ஹாய் நண்பர்களே!
நான்தான் உங்கள் ஓட்ட வட நாராயணன்! ' மாத்தி மாத்தி யோசிச்சு ' கடைசியில் இங்கு வந்து சேர்ந்துவிட்டேன்! எனக்கு இந்த நல்ல வாய்ப்பினை தந்த, சீனா ஐயா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!!
அதோ பை சொல்லிவிட்டு போய்க்கிட்டு இருக்காங்களே ஆனந்தி! அவங்களுக்கும் நன்றி!!
நண்பர்களே! இன்னிக்கு முதலாவது நாள்! வலைச்சர விதிகளின் படி, இன்னிக்கு நான் என்னை அறிமுகப்படுத்தணும்! ஆனா, நான் மாத்தியோசிச்சு, ஐயாகிட்ட பர்மிசன் வாங்கியிருக்கேன்! - என்னைப் பற்றி எதுவுமே எழுதுறதில்லை என்று!!
சரி, வாங்க பதிவுக்குள்ள போவோம்!
ஆச்சரியம், வியப்பு இவையெல்லாம் அழகான உணர்வுகள்! ஆச்சரியப்படுவதும் இன்பம், ஆச்சரியப்படுத்துவதும் இன்பம்!! - இந்தவாரம்முழுக்க என்னை வியக்கவைத்த, ஆச்சரியப்பட வைத்த பதிவுகளை வலைச்சரம் சுமந்து வரும்!!
குறிப்பு : எல்லாப் பதிவுகளுக்கும் சினிமாப்பாடல்களில் இருந்தே தலைப்புக்களை எடுத்திருக்கேன்! - வித்தியாசமா இருக்கட்டுமேன்னு தான்!!
இதோ ஆச்சரியங்கள் - ஆரம்பம்!!!
தலைப்பு : பண்டைய தமிழரின் கணித அளவைக் கூறுகள்!
பதிவர் : தர்மா
*** கணிதத்திலுள்ள அளவுகளுக்கான தமிழ் பெயர்கள் தந்து அசத்தியிருக்கிறார்! கண்டிப்பாக ஆச்சரியப்படுவீர்கள்!!
தலைப்பு : மாயத் தோற்றங்கள் ( கவனம் )
பதிவர் : கவினன்
*** " கண்ணால் காண்பதும் பொய்...." என்று சொல்வது போல, உங்கள் கண்களையே உங்களால் நம்ப முடியாத அளவுக்கு அதிசய புகைப்படங்களை அள்ளித் தந்திருக்கிறார்!
தலைப்பு : ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்!
*** இங்கும் அழகிய போட்டோக்கள் கொட்டிக்கிடக்கின்றன! கண்டு ரசியுங்கள்!
தலைப்பு : பாரிஸ் ஒரு இனிய நகரம்
பதிவர் : மணி
*** கலைநகரம் பாரீசில் உள்ள முக்கிய இடங்களின் புகைப்படங்கள் உங்களை ஆச்சரியப்படுத்தும்! குறிப்பாக நெப்போலியன் அரண்மனை, ஒபேரா அரங்கம் உங்களை மயக்கிவிடும்!!
தலைப்பு : காதலித்துப் பார்
பதிவர் : அனாமிகா துவாரகன்
*** வைரமுத்துவின் ' காதலித்துப் பார் ' ஐ உல்டாவாக்கி, கம்பியூட்டர் வார்த்தைகள் சேர்த்து ரசிக்க வைக்கிறார்! மின்னஞ்சலில் வந்த கவிதை என்று பதிவர் குறிப்பிட்டுள்ளார்!
தலைப்பு : எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!
பதிவர் : கூல் கார்த்தி
*** இச்சுட்டியில் கிடைக்கும் படங்கள் உங்களை கண்டிப்பாக சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும்! அருமையான கிரியேட்டிவிட்டி!
தலைப்பு : நாய்ப்பறவை
பதிவர் : கமர்தீன்
*** நாய் தெரியும், பறவை தெரியும்! அதென்ன நாய்ப்பறவை? ஹி...... ஹி......ஹி...... கிளிக் பண்ணுங்க! ஆச்சரியம் காத்திருக்கிறது!!
தலைப்பு : ரோம் பயணக்கட்டுரை
பதிவர் : சித்திரன்
சுட்டி
*** பெருமைமிக்க இத்தாலியின் ரோம் நகருக்கு சென்று வந்த அனுபவங்களை எழுத்தில் வடித்து, எம்மையெல்லாம் ரோமுக்கே அழைத்துச் செல்கிறார் பதிவர்! வாருங்களேன் ரோமுக்குப் போய் வருவோம்!
*** பெருமைமிக்க இத்தாலியின் ரோம் நகருக்கு சென்று வந்த அனுபவங்களை எழுத்தில் வடித்து, எம்மையெல்லாம் ரோமுக்கே அழைத்துச் செல்கிறார் பதிவர்! வாருங்களேன் ரோமுக்குப் போய் வருவோம்!
தலைப்பு : காணக்கண் கோடி வேண்டும்! அழகு ஓவியங்கள்!!
பதிவர் : அபுல் பசார்
*** இங்கும் ஓவியப் படையல்தான்! அழகிய ஓவியங்களின் அணிவகுப்பு!! உண்மையில் காணக்கண் கோடி வேண்டும்தான்!!
தலைப்பு : விசித்திர விலங்கினங்கள்
பதிவர் : DR .சாரதி
*** விசித்திரமான விலங்குகளைக் காட்டும் வீடியோக்களைப் போட்டுள்ளார்! ஒவ்வொன்றுக்கும் சுவையான தலைப்புக்கள் கொடுத்திருப்பது ஹைலைட்! அந்த குடை பிடிக்கும் பறவை டாப் கிளாஸ்!!
தலைப்பு : எக்ஸ்கியூஸ் மீ ஒரு கப் காப்பி சாப்பிடலாமா?
பதிவர்: யுவகிருஷ்ணா
*** அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு மலை முகடு பற்றி, அவ்வளவு சுவாரசியமாக இவர்தரும் குறிப்புக்கள் வியக்க வைக்கின்றன!!
தலைப்பு : இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள்
பதிவர் : வசந்த்
*** தேவையான புகைப்படங்களோடு, இன்றைய இளைஞர்களின் கனவுகளை, பட்டியல் போட்டு, வியக்க வைத்திருக்கிறார்!! ஒன்பதாவதாக அவர் சொல்லியிருக்கும் கனவு, அவ்வ்வ்வ்!!
தலைப்பு : ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வசிக்கும் பிச்சைக்காரன்
பதிவர்; சந்துரு
சுட்டி
*** விஷயம் என்ன என்பதை தலைப்பே சொல்லிவிட்டது! படிச்சுப் பாருங்க! ' கலிகாலம்டா சாமீ ' என்பீர்கள்!
*** விஷயம் என்ன என்பதை தலைப்பே சொல்லிவிட்டது! படிச்சுப் பாருங்க! ' கலிகாலம்டா சாமீ ' என்பீர்கள்!
தலைப்பு : வலையுலகில் நானும் ஒரு ரெடிதாங்க.... நம்புங்க!
பதிவர்: ஜல்லி
*** அருமையான ஒரு காமெடி பதிவர்! இப்பவெல்லாம் எழுதுவதில்லை போல! தன்னைத் தானே பேட்டி எடுத்துப் போட்டிருக்கிறார்! இவரோட ப்ளாக் க படிக்காம சும்மா பார்த்துக்கிட்டு இருந்தாலே சிரிப்பு தன்னால வரும்!!
தலைப்பு : பாராளுமன்ற உறுப்பினர்களின் செலவு!
பதிவர் : ஸ்ரீ
*** நம்ம கிட்ட ஒட்டு வாங்கி ஜெயிச்சு பார்லிமென்ட் போனவுங்க என்ன பண்ணுறாங்க, எவ்வளவு சம்பாதிக்கிறாங்க? அறிஞ்சுக்கணுமா! கிளிக் பண்ணுங்க!!
தலைப்பு : பறவைகள் - விந்தைகள்!
பதிவர் : கே.கே.லோகநாதன்
*** சில பறவைகள் பற்றி சுவையான தகவல்கள் சொல்கிறார்! வியப்பாத்தான் இருக்கு!!
தலைப்பு : மிகவும் விஷமுள்ள பாம்புகளும் விஷமற்றவைகளும்!
பதிவர் : பெயரைக் காணவில்லை
*** ஐயோஓஒ ஓ....... பார்க்கவே பயமா இருக்கு! இவ்வளவு கொடிய பாம்புகளை, பெரிய சைஸ் போட்டோவா போட்டிருக்காரு! வித் வீடியோ!!
தலைப்பு : இந்தியா வல்லரசாக நாம் என்ன செய்யவேண்டும்?
பதிவர் : பத்மஹரி
*** இந்தியாவை வல்லரசாக்கணும் னா என்ன பண்ணனும் னு ஐடியா தந்து, யோசிக்கவைக்கிறார்!! அருமையா எழுதியிருக்காரு!!
தலைப்பு : ஜாலி கம்பியூட்டர் - ராசிபலன்
பதிவர் : நீச்சல்காரன்
சுட்டி
*** மிக மிக ரசிச்சு படிச்ச ஒரு பதிவு இது! சோதிடத்த புதுவிதமா, கம்பியூட்டரிசம் கலந்து சொல்லியிருக்கார்! கண்டிப்பா உங்களுக்குப்புடிக்கும்க!!
*** மிக மிக ரசிச்சு படிச்ச ஒரு பதிவு இது! சோதிடத்த புதுவிதமா, கம்பியூட்டரிசம் கலந்து சொல்லியிருக்கார்! கண்டிப்பா உங்களுக்குப்புடிக்கும்க!!
தலைப்பு : இவை இந்தியாவில் மட்டுமே சாத்தியம்
பதிவர் : அரைக்கிறுக்கன்
சுட்டி
*** எவை? என்கிறீர்களா? அங்க போய் பாருங்க! மனுஷன் கொலையா கொன்னுருக்கார்! பார்க்கும் போது சிரிப்பு வந்தாலும், நம்ம இந்தியா இப்படி இருக்கே னு உங்களுக்கு கொஞ்சம் கோபமும் வரலாம்!!
அப்புறம், பதிவர் அரைக்கிறுக்கன், ப்ளாக் டைட்டிலுக்கு கீழ ஒரு வாக்கியம் போட்டிருக்காரு! நான் ரொம்ப ரொம்ப ரசிச்சு படிச்சேன்! அது உங்களையும் சிரிக்க வைக்கும்!!
*** எவை? என்கிறீர்களா? அங்க போய் பாருங்க! மனுஷன் கொலையா கொன்னுருக்கார்! பார்க்கும் போது சிரிப்பு வந்தாலும், நம்ம இந்தியா இப்படி இருக்கே னு உங்களுக்கு கொஞ்சம் கோபமும் வரலாம்!!
அப்புறம், பதிவர் அரைக்கிறுக்கன், ப்ளாக் டைட்டிலுக்கு கீழ ஒரு வாக்கியம் போட்டிருக்காரு! நான் ரொம்ப ரொம்ப ரசிச்சு படிச்சேன்! அது உங்களையும் சிரிக்க வைக்கும்!!
தலைப்பு : முன்னணி நாயகர்களின் நகைச்சுவை அனிமேசன்கள்!
பதிவர் : குகன்
சுட்டி
*** உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு, இந்த சுட்டியை கிளிக்கி, வரும் வீடியோக்களைக் காட்டுங்கள்! உங்கள் செல்வங்களின் முகங்களில் புன்னகை + உங்களுக்கும்தான்!!
சரி நண்பர்களே! மீண்டும் நாளை சந்திப்போமா?
.
*** உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு, இந்த சுட்டியை கிளிக்கி, வரும் வீடியோக்களைக் காட்டுங்கள்! உங்கள் செல்வங்களின் முகங்களில் புன்னகை + உங்களுக்கும்தான்!!
சரி நண்பர்களே! மீண்டும் நாளை சந்திப்போமா?
.
என்ன இது என்ன இது என்னைக் கொல்வது?//
ReplyDeleteஏன் இராவில் ஏதும் பேய்க் கனவு கண்டதாக ஐதீகமோ?
This comment has been removed by the author.
ReplyDeleteஆஹா...ஆஹா..இனி எத்தனை பேரின் தலை வலைச் சரத்தில் உருட்டப் படப் போகுதோ தெரியவில்லை
ReplyDeleteஹி...ஹி....
எல்லாப் பதிவுகளுக்கும் சினிமாப்பாடல்களில் இருந்தே தலைப்புக்களை எடுத்திருக்கேன்! - வித்தியாசமா இருக்கட்டுமேன்னு தான்!!//
ReplyDeleteஆஹா...ஓஹோ....
இனிமே ஒரே காமெடி தான்...
ஒரு நாளில்...ஏகப்பட்ட...பதிவர்களின் அறிமுகங்கள். கலக்கல் சகோ.
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோ.
தொடர்ந்தும் ஜமாயுங்கோ.
கலக்கல் நண்பா..
ReplyDelete>>என்னைப் பற்றி எதுவுமே எழுதுறதில்லை என்று!!
ReplyDeleteஎன் மென்மையான கண்டனங்கள் ஹி ஹி
என்ன இது என்ன இது என்னைக் கொல்வது?//
ReplyDeleteஏன் இராவில் ஏதும் பேய்க் கனவு கண்டதாக ஐதீகமோ?///
ஒரு வித்தியாசத்துக்கு அப்படி போட்டேன்! அவ்வவ்!!!
ஆஹா...ஆஹா..இனி எத்தனை பேரின் தலை வலைச் சரத்தில் உருட்டப் படப் போகுதோ தெரியவில்லை
ReplyDeleteஹி...ஹி....///
தலை உருளாது! அவர்களின் url தான் உருளும்!!
எல்லாப் பதிவுகளுக்கும் சினிமாப்பாடல்களில் இருந்தே தலைப்புக்களை எடுத்திருக்கேன்! - வித்தியாசமா இருக்கட்டுமேன்னு தான்!!//
ReplyDeleteஆஹா...ஓஹோ....
இனிமே ஒரே காமெடி தான்...///
இல்லைன்னா யாராவது ரசிப்பார்களா?
ஒரு நாளில்...ஏகப்பட்ட...பதிவர்களின் அறிமுகங்கள். கலக்கல் சகோ.
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோ.
தொடர்ந்தும் ஜமாயுங்கோ.
April 25, 2011 5:49:00 AM GMT+05:30/////
இன்னும் நிறையப் பேர் இருக்கிறார்கள்! தேடத் தேட வந்துகொண்டிருக்கிறார்கள்!!
>>என்னைப் பற்றி எதுவுமே எழுதுறதில்லை என்று!!
ReplyDeleteஎன் மென்மையான கண்டனங்கள் ஹி ஹி////
நெய் இல்லாமல் நெய்த் தோசையா? சி பி இல்லாமல் வலைப்பதிவா?
நான் உங்களை சொன்னேன்.. திருப்பிப்போடறீங்களே?
ReplyDeleteநான் உங்களை சொன்னேன்.. திருப்பிப்போடறீங்களே?//////
ReplyDeleteஓ அதுவா? என்னைப் பற்றி சொல்ல என்ன இருக்கு? அதான் விட்டுட்டேன்!!
வாழ்த்துக்கள் சகோ...நல்லா கொண்டு நடத்துங்க!!
ReplyDeleteவாழ்த்துக்கள் நாராயணன். பொதுவாய் முதல் பதிவு அனைவரும் தங்கள் படைப்பை அறிமுகபடுதுவார்கள். நீங்கள் வித்யாசப்படுகிறீர்கள்.
ReplyDeleteவாங்க சார் வந்து கலக்குங்க...!!
ReplyDeleteஓய்...ராஜீவ்:)) ஆரம்பமே கலக்கல்....சூப்பர் ஆ பண்ணுவிங்க...கீப் ராக்கிங்..:)))
ReplyDeleteஒரு வாரம் எழுதச் சொன்னா.. ஒரே நாளுல எழுதிட்டாரே (Many Introduction).. !!
ReplyDeleteசார் லீவுல போறாரோ என்னவோ..?
Best wishes! :-)
ReplyDeleteஉண்மைலேயே மாத்தி ரோசிச்சிருக்கீங்க ! ரொம்ப நல்லா இருக்கு :-)
ReplyDeleteஒவ்வொருத்தரோட அறிமுகமும் அங்க போய் பார்க்கத் தூண்டுகிறது!
nice
ReplyDeleteவலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்கள் அறிமுகத்தில் நான் வருவது எப்போது நண்பியே
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோ...நல்லா கொண்டு நடத்துங்க!!
ReplyDeleteநன்றி சிவா! முடிந்தவரை முயல்கிறேன்!
வாழ்த்துக்கள் நாராயணன். பொதுவாய் முதல் பதிவு அனைவரும் தங்கள் படைப்பை அறிமுகபடுதுவார்கள். நீங்கள் வித்யாசப்படுகிறீர்கள்./////
ReplyDeleteநன்றி மோகன் சார்!! ஒரு வித்தியாசமா இருக்கட்டுமே என்றுதான் அப்படிப் போட்டேன்!!
வாங்க சார் வந்து கலக்குங்க...!!
ReplyDeleteநன்றி சௌந்தர்!
ஓய்...ராஜீவ்:)) ஆரம்பமே கலக்கல்....சூப்பர் ஆ பண்ணுவிங்க...கீப் ராக்கிங்..:)))
ReplyDeleteநன்றி ஆனந்தி! இன்னிக்கு நான் பகிர்ந்திருக்கும் தளங்களை உங்க சன்னுக்கும் காட்டுங்க! குழந்தைகளைக் கவரும் அழகான விஷயங்கள் நிறையருக்கு!!
ஒரு வாரம் எழுதச் சொன்னா.. ஒரே நாளுல எழுதிட்டாரே (Many Introduction).. !!
ReplyDeleteசார் லீவுல போறாரோ என்னவோ..?////
ஆஹா லீவுல போகத்தான் ஆசை! என்ன பண்ணுறது ?
( இல்லீங்க, நிறையப் பேரோட நல்ல பதிவுகளைப் படிச்சேன் ! அதுதான் கொஞ்சம் அதிகமா பகிர்ர்ந்துக்கிட்டேன் )
ஏகப்பட்ட அறிமுகங்கள். பயணம் வெற்றிகரமாக தொடரட்டும்.
ReplyDeleteBest wishes! :-)
ReplyDeletethanks madam
உண்மைலேயே மாத்தி ரோசிச்சிருக்கீங்க ! ரொம்ப நல்லா இருக்கு :-)
ReplyDeleteஒவ்வொருத்தரோட அறிமுகமும் அங்க போய் பார்க்கத் தூண்டுகிறது!
தேங்க்ஸ் செல்வா! நம்ம எல்லோருடைய ரசனையும் ஒண்ணுதானே!! அதுதான் உங்களுக்குப் புடிச்சிருக்கு இல்ல?
nice
ReplyDeleteஎன்ன ரமேஷ் இவ்வளவு ஷார்ட்டா முடிச்சிட்டீங்க! சிங்கப்பூர் ல பிசி போல!
வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ரேவா!
உங்கள் அறிமுகத்தில் நான் வருவது எப்போது நண்பியே
ReplyDeleteஎன்னது நண்பியா? சார், நான் நண்பன்! அவ்வ்வ்வவ்!!
இனி ஒரு வாரம் ஒரே சிக்சர்கள் மலை பொழியும் அடித்து ஆடுங்க நண்பா
ReplyDeleteவாழ்த்துக்கள் நாராயணன் ........
ReplyDeleteநண்பருக்கு வணக்கம் தங்களின் ஆசிரியர் பணி சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் . புதுமையான முறையில் பதிவர்களின் அறிமுகம் சிறப்பு . தங்களின் அடுத்தப் பதிவிற்காக காத்திருக்கிறேன் . தொடரட்டும் தங்களின் சேவை .
ReplyDeleteஓட்டை வடை நீ இங்க வந்திட்டியா..
ReplyDeleteஒழுங்க வேலையை பாரு ஏதாவது எடக்கு மடக்கு பண்ண அவ்வளவுதான்..
சீனா ஐயா கிட்டே சொல்லிபுடுவேன்..
ஒரே நாளில் இவ்வளவு அறிமுகங்களா..
ReplyDeleteஇதை இரு பதிவாக தந்திருந்தாள் நன்றாக இருந்திருக்கும்..
வலைச்சரத்தில் தங்களின் பணி சிறக்க கவிதை வீதியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
ReplyDeleteஇன்று அறிமுகமாகியுள்ள அனைத்து பதிவர்கள்க்கும் என்னுடைய வாழ்த்துக்கள்..
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஎல்லாமே எனக்கு புது முகமா இருக்கு ஓகே, எல்லாருக்கும் என் வாழ்த்துகள்...
ReplyDeleteயோவ் ஓட்டைவடை அசத்திபுட்டேய்யா....
//என்னைப் பற்றி எதுவுமே எழுதுறதில்லை என்று!!//
ReplyDeleteஓ அப்பிடியா...தப்பிச்சோம்....
வாழ்த்துக்கள்///
ReplyDeleteநன்றி மணிவண்ணன்
இனி ஒரு வாரம் ஒரே சிக்சர்கள் மலை பொழியும் அடித்து ஆடுங்க நண்பா///
ReplyDeleteநன்றி சசி! உங்கள் ஆசை நிறைவேறும் !!
வாழ்த்துக்கள் நாராயணன் ........
ReplyDeleteநன்றி கந்தசாமி அண்ணே!
அருமை நண்பரே! மிக அருமை. இன்னும் எத்தனை பேர் தலை உருளப்போகுதோ! இன்றைய அறிமுகங்கள் சூப்பர்.///
ReplyDeleteஹா... ஹா .... நன்றி நண்பரே! நிறையப் பேரை அறிமுகப்படுத்துவதுதான் எனது நோக்கம்! பார்க்கலாம்!!
வலைசர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.வழக்கம்போல் வசீகரிக்கட்டும் உங்கள் பாணி.///
ReplyDeleteநன்றி உங்கள் எண்ணம் ஈடேறும்!!
நண்பருக்கு வணக்கம் தங்களின் ஆசிரியர் பணி சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் . புதுமையான முறையில் பதிவர்களின் அறிமுகம் சிறப்பு . தங்களின் அடுத்தப் பதிவிற்காக காத்திருக்கிறேன் . தொடரட்டும் தங்களின் சேவை .///
ReplyDeleteநன்றி ஷங்கர்! உங்களைப் போன்ற சீனியர் பதிவர்களின் ஆசீர்வாதம் எனக்கு மிகப்பெரிய பக்க பலம்!!
நல்ல அறிமுகங்கள்....வாழ்த்துக்கள் ஓட்ட வடை..
ReplyDeleteஓட்டை வடை நீ இங்க வந்திட்டியா..
ReplyDeleteஒழுங்க வேலையை பாரு ஏதாவது எடக்கு மடக்கு பண்ண அவ்வளவுதான்..
சீனா ஐயா கிட்டே சொல்லிபுடுவேன்..///
ஆங்! போட்டுக்குடுக்கிறதிலேயே குறியா இரு! என்னோட எல்லா குறும்புகளையும் மூட்டை கட்டி வச்சுட்டுத்தான் இங்க வந்திருக்கேன்! ஹா..... ஹா..... நான் இப்போ ரொம்ப நல்லவன்!!
ஒரே நாளில் இவ்வளவு அறிமுகங்களா..
ReplyDeleteஇதை இரு பதிவாக தந்திருந்தாள் நன்றாக இருந்திருக்கும்..//
அப்படியா? ம்... எனக்கேன் அப்படித் தோன்றவில்லை ?
வலைச்சரத்தில் தங்களின் பணி சிறக்க கவிதை வீதியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்..///
ReplyDeleteநன்றி கவிஞரே! உங்கள் வாழ்த்து பலிக்கட்டும்!!
இன்று அறிமுகமாகியுள்ள அனைத்து பதிவர்கள்க்கும் என்னுடைய வாழ்த்துக்கள்..//
ReplyDeleteஓகே ! அவர்கள் சார்பாக நன்றிகள்!!
நல்ல அறிமுகங்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி அண்ணே!!
எல்லாமே எனக்கு புது முகமா இருக்கு ஓகே, எல்லாருக்கும் என் வாழ்த்துகள்...
ReplyDeleteயோவ் ஓட்டைவடை அசத்திபுட்டேய்யா....//
நன்றி வலையுலக சுனாமி அவர்களே!!
//என்னைப் பற்றி எதுவுமே எழுதுறதில்லை என்று!!//
ReplyDeleteஓ அப்பிடியா...தப்பிச்சோம்....//
யோவ்! லொள்ளப் பாரு!!
நல்ல அறிமுகங்கள்....வாழ்த்துக்கள் ஓட்ட வடை..//
ReplyDeleteவாங்க பிரகாஷ்! உங்க வாழ்த்துக்கு நன்றி! உங்களைப் போல அனிமேஷன் எல்லாம் செய்யத்தெரியாது! ஏதோ சமாளிச்சிருக்கேன்!!
வலையில் வழிக்கிவிழும் நண்பர்கள் எத்தனையோ!வாழ்த்துக்கள் நண்பா!
ReplyDeleteவடையண்ணா...நான் எப்பவும் பிந்தித்தான்.அதுவும் நல்லது.
ReplyDeleteஎனக்குப் பிடிச்ச பாட்டோட
தொடங்கியிருக்கீங்க.உங்கட ஸ்டைலில ஸ்டார்ட் மியூசிக்.
கொஞ்சம் சொல்லியிருக்கலாம் உங்களைப் பற்றியும் !
வலையில் வழிக்கிவிழும் நண்பர்கள் எத்தனையோ!வாழ்த்துக்கள் நண்பா!
ReplyDeleteநன்றி நேசன்! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!
வடையண்ணா...நான் எப்பவும் பிந்தித்தான்.அதுவும் நல்லது.
ReplyDeleteஎனக்குப் பிடிச்ச பாட்டோட
தொடங்கியிருக்கீங்க.உங்கட ஸ்டைலில ஸ்டார்ட் மியூசிக்.
கொஞ்சம் சொல்லியிருக்கலாம் உங்களைப் பற்றியும் !///
வாங்க ஹேமா! இது உங்களுக்குப் பிடிச்ச பாட்டா? நல்லது! என்னைப் பற்றி சொல்ல எதுவுமே இல்லை!! அதனால் சொல்லவில்லை!!
வாழ்த்துக்கள் பட்டய கிளப்புங்கள் ............
ReplyDeletesuper!! continue...
ReplyDeleteபிந்தி வந்தது மிக்க அவமானமான விடயமே... சே ..
ReplyDelete