(கவிஞர்கள் அறிமுகம் – 02)
வணக்கம் மக்களே...
நேற்றைய தொடர்ச்சியாக இன்றும் சில கவி பாடும் பதிவர்களை காண்போம்.
1. தேஜூ உஜ்ஜைன் http://tejuujjain.blogspot.com/
ட்விட்டரில் நண்பர் ஒருவர் மூலமாக இவரது தளத்திற்கு அறிமுகம் கிடைத்தது. காதல் கவிதைகள் எழுதுவதில் ஸ்பெஷலிஸ்ட். காதல் தேவதை என்னும் இடுகையில் தனது காதலியைப் பற்றி சிலாகித்திருக்கிறார் பாருங்கள். ஃபீனிக்ஸ் ஜாதி என்னும் கவிதையில் காதல் ஒரு பீனிக்ஸ் பறவையைப் போன்றது என்று கூறுகிறார். ஆனால் மற்றொரு கவிதையில் காதல் ஒரு குறைப் பிரசவக்குழந்தை என்று குறிப்பிடுகிறார்.
2. கவிதை பூக்கள் http://nankirukkiyavai.blogspot.com/
ஆறு வலைப்பூ வைத்திருப்பவர் என்றெண்ணும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. அவற்றில் கவிதைக்காக அர்ப்பணிக்கப்பட்டது இந்த வலைப்பூ. இவரும் முன்னவரைப் போல தன் கனவு நாயகி குறித்து ஒரு கவிதை வடித்திருக்கிறார். சிகரெட், விலைமாதர் போன்றவற்றைப் பற்றி இவர் என்ன சொல்கிறார் என்று கேளுங்கள். மேலும் ஒரு வரிக்கவிதைகள் என்ற தலைப்பின் கீழ் எழுதியிருக்கும் புதுக்கவிதைகள் கலக்கல்.
3. படத்துடன் கவிதைகள் http://vithu9.blogspot.com/
இவருக்கு அறிமுகம் தேவையில்லை. றோஜாக்கள், தகவல் தொழில்நுட்ப செய்திகள் ஆகிய வலைப்பூக்களின் உரிமையாளர் தோழி பிரஷாவின் மற்றொரு வலைப்பூ இது. படங்களுடன் கூடிய கவிதைகள் இந்த வலைப்பூவின் ஸ்பெஷாலிடி. நட்பின் பெருமையையும், ஒருதலைக்காதலின் மகத்துவத்தையும் கவிதையாய் சொல்லியிருக்கிறார் பாருங்கள். மேலும், மறுமணம் பற்றிய தனது எண்ணத்தை மூன்றே வரிகளில் நச்சென்று சொல்லியிருக்கிறார்.
4. பறத்தல் - பறத்தல் நிமித்தம் http://nilaamagal.blogspot.com/
இவரும் ஒரு பெண் கவிஞர். கவிதைகள் மட்டுமல்லாமல் சிறுகதைகள் கூட எழுதுகிறார். பருவம் தப்பிய மழை என்ற விவசாயிகள் குறித்த கவிதை நெகிழ்ச்சி. குறுங்கவிதைகள் என்ற பெயரில் எழுதியிருக்கும் ஹைக்கூ கவிதைகள் ரசிக்க வைக்கின்றன. கடவுளும் காருன்யமும் என்ற கவிதையில் மிகவும் சீரியஸாக ஒரு மேட்டர் சொல்லியிருக்கிறார். அது என்னவென்று பாருங்களேன்.
5. பென்சில் http://asuda5.blogspot.com/
பெரும்பாலும் காதல் கவிதைகள். அவ்வப்போது சிறுகதைகளும் எழுதுகிறார். இவர் எழுதிய காதல் கவிதைகளில் மழையனப் பெய்தாய் நீ…! என்னும் கவிதையை நான் அதிகம் ரசித்த கவிதை என்று சொல்லுவேன். விசித்திரி என்னும் இடுகையில் தலைப்பிற்கேற்றார்போல வித்தியாசமாக ஒரு மரபுக்கவிதை எழுதியிருக்கிறார். மீன் தொட்டி – மூன்று கவிதைகள் என்ற இடுகையும் ரசிக்க வைக்கின்றன.
6. மௌனத்தின் மறுபக்கம்... http://other-side-of-silence.blogspot.com/
இவர் பதிவுலகிற்கு புதியவர் இல்லை. கிட்டத்தட்ட நான்காண்டுகளாக கவிபாடி வருகிறார். ஆனால் நிறைய பேருக்கு பரிட்சயமில்லாதவர். இவர் தோழிக்காக எழுதிய கவிதை பிரமாதப்படுத்துகிறது. மேலும் தனக்கு கடவுளை பிடிக்க என்ன காரணம் என்னவென்று இங்கே கொஞ்சம் சீரியஸாக விவரித்திருக்கிறார். ஐம்புலம் சிலிர்க்கும் ஐந்தடி உயர அழகிய கவிதை... எனும் இடுகையில் உலகிலேயே சிறிய கவிதையை எழுதி சிலிர்க்க வைக்கிறார்.
7. வளவன் http://thisaikalyettum.blogspot.com/
இயற்கை, காதல், சமூகம் என்று வகை வகையாக கவிதைகள் வடிக்கிறார். இவரது கவிதைகளுக்கு இணையாக அதற்கேற்ப இணைக்கும் படங்களும் ரசிக்க வைக்கின்றன. புத்தக வழி உறக்கம் என்னும் கவிதை தலைப்பைப் போலவே இதமாக இருக்கிறது. தேவதை என்னும் கவிதையில் தோழியைப் பற்றியும் கறிகடையின் விளிம்பில் என்னும் கவிதையில் கோழியைப் பற்றியும் எழுதியிருக்கிறார் பாருங்கள்.
8. கவிக்களம் http://kavikklam.blogspot.com/
பதிவுலகிற்கு மிகவும் புதியவர் என்று சொல்லலாம். இன்னும் ஒருமாதம் கூட முழுமையாக நிறைவடையவில்லை. இவர் எழுதியுள்ள கவிதைகளில் காதல் வியாபாரம் என்னுடைய பேவரிட். நட்பு என்னும் சொல்லுக்கு நான்கே வரிகளில் விளக்கம் கொடுத்திருக்கிறார் பாருங்கள். யாரை இவர் சர்வாதிகாரி என்று சொல்கிறார் தெரிந்துக்கொள்ள இந்தக் கவிதையை படியுங்கள்.
9. தாடகை பெருநிலத்தான் http://jegadeeswara.blogspot.com/
அனல் பறக்கும் சமூக அக்கறை கொண்ட கவிதைகளுக்கு சொந்தக்காரர். மீனவர்களுக்காக பிரிவுகள் வாழ்வை பலப்படுத்தட்டும்...!! என்ற இந்தக்கவிதையை தொடுத்திருக்கிறார் பாருங்கள். அதுமட்டுமில்லாமல் வளைகுடா நாடுகளில் வாடும் கடைநிலை தமிழர்களுக்காக...!! ஒரு கவிதை எழுதியிருக்கிறார், அமீரக பதிவர்கள் ஒவ்வொருவரும் படித்தே தீரவேண்டிய இடுகை இது. கவிதைகள் மட்டுமல்லாமல் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். அவற்றுள் குறிப்பிடத்தக்கது நவீன சேகுவேரா விக்கி லீக்ஸ்...!
10. முத்து http://muthtu.blogspot.com/
இவரும் இந்த மாதமே பதிவுலகிற்கு வந்திருக்கிறார். ஆனாலும் வந்த வேகத்தில் 37 கவிதைகள் எழுதி அசர வைக்கிறார். தமிழா! கடந்து வந்த பாதையை திரும்பிப் பாரடா என்னும் கவிதையில் நமக்கு என்ன அட்வைஸ் சொல்கிறார் என்று கேளுங்களேன். மேலும் அன்னையர் தினம் பற்றி நெகிழ வைக்கும் கவிதையொன்றை வடித்திருக்கிறார். சுற்றுப்புறச்சூழல் மாசு பற்றிய விழிப்புணர்வு கவிதையும் வியக்க வைக்கிறது.
நேற்றைய போனஸ் பகுதியில் பார்த்த அதே பதிவரின் மற்றுமொரு வலைப்பூ. தமிழில் கானா பாடல்களுக்காக அர்பணிக்கப்பட்ட ஒரு வலைப்பூ. மத்தியான வெயிலு இங்க மண்டையத்தான் பொளக்குது...! என்று தான் வாழவந்த ஊரான சென்னையைப் பற்றி கானா பாடுகிறார். காதலர் தின சிறப்பு கானாவாக வேலம்மா கூட நானு வேலண்டைன் டே கொண்டாடினேன்...! என்னும் இடுகையை எழுதியிருக்கிறார். இவரும் அமீரக பதிவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய வகையில் துபாய் போன மச்சான் பேரு கபாலி...! என்றொரு கானா பாடல் எழுதியிருக்கிறார்.
கவிஞர்கள் அறிமுகம் இந்த இடுகையோடு நிறைவடைகிறது. சீனியர் பதிவர்கள் என்பதாலும் நமது நண்பர்கள்தானே என்பதாலும் சிலரை தெரிந்தே தவறவிட்டேன். அவர்கள் மன்னித்தருள வேண்டுகிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
இன்றும் அறிமுகங்கள் அசத்தல்! இவர்களை எங்கே தேடிப்பிடிக்கிறீர்கள்? எவரையுமே தெரியாது! குத்தம் நம்ம மேலதான்! நம்மளோட தேடல் அந்த ரேஞ்சுல இருக்கு!
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் நன்றி சகோதரா...
ReplyDeleteஅனைவருக்கும் என் வாழ்த்துக்களும் சேரட்டும்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)
கவிஞர்கள் அறிமுகம். நிறைய நண்பர்கை அறிமுகம் செய்தீர்கள்.. அருமை.
ReplyDeleteஇதையும் படிங்க: மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வரலாறு
இன்றை அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள்..
ReplyDeleteஒரே கவிஞர் மயமா இருக்கே... சூப்பர் அறிமுகம்...
ReplyDeleteஉங்களின் இந்த தேடல் முயற்சிக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் பிரபா
ReplyDelete:)
நன்றி பிரபா..
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள்..
ReplyDeleteஅறிமுகங்களிடம் சென்று பார்த்தேன் நல்லாய் இருக்கிறது..நன்றிகள்
ReplyDeleteஅறிமுகங்கள் நல்ல இருக்கு! வாழ்த்துக்கள்..
ReplyDeleteஅனைவருக்கும் என் வாழ்த்துக்களும் வரவேற்ப்பும் ..............
ReplyDeleteபிரம்மிக்க வைக்கும் தேடல் நண்பா........
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்......!
இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்... எனது படத்துடக் கவிதைகள் site அறிமுகம் செய்தமைக்கு நன்றி...!
ReplyDeleteகவிஞர்கள் பற்றிய அறிமுகங்கள்
ReplyDeleteஅனைத்தும் அருமை, பிரபா!
நல்ல அறிமுகங்கள் !
ReplyDeleteஎன் வாழ்த்துக்களும் :)
@ ஓட்ட வட நாராயணன், ♔ம.தி.சுதா♔, தமிழ்வாசி - Prakash, பாட்டு ரசிகன், MANO நாஞ்சில் மனோ, மாணவன், வசந்தா நடேசன், வேடந்தாங்கல் - கருன், கந்தசாமி., Pranavam Ravikumar a.k.a. Kochuravi, ரஹீம் கஸாலி, அஞ்சா சிங்கம், பன்னிக்குட்டி ராம்சாமி, Lakshmi, தோழி பிரஷா, NIZAMUDEEN, Chitra, நேசமித்ரன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்...
@ ஓட்ட வட நாராயணன்
ReplyDelete// இவர்களை எங்கே தேடிப்பிடிக்கிறீர்கள்? //
இன்றைக்கு சொல்கிறேன்...
@ ரஹீம் கஸாலி
ReplyDelete// தேஜு உஜ்ஜைன் அருமையான தேர்வு. அவர் வேறு யாருமல்ல...சேலம் எஸ்காதான் //
நெஜமாவா சொல்றீங்க... அதிர்ச்சியாக இருக்கிறது எனினும் மகிழ்ச்சியாக இருக்கிறது...
அருமையான கவிஞர்கள்..!!
ReplyDeleteகடந்த ஒருவார காலமாக எனக்கு வலைச்சரத்தில் ஆதரவளித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்... எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சீனா அய்யா அவர்களுக்கும் நன்றிகள்...
ReplyDelete" ஆறு வலைப்பூ வைத்திருப்பவர் என்றெண்ணும்போது ஆச்சர்யமாக இருக்கிறது."
ReplyDelete....அதெல்லாம் ஒன்றுமில்லை முடியல பா அதான் இப்ப இரண்டு மட்டும் ரெகுலர் மற்றது நேரம் கிடைக்கும் பொது மட்டும் .........
நண்பா பிரபா முதலில் மிக்க நன்றி அறிமுகம் செயததற்கு , அடுத்து நான் ஊருக்கு மேல்மாந்தை ( வேம்பர்- துத்துக்குடி , விளாத்திகுளம் அருகில் ) கோவிலுக்கு கடந்த பத்து நாட்களாக ஊரில் இல்லை இன்று தான் சென்னை திரும்பினேன் அதனால் பார்க்க முடிய வில்லை . நன்றி