அன்பு நண்பர்களே,
வலைச்சரம் மூலம் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.
தமிழ் வலையுலகில், தமிழ் மண நட்சத்திரமும், வலைச்சர ஆசிரியர் பணியும் பத்மஸ்ரீ, பத்மபூஷனைப் போன்றவை. பத்மஸ்ரீ கடந்த வருடம் பெற்றாயிற்று. இந்த வருடம் பத்மபூஷன். என்னை இந்தப் பணிக்கு அழைத்த சீனா அய்யா அவர்களுக்கு என் நன்றி.
நான் முகிலன் என்று வலையுலகில் அறியப்படுகிறேன் என்றாலும் என் இயற்பெயர் தினேஷ் குமார். பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் இந்தியாவில் என்றாலும், இப்போது குப்பை கொட்டுவது பெரியண்ணன் ஊரில்.
என் இடுகைகளை வலைச்சரத்தில் பல முறை பல ஆசிரியர்கள் அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள். இருந்தாலும் நானும் என் பங்குக்கு என் வலைப்பூக்களை அறிமுகப்படுத்துவது என்பது வலைச்சர மரபாக இருக்கிறது. அந்த மரபைப் பின்பற்றி நானும்...
நான் பிதற்றல்கள் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தது ஆதி மூலகிருஷ்ணனின் புலம்பல்கள் என்ற பெயரைப் பார்த்தபின் தான். அப்போது நாமக்கல் சிபி இதே பெயரில் இன்னொரு வலைப்பூ வைத்திருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. தெரிந்தபின் வலைப்பூ உரலியை மாற்றாமல் பெயர்ப்பலகையை மட்டும் முகிலனின் பிதற்றல்கள் என்று மாற்றினேன். சிபியும் பெரிய மனது வைத்து அவரது வலைப்பதிவை மூடிவிட்டார்.
நான் இந்த வலைப்பதிவை ஆரம்பித்து எதையெதையோ எழுத ஆரம்பித்துப் பின்னர் சிறுகதைகள் எழுதினேன். நான் எழுதியவற்றில் எனக்கு மிகவும் பிடித்தவை கீழே..
வித்தியாசமாக ரிவர்ஸ் க்ரோனோக்ராஃபிக் ஆர்டரில் நான் எழுதிய கதை
விவரணைகள் இல்லாமல் சம்பவங்களை விவரித்து பலரும் நல்ல நடை என்று பாராட்டிய கதை
ஒரே கதைக்குள் இரண்டு கதை
அதன்பிறகு சில தொடர்களும் எழுதினேன்.
என் மனைவியின் பிரசவத்தின் போது கூடவே இருந்த நினைவுகளை தொடராக எழுதியது
துப்பறியும் தொடர்கள் சில - அருண் என்ற கதாபாத்திரத்தை நாயகனாகக் கொண்டு
இவை மட்டுமல்ல எனக்கிருக்கும் கிரிக்கெட் ஆர்வத்தை வைத்து சில கிரிக்கெட் இடுகைகள் எழுதினேன். என் நண்பர்கள் சிலர் அதைத் தனி வலைப்பூவில் எழுதுமாறு அறிவுறுத்தியதால் கிரிக்கெட் பிதற்றல்கள் என்று ஒரு வலைப்பதிவை ஆரம்பித்தேன். அதிலும் சில இடுகைகள், குறிப்பாக ஏதாவது தொடர்கள் - ஐபிஎல், 2020 உலகக்கோப்பை போன்ற - நடக்கும்போது ஒவ்வொரு போட்டியையும் பற்றி முன்னோட்டம் மற்றும் அலசல் எழுதவேண்டுமென்று ஆரம்பிப்பேன். பெரும்பாலும் முடிக்க முடியாது. ஐபிஎல் நடக்கும்போது அதன் விமர்சனத்தை பாதியிலேயே முடிக்கக் காரணமாயிருந்த நிகழ்வை இந்தப் இடுகையில் எழுதியிருக்கிறேன்.
எனக்கிருக்கும் சிறு கிரிக்கெட் அறிவையும் இணையத்தையும் உதவியாய்க் கொண்டு எழுதிக்கொண்டிருக்கும் ஒரு சிறு தொடர் கிரிக்கெட் கற்றுக் கொள்ளலாம் வாருங்கள். இத்தொடரை கடந்த வருடம் ஃபிப்ரவரி மாதம் துவங்கினேன். ஆனால் பணிப்பளுவினால் அதைப் பாதியில் கைவிட வேண்டியிருந்தது. மீண்டும் இந்த வருடம் தொடர்கிறேன். பணிப்பளு அனுமதித்தால் தொடர்வேன்.
இந்த வலைச்சர வாரத்தில் என்னால் முடிந்த அளவு புதிய இடுகைகளையும், வலைப்பூக்களையும் பகிர்கிறேன்.
மீண்டும் எனக்கு வாய்ப்பளித்த சீனா அய்யாவுக்கும் வலைச்சர ஆசிரியர் குழுவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

தினேஷ் அடிச்சி ஆடுங்க
ReplyDeleteவலைசரத்திற்கு உங்கள் வருகை இனிதாகுக...
ReplyDeleteதொடர்ந்து கலக்குங்க சார்.......
வாழ்த்துகள்!!
ReplyDeleteமுகிலன்... இப்போதான் வலைச்சரத்துல எழுதுறீங்களா...? ஆச்சர்யமா இருக்கு... ஒருவேளை ரெண்டாவது ரவுண்டா...?
ReplyDeleteவாழ்த்துகள்...
கல்க்குங்க தினேஷ் :)ர்
ReplyDeleteபத்மஸ்ரீ, பத்மபூஷண் முகிலனை வருக வருகவென்று வரவேற்கிறேன்:)
ReplyDeleteவாழ்த்துகள்!!
ReplyDeleteBest wishes! Congratulations!
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்வரவு
ReplyDeleteவருக வணக்கம்.
ReplyDeleteவாழ்த்துக்கள் முகில்ஸ்
ReplyDeleteவாழ்த்துகள் முகிலன்.....
ReplyDeleteவாழ்த்துகள்..
ReplyDeleteவாங்க முகிலன்.. வாழ்ததுக்களும். உங்களோட கிரிக்கெட் கற்றுக்கொள்ளலாம் வாருங்கள் பதிவு எனக்குகூட பயன்படுது.. தொடர்ந்து எழுதுங்க..
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteவாழ்த்துகள். கல்க்குங்க...
ReplyDeleteம்ம்ம் பட்டைய கிளப்புங்கள் முகிலனே
ReplyDelete...................
வெங்காயமா? இல்ல, தங்கமா?
வாழ்த்துகள் நண்பா.
ReplyDeleteவாழ்த்துக்கள்.....
ReplyDeleteபத்ம ஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் பெற்ற
ReplyDeleteமாமணி முகிலன் அய்யா அவர்களே தங்களை
இனிதே வரவேற்கிறோம்
ஸ்... அப்பா.. எங்கே சோடா?
Best wishes.,
ReplyDeleteவாழ்த்துக்கள்;
ReplyDeleteவரவேற்கிறோம்;
தொடருங்கள்!!!
@எல்.கே - நன்றி
ReplyDelete@மாணவன் - நன்றி
@ஸ்வாதி - நன்றி
@பிரபாகரன் - ஆமாங்க. இதுதான் முதல் முறை.
@இராமசாமி - நன்றி
@கோபி - :)) நன்றி
@பிரபு - நன்றி
@சித்ரா - நன்றி
@ஆசியா ஒமர் - நன்றி
@துளசி கோபால் - நன்றி
@ஜோதிஜி - நன்றி
@ஸ்டாலின் - நன்றி
@கந்தவேல் ராஜன் - நன்றி
@அமைதிச்சாரல் - நன்றி
@க.பாலாசி - நன்றி
@அரசன் - நன்றி
@சே.குமார் - நன்றி
@தமிழ்வாசி - நன்றி
@செ.சரவணக்குமார் - நன்றி
@மதுரைப் பாண்டி - நன்றி
@ராஜி - நன்றி
@சௌபர்ணிகா - நன்றி
@நிஜாமுதீன் - நன்றி
நடத்துங்க நடத்துங்க. வாழ்த்துகள்
ReplyDelete