இன்றுடன் முடியும் வாரத்திற்குப் பொறுப்பேற்ற நண்பர் ரஹீம் கஸாலி, தான் ஏற்ற பொறுப்பினைச் சரிவர நிறைவேற்றி, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் ஏழு இடுகைகள் இட்டு, இதுவரை ஐநூற்று ஐம்பது மறுமொழிகள் பெற்றிருக்கிறார். ஐம்பத்தெட்டு பதிவர்களையும் அவர்களது சிறந்த இடுகைகளையும் அறிமுகப் படுத்தி உள்ளார்.
அறிமுகப்படுத்தும் போது, புது விதமாக, பதிவர்களது புகைப்படத்தினையும், பெயரினையும், வலைப்பூவின் பெயரினையும், பிடித்த இடுக்கைகளின் பெயர்களையும் வெளியிட்டு புதுமை படைத்துள்ளார்.
நண்பர் ரஹீம் கஸாலியினை, நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்.
அடுத்து நாளை துவங்கும் வாரத்திற்கு, பொறுப்பேற்க வருகிறார் Philosophy Prabhakaran". இவர் பிரபாகரனின் தத்துபித்துவங்கள் என்ற பதிவினிலும், கவுண்டமணி - செந்தில் என்ற குழுப் பதிவினிலும் எழுதி வருகிறார். இவர் இரண்டாண்டுகளாக பதிவினில் எழுதி வருகிறார். 131 இடுகைகள் இட்டிருக்கிறார். 331 பதிவர்கள் பின்தொடர்கிறார்கள்.
இவரது இயற்பெயர் மற்றும் புனைப்பெயர் பிரபாகரன். 22 வயது இளைஞர். விருதுநகர மாவட்டத்தில் உள்ள சாத்தூரினைச் சேர்ந்தவர். பொறியியலில் பட்டப்படிப்பு முடித்தவர். சென்னையிலேயே வளர்ந்து அங்கேயே பணி புரிகிறார். தற்சமயம் கணினித்துறையில் மேல் படிப்பு படித்து வருகிறார்.
இவர், விதி முறைகளின்படி, முதல் இடுகையில் தன்னுடைய சிறந்த படைப்புகளை அறிமுகம் செய்யும் முறையில் இருந்து மாறுபட்டு, அவ்விடுகையினையும் மற்றவர்களை அறிமுகப் படுத்துவதற்குப் பயன்படுத்த விருப்பப் படுகிறார். அவரது ஆர்வத்தினை மெச்சி விதி முறைகளைச் சற்றே தளர்த்தி அனுமதி அளித்துள்ளோம். இவரது இடுகைகளில் எங்களுக்குப் பிடித்தவற்றை வார இறுதியில் வெளியிடுகிறோம்.
நண்பர் பிரபாகரனை வருக ! வருக ! அறிமுகங்களை அள்ளித் தருக என வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
நல்வாழ்த்துகள் ரஹீம் கஸாலி
நல்வாழ்த்துகள் பிரபாகரன்
நட்புடன் சீனா
சோதனை மறுமொழி
ReplyDeleteபிரபாகரனுக்கு என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteபிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteபிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteபிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பர்களே...
ReplyDeleteநண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு மிக்க நன்றி சீனா அய்யா... வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கு எனது நன்றி கலந்த வணக்கங்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பர்களே... :)
ReplyDeleteவாங்க பிலாசபி
ReplyDeleteவாருங்கள் பிரபாகரன்,
ReplyDelete