Friday, February 25, 2011

வேர்ட்பிரஸ் பதிவர்கள் – ஒரு பார்வை


வணக்கம் மக்களே...

இன்றைக்கு ஏன் இந்த மூன்றாவது இடுகை என்று கேட்டீர்களானால் போட்டு வைத்திருந்த திட்டத்திற்கு அப்பாற்பட்டு நண்பர் இக்பால் செல்வன் வேர்ட்பிரஸ் பதிவர்கள் பற்றியும் எழுதவேண்டுமென அன்போடு கேட்டுக்கொண்டார். எனவே கூடுதலாக இந்த இடுகை அவசியமாகிவிட்டது.

சரி, அப்படியே இன்றைய அறிமுகங்களை பார்ப்போம் என்றால் இவர்கள் ப்ளாக்கர் வட்டத்திற்கு வேண்டுமானால் புதியவர்களாக இருக்கலாம். ஆனால் வேர்ட்பிரஸ் வட்டத்தை பொறுத்தவரையில் அறிந்தமுகங்களும் பிரபலங்களுமே. (அதென்ன ப்ளாக்கர் வட்டம் வேர்ட்பிரஸ் வட்டம் பாகுபாடு என்றெல்லாம் கேட்கப்பிடாது). தொழில்நுட்பரீதியாக வேர்ட்பிரஸ் பதிவர்களைப் பின்பற்றுவதில் இருக்கும் சிக்கலே இந்நிலைக்கு காரணம். ஓகே கவுண்டிங் ஸ்டார்ட்ஸ்...

1. களர்நிலம் http://adhithakarikalan.wordpress.com/
உள்ளூர் சினிமாவிலிருந்து உலக சினிமாவரை மணக்கிறது இந்த வலைப்பூ. சத்யஜித்ரேயின் Fairy Tale படம் என்னும் இடுகை நம்மை ஈர்க்கிறது. இந்தியாவின் முதல் கவர்ச்சிக்கன்னி என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்று பாருங்கள். உலகில் அதிக வசூலான ஆங்கிலமல்லாத திரைப்படம் எது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

2. பறையோசை http://paraiyoasai.wordpress.com/
சமூகக்கோபம் கலந்த கட்டுரைகளை வழங்கிவரும் சூடான வலைப்பூ. பரிசோதனை எலிகளாக மக்கள் பயன்படுத்தப்படுகிறார்கள் என்று ஏன் கூறுகிறார்கள் என கேளுங்கள். பேராண்மை பாடம் குறித்த அவரது பார்வையை மயில் வாகனன் பகிர்கிறார். நான் கடவுள் இடுகையில் சீரியஸாக ஒரு கருத்து சொல்லியிருக்கிறார்கள் பாருங்கள்.

3. சிலிகான் ஷெல்ஃப் http://siliconshelf.wordpress.com/
பல்சுவைகளையும் அள்ளித்தரும் வலைப்பூ இது. கிரிக்கெட் வீரர்களுக்கு பிடித்த புத்தகங்கள் என்னென்ன என்பதை மெனக்கெட்டு தொகுத்திருக்கிறார்கள். சுப்ரமணியின் காதல் என்னும் சிறுகதை ரசிக்க வைக்கிறது. மேலும் மொத்த தமிழ் பதிப்பகங்களின் லிஸ்ட் கொடுத்திருக்கிறார்கள் பயன்படும் வகையில் உள்ளது.

4. வில்லவன்... http://villavan.wordpress.com/
அரசியல், சமூகம் சார்ந்த இடுகைகள் இதன் ஸ்பெஷாலிட்டி. நோயைவிடக் கொடியது நோயாளியாய் இருப்பதே... என்று தத்துவம் சொல்கிறார்கள். 2020ல் மீரா ராடியா - ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் கதை என்று அரசியல் கோபத்தையும் நகைச்சுவையாக சொல்கிறார்கள். காதலைப் பற்றி வீண் ஆய்வு ஒன்றை செய்திருக்கிறார்கள்.

இது இந்த இடுகையை எழுத காரணமாக இருந்த இக்பால் செல்வனின் வலைப்பூ. இவர் நடுநிசி நாய்கள் தேவையான ஒரு படமே என்று கூறுகிறார். மேலும், காதலர் தினத்தால் உடலில் ஏற்படும் நன்மைகள் என்னென்னவென்று பட்டியலிட்டிருக்கிறார். வழுக்கைத்தலைக்கும் வைத்தியம் வந்தாச்சு என்று பெருசுகளுக்கு நற்செய்தி கூறுகிறார்.

6. இதயம் பேத்துகிறது http://kgjawarlal.wordpress.com/
கதை, கட்டுரை, நகைச்சுவை என்று வெரைட்டி காட்டுகிறார்கள். இவர் எழுதியுள்ள இடுகைகளில் காப்பிரைட்ஸ் என்னும் இடுகை என்மனம் கவர்ந்தது. சிறுத்தை படத்தை தமன்னாவின் சிறுத்தை என்று குறிப்பிடுகிறார் பாருங்கள். காதலிக்கிறவர்கள் கவனத்திற்கு... என்று என்ன அறிவுரை சொல்கிறார்கள் என்று கேளுங்கள்.

7. வேளாண் அரங்கம் http://velanarangam.wordpress.com/
விவசாயத்திற்காக அர்பணிக்கப்பட்ட ஒரு வலைப்பூ. விவசாயிகளுக்கு பல பயனுள்ள தகவல்களை அள்ளித்தெளிக்கிறது. மாசற்ற மண்புழு உரம் பற்றிய கட்டுரை இனிக்கிறது. குறைந்த செலவில் அதிக லாபம் தரும் தர்பூசணி, பாரம்பரிய விவசாய முறைப்படி பாசிப்பயிறு சாகுபடி என்று ஏராளமான வேளாண் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.

8. படைப்பாளி http://padaipali.wordpress.com/
கவிதை, கட்டுரை, சிறுகதை, தொழில்நுட்பம் என்று கலந்துகட்டி அடிக்கும் ஆல்-ரவுண்டர். படைப்பாளி என்று பெயர் வைத்துக்கொண்டு சைக்கோ என்று கவிதை எழுதியிருக்கிறார் பாருங்கள். குவாட்டர் கோவிந்தன் பற்றிய சிறுகதை யதார்த்தம். நீங்கதான் ஹீரோ என்று நவீன தொழில்நுட்பம் பற்றி சொல்லித்தருகின்றனர்.

9. Cybersimman's Blog http://cybersimman.wordpress.com/
இன்டர்நெட்டே வேதம் என்று கூறும் இந்த வலைப்பூ. பல தொழில்நுட்ப தகவல்களையும், பயனுள்ள தளங்கள் பற்றிய தகவல்களையும் தருகிறது. கூகுள் சேவைகளைப் பற்றி அறிந்துக்கொள்ள, காதலர்களுக்காக என்று சில பிரத்யேக வலைப்பூக்களை அறிமுகப்படுத்துகின்றனர். வலைப்பதிவர்களின் லட்சியம் என்னவென்றும் விளக்கமளிக்கின்றனர்.

10. விண்மணி http://winmani.wordpress.com/
மறுபடியும் தகவல் தொழில்நுட்ப செய்திகள் தரும் வலைப்பூ. முன்னர் குறிப்பிட்ட சைபர் சிம்மன் வலைப்பூவை போலவே பல பயனுள்ள இணையதளங்களை அறிமுகப்படுத்துகிறது. எந்த நாட்டில் எந்த ஊரில் வாழ எவ்வளவு பணம் தேவைப்படும் நொடியில் அறிய, உலகத்தின் எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் என்றறிய, அரிய தளங்கள் பற்றி சொல்கிறது.

பெரும்பாலும் அனைவருக்கும் தோழர்.மதிமாறன் அவர்களின் இந்த வலைப்பூவைப் பற்றி தெரிந்திருக்கும். இங்கே சூடான இடுகைகள் கிடைக்கின்றன. உலக கோப்பை கிரிக்கெட் பற்றி இவரது பார்வை. அப்படியே பேராண்மை படம் குறித்தும் என்ன சொல்கிறார் என்று கேளுங்கள். காதலர் தின சிறப்பு இடுகை இங்கே.

இது ஒரு ட்ரைலர் மட்டுமே. இன்னும் ஏராளமான வேர்ட்பிரஸ் பதிவர்கள் மீது நம் பார்வை படாமல் இருக்கிறது. இனி வரும் வலைச்சர ஆசிரியர்கள் வேர்ட்பிரஸ் பதிவர்களையும் அறிமுகப்படுத்த வேண்டுமென்ற வேண்டுகோளை முன்வைத்து இப்போதைக்கு விடைபெறுகிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

31 comments:

  1. உங்களின் இந்த புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் பிரபா :))

    ReplyDelete
  2. பயனுள்ள பதிவர்களை பகிர்ந்துகொண்டமைக்கு பாராட்டுகளும் நன்றிகளும் பல... :)

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு

    ஐடியாவும் சூப்பர்

    ReplyDelete
  4. அருமையான புது முயற்சி....! வெர்ட்பிரஸ் தளங்களில் பின்னூட்டம் இடுவது அவஸ்தையான ஒன்று. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. சிறந்த அறிமுகங்கள். நன்றி நண்பரே..!

    ReplyDelete
  6. அடடே....இன்னைக்கு மூணு காட்சியா? பேஷா நடத்துங்க.....வேர்ட்பிரஸ் பதிவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி பிரபா,,,,,,
    நம்ம கடையில் இன்று
    தந்தியடிக்க இன்னொரு தலைவரும் ரெடியாயிட்டாருங்கண்ணா...

    ReplyDelete
  7. சிறந்த அறிமுகங்கள். நன்றி நண்பரே.

    ReplyDelete
  8. உங்களின் அருமையான உழைப்பு அசாத்தியமானது அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  9. வேர்ட் பிரஸ் என்கின்ற தளம் இருக்கிறது நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரிகிறது பிரபா.

    ரொம்ப நன்றி.

    இன்னும் தெரிந்து கொள்ளவேண்டியது நிறையா இருக்கின்றது என்று நினைக்கிறேன்.

    வாழ்த்துக்கள் !

    எல்லாவற்றையும் ஒரு முறை விசிட் செய்துட வேண்டியதுதான்.

    ReplyDelete
  10. அன்புள்ள பிரபா...
    வேர்ட்பிரஸ் பதிவர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.
    யாரும் செய்திராத புதுமை. அனைவருமே என்னைப்
    பொருத்தவரை நான் அறியாதவர்களே!
    நன்றி, பிரபா!

    அ.ராம நாதன் சாரின் தொகுப்பு வேர்ட்விரஸ்
    முகவரி இதோ:
    www.rammalar.wordpress.com

    ReplyDelete
  11. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. கொடுக்கப்பட்ட பொருப்பை மிகச்சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. பிரபா வேற்ட்பிரசில் ஒளிந்துள்ளா தளங்களை தந்தமைக்கு மிக்க நன்றிகள் ! சிரத்தை எடுத்து இப்பதிவினை எழுதியமைக்கும், சிறப்பான பணிக்கும் எனது வாழ்த்துகள் ...

    ReplyDelete
  14. அருமையாய் அறிமுகம் செய்திருக்கிறீர்கள் பிரபா!

    ReplyDelete
  15. நல்ல அறிமுகங்கள் !

    என் வாழ்த்துக்களும் :)

    ReplyDelete
  16. @ மாணவன், Speed Master, பன்னிக்குட்டி ராம்சாமி, உண்மைத்தமிழன், ரஹீம் கஸாலி, Ananthi (அன்புடன் ஆனந்தி), Lakshmi, எம் அப்துல் காதர், அந்நியன் 2, NIZAMUDEEN, Chitra, கொக்கரகோ..., இக்பால் செல்வன், vanathy, ஓட்ட வட நாராயணன், மோகன்ஜி, நேசமித்ரன்

    வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்...

    ReplyDelete
  17. @ உண்மைத்தமிழன்
    // சிறந்த அறிமுகங்கள். நன்றி நண்பரே..! //

    என்னண்ணே... புதுசா நண்பரேன்னு எல்லாம் கூப்பிடுறீங்க... வழக்கம்போல தம்பின்னே சொல்லுங்க...

    ReplyDelete
  18. @ அந்நியன் 2
    // வேர்ட் பிரஸ் என்கின்ற தளம் இருக்கிறது நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரிகிறது பிரபா. //

    என்னங்க சொல்றீங்க... இதெல்லாம் அநியாயம்...

    ReplyDelete
  19. @ NIZAMUDEEN
    // அ.ராம நாதன் சாரின் தொகுப்பு வேர்ட்விரஸ்
    முகவரி இதோ:
    www.rammalar.wordpress.com//

    உங்கள் பகிர்வுக்கும் நன்றி... முடிந்தால் அடுத்த வலைச்சர ஆசிரியரிடம் முன்கூட்டியே சொல்லிவிடுங்கள்... அவர் அறிமுகப்படுத்த ஏதுவாக இருக்கும்...

    ReplyDelete
  20. நல்ல பயனுள்ள பதிவு. மற்ற வேர்ட் பிரஸ் பதிவுகளை படிக்க வசதியாக இருக்கும்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. நல்ல பயனுள்ள பதிவு. மற்ற வேர்ட் பிரஸ் பதிவுகளை படிக்க வசதியாக இருக்கும்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. panguvanigam.wordpress.com tamil sharemarket details

    ReplyDelete
  23. கலர்நிலத்தை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    ReplyDelete
  24. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. கடந்த ஒருவார காலமாக எனக்கு வலைச்சரத்தில் ஆதரவளித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்... எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சீனா அய்யா அவர்களுக்கும் நன்றிகள்...

    ReplyDelete
  26. நன்றி

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  27. மிக்க நன்றி நண்பரே...இரண்டாம் முறையாக எம்மை அறிமுகம் செய்தமைக்கு.....

    ReplyDelete
  28. எங்கள் தளத்தை (சிலிகான்ஷெல்ஃப்) குறிப்பிட்டதற்கு நன்றி! காலதாமதமாக நன்றி சொல்கிறேன், ஆனால் இன்றுதான் தெரிந்துகொண்டேன். :-)

    RV

    ReplyDelete