முத்துச் சரம்
➦➠ by:
கார்த்திக் (எல்கே)
எத்தனை சிம் கார்டுடா உபயோகிப்ப ? வர வர செல் போன் உபயோகத்தால் எவ்வளவு பிரச்சனைகள் பாரு . சிட்டுக் குருவிகள் காணாம போய்டுச்சி அதை கண்டுபிடிச்சி தர சொல்லி ஒருத்தர் கேட்டு இருக்கார்.
புதுசா ஒரு விஷயம் கேள்விப்பட்டால் அதை சரியா விசாரிக்காம செய்யறது எவ்வளவுத் தப்புன்னு ஞானப் பிரகாசம் சொல்லி இருக்கார். இவரோட வலைப்பூவில் கால் நடை மருத்துவத்தைப் பற்றி விரிவா எழுதறார். வீட்டில் பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு மிக உபயோகமாக இருக்கும்.
நாகசுப்பிரமணியன் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது. குறிப்பா நம்ம மேல வரும் விமர்சனங்களை எப்படி சமாளிப்பது அப்படின்னு அவரது பதிவில் எழுதி இருக்கார்.
அப்பப்ப உலகம் அழியப் போதுன்னு பீதியை கிளப்பறது வர வர ரொம்ப சகஜமாப் போய்டுச்சி. இதே மாதிரி மூர்த்தி அவர் பள்ளிக்கூடத்தில் படிக்கறப்ப பரவின வதந்தியால் அவங்க ஊர்ல நடந்த காமெடியை சொல்லி இருக்கார் .
நம் குழந்தைகளுக்கு நாம் குடுக்கும் செல்லமும் , பாக்கெட் காசும் வாழ்க்கையில் அவர்களை எப்படி சீரழிக்கிறதுன்னு தவறுன்னு ஒரு பதிவர் சொல்லி இருக்கார். பேருதான் தவறு. அவர் சொல்ற விஷயம் எல்லாம் சரியாதான் இருக்கு .
இன்னிக்கு கடைசியா ஒருப் பதிவோட லிங்க் மட்டும் தரேன். அதை இங்கப் போய் படிச்சுப் பாருங்க. அதை எப்படி அறிமுகப் படுத்துவது என்று எனக்குப் புரியவில்லை.
புதுசா ஒரு விஷயம் கேள்விப்பட்டால் அதை சரியா விசாரிக்காம செய்யறது எவ்வளவுத் தப்புன்னு ஞானப் பிரகாசம் சொல்லி இருக்கார். இவரோட வலைப்பூவில் கால் நடை மருத்துவத்தைப் பற்றி விரிவா எழுதறார். வீட்டில் பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு மிக உபயோகமாக இருக்கும்.
நாகசுப்பிரமணியன் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது. குறிப்பா நம்ம மேல வரும் விமர்சனங்களை எப்படி சமாளிப்பது அப்படின்னு அவரது பதிவில் எழுதி இருக்கார்.
அப்பப்ப உலகம் அழியப் போதுன்னு பீதியை கிளப்பறது வர வர ரொம்ப சகஜமாப் போய்டுச்சி. இதே மாதிரி மூர்த்தி அவர் பள்ளிக்கூடத்தில் படிக்கறப்ப பரவின வதந்தியால் அவங்க ஊர்ல நடந்த காமெடியை சொல்லி இருக்கார் .
நம் குழந்தைகளுக்கு நாம் குடுக்கும் செல்லமும் , பாக்கெட் காசும் வாழ்க்கையில் அவர்களை எப்படி சீரழிக்கிறதுன்னு தவறுன்னு ஒரு பதிவர் சொல்லி இருக்கார். பேருதான் தவறு. அவர் சொல்ற விஷயம் எல்லாம் சரியாதான் இருக்கு .
இன்னிக்கு கடைசியா ஒருப் பதிவோட லிங்க் மட்டும் தரேன். அதை இங்கப் போய் படிச்சுப் பாருங்க. அதை எப்படி அறிமுகப் படுத்துவது என்று எனக்குப் புரியவில்லை.
|
|
நல்லா அறிமுகங்கள். அட இந்த வாரம் நீங்களா ? ஊரிலிருந்து நேற்று தான் வந்தேன். மற்ற அறிமுகங்களையும் படிக்கிறேன்.
ReplyDeleteஅருமை தொடர்ந்து படிக்கின்றேன்...
ReplyDeleteகடைசியில் கொடுத்த லிங்க் வழியாக சென்றேன்... வார்த்தைகளால் சொல்ல இயலவில்லை தான்
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்
பகிர்விற்கு நன்றி
ReplyDeleteஅளவான அறிமுகங்கள் - அருமையான அறிமுகங்கள்.
ReplyDeleteகடைசி லிங்க் :(
ReplyDeleteஎன்ன சொல்லுறதுனு தெரியல எல் கே...
அனைவருக்கும் பாராட்டுக்கள் ...
ReplyDeletelast link - :(((
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் கார்த்திக். நன்றி.
ReplyDelete'ப்லாக்' கிற்கு வந்த நாள் முதல் பல பதிவர்களின் எழுத்துக்களை படித்து
ReplyDeleteரசித்திருக்கிறேன்.ஆனால் அந்த கடைசி லிங்க் மனதை பிசைகிறது.என்ன சொல்ல அதை பற்றி
வருத்தமா இருந்தது கடைசி லிங்க் படிச்சுட்டு. உங்களோட வலைச்சர அறிமுகம் பார்த்துட்டு இருக்கேன். ஆனால் பின்னூட்டம் கொடுக்கலை! :(
ReplyDeleteகடைசியாக நீங்க லிங்க் கொடுத்த அவரை அறிமுக படித்தியதற்கு நன்றி.
ReplyDeleteபின்னுங்க
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்....
ReplyDeleteபுதிய புதிய தளங்களாகப் பிடிக்கிறீர்கள். கடைசி லிங்க் கலக்கி விட்டது.
ReplyDeletethanks karthik for introducing these website .the last one ..there are no words .
ReplyDeleteand that veterinary docs site was really useful .
அறிமுகங்களுக்கு நன்றி!
ReplyDeleteஇறுதியாய் அறிமுகப்படுத்திய பதிவு
கண், நெஞ்சம் கலங்கவைத்துவிட்டது.
இன்று எனக்கு முதல் மெயில் ஒரு லிங்க்குடன் எல்.கே அவர்களிடமிருந்து வந்திருந்தது.துளசி கோபால் அவர்களும் எல்.கே மூலமாக என் பதிவிற்கு வந்திருப்பதாக சொல்லியிருந்தார்.இந்த இரண்டு பேருமே வலைபதிவுகளில் பார்த்துருக்கிறேன்.எனவே அவர்கள் இருவருக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிட்டு ஐந்தரை மணி நேர இடைவெளிக்கு பின் அந்த லின்கை ஓபன் செய்த போது இன்ட்லி,வலைபூக்கள் போல வலைச்சரம்னு ஒன்னு இருக்கு போலன்னு படித்தேன்.
ReplyDeleteமதிப்பிற்குரிய எல்.கே அவர்களுக்கும் வலைச்சரம் அமைப்பிற்கும் இங்கு கடைசி லிங்க் பற்றி கருத்து தெரிவித்து என்னை சஸ்பென்சில் ஆழ்த்தி என்னதான் அந்த கடைசி லிங்கனு கிளிக் செய்த போது அந்த தளம் ஒப்பனான வினாடியிலிருந்து இப்போது வரை கண்ணீரை துடைத்து துடைத்து.....
யாருக்கு என்ன சொல்லனும்,நன்றியா அல்லது என்னனு தெரியல,,அன்பான அம்மாவை இழந்தவள் அந்த கடைசி லிங்கிற்கு சொந்தக்காரி நான்தான்.
இணையதளம் பற்றி கொஞ்சம் தெரிந்தாலும் வலையுலம் (ப்லாக்ஸ்)பற்றி துளியும் தெரியாத எனக்கு நாகையயை சேர்ந்த என் நண்பர் திரு .அரும்பொறை செம்மல் அவர்கள் உருவாக்கிய பிளாக் மூலம்தான் இப்படி ஒரு உலகமிருக்குனு தெரிந்து கண்ணில் பட்ட ,ஆவலான பெயர்கள் கொண்ட பலருடைய பதிவுகளை கிடைக்கும் நேரங்களில் படிக்கத் தொடங்கினேன்.மூன்று பதிவுகளை வெளியிட்ட என் நண்பர் சில காரணங்களால் தன் பிளாக்கையே டெலிட் செய்துவிட்டார்.
அம்மாவின் பிரிவால் வாடிய நான் வடிகாலாய் டைரியில் எழுதுவதற்கு பதில் அழியாமல் வலைப்பதிவை ஆரம்பிப்போம்னு எழுதத் தொடங்கினேன்.அம்மாவின் பிரிவின் பிறகுதான் மரணத்தின் அருமை(கொடுமை) தெரிந்தது.அம்மா இருக்கும்போது அம்மாவிற்கு எந்த பெருமையும் பெற்றுத் தராத நான் நான் இப்போ .....என்னால் டைப் செய்ய முடியல........என் அம்மாவை அரங்கேற்றிய எல்.கே அவர்களுக்கு கண்ணீர் கலந்த நன்றிகளை தெரிவிக்கிறேன்.
என் நிலைமை யாருக்கும் வரக்கூடாதுனு விரும்புகிறேன்.பாசம் வைப்பவர்கள் உலகப் பிரிதலையும் (மரணத்தை) புரிய வைத்து,எதிர் பார்த்து பழக வேண்டும்.
வலையுலகம் அறிமுகமில்லாத நான் அறிமுகத்திற்காக நான் படித்ததில் எனக்கு பிடித்த பதிவுவுகளின் பதிவர்களுக்கு என் அம்மாவிற்கான பதிவை பாதி எழுதிக் கொண்டிருக்கும்போது நான்கு பேருக்கு அனுப்பிவைத்திருந்தேன்.முதலாமவர் செல்ல நாய்க்குட்டிக்கு சொந்தமானவர் தனது பதிவிலே அனுதாபங்களும் பாராட்டுகளும் தெரிவித்திருந்தார்.இரண்டாமவர் நண்பர் krp செந்தில் அவர்கள்,(கண்ணீர் அஞ்சலி செலுத்த ரோஜாப்பூந்தோட்டத்துடன்)பாரத் பாரதி அவர்களுடன் வந்திருந்தார் .மீதி இருவரும் நோ ரஸ்பான்ஸ்.இப்போ இன்று .............
என் பதிவை அறிமுக படுத்தியவருக்கும்,இங்கு என் பதிவிற்கான கருத்து தெரிவித்தவர்களுக்கும் (சோகத்தை பகிர்ந்தமைக்கு) நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் அம்மா இப்போ இருந்திருந்தாங்கன்னா எனக்காக ப்லாக் எழுதுறேன்,எழுதிறேன்னு உன்னைய நீயே கஷ்ட படுத்திக்காதனுதான் சொல்லியிருப்பாங்க.
நல்ல அறிமுகங்கள்.
ReplyDeleteNice links Karthik
ReplyDeletePosts in last link was heart felt...
வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்திய எல் கே , அவர்களுக்கு மிக்க நன்றி !!
ReplyDeleteஇவண் , இணையத் தமிழன்
http://inaya-tamilan.blogspot.com
அம்மாவின் பதிவுகளோடு கடைசியாய் அறிமுகப்படுத்திய வலைப்பூ கலங்க வைத்துவிட்டது கார்த்திக் !
ReplyDeleteகடைசி லின்க் போய் படிச்சிட்டு கனத்த மனதுடன் செல்கிறேன்.
ReplyDeletevery good intro kaarthik
ReplyDeletethanks for introducing me
ReplyDelete