Sunday, January 30, 2011

டெத் ஓவர்ஸ்

கிரிக்கெட் போட்டிகளில் முக்கியமானது டெத் ஓவர்ஸ். அதாவது கடைசி 5-10 ஓவர்கள். ஃபீல்டிங் செய்யும் அணி களைத்துப் போயிருப்பார்கள் என்பதாலும் பந்து மிகவும் பழையதாகியிருக்கும் என்பதாலும் இந்த ஓவர்களில் சாதாரணமாக ரன் மழை பொழியும். இந்த ஓவர்களை குறைந்த ரன்கள் கொடுத்து வீச திறமையான பவுலர்களால்தான் முடியும்.

நான் ரசித்த திறமைசாலி பதிவர்களின் பதிவுகள் - பெரும்பாலும் பிரபலப் பதிவர்கள் - சிலவற்றைப் பார்ப்போம்.

வானம்பாடிகள் பாலா சார். இவர் எழுதும் கேரக்டர் பதிவுகள் புகழ்பெற்றவை. அதில் ஒன்று.

இரும்புத்திரை அரவிந்த். ஆணித்தரமாக விமர்சிக்கும் பதிவர்களில் ஒருவர். பாலுமகேந்திரா துவக்கியிருக்கும் பள்ளியைப் பற்றி எழுதிய விமர்சனம் ஒன்று.

நண்பர் ராஜநடராஜன். இவர் அரசியல் பார்வைகள் அசத்தலாக இருக்கும். அவற்றில் ஒன்று.

தண்டோரா மணிஜீ. இவர் தான் ஆணாதிக்கவாதியில்லை என்று அறிவித்த இடுகை.

நியுஜெர்சி நசரேயன். பிரிக்க முடியாதது என்று தருமி சிவபெருமானிடம் இப்போது கேட்டாரானால் நசரேயனும் எழுத்துப் பிழையும் என்று சொல்லுவார். எழுத்துப் பிழை இருந்தாலும் கருத்துப் பிழை இல்லாத ஆள் நசரேயன். அவர் எழுதிய பகடி ஒன்று.

டெக்ஸாஸ் கண்ட சோழன் குடுகுடுப்பை. பகடி செய்வது இவருக்குக் கை வந்த கலை. இவர் எழுதிய ஹிஸ்டரி ஃபிக்‌ஷன் ஒன்று.

நர்சிம். யாமார்க்கும் குடியல்லோம் யமனை அஞ்சோம் என்ற வரிகளைத்தன் தளத்தில் பகிர்ந்திருப்பவர். அதற்கேற்றபடி எழுதியும் வருபவர். இவரது நடை பல இடுகைகளில் எனக்கு சுஜாதாவை நினைவுபடுத்தியிருக்கிறது. கிரிக்கெட்டைப் பற்றி இவர் சுழற்றிய ரீவைண்ட் இங்கே.

பலாபட்டறை ஷங்கர். கவிதை, கதை, தொகுப்புகள், புகைப்படங்கள், வரைந்த படங்கள், விமர்சனங்கள் என்று அனைத்து வகைகளையும் தொட்டுப் பார்ப்பவர். கேபிள் சங்கரின் புத்தகத்துக்கு இவர் எழுதிய விமர்சனத்தைப் படித்துவிட்டு கேபிள் மயங்கிவிட்டதாகப் பேச்சு. எனக்கு மிகவும் பிடித்தது இவர் எழுதிய ஏழாம் உலகம் விமர்சனம்.

எனக்கு ஒரு வாரம் வலைச்சரத்தில் இடம் கொடுத்த வலைச்சரம் ஆசிரியர் குழுவுக்கும், நான் எழுதிய பிதற்றல்களை வாசித்துவந்த வலைச்சர வாசகர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்.

6 comments:

  1. மதிப்பிற்குரிய பதிவுலக திறமையான எழுத்தாளர்களின் பதிவுகளை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே

    அழகான ரசனையுடன் அனைத்துமே சிறந்த பதிவுகள்

    ReplyDelete
  2. வலைச்சரத்தில் ஒருவாரகாலமாக சிறப்பாக பணியாற்றி இன்று விடைபெறும் உங்களுக்கும் மற்றும் வலைசர நிர்வாக குழுவினருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் பல...

    ReplyDelete
  3. நல்ல பணி...
    சிறந்த அறிமுகங்கள்...
    அருமையான நடை...
    கலக்கல் வாரமாக மாற்றிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.
    சீனா ஐயா தேர்வு என்றும் தவறியதில்லை என்பதை வாராவாரம் பதிவர்கள் தங்கள் திறமையில் காட்டுகிறார்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. ஒருவார காலம் நல்ல அறிமுகங்கள்..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. அனுபவமுள்ள பவுலர்களை (பதிவர்களை) அறிமுகப்படுத்திய விதம் அழகு.

    ReplyDelete