் பார்த்து "உனக்கு என்ன வேலை?" என்றார்...
அவனும் "ஜாயின் பண்ணி ஆறு மாசம் ஆச்சுங்க...இன்னும் சும்மா தான் உட்கார்ந்திருக்கேன்" என்றான்...
அவர் மிகுந்த கோபத்துடன் " உங்க ரெண்டு பேர்ல ஒருத்தரை இப்பவே வேலையிலிருந்து தூக்கறேன்....யாருய்யா ஒரே வேலைக்காக ரெண்டு பேரைப் போட்டது?" என்று கத்தினார்...
ஒரு பெண்மணி ,கலைந்த தலையுடனும் ,சிவப்பேறிய கண்களுடனும் மேக்-அப் எதுவும் இன்றியும் ஒரு பழைய கிழிந்து போன நைட்டியையும் தேய்ந்து போன செருப்புகளையும் அணிந்து கொண்டு தன் வீட்டு குப்பைகளை எடுத்துக் கொண்டு அவசர அவசரமாகத் தெருவில் ஓடி வந்தாள்....
ReplyDeleteகுப்பை வண்டி கிட்டத் தட்ட புறப்பட்டு விட்டிருந்தது....
டிரைவர் அவள் ஓடி வருவதைப் பார்த்து விட்டு வண்டியை நிறுத்தினான்...
"மன்னிச்சுக்குங்க....கொஞ்சம் லேட் ஆயிருச்சு" என்றாள் மூச்சு வாங்க....
டிரைவர் "பரவாயில்லை மேடம் .....அப்படியே பின்னாடி ஏறிக்கங்க" என்றான்
முல்லா நசுருதீன் ஒரு நாள் தன் நண்பர்களுடன் சுற்றுலா சென்றார்....
ReplyDeleteஅவர்கள் ஓர் அழகான பரந்த புல்வெளியைத் தேர்ந்தெடுத்து இளைப்பாறச் சென்றனர்...
ஒரு மரத்தின் அடியில் இருந்த பெஞ்சில் சென்று படுத்துக் கொண்ட முல்லா, தன் நண்பர்களைப் பார்த்து கூறினார்....
"இப்போது யாராவது எனக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தாலும் நான் இந்த இடத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன்"
அங்கிருந்த நண்பர்களில் ஒருவர் கேட்டார்...
"ஐந்து லட்சம் கொடுத்தால்"?
"சான்சே இல்லை" என்றார் முல்லா..
."சரி பத்து லட்சம் கொடுத்தால் ?" என்று கேட்டார் இன்னொருவர்..
."இல்லவே இல்லை...." என்றார் முல்லா...
"சரி பத்து ரூபாய் கொடுத்தால் அந்த இடத்தை விட்டு எந்திரிப்பாயா?" என்றார் இன்னொருவர்...
முல்லா அந்த பெஞ்சை விட்டு துள்ளி எழுந்து அவரிடம் ஓடி வந்து "சரி பத்து ரூபா கொடுப்பா" என்றார்...
நண்பர்கள் பீட்டரும் பேடியும் (Paddy ) ஒரு நாள் ஒரு ஒயின் ஃபெஸ்டிவலுக்கு சென்று விட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்....
ReplyDeleteசிறிது அளவுக்கு அதிகமாகவே குடித்து விட்டிருந்தனர்....
"பீட்டர், நாம் நம் டவுனுக்கு பக்கத்தில் வந்து விட்டோமா?" என்று கேட்டான் பேடி...
"அப்படிதான் நினைக்கிறேன்....காரில் நிறைய பேரை நாம் இடிப்பதால் நாம் டவுனுக்குள் நுழைந்து விட்டோம் போல தோன்றுகிறது" என்றான் பீட்டர்....
"ஐயோ, அப்படியானால் மெதுவாக ஓட்டு...நிதானமாக ...பார்த்து......மெதுவாக ஓட்டு...." என்று கத்தினான் பேடி...
"டேய், நீ என்ன சொல்ற..நீதானே காரை ஓட்டிட்டு இருக்கற" என்றான் பீட்டர்...
கடலில் சென்று கொண்டிருந்த ஒரு கப்பலின் கேப்டன் தனது மூன்று துணை கேப்டன்களை அவசரமாக அழைத்தார்....
ReplyDelete"இதைப் பாருங்கள்....இந்த கப்பல் இன்னும் சிறிது நேரத்தில் மூழ்கி விடும்....யாரிடமும் சொல்லாதீர்கள் ...என்னிடம் மூன்று பேர் தப்பிக்கும் அளவு ஒரு சின்ன விசைப் படகு உள்ளது...சத்தம் இல்லாமல் பின் வழியாக இறங்கி விடலாம்...ஆனால் என்னுடன் இரண்டு பேர் தான் கூட வர முடியும்....உங்களை ஆளுக்கு ஒரு கேள்வி கேட்பேன்...சரியான விடை சொன்னால் தான் என்னுடன் வர முடியும்" என்றார்....
"சரி" என்றனர் அவர்கள்.....
முதல் ஆளைப் பார்த்து " பனிப்பாறை மோதியதால் கடலில் மூழ்கிய கப்பலின் பெயர் என்ன?" என்றார்
"டைட்டானிக்"
"கரெக்ட்..."
இரண்டாவது ஆளைப் பார்த்து "அதில் எத்தனை பேர் பயணம் செய்தனர்" என்றார்.....
"ஆயிரத்து ஐநூற்று இரண்டு பேர்"
"சரி..." என்ற அவர் மூன்றாவது ஆளைப் பார்த்து "அவர்களின் பெயர்கள் என்ன" என்றார்.....
மாறுகண் போலிஸ்காரர் ஒருவர் மூன்று குடிகாரர்களை அரஸ்ட் செய்தார்...
ReplyDeleteபோலீஸ்காரர் முதல் ஆளைப் பார்த்து "உன் பேர் என்னடா ?" என்றார்...
இரண்டாவதாக நின்றிருந்தவன் "என் பேர் மைகேலுங்க" என்றான்
போலீஸ்காரர் கடுப்பாகி அவனைப் பார்த்து "உன்னைக் கேக்கலை" என்றார்..
மூன்றாவதாக நின்றிருந்தவன் " சார் நான் எதுவுமே சொல்லலைங்களே" என்றான்...
ஒரு ட்ரக் டிரைவர் ஹை-வே ஒன்றில் மிக வேகமாக ட்ரக்கை ஓட்டிக் கொண்டிருந்தான்..
ReplyDeleteஅப்போது வலது பக்கம் திரும்பிப் பார்த்ததில் சாலையில் ஒரு ஆள் விநோதமாக மிக வேகத்தில் தன் பைக்கை ஓட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தான்...அதாவது பைக்கின் மேல் நின்று கொண்டு ஒரு காலால் பேலன்ஸ் செய்த படி அதி வேகத்தில் ஓட்டிக் கொண்டிருந்தான்...
பைக் ஆசாமி ஒரு சிகரெட்டை பாக்கெட்டில் இருந்து எடுத்து டிரக் டிரைவரிடம் "ஏய், தீப்பெட்டி இருக்கா? இருந்தா தூக்கிப் போடு" என்று கத்தினான்...
ட்ரக் டிரைவர் தீப்பெட்டியை அவனிடம் தூக்கிப் போட்டு "டேய் , சாவு கிராக்கி, பாத்துடா ,செத்து கித்து தொலையப் போற" என்றான்..
அதற்கு பைக் ஆசாமி "கவலைப்படாதே , ஒரு நாளைக்கு ஒரு சிகரெட்டு தான் குடிக்கறேன்" என்றான் ....
99
ReplyDelete100வது வடை எனக்கு!!
ReplyDeleteவாழ்த்துக்கள் அனு!
ReplyDeleteஏதோ யாம் பெற்ற இன்பம் மற்றவர்களும் பெறட்டும் என்றே இங்கே தொடர்ச்சியாக கமெண்ட் இட்டேன்! தவறிருந்தால் வலைச்சர நிர்வாகமும், வாசக நண்பர்களும் மன்னிக்கவும்!
ReplyDeleteநீங்கள் எழுதும் அறிமுகப்படுத்தும் விதம் வித்தியாசம்;
ReplyDeleteஅது மட்டுமல்ல, நீங்கள் அறிமுகப்படுத்தும் பதிவர்களும்
அவ்வாறே உள்ளனர். கலக்கல் மாது. மிகவும்
மனமுவந்து வாழ்த்துகிறேன்.
103...
தொடருங்கள்!
ReplyDelete//Madhavan Srinivasagopalan said...
ReplyDelete// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//....... மத்ததலாம் அப்புறம் பாக்கலாம்.///
எப்போன்னு சொல்லுங்க அப்போ வரேன் //
இன்னிக்கு சாயந்திரமே ஒரு சிறப்பு பதிவு, வலைச்சரத்துல போடலாம்னு இருக்கேன்... சுமார் நாள் அஞ்சு மணிபோல போடுவேன்.. மறக்காம வந்துடுங்க ரமேஷ்..
///
மானஸ்தன் மாதவன் எங்க? மணி எட்டு..
அருமை நல்லா இருக்கு ப்ரோ , நல்ல அறிமுகங்கள் , வாழ்த்துக்கள்
ReplyDelete// எஸ்.கே said...
ReplyDeleteஏதோ யாம் பெற்ற இன்பம் மற்றவர்களும் பெறட்டும் என்றே இங்கே தொடர்ச்சியாக கமெண்ட் இட்டேன்! தவறிருந்தால் வலைச்சர நிர்வாகமும், வாசக நண்பர்களும் மன்னிக்கவும்! //
நன்றி எஸ்.கே. நல்ல மேட்டரத்தான சொல்லி இருக்கீங்க.. எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்லை..
//அனு said...
ReplyDelete100வது வடை எனக்கு!! //
வடைய கைப்பற்றிய அனு..-- உங்களுக்கு வாழ்த்துக்கள்.
// NIZAMUDEEN said...
ReplyDeleteநீங்கள் எழுதும் அறிமுகப்படுத்தும் விதம் வித்தியாசம்;
அது மட்டுமல்ல, நீங்கள் அறிமுகப்படுத்தும் பதிவர்களும்
அவ்வாறே உள்ளனர். கலக்கல் மாது. மிகவும்
மனமுவந்து வாழ்த்துகிறேன்.
103... //
நன்றி நண்பரே.. நீங்கள் அனுபவித்துப் படித்ததாக உணர்கிறேன்.
// தேவன் மாயம் said...
ReplyDeleteதொடருங்கள்! //
நன்றி நண்பரே! தொடருகிறேன், 'இங்கு' , அடுத்தவருக்கும் வழி விட வேண்டுமாதலால்.
@ Ramesh..
ReplyDelete// மானஸ்தன் மாதவன் எங்க? மணி எட்டு.. //
நண்பரே.. ஐ யாம் வெரி சாரி..
நாளைக்கு வாருங்கள்.. ஏழாம் நாள் பதிவு ஒன்று மீதம் இருக்கிறது... அது நாளை காலையில்.. அது வரை பொறுத்திருங்கள்.. நன்றி.
//Gayathri said...
ReplyDeleteஅருமை நல்லா இருக்கு ப்ரோ , நல்ல அறிமுகங்கள் , வாழ்த்துக்கள் //
நன்றி G3 நாளைக்கும், மறக்காம வந்து படிச்சிட்டு ஒங்க கருத்தைச் சொல்லுங்க..
நல்லாயிருக்குங்க மாதவன், நன்றி அறிமுகங்களுக்கு!
ReplyDelete// கலையன்பன் said...
ReplyDeleteநல்லாயிருக்குங்க மாதவன், நன்றி அறிமுகங்களுக்கு! //
நன்றி. நாளைக்கும், மறக்காம வந்து படிச்சிட்டு ஒங்க கருத்தைச் சொல்லுங்க..