அந்த ஊரின் லேடீஸ் க்ளப் தன்னுடைய ஐந்தாவது ஆண்டுவிழாவை மிக சிறப்பாக நடத்த திட்டமிட்டிருந்தது. ஆகையால், அந்த புகழ்பெற்ற மண்டபமொன்றில் விழா ஏற்பாடாகியிருந்தது. பந்தல்களும், பந்தல்களில் தொங்கும் ஒளிச்சரங்களும் கண்ணைப்பறித்தன. அனைவரும் மண்டபத்தின் உள்ளும் வாசலிலுமாக கூடியிருந்து சிறப்புவிருந்தினருக்காக காத்திருந்தார்கள். அந்த ஊரில் சிறிய அளவில் பத்திரிகை நடத்திவரும் ஒருவரை விருந்தினராக அழைத்திருந்தார்கள். காரில் வந்திறங்கிய விருந்தினருக்கு மாலைமரியாதைகளை அளித்தபின், உள்ளே அழைத்துச்சென்றார்கள் விழாக்குழுவினர்.
பேச்சும் பாராட்டுக்களும், பொன்னாடைகளுமாக விழா நிறைவுற்றது. விழாக்குழுவினரில் ஒருவர் சிறப்புவிருந்தினரிடம் ஏற்கனவே விழாவுக்குப்பின் ஒரு கலந்துரையாடல் இருப்பதாகவும், அதில் அவர் அவசியம் கலந்துகொள்ள வேண்டுமென்றும் கூறி அனுமதி வாங்கியிருந்தார்.
அனைவரும் ஓய்வாக நாற்காலிகளை எடுத்துப்போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். அதில் ஒரு பெண் சிறப்புவிருந்தினரை வந்ததிலிருந்தே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். கடைசியில் ஆர்வம் தாங்காமல் கேட்டுவிட்டார்.
"மேடம்... நீங்க ரொம்ப ஸ்லிம்மா இருக்கீங்களே.. தவறாம ஜிம்முக்கெல்லாம் போவீங்களா!!..."
"இல்லைம்மா,.. கோவை2தில்லி சொல்லியிருக்கிற தோய்ப்பு நடனத்தை தினமும் மூணுதடவை செய்வேன். அவ்ளோதான். அப்புறம், மாதேவி சொல்லியிருக்கிறமாதிரி அகத்திப்பூவை அடிக்கடி சமைச்சு சாப்பிடுவேன். இப்படி , எளிமையாத்தான் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துட்டு வரேன். மத்தபடி பெரிய காரணம் எதுவுமில்ல.. "
இன்னொரு பெண் பக்கத்திலிருந்த தோழியிடம் கிசுகிசுத்தாள்,.."எவ்ளோ நிறமா இருக்காங்க.. தெனமும் பால்ல தங்கத்தை கரைச்சுக்கலந்து குடிப்பாங்களோ"
"அடிப்போடி இவளே... நெறைய க்ரீமெல்லாம் இப்போ மார்க்கெட்டுல கிடைக்குதுல்ல. அதுல ஏதாவது உபயோகப்படுத்துவாங்களாயிருக்கும்"
மென்சிரிப்புடன் விருந்தினர் சொன்னார்.. "ஏம்மா நிறம் நிறம்ன்னு அடிச்சிக்கிறீங்க??.. அம்பிகா சொல்லியிருக்காப்ல நெறத்துல என்னயிருக்கு. மனசுதான் நல்லாருக்கணும்.."
"மேடம்.. வீட்டுல இருக்கிற சில உறுப்பினர்களையே எங்களால சிலசமயம் சமாளிக்க முடியலை. இவ்ளோ பெரிய பத்திரிக்கையையும், அதுல வேலைபார்க்குற ஆட்களையும் நீங்க எப்படித்தான் சமாளிக்கிறீங்களோ.."
என்னோட ஸ்டாஃப் எல்லாருமே நல்லவங்கதான். ஆனா, சிலசமயங்கள்ல ரேகாராகவன் சொன்னமாதிரி செல்போனை வெச்சுக்கிட்டு அலம்பல் பண்றதும், ஸாதிகா சொல்லிருக்கிறமாதிரி வேலை செய்யாமலேயே, செய்யறமாதிரி படம் காட்டுறதும் சிலசமயங்கள்ல நடக்கும். என்ன பண்றது..!!, நம்ம இந்திரா சொல்லியிருக்கிறமாதிரி அசலெது, போலி எதுன்னு கண்டுபிடிக்கிறது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். மத்தபடி அவங்கல்லாம் என்னோட குடும்பத்து ஆட்கள் மாதிரிதான்"
"உங்க பத்திரிக்கை அனுபவத்துல மறக்கமுடியாத சம்பவம் ஏதாவது இருக்கா??..."
"ஓ.. இருக்கே. ஒரு சமயம் ஒரு குழந்தை எங்க ஆபீசுக்கு வந்தான். பதினாலு, பதினஞ்சு வயசிருக்கும். எல்லா அப்பாக்கள், அம்மாக்கள் மேல ஏதோ கோவம் போலிருக்கு. எங்களை புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க. அவங்களுக்கெல்லாம் உறைக்கிறமாதிரி உங்க பத்திரிக்கையில ஏதாவது எழுதுங்கன்னு சொல்லிக்கிட்டு என்னோட ரூமுக்கே நேரா வந்துட்டான். ரொம்ப துணிச்சல்காரப்பையன். அவன் சொல்லச்சொல்ல, எனக்கு ஹேமா சொன்னதுதான் ஞாபகம் வந்தது. சிரிச்சுட்டா அவன் மனசு சங்கடப்படக்கூடாதேன்னு என்னைக்கட்டுப்படுத்திக்கிட்டு அவனை சமாதானப்படுத்தி அனுப்பிவெச்சேன். இன்னிக்கு நினைச்சாலும் எனக்கு சிரிப்புதான் வருது :-))"
"அதேமாதிரி லஷ்மியம்மா அவங்க மருமகளுக்கு தமிழ் கத்துக்கொடுத்த கதையையும் ஒரு கட்டுரையா எழுதி அனுப்பியிருந்தாங்க. ரொம்ப சுவாரஸ்யமாயிருந்ததால எங்க பத்திரிக்கையில் பிரசுரிச்சோம்.."
"மேடம்,... எங்க வானதியக்கா அமெரிக்காவுல ஒரு கல்யாணம் அட்டெண்ட் செஞ்ச கதையும் ரொம்ப சுவாரஸ்யமாயிருக்கும். உங்க பத்திரிக்கையில் வெளியிடுவீங்களா?.."
"எழுதியனுப்புங்க.. நிச்சயமா பிரசுரிக்கிறோம். இப்ப டைம் ஆயிடுச்சு. நான் கெளம்பறேன்.. வணக்கம்".
அனைவரும் கோரசாக, "வணக்கம்...".
padichittu varen
ReplyDeleteok.. me the first..
ReplyDeleteஅடப்பாவி ரமேசு..
ReplyDeleteவடைய அடிச்சிட்டியே ?
//Madhavan Srinivasagopalan said...
ReplyDeleteஅடப்பாவி ரமேசு..
வடைய அடிச்சிட்டியே ?///
அசிங்கப்பட்டார் மாதவன். கஷ்டப்பட்டு ஒருத்தங்க எழுதிருக்காங்க. அதை படிக்காம. வடை வடைன்னு என்ன சின்னப்புள்ள தனமா?
நல்ல அறிமுகங்கள் அக்கா!!
ReplyDeleteபலர் ஏற்கனவே தெரியும்..... தெரியாதவர்களை பார்த்துட்டு வரேன் ;))
இந்திரா அசல் பதிவரா போலி பதிவரா?
ReplyDelete/ஆமினா said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் அக்கா!!
பலர் ஏற்கனவே தெரியும்..... தெரியாதவர்களை பார்த்துட்டு வரேன் ;))//
எல்லோர் வீட்டுக்கும் போறீங்களா? # டவுட்டு
இன்னும் ஒரு பதிவையும் படிக்கலை. படிச்சுட்டுப் பின்னூட்டம் போடறேன்.
ReplyDeleteநீங்க தொகுத்து வழங்கும் விதம் நல்லா இருக்கு!
கீப் இட் அப்
இன்றும் அருமை.
ReplyDeleteSuper!!!! Best wishes to everyone. :-)
ReplyDeleteஎன்னையும் அறிமுகங்கள் பட்டியல்ல சேர்த்ததுக்கு நன்றி.
ReplyDeleteமற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
அசத்தறீங்க. தமிழ்மண ஸ்டார் போல உங்க பதிவுல லிங்கையும் கொடுத்திருக்கீங்க சூப்பர். வாழ்த்துக்கள்
ReplyDeleteஎன்னையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக நன்றிகள்.
ReplyDeleteஇதுஇரண்டாவது தடவையாக அறிமுகம் எனக்கு. முதலில் ஆயுர்வேத வைத்தியம் பற்றி பரணீயம் என்னும் தலைப்பில் ஒரு பதிவு போட்டிருந்தேன். அப்போ ராமசாமி அவர்கள் என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தினாரகள். இப்ப நீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு நன்றிகள்.
அறிமுகங்கள் அருமை
ReplyDeleteஇன்றும் வித்தியாசமான முறையில் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள். போஇ எல்லருக்கும் காலை வணக்கம் சொல்லிட்டு வரேன்.
ReplyDeleteஇதுவரை நான் பார்த்திராத பதிவர்களை அறிமுகப்படுத்தி வைத்துள்ளீர்கள். நன்றி. அறிமுகம் செய்யப்பட்ட பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇன்று தொகுத்த விதம் அருமை.
ReplyDelete//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDelete//Madhavan Srinivasagopalan said...
அடப்பாவி ரமேசு..
வடைய அடிச்சிட்டியே ?///
அசிங்கப்பட்டார் மாதவன். கஷ்டப்பட்டு ஒருத்தங்க எழுதிருக்காங்க. அதை படிக்காம. வடை வடைன்னு என்ன சின்னப்புள்ள தனமா? //
நீயா சொல்லுற.. 'கலி' டோய்..
வாங்க ரமேஷ்,
ReplyDeleteஇன்னிக்காவது முழுசா படிப்பீங்கல்ல :-))
நன்றி.
வாங்க மாதவன்,
ReplyDeleteயூ த செகண்டேய்ய்ய்ய் :-)
வாங்க ஆமினா,
ReplyDeleteபாத்துட்டு வாங்கப்பா..
நன்றி.
@ ரமேஷ்,
ReplyDeleteதெரியலியேப்ப்பாஆஆஆ...
இதோ இந்திராவே வந்துருக்காங்க.. அவங்களையே கேட்டுடுங்க :-)))
நன்றி.
வாங்க கோபி,
ReplyDeleteரொம்ப நன்றிங்க..
வாங்க ஆசியா,
ReplyDeleteநன்றிப்பா..
வாங்க சித்ரா,
ReplyDeleteநன்றிங்க..
வாங்க இந்திரா,
ReplyDeleteவருகைக்கு நன்றி..
வாங்க புதுகைத்தென்றல்,
ReplyDeleteஅதுக்கு இது வெள்ளோட்டம்ன்னு வெச்சுக்கலாமா :-))))))))
நன்றிப்பா..
வாங்க லஷ்மியம்மா,
ReplyDeleteவருகைக்கு நன்றி.
வாங்க ஜலீலா,
ReplyDeleteநன்றிங்க.
வாங்க ராஜி,
ReplyDeleteவருகைக்கு நன்றி.
வாங்க பாரத்.. பாரதி,
ReplyDeleteவருகைக்கு நன்றி.
அறிமுகத்துக்கு நன்றி அமைதிசாரல்.
ReplyDeleteநீங்கள் அறிமுகம் செய்யும் முறை நல்லாயிருக்கு.
உங்கள் அறிமுகங்களில் பலர் என் தொடர்பில்... சிலர் புதியவர்கள்... அனைவரையும் வாசிக்கிறேன். கதை போல் உங்கள் அறிமுகம் அருமையா போகுது. வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் அறிமுகங்களுக்கும்....
ReplyDelete//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteஇந்திரா அசல் பதிவரா போலி பதிவரா?//
உங்கள மாதிரியே மொக்கை பதிவர்..
அறிந்த பதிவரகள் பலர்.அறியாத பதிவர்கள் சிலர்.மொத்தத்தில் அருமையான அறிமுக.கூடவே என்னியும் அறிமுகப்படுத்தியதற்கு மிக நன்றி.
ReplyDeleteநல்லா சுவாரஸ்யமா இருக்குப்பா.
ReplyDeleteபுதிய அறிமுகங்கள். நன்றி.
ReplyDeleteபடிச்சிட்டேன்.. படிச்சிட்டேன்..
ReplyDeleteஉங்கள் கற்பனை குதிரை நன்றாக பறக்கிறது..
வாழ்த்துக்கள்..
நன்றி சாரல்.உப்புமடச் சந்திலயும் ஏதோ கிறுக்கிறேன்னு கண்டு பிடிச்சிருக்கிறீங்க.உப்புமடச் சந்தியை அறிமுகப்படுத்தின இரண்டாவது உறவு நீங்க.நன்றி.மற்றைய சகோதரிகள் எல்லோருமே அறிமுகமானவ்ர்களதான்.
ReplyDeleteதிறமைசாலிகள் !
முதல் முறையாக வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
ReplyDeleteதெரியாத அறிமுகங்கள்...ஹலோ! நான் நானானி...உங்களையெல்லாம் படிச்சிட்டு வாரேன்..சேரியா?
ReplyDeleteவாழ்த்துக்கள் சாரல்:)!
ReplyDeleteபுது ஸ்டைலில் அறிமுகம் செஞ்சுருக்கீங்க!சூப்பர்!
ReplyDeleteஎன்னையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வாங்க அம்பிகா,
ReplyDeleteநன்றிங்க..
வாங்க குமார்,
ReplyDeleteஇப்ப புதுசா வர்றவங்களுக்கும், ஏற்கனவே இருக்கிறவங்களை தெரியணுமில்லியா..அதுக்காகத்தான் இந்த அறிமுகம் :-))
வரவுக்கு நன்றி.
வாங்க ஸாதிகா,
ReplyDeleteவரவுக்கு நன்றிங்க.
வாங்க ஹுஸைனம்மா,
ReplyDeleteநன்றிப்பா..
வாங்க வெங்கட்,
ReplyDeleteவரவுக்கு நன்றிங்க..
வாங்க மாதவன்,
ReplyDeleteரொம்ப நன்றிப்பா..
வாங்க ஹேமா,
ReplyDeleteவரவுக்கு நன்றிங்க..
வாங்க நானானிம்மா,
ReplyDeleteரொம்ப அழகா எழுதறாங்கம்மா.. கண்டிப்பா படிங்க :-)
நன்றி.
வாங்க கோவை2தில்லி,
ReplyDeleteவரவுக்கு நன்றி.
வாங்க இர்ஷாத்,
ReplyDeleteநன்றிப்பா..
வாங்க அருணா,
ReplyDeleteஅறிமுகங்களுக்கு பூங்கொத்து உண்டுதானே :-))
நன்றி..
வாங்க மாதேவி,
ReplyDeleteவருகைக்கு நன்றி.
சுவாரஸ்யம் சுவாரஸ்யம்:))!
ReplyDeleteமகளிர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!
அருமை
ReplyDeleteஎன்னை அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி, அமைதி அக்கா.
ReplyDeleteவலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி. ரேகா ராகவன் என்றதும் பெண் பதிவாளர் என்று நினைத்து அனைத்து பெண் பதிவர்களோடு என்னையும் சேர்த்து விட்டீர்கள். நான் இந்த புனைப் பெயரிலேயே பத்திரிக்கைகளில் எழுதி வந்ததால் இதையே என் வலைப்பூவிலும் வைத்துவிட்டேன். நீங்கள் அறிமுகப்படுத்திய விதம் புது மாதிரியாக இருந்தது.வாழ்த்துகள்.
ReplyDeleteஅன்புடன்,
கே.ராகவன்
(ரேகா ராகவன்)
//Madhavan Srinivasagopalan said...
ReplyDeleteபடிச்சிட்டேன்.. படிச்சிட்டேன்..
உங்கள் கற்பனை குதிரை நன்றாக பறக்கிறது..
வாழ்த்துக்கள்..//
குதிரை பறக்குமா? டவுட்டு
//ரேகா ராகவன் said...
ReplyDeleteவலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி. ரேகா ராகவன் என்றதும் பெண் பதிவாளர் என்று நினைத்து அனைத்து பெண் பதிவர்களோடு என்னையும் சேர்த்து விட்டீர்கள். நான் இந்த புனைப் பெயரிலேயே பத்திரிக்கைகளில் எழுதி வந்ததால் இதையே என் வலைப்பூவிலும் வைத்துவிட்டேன். நீங்கள் அறிமுகப்படுத்திய விதம் புது மாதிரியாக இருந்தது.வாழ்த்துகள்.
அன்புடன்,
கே.ராகவன்
(ரேகா ராகவன்)///
தொப்பி தொப்பி
பழகிய முகங்கள் பல... அறிமுகங்கள் நன்று.
ReplyDeleteவாங்க ராமலஷ்மி,
ReplyDeleteஅரசன்,
வானதி...
வருகைக்கு மிக்க நன்றி.
வாங்க ரேகா ராகவன்,
ReplyDeleteஉங்க பதிலுக்காக வெயிட்டிங்...
ரேகா ராகவன்,
ReplyDeleteஉங்க வரவுக்கும், பெருந்தன்மைக்கும் மிக்க நன்றி..
ஹை! நானும் வலைச்சரத்தில். மிக்க நன்றி, அப்பாவி. பெரும்பாலும் எல்லா பதிவர்களும் அறிமுகம் ஆனவர்களே.
ReplyDelete