அத்தியாயம் 2 - சரத்தில் இரண்டாவது மலர்
➦➠ by:
பாலா
நண்பர்களே நேற்று ஒரு சில பதிவுகளை அறிமுகப்படுத்திய நான் இன்று அதே போல இன்னொரு சிறு பட்டியலை வெளியிடுகிறேன். அதற்கு முன்பாக எனக்கு மறுமொழியிட்டு ஆதரவு தந்த நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
என் பள்ளிக்கால நண்பன் ராஜாஅண்ணாமலை. வெகு நாட்களுக்கு பிறகு அவன் எழுதி வரும் பதிவுகள் வாயிலாக மீண்டும் தொடர்பு கிடைத்தது. மழைக்காகிதம் என்ற தளத்தில் காதல் எட்டுவகை என்று ஆராய்ச்சி கட்டுரை எழுதி இருக்கிறார். அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய இன்சூரன்ஸ் பற்றிய சில அடிப்படை தகவல்களையும், வங்கிகளில் சேவைக்கட்டணம் என்ற பெயரில் கறக்கப்படும் பணத்தை பற்றியும் கூறுகிறார்.
அதிரடி ஹாஜா, குறுகிய காலத்தில் அதிக பதிவுகள் எழுதி வருகிறார். நக்கலாக சில கேள்விகள் வேறு கேட்கிறார். அதுமட்டுமல்லாமல் சாதாரண நெஞ்சு வலிக்கும், மாரடைப்புக்கும் உள்ள வித்தியாசங்களை கூறி நெஞ்சில் பால் வார்க்கிறார். கணிப்பொறியை அதிகம் பயன் படுத்துவோரின் நலனுக்காக கண்களை பாதுகாக்க சில எளிய பயிற்சிகளையும், நாம் உடல் உறுப்புகளுக்கு உண்டான ஆயுளை பற்றிய சுவாரசியமான தகவல்களையும் அள்ளி தருகிறார்.
நண்பர் தங்கம் பழனி உள்ளங்கையில் உலகம் என்று தன் வலைப்பக்கத்துக்கு பெயர் வைத்தது பொருத்தமாகத்தான் இருக்கிறது. கணினி பற்றிய அடிப்படை கருத்துக்களையும், போட்டோஷாப்பில் உள்ள நுணுக்கங்கள் பற்றி நிறைய தகவல்களையும் தருகிறார். அவ்வப்போது தன்னம்பிக்கை அளிக்கும் விதமான கதைகள், பொன்மொழிகள் என்று வழங்குகிறார். இளநரையை போக்குவது குறித்து டிப்ஸ் கொடுக்கிறார். உண்மையிலேயே பல்துறை தகவல்கள் கொட்டி கிடக்கின்றன.
எல்லாவற்றையும் குழந்தையின் மன நிலையில் இருந்து காண முற்படும் நண்பர் விக்கி எப்போதுமே சந்தோசமாக இருக்க சில ஐடியாக்கள் தருகிறார். காதலியும், மனைவியும் சந்தித்தால்? என்று குண்டக்க மண்டக்க உண்மை நிகழ்வை எழுதி சுவாரசியம் கூட்டுகிறார். ஒரு பொதுசன பார்வையில் நடிகர்களைப்பற்றி சில கமெண்டுகளும் அடிக்கிறார்.
என் கடன் பணி செய்து கிடப்பதே என்று கேள்வி பட்டிருப்போம். என் கடன் திரு விஜய் அவர்களை கலாய்ப்பதே என்ற ஒரே குறிக்கோளுடன் பதிவெழுதி வருபவர் நண்பர் குண்டு ராஜகோபால். ஒரு சின்ன கான்ஸெப்ட் கிடைத்தாலோ, அல்லது ஒரு விஜய் புகைப்படம் கிடைத்தாலோ உடனே விஜய்யை கலாய்த்து ஒரு பதிவை தயாரித்து விடுகிறார். சரியான காமெடி பேர்வழியா இருப்பாரோ என்று யோசித்தால், என்னவளே எங்கிருக்கிறாய் என்று திடீரென்று காதல் செய்கிறார். சாப்ட்வேர் வேலையின் கொடுமை என்று வேதனையும் படுகிறார்.
இன்றைய கோட்டா முடிந்து விட்டது. என்ன நண்பர்களே நாளை சந்திப்போமா?
|
|
சிறப்பான அறிமுகங்கள்.......
ReplyDeleteஒரு சில நண்பர்களை தவிர மற்றவர்கள் எனக்கு அறிமுகம்தான் நன்றி நண்பரே
ReplyDeleteதொடரட்டும் உங்கள் பணி...
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஅறிமுகப்படுத்திய விதம் அருமை.
ReplyDeleteசிறப்பான அறிமுகம்
ReplyDeleteதொடரட்டும்
தொடருங்கள் பாலா :)
ReplyDelete@ நன்றி நண்பரே...
ReplyDeleteஉங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
@ asiya omar
மிக்க நன்றி சகோ
@r.v.saravanan
நன்றி நண்பரே...
@Balaji saravana
நன்றி பாலா...
நல்ல அறிமுகங்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி தல நம்மையும் அறிமுகம் செய்தமைக்கு.
ReplyDeleteவாழ்த்துக்கள்
தொடரட்டும் உங்கள் பணி...
சிறப்பான அறிமுகங்கள்
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள். நிறைய புதிய நட்பு கிடைக்கிரது.
ReplyDeleteSuper!!
ReplyDeleteஇன்றும் சிறப்பான அறிமுகம் நண்பரே....உங்களிடமிருந்து அதிரடி ஹாஜாவை நான் சத்தியமாக எதிர்பார்த்தேன். நன்றியும் வாழ்த்துக்களும்
ReplyDeleteஎன்னை அறிமுக படுத்தியதற்கு மிக்க நன்றி நண்பர் பாலா....
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்...
ReplyDeleteஎமது வலைப்பூவைப் பற்றி அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி நண்பரே..! தொடருங்கள் உங்கள் ஈடில்லா பணியை..!மீண்டும் ஒரு முறை நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.. வாழ்த்துக்கள்..!
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்..
ReplyDelete@ ஜீ...
ReplyDeleteநன்றி ஜி
@ ராஜகோபால்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தல
@ சே.குமார்
நன்றி நண்பரே
@ Lakshmi
எனக்கும்தான். வலைச்சரத்துக்குத்தான் நன்றி சொல்லணும் மேடம்.
@ ரஹீம் கஸாலி
அவர் நம் ஆள் இல்லையா? வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே.
@ karthikkumar
நன்றி நண்பரே
@ தங்கம்பழனி
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@ Madhavan Srinivasagopalan
நன்றி சார்
உங்களுக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த போகி, பொங்கல், மாட்டு பொங்கல், மற்றும் பூப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇன்னும் இரண்டு நாளைக்கு பின்னூட்டம் இதுதான்...