Sunday, February 13, 2011

நல்வாழ்த்துகள் மாணவன் - வருக ! வருக ! ரஹீம் கஸாலி

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடம் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் மாணவன், ஏற்ற பொறுப்பினை நிறைவாகச் செய்து, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் ஒரு வார காலத்தில் ஏழு இடுகைகள் இட்டு, ஐம்பத்து மூன்று இடுகைகள் அறிமுகப்படுத்தி, ஏறத்தாழ அறுநூறுக்கும் மேலாக மறுமொழிகள் பெற்றிருக்கிறார். ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக ஒரு பொன்மொழியினையும் வெளியிட்டிருக்கிறார்.

நண்பர் மாணவனை, சென்று வருக - நல்வாழ்த்துகள் என நன்றியுடன் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்.

அடுத்து நாளை துவங்கும் வாரத்திற்கு, ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் நன்பர் ரஹீம் கஸாலி. இவர் அரசர்குளத்தான் என்னும் பதிவிலும், வலைஞன் என்னும் பதிவினிலும் எழுதி வருகிறார். இவர் தனது பெயரான கஸாலியுடன் தந்தையின் பெயரான ரஹீமையும் சேர்த்து ரஹீம் கஸாலி என்ற பெயரில் எழுதி வருகிறார். புதுக்கோட்டையச் சார்ந்த அரசர்குளம் என்ற ஊரினைச் சேர்ந்தவராதலால் அரசர்குளத்தான் எனப் பதிவிற்குப் பெயர் வைத்திருக்கிறார். மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் பணி புரிகிறார். இப்பொழுது தாயகம் வந்திருக்கிறார். நண்பர் ரஹீம் கஸாலியினை வருக ! வருக ! அறிமுகங்களை அள்ளித் தருக என வரவேற்று நல்வாழ்த்துகள் கூறுகிறேன்.

நல்வாழ்த்துகள் மாணவண்
நல்வாழ்த்துகள் ரஹீம் கஸாலி
நட்புடன் சீனா

20 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. வலைச்சரம் ஆசிரியர் பணியை செவ்வனே நிகழ்த்த உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் கஸாலி ( மொத்தம் 3 ம் ம் )

    ReplyDelete
  3. cheena (சீனா) said...
    சோதனை மறுமொழி
    நன்றி சீன அய்யா....

    ReplyDelete
  4. சி.பி.செந்தில்குமார் said...

    வாழ்த்துக்கள்
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணே....

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. மாணவனுக்கு பாராட்டும்,
    ரஹீமுக்கு வாழ்த்துக்களும்..
    ஸ்ரீ மாதவன்

    ReplyDelete
  7. Madhavan Srinivasagopalan said...

    மாணவனுக்கு பாராட்டும்,
    ரஹீமுக்கு வாழ்த்துக்களும்..
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சார்

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. எல் கே said...

    வாழ்த்துக்கள்நன்றி சார்

    ReplyDelete
  10. வருக ,வாழ்த்துக்கள் நண்பரே

    அன்புடன்,
    கோவை சக்தி

    ReplyDelete
  11. வாங்க அப்பு!


    கலக்குங்க...............
    சீனா ஆயா! சாரி ஐயா!

    சிறந்த எழுத்தாளர்களை தெரிவு செய்வதற்கு நன்றி(இந்த கமண்ட போட எத்தனை காலம் காத்திருந்தேன். கஸாலி! அழப்படாது!)

    ReplyDelete
  12. // மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் பணி புரிகிறார். இப்பொழுது தாயகம் வந்திருக்கிறார். //

    அமீரகம் இல்லையோ... தாயகம் திரும்பியது பற்றி சொல்லவே இல்லை...

    ReplyDelete
  13. சீனா ஐயாவுக்கும், வலைச்சர குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.. :))

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் கஸாலி நண்பரே,

    இந்தவாரம் வலைச்சரத்தில் உங்கள் பணி சிறக்க மீண்டும் எனது நல்வாழ்த்துக்கள்

    தொடர்ந்து கலக்குங்க :))

    ReplyDelete
  15. sakthi said...

    வருக ,வாழ்த்துக்கள் நண்பரே

    அன்புடன்,
    கோவை சக்தி
    நன்றி சார்

    ReplyDelete
  16. asiya omar said...

    வாழ்த்துக்கள்.
    நன்றி சகோதரி

    ReplyDelete
  17. வெளங்காதவன் said...

    வாங்க அப்பு!


    கலக்குங்க...............
    சீனா ஆயா! சாரி ஐயா!

    சிறந்த எழுத்தாளர்களை தெரிவு செய்வதற்கு நன்றி(இந்த கமண்ட போட எத்தனை காலம் காத்திருந்தேன். கஸாலி! அழப்படாது!)
    உங்க கமாண்ட படிச்சதும் கண்ணுல ஆனந்த கண்ணீரே வந்துடுச்சு

    ReplyDelete
  18. Philosophy Prabhakaran said...
    அமீரகம் இல்லையோ... தாயகம் திரும்பியது பற்றி சொல்லவே இல்லை...
    அமீரகம் இல்லை நண்பரே....நான் இப்போது ஊரில்தான் இருக்கிறேன்

    ReplyDelete
  19. மாணவன் said...

    வாழ்த்துக்கள் கஸாலி நண்பரே,

    இந்தவாரம் வலைச்சரத்தில் உங்கள் பணி சிறக்க மீண்டும் எனது நல்வாழ்த்துக்கள்

    தொடர்ந்து கலக்குங்க :))
    நன்றி நண்பரே....

    ReplyDelete