07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, January 6, 2011

மகளிர் அணி..

அந்த ஊரின் லேடீஸ் க்ளப் தன்னுடைய ஐந்தாவது ஆண்டுவிழாவை மிக சிறப்பாக நடத்த திட்டமிட்டிருந்தது. ஆகையால், அந்த புகழ்பெற்ற மண்டபமொன்றில் விழா ஏற்பாடாகியிருந்தது. பந்தல்களும், பந்தல்களில் தொங்கும் ஒளிச்சரங்களும் கண்ணைப்பறித்தன. அனைவரும் மண்டபத்தின் உள்ளும் வாசலிலுமாக கூடியிருந்து சிறப்புவிருந்தினருக்காக காத்திருந்தார்கள். அந்த ஊரில் சிறிய அளவில் பத்திரிகை நடத்திவரும் ஒருவரை விருந்தினராக அழைத்திருந்தார்கள். காரில் வந்திறங்கிய விருந்தினருக்கு மாலைமரியாதைகளை அளித்தபின், உள்ளே அழைத்துச்சென்றார்கள் விழாக்குழுவினர்.

பேச்சும் பாராட்டுக்களும், பொன்னாடைகளுமாக விழா நிறைவுற்றது. விழாக்குழுவினரில் ஒருவர் சிறப்புவிருந்தினரிடம் ஏற்கனவே விழாவுக்குப்பின் ஒரு கலந்துரையாடல் இருப்பதாகவும், அதில் அவர் அவசியம் கலந்துகொள்ள வேண்டுமென்றும் கூறி அனுமதி வாங்கியிருந்தார்.

அனைவரும் ஓய்வாக நாற்காலிகளை எடுத்துப்போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். அதில் ஒரு பெண் சிறப்புவிருந்தினரை வந்ததிலிருந்தே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். கடைசியில் ஆர்வம் தாங்காமல் கேட்டுவிட்டார்.

"மேடம்... நீங்க ரொம்ப ஸ்லிம்மா இருக்கீங்களே.. தவறாம ஜிம்முக்கெல்லாம் போவீங்களா!!..."

"இல்லைம்மா,.. கோவை2தில்லி சொல்லியிருக்கிற தோய்ப்பு நடனத்தை தினமும் மூணுதடவை செய்வேன். அவ்ளோதான். அப்புறம், மாதேவி சொல்லியிருக்கிறமாதிரி அகத்திப்பூவை அடிக்கடி சமைச்சு சாப்பிடுவேன். இப்படி , எளிமையாத்தான் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துட்டு வரேன். மத்தபடி பெரிய காரணம் எதுவுமில்ல.. "

இன்னொரு பெண் பக்கத்திலிருந்த தோழியிடம் கிசுகிசுத்தாள்,.."எவ்ளோ நிறமா இருக்காங்க.. தெனமும் பால்ல தங்கத்தை கரைச்சுக்கலந்து குடிப்பாங்களோ"

"அடிப்போடி இவளே...  நெறைய க்ரீமெல்லாம் இப்போ மார்க்கெட்டுல கிடைக்குதுல்ல. அதுல ஏதாவது உபயோகப்படுத்துவாங்களாயிருக்கும்"

மென்சிரிப்புடன் விருந்தினர் சொன்னார்.. "ஏம்மா நிறம் நிறம்ன்னு அடிச்சிக்கிறீங்க??.. அம்பிகா சொல்லியிருக்காப்ல நெறத்துல என்னயிருக்கு. மனசுதான் நல்லாருக்கணும்.."

"மேடம்.. வீட்டுல இருக்கிற சில உறுப்பினர்களையே எங்களால சிலசமயம் சமாளிக்க முடியலை. இவ்ளோ பெரிய பத்திரிக்கையையும், அதுல வேலைபார்க்குற ஆட்களையும் நீங்க எப்படித்தான் சமாளிக்கிறீங்களோ.."

என்னோட ஸ்டாஃப் எல்லாருமே நல்லவங்கதான். ஆனா, சிலசமயங்கள்ல ரேகாராகவன் சொன்னமாதிரி செல்போனை வெச்சுக்கிட்டு அலம்பல் பண்றதும், ஸாதிகா சொல்லிருக்கிறமாதிரி வேலை செய்யாமலேயே, செய்யறமாதிரி படம் காட்டுறதும் சிலசமயங்கள்ல நடக்கும். என்ன பண்றது..!!, நம்ம இந்திரா சொல்லியிருக்கிறமாதிரி அசலெது, போலி எதுன்னு கண்டுபிடிக்கிறது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். மத்தபடி அவங்கல்லாம் என்னோட குடும்பத்து ஆட்கள் மாதிரிதான்"

"உங்க பத்திரிக்கை அனுபவத்துல மறக்கமுடியாத சம்பவம் ஏதாவது இருக்கா??..."

"ஓ.. இருக்கே. ஒரு சமயம் ஒரு குழந்தை எங்க ஆபீசுக்கு வந்தான். பதினாலு, பதினஞ்சு வயசிருக்கும். எல்லா அப்பாக்கள், அம்மாக்கள் மேல ஏதோ கோவம் போலிருக்கு. எங்களை புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க. அவங்களுக்கெல்லாம் உறைக்கிறமாதிரி உங்க பத்திரிக்கையில ஏதாவது எழுதுங்கன்னு சொல்லிக்கிட்டு என்னோட ரூமுக்கே நேரா வந்துட்டான். ரொம்ப துணிச்சல்காரப்பையன். அவன் சொல்லச்சொல்ல, எனக்கு ஹேமா சொன்னதுதான் ஞாபகம் வந்தது. சிரிச்சுட்டா அவன் மனசு சங்கடப்படக்கூடாதேன்னு என்னைக்கட்டுப்படுத்திக்கிட்டு அவனை சமாதானப்படுத்தி அனுப்பிவெச்சேன். இன்னிக்கு நினைச்சாலும் எனக்கு சிரிப்புதான் வருது :-))"

"அதேமாதிரி லஷ்மியம்மா அவங்க மருமகளுக்கு தமிழ் கத்துக்கொடுத்த கதையையும் ஒரு கட்டுரையா எழுதி அனுப்பியிருந்தாங்க. ரொம்ப சுவாரஸ்யமாயிருந்ததால எங்க பத்திரிக்கையில் பிரசுரிச்சோம்.."

"மேடம்,... எங்க வானதியக்கா அமெரிக்காவுல ஒரு கல்யாணம் அட்டெண்ட் செஞ்ச கதையும் ரொம்ப சுவாரஸ்யமாயிருக்கும். உங்க பத்திரிக்கையில் வெளியிடுவீங்களா?.."

"எழுதியனுப்புங்க.. நிச்சயமா பிரசுரிக்கிறோம். இப்ப டைம் ஆயிடுச்சு. நான் கெளம்பறேன்.. வணக்கம்".

அனைவரும் கோரசாக, "வணக்கம்...".




67 comments:

  1. அடப்பாவி ரமேசு..
    வடைய அடிச்சிட்டியே ?

    ReplyDelete
  2. //Madhavan Srinivasagopalan said...

    அடப்பாவி ரமேசு..
    வடைய அடிச்சிட்டியே ?///

    அசிங்கப்பட்டார் மாதவன். கஷ்டப்பட்டு ஒருத்தங்க எழுதிருக்காங்க. அதை படிக்காம. வடை வடைன்னு என்ன சின்னப்புள்ள தனமா?

    ReplyDelete
  3. நல்ல அறிமுகங்கள் அக்கா!!

    பலர் ஏற்கனவே தெரியும்..... தெரியாதவர்களை பார்த்துட்டு வரேன் ;))

    ReplyDelete
  4. இந்திரா அசல் பதிவரா போலி பதிவரா?

    ReplyDelete
  5. /ஆமினா said...

    நல்ல அறிமுகங்கள் அக்கா!!

    பலர் ஏற்கனவே தெரியும்..... தெரியாதவர்களை பார்த்துட்டு வரேன் ;))//

    எல்லோர் வீட்டுக்கும் போறீங்களா? # டவுட்டு

    ReplyDelete
  6. இன்னும் ஒரு பதிவையும் படிக்கலை. படிச்சுட்டுப் பின்னூட்டம் போடறேன்.

    நீங்க தொகுத்து வழங்கும் விதம் நல்லா இருக்கு!

    கீப் இட் அப்

    ReplyDelete
  7. இன்றும் அருமை.

    ReplyDelete
  8. Super!!!! Best wishes to everyone. :-)

    ReplyDelete
  9. என்னையும் அறிமுகங்கள் பட்டியல்ல சேர்த்ததுக்கு நன்றி.
    மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. அசத்தறீங்க. தமிழ்மண ஸ்டார் போல உங்க பதிவுல லிங்கையும் கொடுத்திருக்கீங்க சூப்பர். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. என்னையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக நன்றிகள்.
    இதுஇரண்டாவது தடவையாக அறிமுகம் எனக்கு. முதலில் ஆயுர்வேத வைத்தியம் பற்றி பரணீயம் என்னும் தலைப்பில் ஒரு பதிவு போட்டிருந்தேன். அப்போ ராமசாமி அவர்கள் என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தினாரகள். இப்ப நீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு நன்றிகள்.

    ReplyDelete
  12. அறிமுகங்கள் அருமை

    ReplyDelete
  13. இன்றும் வித்தியாசமான முறையில் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள். போஇ எல்லருக்கும் காலை வணக்கம் சொல்லிட்டு வரேன்.

    ReplyDelete
  14. இதுவரை நான் பார்த்திராத பதிவர்களை அறிமுகப்படுத்தி வைத்துள்ளீர்கள். நன்றி. அறிமுகம் செய்யப்பட்ட பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. இன்று தொகுத்த விதம் அருமை.

    ReplyDelete
  16. //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    //Madhavan Srinivasagopalan said...

    அடப்பாவி ரமேசு..
    வடைய அடிச்சிட்டியே ?///

    அசிங்கப்பட்டார் மாதவன். கஷ்டப்பட்டு ஒருத்தங்க எழுதிருக்காங்க. அதை படிக்காம. வடை வடைன்னு என்ன சின்னப்புள்ள தனமா? //

    நீயா சொல்லுற.. 'கலி' டோய்..

    ReplyDelete
  17. வாங்க ரமேஷ்,

    இன்னிக்காவது முழுசா படிப்பீங்கல்ல :-))

    நன்றி.

    ReplyDelete
  18. வாங்க மாதவன்,

    யூ த செகண்டேய்ய்ய்ய் :-)

    ReplyDelete
  19. வாங்க ஆமினா,

    பாத்துட்டு வாங்கப்பா..

    நன்றி.

    ReplyDelete
  20. @ ரமேஷ்,

    தெரியலியேப்ப்பாஆஆஆ...

    இதோ இந்திராவே வந்துருக்காங்க.. அவங்களையே கேட்டுடுங்க :-)))

    நன்றி.

    ReplyDelete
  21. வாங்க கோபி,

    ரொம்ப நன்றிங்க..

    ReplyDelete
  22. வாங்க ஆசியா,

    நன்றிப்பா..

    ReplyDelete
  23. வாங்க சித்ரா,

    நன்றிங்க..

    ReplyDelete
  24. வாங்க இந்திரா,

    வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  25. வாங்க புதுகைத்தென்றல்,

    அதுக்கு இது வெள்ளோட்டம்ன்னு வெச்சுக்கலாமா :-))))))))

    நன்றிப்பா..

    ReplyDelete
  26. வாங்க லஷ்மியம்மா,

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  27. வாங்க ஜலீலா,

    நன்றிங்க.

    ReplyDelete
  28. வாங்க ராஜி,

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  29. வாங்க பாரத்.. பாரதி,

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  30. அறிமுகத்துக்கு நன்றி அமைதிசாரல்.
    நீங்கள் அறிமுகம் செய்யும் முறை நல்லாயிருக்கு.

    ReplyDelete
  31. உங்கள் அறிமுகங்களில் பலர் என் தொடர்பில்... சிலர் புதியவர்கள்... அனைவரையும் வாசிக்கிறேன். கதை போல் உங்கள் அறிமுகம் அருமையா போகுது. வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் அறிமுகங்களுக்கும்....

    ReplyDelete
  32. //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    இந்திரா அசல் பதிவரா போலி பதிவரா?//


    உங்கள மாதிரியே மொக்கை பதிவர்..

    ReplyDelete
  33. அறிந்த பதிவரகள் பலர்.அறியாத பதிவர்கள் சிலர்.மொத்தத்தில் அருமையான அறிமுக.கூடவே என்னியும் அறிமுகப்படுத்தியதற்கு மிக நன்றி.

    ReplyDelete
  34. நல்லா சுவாரஸ்யமா இருக்குப்பா.

    ReplyDelete
  35. புதிய அறிமுகங்கள். நன்றி.

    ReplyDelete
  36. படிச்சிட்டேன்.. படிச்சிட்டேன்..
    உங்கள் கற்பனை குதிரை நன்றாக பறக்கிறது..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  37. நன்றி சாரல்.உப்புமடச் சந்திலயும் ஏதோ கிறுக்கிறேன்னு கண்டு பிடிச்சிருக்கிறீங்க.உப்புமடச் சந்தியை அறிமுகப்படுத்தின இரண்டாவது உறவு நீங்க.நன்றி.மற்றைய சகோதரிகள் எல்லோருமே அறிமுகமானவ்ர்களதான்.
    திறமைசாலிகள் !

    ReplyDelete
  38. முதல் முறையாக வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete
  39. தெரியாத அறிமுகங்கள்...ஹலோ! நான் நானானி...உங்களையெல்லாம் படிச்சிட்டு வாரேன்..சேரியா?

    ReplyDelete
  40. வாழ்த்துக்கள் சாரல்:)!

    ReplyDelete
  41. புது ஸ்டைலில் அறிமுகம் செஞ்சுருக்கீங்க!சூப்பர்!

    ReplyDelete
  42. என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  43. வாங்க அம்பிகா,

    நன்றிங்க..

    ReplyDelete
  44. வாங்க குமார்,

    இப்ப புதுசா வர்றவங்களுக்கும், ஏற்கனவே இருக்கிறவங்களை தெரியணுமில்லியா..அதுக்காகத்தான் இந்த அறிமுகம் :-))

    வரவுக்கு நன்றி.

    ReplyDelete
  45. வாங்க ஸாதிகா,

    வரவுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  46. வாங்க ஹுஸைனம்மா,

    நன்றிப்பா..

    ReplyDelete
  47. வாங்க வெங்கட்,

    வரவுக்கு நன்றிங்க..

    ReplyDelete
  48. வாங்க மாதவன்,

    ரொம்ப நன்றிப்பா..

    ReplyDelete
  49. வாங்க ஹேமா,

    வரவுக்கு நன்றிங்க..

    ReplyDelete
  50. வாங்க நானானிம்மா,

    ரொம்ப அழகா எழுதறாங்கம்மா.. கண்டிப்பா படிங்க :-)

    நன்றி.

    ReplyDelete
  51. வாங்க கோவை2தில்லி,

    வரவுக்கு நன்றி.

    ReplyDelete
  52. வாங்க இர்ஷாத்,

    நன்றிப்பா..

    ReplyDelete
  53. வாங்க அருணா,

    அறிமுகங்களுக்கு பூங்கொத்து உண்டுதானே :-))

    நன்றி..

    ReplyDelete
  54. வாங்க மாதேவி,

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  55. சுவாரஸ்யம் சுவாரஸ்யம்:))!

    மகளிர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  56. என்னை அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி, அமைதி அக்கா.

    ReplyDelete
  57. வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி. ரேகா ராகவன் என்றதும் பெண் பதிவாளர் என்று நினைத்து அனைத்து பெண் பதிவர்களோடு என்னையும் சேர்த்து விட்டீர்கள். நான் இந்த புனைப் பெயரிலேயே பத்திரிக்கைகளில் எழுதி வந்ததால் இதையே என் வலைப்பூவிலும் வைத்துவிட்டேன். நீங்கள் அறிமுகப்படுத்திய விதம் புது மாதிரியாக இருந்தது.வாழ்த்துகள்.
    அன்புடன்,
    கே.ராகவன்
    (ரேகா ராகவன்)

    ReplyDelete
  58. //Madhavan Srinivasagopalan said...

    படிச்சிட்டேன்.. படிச்சிட்டேன்..
    உங்கள் கற்பனை குதிரை நன்றாக பறக்கிறது..
    வாழ்த்துக்கள்..//


    குதிரை பறக்குமா? டவுட்டு

    ReplyDelete
  59. //ரேகா ராகவன் said...

    வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி. ரேகா ராகவன் என்றதும் பெண் பதிவாளர் என்று நினைத்து அனைத்து பெண் பதிவர்களோடு என்னையும் சேர்த்து விட்டீர்கள். நான் இந்த புனைப் பெயரிலேயே பத்திரிக்கைகளில் எழுதி வந்ததால் இதையே என் வலைப்பூவிலும் வைத்துவிட்டேன். நீங்கள் அறிமுகப்படுத்திய விதம் புது மாதிரியாக இருந்தது.வாழ்த்துகள்.
    அன்புடன்,
    கே.ராகவன்
    (ரேகா ராகவன்)///

    தொப்பி தொப்பி

    ReplyDelete
  60. பழகிய முகங்கள் பல... அறிமுகங்கள் நன்று.

    ReplyDelete
  61. வாங்க ராமலஷ்மி,

    அரசன்,

    வானதி...

    வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  62. வாங்க ரேகா ராகவன்,

    உங்க பதிலுக்காக வெயிட்டிங்...

    ReplyDelete
  63. ரேகா ராகவன்,

    உங்க வரவுக்கும், பெருந்தன்மைக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  64. ஹை! நானும் வலைச்சரத்தில். மிக்க நன்றி, அப்பாவி. பெரும்பாலும் எல்லா பதிவர்களும் அறிமுகம் ஆனவர்களே.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது