07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, January 25, 2011

மிடில் ஆர்டர்

ஒரு கிரிக்கெட் டீம்ல ஓப்பனிங் பேட்ஸ்மென் எவ்வளவு முக்கியமோ அதே அளவு மிடில் ஆர்டரும் முக்கியம். ஓப்பனர்ஸ் ஸ்ட்ராங்கா ஆரம்பிச்சிருந்தா, மிடில் ஆர்டரும் அந்த ரன் ரேட்டை குறைக்காம அடிச்சி ஆடணும். அதே நேரம், ஓப்பனர்ஸ் சீப்பா அவுட்டாகிட்டா அதுக்கு மேல விக்கெட் விழாம நிதானமாவும் ஆடணும். ஆக மொத்தம் எல்லா விதமாவும் ஆடத் தெரியணும்.

இன்னைக்கி நாம பாக்கப் போற ஆட்களும் அப்பிடித்தான். எல்லாத்தையும் கலந்து கட்டி அடிச்சி ஆடுறாங்க.

பண்புடன் குழுமத்துல இருக்கிற ஆட்களுக்கு இவர் நல்லாவே பரிச்சயம். பழைய பாட்டு மெட்டுல வரிகளை மாத்தி போட்டு சந்தம் மாறாம காமெடியா எழுதுறதுல இவரு கிங். பழங்கஞ்சின்னு பேர் வச்சிட்டு சுடச்சுட செய்திகளைக் குடுக்குறாரு.

அடுத்ததா தம்பி கூர்மதியான். ஏற்கனவே இவரோட இன்னொரு பதிவை நண்பர் எல்.கே அறிமுகப்படுத்தியிருந்தாரு. இது இவரோட இன்னொரு பதிவு. இதுபோக இன்னும் ரெண்டு பதிவு வச்சிருக்காரு. இதுல மொக்கை போடுறாரு. இங்க கவிதை எழுதுறாரு. இன்னொரு பதிவுல ஆங்கிலத்துல எழுதுறாரு. தமிழ் வலைப்பூக்களை மட்டுமே அறிமுகப்படுத்துறது வலைச்சர மரபுங்கிறதால அந்த ஆங்கிலப் பதிவுக்கு தொடுப்பு கொடுக்கலை.

அடுத்ததா நாம பாக்கப் போறது ஒரு புலம்பெயர் தமிழனோட பதிவு. இவர் சாதாரணன் அப்பிடின்னு சாதாரணமா பெயர் வச்சிக்கிட்டு சின்னச் சின்னச் செய்திகளா தொகுத்துக் குடுக்குறாரு. நிறைய வீடியோக்களும் இணைக்கிறாரு.

உங்களுக்கு ஒரு ஈஸியான கேள்வி கேக்கறேன். பாண்டவர்கள் அஞ்சி பேரோட பேர் சொல்லுங்க பார்ப்போம். சொல்லிட்டீங்க ஓக்கே. இப்ப அடுத்த கேள்வி. கௌரவர்கள் நூறு பேரோட பேரும் சொல்லுங்க பார்ப்போம். முழிக்கிறீங்க தானே? ஆனா ராஜி அசராம நூறு பெயரையும் இங்க எழுதியிருக்காங்க. அறியாத வாசனைன்னு தடாலடியா சிறுகதையும் எழுதறாங்க. புரியிற மாதிரி கவிதையும் எழுதறாங்க.

சொந்த கதை நொந்த கதைன்னு பதிவுக்கும், என்றென்றும் பதினாறு என்று தனக்கும் பெயர் வச்சிக்கிட்டு இருக்காங்க இந்த சகோதரி. பூமியில் கிடைக்கும் அமுது அப்பிடின்னு தாய்ப்பாலின் நன்மைகளையும் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டிய அவசியத்தையும் எழுதியிருக்காங்க.

அடுத்தது யோகனா யாழினி. கிட்டத்தட்ட தினமும் ஒரு இடுகை போட்டுடுவாங்க. கதை, கவிதை, அனுபவம், பஸ்ஸில் பார்த்தது இப்பிடி எல்லாத்தையும் பதிவுல ஏத்துவாங்க.

இவரு கங்குலி மாதிரி எப்பயாவதுதான் எழுதுவாரு. ஆனா எழுதினா அருமையா இருக்கும். ஸ்பெ என்று அன்பாக அழைக்கப்படுகிற ஸ்டாலின் ஃபெலிக்ஸ். 2007ல இருந்து எழுதுறாரு. மொத்தமே 68 இடுகைகள் தான் எழுதியிருக்காரு. இவரு எழுதினதுல எனக்கு ரொம்பவும் பிடிச்சது அம்பேத்கர் பட விமர்சனமும், முத்துக்குமார் பற்றிய புத்தக விமர்சனமும்.

இன்னைக்கி மிடில் ஆர்டர் பேட்ஸ்மென் இவ்வளவு பேருதான். நாளைக்கி இன்னும் சில பேரோட சந்திக்கிறேன். அதுவரைக்கும் உங்களிடமிருந்து விடை பெறுவது, உங்கள் முகிலன். 

11 comments:

  1. சாதரணன் புதியவர். மற்றவர்கள் தெரிந்தவர்களே.. அவரை இன்றுப் படிக்கிறேன்

    ReplyDelete
  2. இதுல நானும் இருக்கேனே..!!! நன்றி நண்பரே என பிற வலைப்பூவையும் அறிமுகபடுத்தியதற்கு.. மற்றவர்களையும் பார்த்தேன்.. நன்றி..

    ReplyDelete
  3. கிரிக்கெட் விளையாட்டு மாதிரியே கலக்குறீங்க... அறிமுகப்படுத்தும் விதம் நல்லா இருக்குதுங்க.

    ReplyDelete
  4. அறிமுகப்படுத்தும் விதம் நல்லா இருக்கு.

    ReplyDelete
  5. // இவரு கங்குலி மாதிரி //

    இவரு ஓப்பனர் ஆச்சே ?

    ReplyDelete
  6. நிறைய திறமைசாலிகளை அறிமுகப்படுத்துறீங்க.. தொடரட்டும் உங்கள் பணி..

    முத்தங்களுக்கு மட்டுமே அனுமதி

    ReplyDelete
  7. என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு
    மிக்க நன்றி,பிற பதிவுகளையும் படிக்கிறேன்

    ReplyDelete
  8. வலைச்சர அறிமுகங்கள், நிறைய புது முகங்களின் அறிமுகம் கிடைக்கிரது.

    ReplyDelete
  9. கிட்டத்தட்ட எல்லோருமே தெரிந்தவர்கள்... யாருப்பா அந்த கிரிக்கெட் பிதற்றல்கள்... அது மட்டும் யாருன்னு தெரியல...

    ReplyDelete
  10. @எல்.கே - நன்றி கார்த்திக்

    @தம்பி கூர்மதியன் - நன்றி நண்பரே

    @சித்ரா - நன்றி சித்ரா

    @சே.குமார் - நன்றி குமார்

    @மாதவன் - நன்றி மாதவன். சேவாக் வருகைக்குப் பிறகு அவரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென் ஆயிட்டார். :)

    @கவிதை காதலன் - நன்றி நண்பரே

    @ராஜி - நன்றி ராஜி

    @லக்‌ஷ்மி - நன்றி அம்மா

    @பிரபாகரன் - நன்றி பிரபாகர். அவரு ஒரு வெட்டிப் பதிவர். அவரைப் பற்றிய அறிமுகம் இங்கே எதற்கு? :)))

    ReplyDelete
  11. என்னையும் ஆட்டத்துல சேர்த்திருக்கீங்களா ?? ரொம்ப நன்றி முகில்ஸ்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது