இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் கார்த்திக் - ஏற்ற பொறுப்பினை நிறைவாகச் செய்து, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ இருநூற்று ஐம்பதுக்கும் மேலாக மறுமொழிகள் பெற்றிருக்கிறார். இவர் முப்பத்தி ஆறு இடுகைகளை - பல்வேறு துறைகளில் அறிமுகப் படுத்தி இருக்கிறார்.
கார்த்திக்கை நல்வாழ்த்துகள் கலந்த நன்றியுடன் விடை கொடுத்து வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.
அடுத்து நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் நண்பர் முகிலன். இவரது இயற்பெயர் தினேஷ்குமார். விருதுநகரில் பிறந்து, அருப்புக்கோட்டையில் வளர்ந்து, மதுரையில் கல்வி பயின்றவர். இப்போது வாசம் செய்வது ரோச்சஸ்டர் : நியூ யார்க் : United States. முதுகலைக் கணினிப் பயன்பாட்டியல் பயின்ற இவர் இப்போது திட்ட மேலாளராக மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். முகிலனின் பிதற்றல்கள், கிரிக்கெட் பிதற்றல்கள் என்ற தனி வலைப்பூக்களிலும், வருங்கால முதல்வர் என்ற குழு வலைப்பூவிலும் எழுதி வருகிறார்.
நண்பர் முகிலனை பொறுப்பேற்க வருக வருக ! பதிவர்களை அறிமுகப் படுத்த வருக ! என வரவேற்று நல்வாழ்த்துகளைக் கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் கார்த்திக்
நல்வாழ்த்துகள் முகிலன்
நட்புடன் சீனா
சோதனை மறுமொழி
ReplyDeleteவாழ்த்துக்கள் எல்.கே.
ReplyDeleteவாருங்கள், முகிலன்.. வருக வருக .. நல்ல விதமாக எழுத வாழ்த்துக்கள்..
முகிலன்... இப்போதான் வலைச்சரத்துல எழுதுறீங்களா...? ஆச்சர்யமா இருக்கு... ஒருவேளை ரெண்டாவது ரவுண்டா...?
ReplyDeleteம்ம்ம் பட்டைய கிளப்புங்கள் முகிலனே
ReplyDelete