Tuesday, February 22, 2011

கொஞ்சம் சர்பத் கொஞ்சம் மிளகுப்பு

(அறிமுகங்கள் 02)
வணக்கம் மக்களே...

நேற்று மாலை பத்து பதிவர்களைப் பற்றியும் அவர்கள் எழுதிய இடுகைகளில் எனக்குப் பிடித்தவற்றையும் பகிர்ந்துக்கொண்டேன். இன்றும் அதே பாணியில் பத்து பதிவர்களை அறிமுகப்படுத்துகிறேன்.

1. சர்பத்: http://sarbath.blogspot.com/
வலைப்பூவின் பெயரே புதுமையாக இருக்கிறதல்லவா. கவிதை, சிறுகதை, நாட்டுநடப்பு என்று கலந்துகட்டி அடித்திருக்கிறார். இவரது தமிழை நம்பி மட்டும் வாழ முடியுமா...? என்ற கட்டுரை கருத்தாழம் மிக்க பதிவு. சந்திரயானும் உள்ளூர் கிழவியும் என்ற பெயரில் எழுதிய சிறிய கட்டுரையும் சர்பத் சுவை. கவிதைகளை சுவைத்துப் பார்த்ததில் சினிமா நாத்திகன் என்ற கவிதை இனித்தது.

2. ஜி.ராஜ்மோகன்: http://grajmohan.blogspot.com/
இலக்கியம், புத்தக வாசிப்பு என்று கொஞ்சம் சீரியஸான சிந்தனையாளர். எனினும் இவரது இடுகைகள் பலதும் தகவல் பெட்டகமாக இருக்கின்றன. பதிவர்கள் எடுக்க வேண்டிய புத்தாண்டு சபதங்கள் பற்றி அட்வைஸ் பண்ணியிருக்கிறார், கொஞ்சம் செவி சாயுங்கள். 1955ம் ஆண்டிலிருந்து இன்றுவரை தமிழில் சாஹித்ய அகாடமி விருது பெற்றவர்கள் பட்டியலையும் திரைத்துறையினரின் இயற்பெயர்களையும் அழகாக தொகுத்திருக்கிறார்.

3. டக்கால்டி: http://dakkalti.blogspot.com/
பெயர்தான் காமெடி மற்றபடி சிந்தனைகள் சீரியஸ். டக்கால்டி என்ற வார்த்தைக்கு நாடக மேடை என்று அர்த்தம் கண்டுபிடித்து நம்மை அற்புதத்தில் ஆழ்த்துகிறார். இருவர் என்ற பெயரில் இயக்குனர் ராதா மோகன் பற்றியும் மறைந்த நடிகர் முரளி பற்றியும் எழுதிய கட்டுரை சூப்பர். ஒருவேளை இந்தியா உலகக்கோப்பையை வென்றால் என்னவாகும் என்று ஜாலியாக கற்பனை செய்திருக்கிறார். சமயங்களில் உலக சினிமா விமர்சனங்களும் எழுதுகிறார்.

4. தலதளபதி: http://thalathalabathi.blogspot.com/
மறக்கக்கூடிய பெயரா இது...? பாஸ் என்கிற பாஸ்கரன் படத்து சந்தானம் கேரக்டர் மூலம் பதிவுலகின் கவனத்தை தன்வசம் ஈர்த்தவர். இவர் அடிக்கடி ஊர் சுத்துவார். (அதாவது நகர்வலம் செல்வார்). அப்படி இவர் சென்ற நகர்வலங்களில் மடிப்பாக்கமும், திருச்சிராப்பள்ளியும் ரொம்ப பிரசித்தம். அவ்வாறு நகர்வலம் செல்லும்போது மடக்கிப்பிடித்த போக்குவரத்து போலீசை இந்தப்பதிவில் வெளுத்து வாங்கியிருக்கிறார் பாருங்கள்.

5. திருப்பூர் சரவணக்குமார்: http://tmsaravanan.blogspot.com/
வித்தியாசமான உணவு வகைகளை சுவைத்துப் பார்ப்பதில் இவருக்கு அலாதிப்பிரியம். ஒருமுறை அதற்காகவே பைக்கில் திருப்பூரிலிருந்து மதுரை வரை 165 கி.மீ பயணம் செய்து மதுரையின் பேமஸ் உணவுவகைகளை சுவைத்துவிட்டு வந்திருக்கிறார். திருமணத்திற்கு அழைப்பிதழ் வைத்த இவரது புதுமையான அனுபவத்தையும் கொஞ்சம் கேளுங்களேன். மேலும், தனது கொச்சி பயண அனுபவத்தை சுவைபட விவரித்திருக்கிறார்.

6. சேலம் தேவா: http://salemdeva.blogspot.com/
முன்னவர் திருப்பூர் என்றால் இவர் சேலம். சேலத்தின் அருமை பெருமைகளை சிலாகித்து எழுதியிருக்கிறார். செல்போன் கண்டுபிடித்த மார்ட்டின் கூப்பரை செல்லமாக கடிந்துக்கொள்கிறார். டை அனதர் டே என்று ஆங்கிலப்பட விமர்சனம் எழுதியிருப்பார் என்று உள்ளே சென்று பார்த்தால் தலைக்கு அடிக்கும் டை பற்றி எழுதி லந்து கொடுக்கிறார். நவீன யுகத்தில் தாய், தந்தைக்கு அடுத்து நமக்கு குருவாக விளங்குவது கூகுள் மட்டுமே என்று விளக்கமளிக்கிறார்.

நகைச்சுவை பதிவுகள் எழுதுவதில் வல்லவர், மாஸ்டர். இந்தியா 2025ல் எப்படி இருக்கும்...?, பில் கேட்ஸ் ரஜினியை வைத்து படமெடுத்தால்...?, பில்லா பாகம் இரண்டை ஜெயா பிக்சர்ஸ் எடுத்தால்...? என்று வகைவகையாக ஆராய்ச்சி செய்திருக்கிறார். மேலும் ஹட்ச் விளம்பரத்தில் சிறுவனின் பின்னாடியே போகும் நாய் உண்மையில் என்ன நினைக்கிறது என்று எப்படி கண்டுபிடித்திருக்கிறார் என்று பாருங்களேன்.

8. நிகழ்வுகள்: http://nekalvukal.blogspot.com/
ஆரம்பத்தில் தொழில்நுட்பம் சார்ந்த இடுகைகளை மட்டும் எழுதி வந்தவர் இப்போது பல்சுவை பக்கம் பாய்ந்திருக்கிறார். கிரிக்கெட் பற்றியும் அவ்வப்போது எழுதிவருகிறார். எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேனே...? என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நிலைமையை குறிப்பிடுகிறார். நம் தாய் மொழி தமிழின் அவல நிலையைப் பற்றி நொந்து கொள்கிறார். கூடவே, அந்த நாட்கள் என் நினைவில் என்று அவரது நினைவுகளை நம்மோடு அசைபோடுகிறார் பாருங்கள்.

9. பொட்டலம்: http://vidivu-carthi.blogspot.com/
ஆரம்பத்தில் விடிவெள்ளி என்றிருந்த தனது வலைப்பூவின் பெயரை பின்னாளில் பொட்டலம் என்று மாற்றிக்கொண்டார். சினிமா மற்றும் சுய அனுபவங்கள் சார்ந்த இடுகைகள் பிரசித்தி. எனக்குப் பிடித்த பாடகர்களுள் ஒருவரான அட்னான் சாமி பற்றி எழுதிய கட்டுரை என்னை அதிகம் கவர்ந்தது. மேலும் அவர் முதல்முறை போலீஸ் நிலையம் சென்ற அனுபவத்தையும் பதிவுலகிற்கு காலடி எடுத்துவைத்த அனுபவத்தையும் கேளுங்களேன். கஞ்சியும் பீரும் சுட்டது எனும் தலைப்பில் ஒரு ஆராய்ச்சியே நடத்தியிருக்கிறார்.

10. மிளகுப்பு: http://pepsalt.blogspot.com/
வலைப்பூவின் பெயர் மட்டும்தான் காரம், மற்றபடி இடுகைகள் முழுக்க முழுக்க நகைச்சுவை மட்டுமே. சிகரெட் பிடிப்பதும், குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதும் நல்லது என்று நமக்கு அறிவுரைக்கிறார். மேலும், காதலிப்பதற்கு ட்ரெயினிங் கொடுக்கிறார். உலகம் அழிந்தால் ஏற்படப்போகும் பின்விளைவுகள், டைட்டானிக்கின் மறைக்கப்பட்ட உண்மை என்று பயங்கரமாக கிச்சுகிச்சு மூட்டுகிறார்.

மீண்டும் நாளை மாலை பத்து முத்துக்களுடன் சந்திக்கிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

36 comments:

  1. இன்று அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. இன்றை அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. என்னையும் என்னுடைய பதிவுகளையும் அறிமுகப்படுதியதற்கு நன்றி உங்கள் ஸ்டைல் நன்றாக உள்ளது

    தொடர்ந்து கலக்குங்கள்

    ReplyDelete
  4. மிக்க நன்றி பிரபா.ஏனைய அறிமுகம்களும் சென்று பார்த்தேன் நன்றாக உள்ளது.

    ReplyDelete
  5. வலைப்பூவை
    நிறைய வாசித்ததால் நிறைவாய் எழுதி இருக்கீங்க.
    நல்ல அறிமுகங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. அனைவருக்கும் வாழ்த்துக்கள் கலக்குங்க பிரபா .........

    ReplyDelete
  7. எல்லாமே நல்ல அறிமுகம் சிலர் புதியவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ................

    ReplyDelete
  8. சர்பத் புதுமை தான்,அறிமுகங்கள் புதுமை

    ReplyDelete
  9. விரிவாக எழுதியிருப்பது பாராட்டுக்குரியது.

    ReplyDelete
  10. அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. அனைவருக்கும் வாழ்த்துக்கள் பகிர்ந்துகொண்ட உங்களுக்கு நன்றிகள் பல.. :)

    ReplyDelete
  12. எல்லோருக்கும் என் வாழ்த்துகள் மக்கா.. இதில் இருக்கும் ஆறேழு பேர் என் பாலோவர்தான். மற்ற நண்பர்களுக்கும் பாலோவர் லிங்க் கொடுத்துருக்கேன் புதிய நண்பர்களே வாருங்கள் கூடி கும்மி அடிப்போம்....

    ReplyDelete
  13. பகிர்வுக்கு நன்றி மற்றும் பதிவகளுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. அருமை பிரபா, உங்கள் அறிமுகம் உண்மையிலேயே பதிவுலகுக்கும்/பதிவர்களுக்கும் உற்சாகம் தரக்கூடியது.. அனுபவம் பேசுகிறது. (எத்தன பேரு இனி வெறி புடிச்சி திரிய போறாய்ங்களோ??)

    ReplyDelete
  15. இன்று அறிமுகப்படுத்தப்பட்டஅனைத்து
    பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. தாமதமாக வந்திருக்கிறேன்

    வாழ்த்துக்கள் தம்பி

    விஜய்

    ReplyDelete
  17. இன்றை அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  18. இடம்பெற்ற மற்றைய பதிவர்களுக்கும் வாழத்துக்கள்!
    என்னயும் ஒரு ஆளா கருதி போட்டதுக்கு மிக்க நன்றிகள் பிலோசபிபிரபாகரன்....

    ReplyDelete
  19. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  20. அனைவருக்கும் வாழ்த்துக்கள். நல்ல அறிமுகம் ..

    ReplyDelete
  21. @ வேடந்தாங்கல் - கருன், # கவிதை வீதி # சௌந்தர், Speed Master, கந்தசாமி., தமிழ் உதயம், தினேஷ்குமார், அஞ்சா சிங்கம், Jaleela Kamal, பார்வையாளன், Pari T Moorthy, மாணவன், MANO நாஞ்சில் மனோ, நா.மணிவண்ணன், வசந்தா நடேசன், Lakshmi, விஜய், T.V.ராதாகிருஷ்ணன், கார்த்தி, பன்னிக்குட்டி ராம்சாமி, மதுரை சரவணன்

    வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தினமும் உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்...

    ReplyDelete
  22. அனைவருக்கும் வாழ்த்துக்கள்! சிலர் புதியவர்கள்! நிச்சயம் பார்க்கிறேன்!

    ReplyDelete
  23. Sorry I am late...
    I went for a vacation trip...
    Thanks for giving the intro...
    Thank u all

    ReplyDelete
  24. வித்யாசமாகத்தான் கொண்டு போய்க்கிட்டு இருக்கீங்க.

    ReplyDelete
  25. நிறைய புது அறிமுகங்கள்.... நன்றி.

    ReplyDelete
  26. அறிமுகத்திற்கு நன்றி பிராபகர்..!! மற்ற புதிய பதிவர்களுக்கு வாழ்த்துகள்..!! :)

    ReplyDelete
  27. அறிமுகங்களுக்கு நன்றி! அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  28. உங்க டெக்னிக் சூப்பர். காலைல டெக்னிக்கல் பதிவு பற்றி அறிமுகம், மாலையில் கமர்ஷியல் பதிவு.. அட புது ரூட்டு

    ReplyDelete
  29. என்னைப்பற்றி அறிமுகப்படுத்தியதற்க்கு
    மிக்க நன்றி.....

    ReplyDelete
  30. உண்மையிலேயே நல்ல அறிமுகங்கள். நன்றி.

    ReplyDelete
  31. அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. அறிமுகப்படுத்தியதற்க்கு மிக்க நன்றி பிலாசபி சார் :)

    ReplyDelete
  33. கடந்த ஒருவார காலமாக எனக்கு வலைச்சரத்தில் ஆதரவளித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்... எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சீனா அய்யா அவர்களுக்கும் நன்றிகள்...

    ReplyDelete
  34. மிளகுப்பை பகிர்ந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. மிக்க நன்றி

    ReplyDelete
  35. அன்புமிக்க பிரபாகரன் என்னை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியதற்க்கு மிக்க நன்றி . வேலைப்பளுவின்
    காரணமாக புதிய இடுக்கைகள் எதுவும் இட முடியவில்லை. உங்கள் வலைப்பக்கமும்
    வரமுடியவில்லை " கொஞ்சம் சீரியஸான சிந்தனையாளர்."
    இதெல்லாம் கொஞ்சம் ஓவர்ங்க இனி காமடியும் பண்ணுவோம் ! உங்கள் பதிவு என்னை உற்சாகப்படுத்திகிறது .
    மீண்டும் நன்றிகள் !

    ReplyDelete