புதுப்படம்...
➦➠ by:
அமைதிச்சாரல்
நகரின் நடுவில் அமைந்திருந்த அந்த பெயர்போன ஹோட்டலின் பன்னிரண்டாவது மாடியில், பன்னிரண்டாவது அறை. சோபாக்கள் எதுவுமில்லாமல் தரைத்தளத்துக்கு அமைக்கப்பட்ட திவான்கள். அதன்மேல் இரண்டுமூன்று உருட்டுத்தலையணைகள். அறைக்குள் சுமார் ஏழெட்டுப்பேர் அவரவர் சௌகரியத்துக்கேற்ப சாய்ந்துகொண்டும், உட்கார்ந்துகொண்டும், மடியில் தலையணைகளை வைத்துக்கொண்டும் இருந்தார்கள். நடுநாயகமாக ஒருத்தர் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தார். ஒரு புதுப்படத்துக்கான கதைக்கலந்துரையாடல் அங்கே நடைபெற்றுக்கொண்டிருந்தது . கதை காற்றுவாக்கில் கசிந்துவிடாமலிருக்க, அறையின் ஜன்னல்கள் இறுக மூடப்பட்டிருந்தன.
டயரக்டர்: நாலு நாளா ரூம்போட்டு யோசிச்சும் நம்ம படத்துக்கு ஒரு கதை சிக்க மாட்டேங்குதே. வாங்கிட்டு வந்த டிவிடியெல்லாம் வீணாப்போச்சே.. ஸ்விட்சர்லாந்துல போய் யோசிச்சாத்தான் கதை சிக்கும்போலிருக்கு.
உதவி டயரக்டர் 1: சார்.. நான் ரொம்ப நாளா ஒரு கதையை யோசிச்சு வெச்சிருக்கேன். நீங்க சரீன்னா சொல்லுவேன்..
டயரக்டர்: சொல்லு.. சொல்லு.
உ.டயரக்டர் 1:ஓப்பன் செஞ்சா.. ஒரு காலேஜ். ஆண்டுவிழாவுக்கு ஹீரோ வந்திருக்கார். அப்ப, படிக்கிறகாலத்துல வாங்குன பல்பெல்லாம் ஞாபகம்வருது. யாருமே ஆட்டோக்ராப் கேக்காத சோகத்துல வீட்டுக்கு வந்தா அவரோட பையன் ஒரு மெகாபல்பு கொடுக்கிறான்.
இணை இயக்குனர்: டயரக்டர் சார்.. இதை R.கோபி எழுதியதிலிருந்து காப்பியடிச்சு சொல்றார்.. நான் ஒரு கதை வெச்சிருக்கேன். நான் சொல்றேன் சார்.
பதிலுக்கு காத்திருக்காமல் சொல்லத்துவங்குகிறார்.
"கட் பண்ணா.. ஒரு அப்பார்ட்மெண்ட். அதுல ஒரு வீடு. அந்தவீட்டுல இருக்கிற பையனுக்கு ஒரு புதுவிதவியாதி வந்துருக்கிறதா டாக்டர் சொல்லிடறாரு. அந்த வியாதி குணமாகணும்ன்னா என்ன செய்யணும்ன்னா..
இன்னொரு இ.இ. இடைமறிக்கிறார்..,' மீதியை நான் சொல்றேன். அவனை சூரியவெளிச்சம் படும்படியா வாக்கிங் கூட்டிட்டு போகணும்ன்னு டாக்டர் சொல்றாரு.. சரியா!!..
"உனக்கெப்படி தெரியும்"
"மோகன் எழுதுனதை நானும் படிச்சிருக்கேன்.."
ஆளாளுக்கு பேசத்துவங்க டயரக்டர் எல்லோரையும் அமைதிப்படுத்துகிறார்.
டயரக்டர்: ஒண்ணு செய்யலாம்.. ஆளுக்கொரு சீன் சொல்லுங்க.. எல்லாத்தையும் சேர்த்து மொத்தமா கலக்கிடுவோம்.
"கதையில த்ரில்லிங் வேணும்.. அதுக்கு ஜீ எழுதுன இந்தக்காட்சியை சேர்த்துக்கலாம்"
"ரெண்டு தோழிகள் கொடுத்த பல்பை பாரத்பாரதி அப்படியே வெச்சிருக்காரு. அந்த சீன்ல தியேட்டர்ல விசில் சும்மா பிச்சிக்கிட்டுப்போகும் சார்"
"இப்பல்லாம் பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்யுறகாலம். நாமளும் புவனேஸ்வரி ராமநாதனோட தொகுப்பை சுட்டு ரீமிக்ஸ் செஞ்சுக்கலாம்"
"பாடல்களுக்கு நம்ம சுந்தர்ஜியை கூப்பிட்டுக்கலாம். அருமையா கவிதைகள் எழுதுறார்"
"குழந்தைகளின் உலகம் பாழாவதை கணபதி அழகா சொல்லியிருக்கார். அதை கடைசியில் ஹீரோ மக்களைப்பார்த்து சொல்றமாதிரியும், மக்களெல்லாம் அதைக்கேட்டவுடனே திருந்திடறமாதிரியும் காட்டிடலாம்... எல்லாவயசுலயும் ஆடியன்சை கவர்றமாதிரி கதை இருக்கணும். அதுக்கு ஜெயராமன் சொன்ன கதைகள்லேருந்து சிலபல கதைகளை, குழந்தைகளுக்கு ஹீரோ சொல்றமாதிரி காட்டலாம் "
டயரக்டர்: "ராஜி ஈரமனசுன்னு சொல்லியிருக்கிறது நம்ம ஹீரோவுக்கு ரொம்ப பொருத்தமாயிருக்குது.. அந்த கேரக்டரை அப்படியே டெவலப் பண்ணலாம்.."
அனைவரும் கோரஸாக அதிர்ச்சியடைகிறார்கள்.
டயரக்டர் புன்னகையுடன்: ' நீங்க மட்டும்தான் ப்ளாக் படிச்சு ஐடியா சொல்லுவீங்களா.. நானும் படிப்பேனில்ல"
எல்லோரும் அவரவருக்கு தோன்றிய காட்சிகளையெல்லாம் சொல்ல ஒருத்தர் மட்டும் அமைதியாக இருக்கிறார்.
டயரக்டர்: "உனக்குத்தோணிய கருத்தையும் சொல்லலாம்.. இங்க எல்லோருக்கும் கருத்துசுதந்திரம் உண்டு"
"உங்க அளவுக்கு எனக்கு சிந்திக்க தெரியாதுங்க"
டயரக்டர்: "வேலை செய்யாம சம்பளம் மட்டும் வேணுமா.. இவரை கணக்குத்தீர்த்து அனுப்புங்க"
"சார்.. சார்.."... மேனேஜர் பதறுகிறார்.." ஒரு நிமிஷம் நான் சொல்றதைக்கேளுங்க.."
டயரக்டர்: " நீங்க ஏன் பதட்டப்படுறீங்க??.. எனக்கு சிபாரிசெல்லாம் பிடிக்காது. தெரியுமில்ல , மொதல்ல சொன்னதைச்செய்யுங்க.."
பையன் போனபின்னும் மேனேஜர் கலக்கமாகவே இருக்கிறார்.
டயரக்டர்: "ஏன் சார்.. வேலைசெய்யத்தெரியாதவங்களையெல்லாம் எங்கிட்ட அசிஸ்டெண்டா கொண்டுவர்றீங்க?..."
மேனேஜர்" "அய்யோ சார்.. அந்தப்பையன் அசிஸ்டெண்ட் இல்லை....டீ கொண்டுவந்தவன்".
|
|
good collections
ReplyDeleteகுட்டிபடம் பாத்த மாதிரி இருந்துச்சு!!!
ReplyDeleteஅவங்க ரூம் போட்டு யோசிக்குறது இருக்கட்டும்...
ReplyDeleteநீங்க எப்படி யோசிக்கிறீங்க??? சொல்லிகுடுங்க நாங்களும் கத்துக்குறோம்
பாதி படிச்சுட்டேன். மீதியைப் படிச்சுட்டு ஈவினிங் கமென்ட் போடறேன்
ReplyDeleteநல்லாருக்குங்க நீங்க அறிமுகபடுத்தும் விதம் அருமை,
ReplyDeleteதொடரட்டும்.....
புதுப்படம் ரிலீசுக்கு நீங்க ரூம் போட்டு யோசிச்சீங்களா?நல்லாயிருக்கு.
ReplyDeleteமுகஸ்துதிக்காக சொல்லலீங்க. உண்மையிலயே வித்தியாசமா அறிமுகப்படுத்தி இருக்கீங்க. பாராட்டுக்கள் சகோதரி நாளை எப்படினு இப்பவே மனசு பரபரங்குது.
ReplyDeleteவாங்க ரமேஷ்,
ReplyDeleteரொம்ப நன்றி.. வரவுக்கும் கருத்துக்கும்.
வாங்க ஆமினா,
ReplyDeleteஅடடா!!.. கம்பெனி ரகசியங்களை வெளியிட மாட்டேன்னு டயரக்டர் தலையில அடிச்சு சத்தியம் செஞ்சு குடுத்துருக்கேனேப்பா..
வரவுக்கு நன்றி. படம் போரடிக்கலைதானே :-))
வாங்க கோபி ராமமூர்த்தி,
ReplyDeleteவாங்க.. வாங்க..
வாங்க மாணவன்,
ReplyDeleteசுட்டிகளை பிடிச்சுக்கிட்டே போயி அங்கியும் ஒரு கமெண்ட் போட்டா ரொம்ப சந்தோஷமாருக்கும்.. செய்வீங்கதானே :-)
நன்றி.
வாங்க ஆசியா,
ReplyDeleteரொம்ப நன்றி.
வாங்க ராஜி,
ReplyDeleteரொம்ப நன்றிங்க. அப்படியே இன்றைய அறிமுகங்களையும் அவங்க தளத்துலபோயி கொஞ்சம் கண்டுக்கிடுங்க :-)))
ஆஹா.... என்னையும் இங்கே அறிமுகப்படுத்தி ஒரு இன்ப அதிர்ச்சிய கொடுத்தீடீங்க.....
ReplyDeleteரொம்ப நன்றிங்க...
வாழ்க வளமுடன்!!
அறிமுகப்படுத்திய விதம் புதுமை.
ReplyDeleteடிஸ்கஷனில் இடம் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்:)!
தொடருங்கள் சாரல்!
வித்தியாசமான அறிமுகம். நீங்களும் ரூம் போட்டு யோசிச்சு இருக்கீங்க போல.. :))))
ReplyDeleteவித்தியாசமா அறிமுகப்படுத்தியிருக்கீங்க. அசத்தலா இருக்கு. ரொம்ப நன்றிங்க.
ReplyDeleteநீங்க அறிமுகபடுத்தும் விதம் அருமை.
ReplyDeleteகடைசி பன்ச்.. செம..
ReplyDeleteவித்தியாசமான முறையில் புது படம் ரீலீசாகுது, அடுத்து எப்படி?
ReplyDelete//அடடா!!.. கம்பெனி ரகசியங்களை வெளியிட மாட்டேன்னு டயரக்டர் தலையில அடிச்சு சத்தியம் செஞ்சு குடுத்துருக்கேனேப்பா//
ReplyDeleteஅப்படியா? எனக்கு மட்டும் சொல்லுங்கலே
.
படம் ரொம்ப அருமை.. படத்துல வந்த நடிகர்களும் நல்லாருக்காங்க.. சூப்பர்ஹிட்டுதான்.
ReplyDeleteபடம் சூப்பர் ஹிட்டுக்கா.
ReplyDeleteவாங்க மோகன்,
ReplyDeleteரொம்ப நல்லா எழுதறீங்கப்பா.. தொடர்ந்து எழுதுங்க, வாழ்த்துக்கள்
வருகைக்கு நன்றி.
வாங்க ராமலஷ்மி,
ReplyDeleteநன்றிங்க..
வாங்க வெங்கட்,
நன்றி :-))
வாங்க புவனேஸ்வரி,
ReplyDeleteவருகைக்கு நன்றிங்க..
வாங்க குமார்,
ReplyDeleteவருகைக்கு நன்றி.
வாங்க மாதவன்,
பஞ்ச் டயலாக் இல்லாம தமிழ்ப்படம் ஏது :-))
வருகைக்கு நன்றி.
வாங்க ஜலீலா,
ReplyDeleteநாளைக்கு தெரிஞ்சுடும்ங்க.. அப்புறம் எல்லோர் வீட்டுக்கும்போயி கண்டுக்கிட்டீங்கதானே :-))
வாங்க மின்மினி,
நன்றிங்க..
வாங்க ஸ்டார்ஜன்,
நன்றிங்க..
அசதலுங்கோ
ReplyDeleteNice intros akka...super comedy too...kalakunga
ReplyDeleteசாரல் படமா.? ....!!! பாஸ் மார்க் :-))))))))))
ReplyDeleteகதைசொல்லிகளை அறிமுகப் படுத்திய விதம் அருமை...
ReplyDeleteஒரு சிலர் புதுசா இருக்காங்க... பார்த்துவிட்டு வருகிறேன்
ReplyDeleteவாங்க அரசன்,
ReplyDeleteஆஹா!!.. ராஜாவே சொல்லிட்டா அப்புறம் யாராலயும் மறுக்கமுடிமா :-)))
ரொம்ப நன்றி.
வாங்க அப்பாவி,
ReplyDeleteநன்றிப்பா :-)
வாங்க ஜெய்லானி,
ReplyDeleteவெள்ளிவிழா கொண்டாடுமான்னு சொல்லலியே :-))))))
நன்றி.
வாங்க பிரபாகரன்,
ReplyDeleteரொம்ப நன்றிப்பா :-)
வாங்க எல்.கே,
ReplyDeleteகண்டிப்பா பாருங்க.. ரொம்ப நல்லா எழுதறாங்கப்பா ஒவ்வொருத்தரும் :-))
நன்றி.
interesting!
ReplyDeleteவாங்க முல்லை,
ReplyDeleteநண்பர்கள் தளத்துக்குப்போய் பாருங்க.. இன்னும் அருமையா இருக்குது :-)
நன்றி.
அருமையாக அறிமுகப்படுத்தி விட்டீர்கள் அமைதிச்சாரல்.
ReplyDeleteவாங்க கோமதிஅரசு அம்மா,
ReplyDeleteரொம்ப நன்றிங்க..