இன்றைக்கு விடைபெறும் முன்பு ஒரு சிலப் பதிவர்களை பார்க்கலாம். "இதயம் பேசுகிறது " என்ற வலைப்பூவில் எழுதும் பாலாஜி எனது நண்பன். "நண்பன்டா " என்று இவரது நண்பருக்கு இவர் செஞ்ச உதவியை கொஞ்சம் பாருங்க .
போகாமல் விட்டத் திருமணத்தை விசாரிக்க சென்று அங்கு மாட்டிக்கிட்டு முழிச்சதை பத்தி கோமதி சொல்றதை கொஞ்சம் பாருங்க. அதே மாதிரி ஒருத்தர் புத்தகக் கண்காட்சியில் தனக்கு ஏற்ப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துக் கொள்கிறார்.
கணிணி பத்தி எனக்கு எதுவும் தெரியாது, அடிப்படையில் இருந்துக் கற்று கொள்ளவேண்டும்னு நினைப்பவர்கள். இதோ இந்த வலைப்பூவை பாருங்கள் ( இது அடிப்படை மட்டுமே. கணிணி நன்கு தெரிந்தவர்களுக்கு அல்ல ).
இவ்வளவு பேரை அறிமுகப் படுத்தி விட்டு ,ஒருவரை நான் விட்டுவிட்டால் அப்புறம் எனக்கு ரொம்பப் பிரச்சனை. அவர் யாரு என்ன அப்படின்னு இந்த லிங்கில் பார்த்துகோங்க .
கடந்த ஒரு வாரமாக வலைச் சரத்தில் எழுதும் வாய்ப்புக் கொடுத்த சீனா அய்யாவிற்கு எனது நன்றிகள். முடிந்த வரை புதியப் பதிவர்களை அறிமுகப் படுத்த வேண்டும் என்றுதான் எழுத ஆரம்பித்தேன். அவ்வாறே நடந்ததுள்ளது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
அனைத்து இடுகைகளுக்கும் வந்து பின்னூட்டம் இட்டு, அறிமுகப் படுத்திய பதிவர்களின் தளங்களுக்கும் சென்று அவர்களுக்கும் பின்னூட்டம் இட்டு உற்சாகப் படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.
நிறைவான வாரம். வாழ்த்துக்கள் நண்பரே...
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே..!
ReplyDeleteஈசியாக விசிட் செய்கிற மாதிரி புதியவர்களை அளவாக அறிமுகப்படுத்தி அட்டகாசமாக நிறைவு செய்தது பாராட்டதக்கது.ஆஹா அந்த லின்க்கையும் பார்த்துட்டேன்.
ReplyDeleteஇவ்வளவு பேரை அறிமுகப்படுத்தினது பெரிசில்ல எல்.கே சார்.
ReplyDeleteகடைசியா ஒரு லிங்க் கொடுத்து ஒருத்தரை அறிமுகப்படுத்தி இருக்கீங்களே,
அதுதான் ரொம்ப முக்கியம்.
போளி எல்லாம் கிடைக்காட்டி கூட பரவாயில்லை.சாப்பாடு கிடைக்க வேண்டாமா?
நல்ல வேளை தப்பிச்சீங்க
பல தரப்பட்ட வலைத்தளங்களை எங்களுக்கு அறிமுகம்
ReplyDeleteசெய்து அவற்றை படிக்க செய்த உங்களுக்கு நன்றி
கடைசி லிங்க்குக்கு அதோட சொந்தக்காரங்க நன்றி சொல்வாங்க
@lk என்னுடைய வலைப்பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி...
ReplyDeleteஅந்த கடலை பருப்பு வெல்ல போளி நீங்கள் தயாரிச்சது தானே... அரசியல்ல இதெல்லாம் சகஜங்க.. உண்மையைச் சொல்லுங்க...
ReplyDeleteசீனா அய்யா தங்களிடம் கொடுத்த பணியை நிறைவாக செய்திருக்கிறீர்கள். நன்றிகள்..
ReplyDeleteஇயல்பாகவே நீங்கள் அதிகம் வலைப்பூக்களை வாசிப்பீர்கள், இப்போது கொஞ்சம் கூடுதலாக செய்திருக்கிறீர்கள்.. நன்றிகள்..
@கலாநேசன்
ReplyDeleteநன்றி நண்பா
@குமார்
நன்றி
@ஆசியா
ReplyDeleteநன்றி சகோ.
@ராஜி
அது அதை சொல்லுங்க மேடம். அத பண்ணாட்டி அடுத்த வேலை சாப்பாடு இல்லை
@பாலாஜி
ReplyDeleteநண்பன்டா
@பாரத் பாரதி
ReplyDeleteசெஞ்சுக் கொடுத்தா நல்லா சாப்பிடுவேன். ஹிஹி ... நன்றிங்க
கொழந்த'ஸ் பிளாக்- இந்த வலைப்பூவில் பின்னூட்டம் இட இயவில்லையே...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் .முக்கியமான அறிமுகம் திவ்யா அம்மாவின் அறிமுகம் அருமை.
ReplyDeleteஇனிமையாக ஸ்வீட் போளியுடன் அறிமுகம் இனிமை இனிமை.
வாழ்த்துக்கள்.
நல்ல புதுமுக அறிமுகங்கள்.
ReplyDeleteஇனி அடுத்து திவ்யாம்மா வின் சமையல் கலைகட்டும் போல இருக்கே
நல்ல அறிமுகங்கள்
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்
ReplyDeleteGood job! :-)
ReplyDeleteகடைசியா ஒரு லிங்க் கொடுத்து ஒருத்தரை அறிமுகப்படுத்தி இருக்கீங்களே,
ReplyDeleteஅதுதான் ரொம்ப முக்கியம்.
போளி எல்லாம் கிடைக்காட்டி கூட பரவாயில்லை.சாப்பாடு கிடைக்க வேண்டாமா?
நல்ல வேளை தப்பிச்சீங்க //
அதே, அதே! ரிப்பீஈஈஈஈஈஈஈஈஈட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
கார்த்திக் என்னையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. திவ்யாம்மா நவம்பருக்குப்பிறகு பதிவு ஏதும் அனுப்பலியா?
ReplyDeleteநிறைய புதிய அறிமுகங்கள் கார்த்திக்....
ReplyDeleteதொகுத்தளித்தமைக்கு நன்றிகள்...!
ஓரிரு தளங்கள் தவிர நிறைய புதிய தளங்கள் அறிமுகப் படுத்தினீர்கள். பாராட்டிற்குரிய பணி.
ReplyDeleteநன்றி எல்கே! தொண்டு கிழங்களுக்கு கணினியை இளைஞர்கள் கூட படிக்கலாம்ன்னும் சொல்லி இருக்கலாம். பரவாயில்லை! :-))
ReplyDeleteஆறு நாட்களில் புதிய பல பதிவர்களின் வலைப்பூக்களை எங்களுக்கு அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி கார்த்திக். என்னுடைய மற்ற வலைப்பூவான ரசித்தபாடல்-ஐயும் இசைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.
ReplyDeleteநிறைவாக வலைச்சர பணி செய்தீர்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதிவ்யாம்மா கொடுத்த போளியின் சுவைபோல. நன்றிங்க.
ReplyDelete// இவ்வளவு பேரை அறிமுகப் படுத்தி விட்டு ,ஒருவரை நான் விட்டுவிட்டால் அப்புறம் எனக்கு ரொம்பப் பிரச்சனை. அவர் யாரு என்ன அப்படின்னு இந்த லிங்கில் பார்த்துகோங்க //
ReplyDeleteலிங்க் பாக்கறதுக்கு முன்னாடியே அது யாருன்னு புரிஞ்சுட்டோம்... ஹா ஹா...அந்த பயம் இருந்தா சரிதான்
"நண்பன்டா " - சூப்பரு... அது நான் மொதலே படிச்சுட்டேன்...