இன்றுடம் முடியும் வாரத்திற்கு, ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் முகிலன், தான் ஏற்ற பொறுப்பினைச் சரிவர செய்து, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் ஒரு வாரத்தில், ஏழு இடுகைகள் பல்வேறு தலைப்புகளில் இட்டு, 65 இடுகைகளை அறிமுகப்படுத்தி, 75 மறுமொழிகள் பெற்றிருக்கிறார். ஒவ்வொரு நாளும் கிரிக்கெட்டினை அடிப்படையாக வைத்து - அதில் இருந்து சில கருத்துகளைக் கூறி விட்டு, பிறகு தன்னைக் கவர்ந்த இடுகைகளை அறிமுகப் படுத்திய விதம் நன்று.
நண்பர் முகிலனை, நல்வாழ்த்துகள் கலந்த நன்றியுடன் விடை கொடுத்து, வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்.
நாளை துவங்கும் வாரத்திற்கு, பொறுப்பேற்க வருகிறார் அருமைச் சகோதரி மலிக்கா. இவர் தஞ்சையில் பிறந்து, திருவாரூரில் வளர்ந்து, துபையில் வசிக்கிறார். பள்ளிப் படிப்பு பாதியில் நின்ற போதும், தமிழ் மீது கொண்ட தீராக்காதலினால், பதிவுகள் ஆரம்பித்து, பல் வேறு தலைப்புகளில் எழுதி வருகிறார்.
இனிய பாதையில் என்ற பதிவினில், இருளை அகற்றி சிறு ஒளியைத் தேடும் ஆன்மாவின் பயணமாக ஆன்மீகத்தினைப் பற்றி எழுதுகிறார்.
கலைச்சாரல் என்ற பதிவினில், எண்ணங்களில் உதித்த கைவண்ணங்களை, சமையல் குறிப்புக்ளை எழுதுகிறார்.
நீரோடை என்ற பதிவினில், ஆன்மாவைத் தெளிவாக்கும் விதமாக, எண்ணங்களைத் தெளிந்த நீராக ஓட விடுகிறார்.
பதினெட்டு மாதங்களாக, மூன்று பதிவுகளிலும், ஏறத்தாழ 450 இடுகைகள்- பல்வேறு தலைப்புகளில் இட்டிருக்கிறார். பின்தொடரும் பதிவர்களூம் அதிகம்.
இவர் காதல் கவிதைகள் அதிகம் எழுதி இருக்கிறார். துபையில் இருக்கும் பன்னாட்டு இலக்கிய இஸ்லாமிய கழகத்தின் மகளீர் அணிச் செயலராக இருக்கிறார். பல மேடைகளில் இவரது கவிதைகள் வாசிக்கப்படுகின்றன. பல்வேறு இதழ்களில் இவரது கவிதைகள் வெளி வருகின்றன. விரைவில் இவரது படைப்புகள் புத்தகமாக வெளி வர இருக்கின்றன. பல்வேறு விருதுகள் வாங்கி இருக்கிறார்.
அன்புச் சகோதரி மலிக்காவினை வருக ! வருக ! அறிமுகங்களை அள்ளித் தருக என அன்புடன் நல்வாழ்த்துகள் கூறி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
நல்வாழ்த்துகள் முகிலன்
நல்வாழ்த்துகள் மலிக்கா
நட்புடன் சீனா
சோதனை மறுமொழி
ReplyDeleteபாராட்டுக்கள் முகிலன்!
ReplyDeleteவாழ்த்துக்கல் கவிஞர் மலிக்கா!
வாங்க, வந்து ஜமாயுங்கள் மலிக்கா!
ReplyDeleteஒரு வாரத்தில் நல்ல பல பதிவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி முகிலன்.
ReplyDeleteஇந்த வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பு - வாழ்த்துகள் மலிக்கா! அசத்துங்கள்!
மலிக்கா வாருங்க.... வாழ்த்துக்கள்
ReplyDeletevaangka vaangka malli vanthu asaththungka. vaazththukkaL.
ReplyDeleteபாராட்டுக்கள் வாழ்த்துக்கள் கவிஞர் மலிக்கா அக்கா
ReplyDeleteவலைச்சரம் தன்னில் வளைக்கரம் தீட்டும்
ReplyDeleteகலைகள் வளர கடவுள் துணைநிற்க
பெண்ணினம் பாரில் பெருமிதம் பெற்றிட
அண்ணன் மகிழ்ந்திடும் நாள்.
நன்றி முகிலன்... வாங்க மலிக்கா...
ReplyDeleteவலைச்சரத்தில் ஒரு வாரகாலமாக சிறப்பாக பணியாற்றி விடைபெறும் நண்பர் முகிலனுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்....
ReplyDeleteஇந்த வாரம் பொறுப்பேற்க வரும் மலிக்கா மேடத்தின் வருகை இனிதாகுக.
ReplyDeleteதொடர்ந்து பல புதியவர்கள் மற்றும் சிறப்பான பதிவுகளை அறிமுகங்களை செய்து வலைச்சரத்தில் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.....
பாரட்டுகள் தினேஷ், வாழ்த்துக்கள் மலிக்கா ,
ReplyDeleteமல்லி வாழ்த்துக்கள் தூள் கிளப்புங்க வாங்க..
ReplyDeleteஅன்பின் சீனா சார் அவர்களுக்கும்.
ReplyDeleteஎன்னை ஊக்கப்படுத்த கருதுக்களென்னும் அன்பை பொழிந்து எனக்கு உற்சாகத்தை தரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..
அன்பான கவிஞர் மலிக்கா! எனது பாசத்திற்குறிய சகோதரி!, வாழ்த்துக்கள் அக்கா!, தங்களின் பொறுப்பிற்கு..
ReplyDeleteபாராட்டுக்கள் முகிலன்...!!
ReplyDeleteவாழ்த்துக்கள்...வருக...வருக....கவியரசியே.. :-/
நல்வாழ்த்துகள் முகிலன்
ReplyDeleteநல்வாழ்த்துகள் மலிக்கா
//isaianban said...
ReplyDeleteஅன்பான கவிஞர் மலிக்கா! எனது பாசத்திற்குறிய சகோதரி!, வாழ்த்துக்கள் அக்கா!, தங்களின் பொறுப்பிற்கு..//
மிக்க மகிழ்ச்சி தம்பி. தாங்களின் வருகைகும் அன்பான வாழ்த்துக்கும்..மிக்க நன்றி
ஜெய்லானி said...
ReplyDeleteபாராட்டுக்கள் முகிலன்...!!
வாழ்த்துக்கள்...வருக...வருக....கவியரசியே
//
வந்து மூனு நாளாச்சி இப்பபோய் வருக வருகவா. [நல்லாபாருங்கோ நான் எப்ப வரவேற்றதுன்னு ஹி ஹி]
தாங்களின் வருகைகும் அன்பான வாழ்த்துக்கும்..மிக்க நன்றி அண்ணாத்தே
Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...
ReplyDeleteநல்வாழ்த்துகள் முகிலன்
நல்வாழ்த்துகள் மலிக்கா//
தாங்களின் வருகைகும் அன்பான வாழ்த்துக்கும்..மிக்க நன்றி வாசன்..