வணக்கம் நண்பர்களே! இன்று இரண்டாம் நாள்! இன்று நான் அறிமுகப்படுத்தும் பதிவர்கள் / பதிவுகள் பற்றி தனித்தனியே அறிமுகப்படுத்த விரும்பவில்லை! அனைவருக்கும் பொதுவான அறிமுகத்தை கீழே தருகிறேன்!
வலையுலக விஞ்ஞானிகள்!
" ஒரு விஞ்ஞானி வாழ்நாளில், தனது மூளையின் பத்து சதவீதத்தை மட்டுமே பயன்படுத்துகிறார் " என்று எங்கோ படித்த ஞாபகம்! ஒரு விஞ்ஞானியே அவ்வளவு தான் எனும் போது, நாமெல்லாம் எங்கே மூளையை முழுசாக பயன்படுத்தப் போகிறோம்?
எனக்கு மூளையை உச்சமாக பயன்படுத்துபவர்களை மிகவும் பிடிக்கும்! மூளையை கசக்கி பிழிந்து, அப்படி இப்படியெல்லாம் மாத்தி மாத்தி யோசித்து, புதுசு புதுசா ஏதாவது சொல்பவர்களை அவ்வளவு பிடிக்கும்! இவர்கள்தான் நல்ல கிரியேட்டிவிட்டி உள்ளவர்கள்! நல்ல நல்ல கிரியேட்டிவிட்டியால்தான் உலகமே கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது!
எமது வலையுலகிலும் இப்படியான மூளையை கசக்கிப் பிழிபவர்கள் இருக்கிறார்கள்! இவர்களை நான் ரொம்ப ரொம்ப நேசிக்கிறேன்! அப்படியான சில வலையுலக விஞ்ஞானிகள் சிலரது ஐடியாக்களை படித்து மகிழுங்கள்!!
பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள் !
பதிவர் : டிலீப்
ஆவியுடன் பேசுவது எப்படி?
பதிவர் : சில நண்பர்கள் சேர்ந்து எழுதுகிறார்கள்
10 ரூபாயில் ரிமோட் தயாரிப்பது எப்படி?
பதிவர் : தேசாந்திரி பழமை விரும்பி
காதலியிடம் நல்ல பேர் எடுப்பது எப்படி?
பதிவர் : அன்புராஜா
திரைவிமர்சனம் எழுதுவது எப்படி?
பதிவர் : பாலா
வலைப்பதிவருக்கு ஒரு பாஸ் இருந்தால்?
பதிவர் : ஐந்து நண்பர்கள் சேர்ந்து எழுதுகிறார்கள்
பதிவர்கள் சிந்தனை
பதிவர் : அனன்யா மகாதேவன்
நெத்தியடி பதிவு
பதிவர் : விசா
பதிவர்களைப் பற்றி படம் எடுத்தால்....!
பதிவர்: நசரேயன்
எளிதாக பதிவு எழுத சில ஐடியாக்கள்
பதிவர் : ரகுநாதன்
தற்கொலை செய்வதற்கான ஐடியாக்கள்
பதிவர் : மஸ்தான் ஒலி
பிரபல பதிவராவது எப்படி ? - சில ஐடியாக்கள்!
பதிவர் : அதிரடிக்காரன்
ஆம்லெட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி?
பதிவர்: யோகானந்தன் கணேஷன்
எப்படியெல்லாம் கவிதை எழுதுறாய்ங்கப்பா
பதிவர் : கும்மாச்சி
10,000 ஹிட்ஸ் வர்ற மாதிரி எனக்கும் பதிவு எழுத தெரியும்!
பதிவர் : வெங்கட் சரண்
கைரேகை பார்ப்பது எப்படி?
பதிவர் : பெசொவி
குறிப்பு : இந்தப் பட்டியலில் சில பிரபல பதிவர்களும் வந்திருக்க வேண்டும்! ஆனால் அவர்களுக்கு வேறொரு, விஷயம் வைத்திருக்கிறேன்!
நண்பர்களே! மீண்டும் நாளை சந்திப்போம்
.
பரவா இல்லையே - விஞ்ஞானிகளைத் தேடிப் பிடிச்சுப் போட்டிட்ருக்கீங்க - நல்ல முயற்சி -நல்வாழ்த்துகள்
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களும் கலக்கல்..
ReplyDeleteவாழ்த்துக்கள் ஓட்டைவடை...
இன்றை அறிமுகமான பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்..
ReplyDeleteஅப்பாடி....கொஞ்சம் வேளைக்கு இடம் கிடைச்சிட்டுது இண்டைக்கு !
ReplyDeleteபாம்பின் கால் பாம்பறியும்.
சிலபேர்களைத் தவிர புதியவர்கள் சிலர்.எல்லாருமே மாத்தி யோசிப்பினம்போல !
அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநண்பா.. இது புதுமையான அறிமுகம்.. அதே போல் டைட்டில் செம கலக்கல்
ReplyDelete//FOOD said...
ReplyDeleteவிஞ்ஞானம் இன்றி விடியல்கள் இல்லை. விதைகளை தூவியுள்ளீர்கள். விருட்சமாகும்.//
ஆபீசர் கமெண்ட்ஸ்'னா சும்மாவா, சூப்பர்...
புதிய அறிமுகம் அனைவருக்கும் வாழ்த்துகள் மக்கா....
ReplyDeleteஇந்த வாரம் வலைச்சரம் ஆசிரியருக்கும் , அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்..
ReplyDeleteவலைச்சரம் ஆசிரியரா வாழ்த்துக்கள் நண்பா
ReplyDeleteஅறிமுகங்கள் ..பதிவுகள் அத்தனையும் முத்துக்கள்
ReplyDeleteஎப்படி என்ற ஒற்றைக் கேள்விக்கு பதில்கள் பல துறைகளில் இருப்பதை அழகாக பதிவர்களின் அறிமுகத்தில் சுட்டிக் காட்டி இருக்கும் விதம் சிறப்பு . தொடரட்டும் தங்களின் ஆசிரியர் பணி
ReplyDeleteஎங்கேயிருந்து இவங்கள பிடிக்கரிங்களோ... புதுமையான அறிமுகம்
ReplyDeleteஅறிமுகமானவர்களுக்கு வாழ்த்துக்கள் .நல்ல உழைப்பு தம்பி
ReplyDeleteசகோ, வலையுலக நண்பர்களின் அறிமுகமும் அசத்தல் சகோ...
ReplyDeleteதொடர்ந்தும் அடித்தாடுங்க.
பரவா இல்லையே - விஞ்ஞானிகளைத் தேடிப் பிடிச்சுப் போட்டிட்ருக்கீங்க - நல்ல முயற்சி -நல்வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி ஐயா! உங்கள் வாழ்த்து மகிழ்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கிறது!!
இன்றைய அறிமுகங்களும் கலக்கல்..
ReplyDeleteவாழ்த்துக்கள் ஓட்டைவடை...//
நன்றி சௌந்தர்! தொடர்ந்து வந்திடுக!!
இன்றை அறிமுகமான பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்..///
ReplyDeleteநன்றி!
விஞ்ஞானம் இன்றி விடியல்கள் இல்லை. விதைகளை தூவியுள்ளீர்கள். விருட்சமாகும்.///
ReplyDeleteஇந்த வழியில் பயணிப்பவர்களை ஊக்குவிக்கத்தான் இப்படியொரு பதிவை போட்டேன்! உங்கள் நம்பிக்கை வீணாகாது சார்!!
அப்பாடி....கொஞ்சம் வேளைக்கு இடம் கிடைச்சிட்டுது இண்டைக்கு !
ReplyDeleteபாம்பின் கால் பாம்பறியும்.
சிலபேர்களைத் தவிர புதியவர்கள் சிலர்.எல்லாருமே மாத்தி யோசிப்பினம்போல !///
ஆம் ஹேமா! இவர்கள் அனைவரும் மாத்தியோசிப்பவர்கள்தான்! எனக்கு இப்படி சிந்திக்கும் எல்லோரையும் பிடிக்கும்!!
அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.///
ReplyDeleteநன்றி சசி!
நண்பா.. இது புதுமையான அறிமுகம்.. அதே போல் டைட்டில் செம கலக்கல்///
ReplyDeleteநன்றி நண்பா! ஆக்சுவலா இந்தப் பட்டியலில் நீங்களும் வந்திருக்க வேண்டியவர்! வேறு ஒரு காரணத்துக்காக உங்களை தவிர்த்தேன்!
//FOOD said...
ReplyDeleteவிஞ்ஞானம் இன்றி விடியல்கள் இல்லை. விதைகளை தூவியுள்ளீர்கள். விருட்சமாகும்.//
ஆபீசர் கமெண்ட்ஸ்'னா சும்மாவா, சூப்பர்...//
அதானே!
புதிய அறிமுகம் அனைவருக்கும் வாழ்த்துகள் மக்கா....//
ReplyDeleteசரிங்கோ!!
இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியருக்கும் , அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்..//
ReplyDeleteநன்றி கருண்: எங்க ரெண்டு நாளா ஆளையே காணோம்?
வலைச்சரம் ஆசிரியரா வாழ்த்துக்கள் நண்பா///
ReplyDeleteநன்றி நண்பா! நன்றி!!
அறிமுகங்கள் ..பதிவுகள் அத்தனையும் முத்துக்கள் //
ReplyDeleteநன்றி நண்பா! உங்களைப் போன்ற மூத்த பதிவர்களின் வாழ்த்து அவர்களுக்கு பலமாக இருக்கும்!!
எப்படி என்ற ஒற்றைக் கேள்விக்கு பதில்கள் பல துறைகளில் இருப்பதை அழகாக பதிவர்களின் அறிமுகத்தில் சுட்டிக் காட்டி இருக்கும் விதம் சிறப்பு . தொடரட்டும் தங்களின் ஆசிரியர் பணி///
ReplyDeleteநன்றி நண்பா! " எப்படி? " என்ற கேள்வியுடன் முடிவடையும் பதிவுகள் எங்கிருந்தாலும் தேடிப்படிப்பது எனது வழக்கம்! நன்றி நண்பா!!
எங்கேயிருந்து இவங்கள பிடிக்கரிங்களோ... புதுமையான அறிமுகம் ///
ReplyDeleteஎல்லாம் ஒரு தேடல்தான் நண்பா! நீங்களும் இப்படித்தானே சிறப்பாக செய்தீர்கள்!
அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துக்கள் .நல்ல உழைப்பு தம்பி ///
ReplyDeleteநன்றி அண்ணே! நீங்க சொன்னா சரிதான்!!
சகோ, வலையுலக நண்பர்களின் அறிமுகமும் அசத்தல் சகோ...
ReplyDeleteதொடர்ந்தும் அடித்தாடுங்க.
நன்றி நிரு! உங்க சப்போர்ட் என்றும் தேவை!