Tuesday, December 21, 2010

ரெடி... டேக்... ஆக்சன்

"பதினைஞ்சு அடுக்கு மாடி கட்டிடம் சார். கேமராவை மேல வைக்கிறோம். அப்படியே அங்கிருந்து நேரா கீழ இறங்குறோம் சார்"

"கேமராவை மேல வச்சுட்டு எதுக்குய்யா கீழ இறங்கிறோம்? ப்ரொடியூசர் தலையில துண்டு போட்டு போகவேண்டியது தான்"

"இல்ல சார் கேமராவோட தான். கீழ அப்பயே ஸ்லோ மோசன்ல கொண்டு போனா ஹீரோயின் நடந்து வராங்க" அசிஸ்டென்ட் டைரக்டர் விளக்கும் முன் டைரக்டர் நிறுத்த சொல்கிறார்.

"உன்னை அந்த மாடியிலிருந்து தள்ளிவிடனும்ய்யா. கிராமத்து  கதையை சொல்றேன்னு சொல்லி பல  அடுக்கு மாளிகையா?" சலித்துக்கொண்டு "நீயாவது கிராம்த்து கதையா சொல்லுய்யா" என்று மற்றொரு அஸிஸ்டென்ட்டை பார்க்கிறார்.

"சார் ஒரு அழகான அக்ரஹாரம்.... ஹீரோவும் ஹீரோயினும் சின்ன வயசுலயிலிருந்து காமிக்கிறோம்"

"ஓஹோ.. சூப்பர் அப்புறம்"

"ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்து வீடு. ஹீரோயின் பேரு "காயத்ரி" ஹீரோ பேரு "கார்த்திகேயன்". ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ் ப்ரண்ட்ஸ் சார். சின்ன வயசுல கிண்டலும் கேலியுமா இருக்காங்க. ஹீரோயினுக்கு ஒரு அக்கா சார்"

" அவங்க பேரென்ன கௌரியா?" டைரக்டர்

"சார்ர்ர்ர் ஜூனியஸ் சார் நீங்க. எப்படி சார் என் மனுசுல இருக்குறது அப்படியே தெரியுது உங்களுக்கு?"

"அடிங்க... பண்றது திருட்டு வேலை. அட்லீஸ் பேராவது மாத்தலாம்ல... இது நம்ம அப்பாவி தங்கமணி "ப்ரியமானவளே " கதை தானே? டேய் அருமையான கதைடா அது. அதை இப்படி திருட்டுத்தனமா எடுத்து கொலை பண்ணாத.. அப்புறம் நான் உன்னை கொலை பண்ணிடுவேன்"

"ஹி ஹி ஸாரி சார்..." அஸிஸ்டென்ட் 1

"அவன் அப்படி தான் சார். என்கிட்ட ஒரு கதை இருக்கு கேளுங்களேன்." அஸிஸ்டென்ட் 2

"மறுபடி மாடியில இருந்து விழ போறயா?" டைரக்டர்

"இல்ல சார் இந்த கதையை கேளுங்க.. ஒரு வெளியூர் பையன் சார். இன்னொரு ஊருக்கு வரான். இங்க உள்ளூர் ரவுடி..அப்ப என்ன ஆகுதுன்னா"

"நிறுத்து.  விஷால் இப்போதைக்கு கால்ஷீட் கிடைக்காதுன்னு சொல்லிட்டார்.  அதுனால வேற கதை சொல்லு" டைரக்டர்.

"விஜயகாந்துக்கு ஒரு கதை வச்சிருக்கேன் சார். கிராபிக்ஸ் அனிமேசன் எல்லாம் நிறைய இருக்கும் சார்"

"அடடே  இதெல்லாம் நீ எங்கய்யா கத்துகிட்ட?" டைரக்டர்


"இப்ப தான் சார் கத்துகிட்டு வரேன். எஸ்.கேன்னு ஒரு பதிவர் இதெல்லாம் எளிய தமிழ்ல சொல்லி தரார் சார். இந்த கதையில அனிமேசனோட அருமையான ஆக்சன் இருக்கு சார். ஹாலிவுட்டே மூக்கு மேல விரலை வைக்கும்" அஸிஸ்டென்ட்

"அவ்ளோ நாத்தம்பிடிச்ச கதையா? எங்க சொல்லு பார்ப்போம்" டைரக்டர் குஷியானார்.

"முதல் சீனே ப்ளைட்ல தான் சார்"

"ஆஹா"

"ப்ளைட்ல ஒரு சண்டை... வில்லன் ப்ளைட்டையே ரெண்டா அறுத்திடுறான்.. அப்ப"

"அப்ப கேப்டன் பாதி ப்ளைட்டோட வண்டிய ஓட்டுறார். அது கடல்ல விழுகுது..அங்கிருந்து ட்ரைன்ல போறாங்க..இதானே கதை? இது நான் ஆதவன் எழுதின கதையாச்சே? அவரே கேப்டனை கலாய்கிறதுக்காக எழுதினா நீ அதை சீரியஸா எடுத்து சுட்டு உன்னோட சொந்த கதை மாதிரி சொல்றயே? ஓடிப்போயிடு.. இல்ல என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது" டைரக்டர் டென்சனானார்.

"எங்க நம்ம இன்னொரு அஸிஸ்டென்ட் தாடிக்கார கவிஞரை காணோம்? எங்கய்யா அவன்?" டைரக்டர்

"இதோ வரான் சார்" தாடிக்கார அஸிஸ்டென்ட் வந்து கொண்டிருந்தார்.

"என்னய்யா எங்க போன? ஆளையே காணோம்?"

"யாருமில்லாத வீதியில்
நீ நடக்கிறாய்
எனை நினைத்து

நீ இல்லாத கவிதையை
நான் கடக்கிறேன்
உன் நினைவை
துணைக்கழைத்து" எப்படி சார் இருக்கு கவிதை? நானே எழுதியது" தாடிக்கார அஸிஸ்டென்ட் .

"என்னது உன் கவிதையா? டேய் இந்த கவிதை ராஜா சந்திரசேகர்ன்ற ஒரு கவிஞரோடது. அவர் புத்தகமெல்லாம் போட்டிருக்காரேடா. அவர் கவிதையையே சுட்டுருக்கையா? ஏன்டா இப்படி இருக்கீங்க.. பதிவுலகத்தை எல்லாரும் கவனிச்சுட்டு வராங்க. இப்படி எல்லாம் சுடாதீங்கடா" டைரக்டர் கவலையுடன் கூறினார்.

"சார் சும்மா திட்டாதீங்க சார். ஒரு படக்குழுவோட டைரக்டர்ன்றவரு ஒரு கம்பெனியோட மேனேஜர் மாதிரி. மேனேஜர் எப்படி இருக்கனும்னு அப்துல் கலாமே சொல்லியிருக்கார்" அஸிஸ்டென்ட் கோபப்பட்டார்.


"அடடே உனக்கு இவ்வளவு தெரியுமா? என்ன சொல்லியிருக்கார்?"


"ஒரு முறை ஏவுகணை கடலில் விழுந்த போது APJ ஐயா வேலை செய்த நிறுவனத்தின் தலைவர் சொன்னாராம், இன்று பத்திரிக்கையாளர்களை நான் எதிர்கொள்கிறேன் - I will take the responsibility for this failure என்று. அதே ப்ராஜக்ட் வெற்றி அடைந்த போது, அதே தலைவர் APJ விடம் சொன்னாராம் - Go and take the press meet, it is your success என்று. அப்படி இருக்கனும் சார். அதுவுமில்லாம இந்த மாதிரி தலைமை பொறுப்புல இருக்குறவங்க எப்படி நடந்துக்கனும்னா..."


"டேய் நிறுத்து நிறுத்து இதெல்லாம் எந்த பதிவுல இருக்குதுன்னு சொல்லு நானே படிச்சுக்கிறேன்."


"சார் இதெல்லாம் நானே யோசிச்சது." அஸிஸ்டென்ட்


"அடி வாங்குவ. மரியாதையா சொல்லு" டைரக்டர்


"ஹிஹி நம்ம பாஸ்டன் ஸ்ரீராம்ன்னு ஒருத்தர் ஸ்போக்கன் இங்கிலீஷ், அப்புறம் மேனேஜ்மென்ட், இன்டர்வியூக்கு போறப்ப கவனிக்க வேண்டியதுன்னு நிறைய எழுதுறார் சார்..அங்க தான் படிச்சேன்"


அப்படி வா வழிக்கு. ஏன்டா இப்படி நல்ல நல்ல பதிவெல்லாம் திருடி படைப்பாளிக்கு கிடைக்குற பெருமைய கெடுக்குறீங்க. உங்களுக்கு தோன்றதை முதல்ல படமா எடுங்க அஸிஸ்டென்ட்ஸ். இங்கிலீஷ் படத்துல இருந்து  கதையை சுடுறது.. பாட்டை சுடுறதுன்னு போய் இப்ப பதிவர்கள் கதைகளையே சுட ஆரம்பிச்சுட்டீங்க. சொந்தமா யோசிச்சு ஒரு நல்ல கதையோட வாங்க நானே அதை தயாரிக்கிறேன். நீங்க டைரக்டராகிடலாம். இப்ப எல்லாரும் கிளம்புங்க" டைரக்டர். இருந்தடென்சனில் சிகரெட்டை பற்ற வைத்தார் .



ஏதோ தெளிவு பிறந்தது போல் அஸிஸ்டென்ட் அங்கிருந்து சென்றனர். ஒரே ஒரு அஸிஸ்டென்ட் மட்டும் தனியாக வந்தான்.


"சார் நீங்க சொன்னது இப்ப தான் என் மரமண்டைக்கு ஏறுச்சு. இனி எதுவா இருந்தாலும் நானே யோசிக்கிறேன். ஆனா இப்ப எடுக்குறதுக்கு கணேஷ்னு ஒரு பதிவர் சியாமளான்னு ஒரு அருமையான கதை எழுதியிருக்கார். பாரின் லொக்கேஷனெல்லாம் இருக்கு. ம்'னு ஒரு வார்த்தை சொல்லுங்க. ஆட்டைய போட்டுறலாம்" என்று காதில் கிசுகிசுக்க


"கெட் அவுட்ட்ட்ட்ட்ட்ட்ட்"  என கத்த ஆரம்பினார் டைரக்டர்

52 comments:

  1. "கெட் அவுட்ட்ட்ட்ட்ட்ட்ட்" என கத்த ஆரம்பினார் டைரக்டர்///

    இந்த மாதிரி நாங்க ஏதாவது சொல்லனுமா.....?

    ReplyDelete
  2. "பதினைஞ்சு அடுக்கு மாடி கட்டிடம் சார். கேமராவை மேல வைக்கிறோம். அப்படியே அங்கிருந்து நேரா கீழ இறங்குறோம் சார்"///

    இவங்க துபாய்லே இருந்தாலே இப்படி தான் 15 மாடி 35 மாடி சொல்வாங்க

    ReplyDelete
  3. நல்ல அறிமுகங்கள் . அனைவரும் தெரிந்தவர்கள்தான் என்றாலும் சொன்னவிதம் அருமை. நன்றி

    ReplyDelete
  4. வித்தியாசமான முறையில் அறிமுகம்...

    ReplyDelete
  5. வித்தியாசமான முறையில் அறிமுகம்...
    நல்ல அறிமுகங்கள்.

    ReplyDelete
  6. LK சொன்னது மாதிரி சொன்னவிதம் அருமை! எல்லாரையும் போய் பார்த்திடுறேன் :)

    ReplyDelete
  7. நல்ல அறிமுகங்கள் , சொல்லிய விதமும் சூப்பர், வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. @ சௌந்தர் : இப்போதான் நம்ம ஊருலயும் பெருசு பெருசா கட்டிடம் வந்துருச்சே

    ReplyDelete
  9. @lk: நன்றி ப்ரோ ,
    ஆஹா உங்களுக்கு எல்லாரையும் தெரிஞ்சுருக்கே கிரேட்

    ReplyDelete
  10. நிஜமா சொல்லணும்னா இப்ப நம்ம வலையுலகத்தை சினிமாகாரங்க படிச்சுகிட்டுத்தான் இருக்காங்க.

    வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. @அன்பரசன் : நன்றி

    ReplyDelete
  12. @ ஆதவன் : நன்றி ப்ரோ :))))))

    ReplyDelete
  13. @சே.குமார் : மிக்க நன்றி , நாளைக்கும் வாங்க

    ReplyDelete
  14. @ பாலாஜி : ரொம்ப புன்யமாபோகும் , நன்றி அப்டி என் ப்ளாக் பக்கமும் வாங்க

    ReplyDelete
  15. @ ஜலீலா : ரொம்ப நன்றி மேடம் :)

    ReplyDelete
  16. அறிமுகப்படுத்திய விதம் நன்று. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  17. //"கெட் அவுட்ட்ட்ட்ட்ட்ட்ட்" என கத்த ஆரம்பினார் டைரக்டர்///

    இந்த மாதிரி நாங்க ஏதாவது சொல்லனுமா..//

    ஏன்பா நல்லாத்தானே போய்ட்டியிருக்கு...

    ஹிஹிஹி

    ReplyDelete
  18. உங்களுக்கென்று ஒரு தனி ஸ்டைலில் சிறப்பாக அறிமுகபடுத்தி அசத்திவிட்டீர்கள் அருமை

    தொடருங்கள்...........

    ReplyDelete
  19. என்னை அறிமுகம் செய்ததற்கு ரொம்ப நன்றிங்க!
    மற்ற அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  20. வித்தியாசமா எல்லோரையும் அறிமுகப்படுத்துறீங்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  21. கதை யோடு கூடிய அறிமுகமா :-))

    ReplyDelete
  22. கதை யோடு கூடிய அறிமுகமா :-))

    ReplyDelete
  23. கதை யோடு கூடிய அறிமுகமா :-))

    ReplyDelete
  24. எல்லோரும் தெரிந்த பதிவர்கள்தான்... ஆனாலும் நீங்க சொன்னவிதம் சூப்பர்...

    காய்த்ரியா இப்படி எழுதுறது...

    நம்ப முடியவில்லை...வில்லை...இல்லை...

    ReplyDelete
  25. @ காயத்ரி.,

    நல்லா எழுதி இருக்கீங்க..
    நிஜமாவே கலக்கல்..!!

    ReplyDelete
  26. நேத்து தமிழ்(வெட்சி) இன்னிக்கு இங்கிலீஷ்(ரெடி... டேக்... ஆக்சன்) அப்போ நாளைக்கு என்ன ஹிந்தியா?

    ReplyDelete
  27. @ ரமேஷ்.,

    // நேத்து தமிழ்(வெட்சி) இன்னிக்கு
    இங்கிலீஷ்(ரெடி... டேக்... ஆக்சன்)
    அப்போ நாளைக்கு என்ன ஹிந்தியா? //

    ஆமா. இப்படி எல்லாம் கேள்வி
    கேட்டா பாவம் அவங்க என்ன பண்ணுவாங்க..?

    அவங்களுக்கு எழுதி தர்றவங்ககிட்ட
    போயி கேளுங்க இதையெல்லாம்.

    ReplyDelete
  28. அட இப்படி கூட அறிமுகம் செய்யலாமா ..?
    கலக்கல்ங்கோ ..!!

    ReplyDelete
  29. ஆமா..
    " நன்றி " " நன்றி "" நன்றி "
    " நன்றின்னு " கமெண்ட் போடுவாங்களே..
    அவங்கள இன்னும் காணோம்..?!!

    ReplyDelete
  30. கதை நடையில் நல்ல அறிமுகங்கள்.

    ReplyDelete
  31. @ புதுகை தென்றல் , வெங்கட் நடராஜ் , ஜெய்லானி,கோமாளி செல்வா : மிக்க நன்றி நாளைக்கும் வந்து படிங்க இன்னும் சுவாரசியமா இருக்கும்னு நம்பறேன்

    ReplyDelete
  32. @ மாணவன் : ஆஹா ரொம்ப புகழரீன்களே ரொம்ப நன்றி

    ReplyDelete
  33. This comment has been removed by the author.

    ReplyDelete
  34. @ அருண் பிரசாத் : ஆஹா என்ன இது
    பாராட்டா?? இல்லை வஞ்சப்புழ்ச்சியா ஒண்ணுமே புரியலையே

    ReplyDelete
  35. @ ரமேஷ் : நாளைக்கி வென அரபி ட்ரை பண்ணவா?? எதன ஐடியா இருந்த சொல்லுங்க

    ReplyDelete
  36. @ வெங்கட் : ஆமா என் பொண்ணு யுகேஜி படிகிரள அவதான் எழுதி தரா அவ கிட்டவே கேட்டு சொல்றேன் நாளைக்கு என்ன தலைப்பு விக்க போறன்னு சரியா கவலை வேணாம்.

    பாராட்டற மாறி பாரட்டிபுட்டு இப்படி கவுத்தா???

    ReplyDelete
  37. @ ஸ்ரீராம் : ரொம்ப தேங்க்ஸ்

    ReplyDelete
  38. @ ரமேஷ்.,

    // நாளைக்கி வென அரபி ட்ரை பண்ணவா?? //

    பண்ணுங்க பண்ணுங்க..
    அரபிகாரனும் தற்கொலை பண்ணிகட்டும்..

    ReplyDelete
  39. @ வெங்கட் : ஆஹா இப்போவே சொல்றேன் எந்த ஊர் காரரும் தற்கொலை செய்து கொண்டால் நான் பொறுப்பில்லை!
    இப்படியே பயமுடுதினா நான் வழகொழிந்து போன எதன பழைய பாஷையை தன் தேர்ந்தெடுத்து ப்ளாக் எழுதணும்

    ReplyDelete
  40. நீங்கள் பதிவுகளுக்கு சுட்டி குடுத்த விதம் ரொம்ப ஜூப்பர்...ரொம்ப ரசித்தேன். சுட்டிகளும் ஜூப்பர்

    ReplyDelete
  41. அறிமுகப்படுத்திய விதம் அருமை.
    புதிய ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
    அறிமுகப்படுத்தப்பட்டவர்களுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  42. //நேத்து தமிழ்(வெட்சி) இன்னிக்கு இங்கிலீஷ்(ரெடி... டேக்... ஆக்சன்) அப்போ நாளைக்கு என்ன ஹிந்தியா?//

    ReplyDelete
  43. எல்லா தளங்களுமே தெரிந்தவை தான் என்றாலும் அறிமுகபடுத்துவதில் நகைச்சுவைக்கு முயற்சித்திருப்பது நல்லாருக்கு.

    ReplyDelete
  44. ஆஹா முதல் அறிமுகமே "பிரியமானவளே" வா... உனக்கு அந்த கதை ரெம்ப பிடிச்சதுன்னு சொன்ன ஐ நோ...பட் இவ்ளோ புடிச்சதுன்னு எதிர் பாக்கல காயத்ரி...Thanks a lot Gayathri...

    Congrats for other bloggers mentioned here too

    ReplyDelete
  45. இன்று கதையில் அறிமுகங்கள் பாணி,
    வி.(த்தியாசமாக), வி(றுறுவிப்பாக),
    வி.(யப்பாக) ஆக இருந்தது. 46

    ReplyDelete
  46. இன்று கதையில் அறிமுகங்கள் பாணி,
    வி.(த்தியாசமாக), வி(றுறுவிப்பாக),
    வி.(யப்பாக) ஆக இருந்தது. 46

    ReplyDelete