Tuesday, May 31, 2011

கைய வச்சிகிட்டு சும்மா இருங்கப்பா.!


ரொம்ப நாளா எனக்குள்ள ஒரு ஆசை இருந்தது. என்ன அது.? பெரிய தங்க மலை ரகசியம் இல்ல என்பதால் உங்களிடம் இத நான் சொல்லிடுறன். அதாவது ஒரு பென்சில எடுத்து எப்படியாவது ஒரு ஸ்பூன(spoon) வரைந்திடணும். எனக்கு வரையறது பிடிக்கும். ஆனா வரைய தெரியாதே.! சரி வரைய தெரியாட்டி பரவால போய் மத்தவங்க வரைந்ததாவது பாக்கலாம்னு நான் எட்டி பாத்தத பத்தி பாப்போமா.? இதில் அறிமுகம் என்று பார்த்தால் அது பதிவாக தான் இருக்கும் பதிவராக இருக்காது என நினைக்கிறேன். பலர் மிக பிரபலமானவர்கள்.

வரைதல பத்தி எழுதணும்னு எனக்கு தோன்றியதும் முதலில் நான் எட்டி பாத்தது இவர் ப்ளாக்கை தான். ஒவ்வொரு வரைதலும் அவ்வளவு நேர்த்தியாக சிறப்பாக இருக்கும். இவரின் வரைதலை பாத்து நீங்களும் கமண்டடிக்களாமே.!! பாக்கணுமா.? இங்கிட்டு போங்க. இத பாக்காம விட்டுட்டா நீங்க எதையோ மிஸ் பண்றீங்கன்னு தான் சொல்ல முடியும்.

அடுத்து என் கை நேராக தேடி போனது தோழி ப்ரியாவை தான். நான் முதலில் பதிவுலகம் வந்தபோது பார்த்த முதல் ஓவியர் இவர். நேசித்து வரைகிறேன் என்னும் பதிவில் அவர் போட்டிருக்கும் அந்த ஓவியங்கள் உண்மையில் சிறப்பாகவே இருக்கு. போய் பாக்குறதால நாம ஒண்ணும் குறைந்திட மாட்டோமே.! போய் தான் பாக்குறது.

கூல்.. அட நான் உங்கள சொல்லலங்க. பதிவர் பெயர சொன்னேன். இவருடைய இந்த ப்ளாக்கில் என்னாத்த எழுதுராருனு ஒண்ணுமே புரியல. ஏனா அவர் ஒண்ணுமே எழுதுறது இல்ல. இதில் முழுக்க முழுக்க ஓவியங்கள் மட்டுமே திரியுது. இந்த ஓவியங்களை பார்த்து அவரை கொஞ்சம் ஊக்குவியுங்களேன். உங்களுக்கு தெரியாததா ஊக்குவிக்க. கமான் ஸ்டார்ட்.!!

காஞ்சி காமாட்சியம்மனை பாக்கணுமா.? வாங்க நான் கூட்டிட்டு போறேன். ஏ.! ஏ.! யாருயா அது மூட்டையெல்லாம் கட்டுறது.? எல்லாம் என்னய போலவே இருக்கீங்களே.! நான் சொன்னது அந்த சுட்டி மூலமா கூட்டிட்டு போறேன்னு. இங்க போய் பாருங்க.

சரி இப்ப ஒரு ஒப்பீடு போப்போம். அதாவது வரைந்ததுக்கும், போட்டோவுக்குமான ஒப்புமை. அந்த ஒப்புமையில் எது நல்லாயிருக்குனு பாக்கலாம். ஆனா எனக்கென்னவோ இங்க எல்லாமே நல்லா இருக்குற மாதிரி தான் தெரியது. உங்களுக்கு.?

இப்படி இதுமாதிரி பாத்து பாத்துகிட்டு இருந்த நான். ஒரு நாள் நானும் கத்துகிடலாம்னு ஒரு வேகத்தோட புரட்டுன பக்கம் தான் இந்த பக்கம். இங்க ஏதோ சொல்லியிருக்காங்கனு மட்டும் புரியுது ஆனா என்ன என்று தான் புரியல.

சரி நமக்கு சாதாரண வாழ்க்கையில இதெல்லாம் தேறாது. நம்ம கம்ப்யூட்டர்லயாவது முடியாதுனு தேடி போன இடம் இதுதான். இதுலயும் கம்ப்யூட்டர்ல எப்படி படத்தை ட்ராயிங்கா மாத்தனு சொல்றாங்க.

ஆனா எனக்கு இதெல்லாம் தெரியாது. நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட டா கூர் னு.!! என்னை நானே தேத்திகிட்டேன். இப்ப என்னால என்ன செய்ய முடியும். எல்லாரையும் கைய வச்சுகிட்டு வரையாம சும்மா இருங்கனு சொல்லிகிட்டு திரிய வேண்டியது தான். பின்ன என்ன அடுத்த பதிவுல சந்திப்போம். வர்ட்டா.!?

''கொடூரமான தலைவர்கள் மாற்றப்படுவது நல்ல தலைவர்களை கொடூரமானவராக மாற்றுவதற்கே.!''-சே குவேரா

வரலாறு மிக முக்கியம் தம்பி.!!


வரலாறு.! அப்படினா என்ன.? இன்னும் 100 வருசம் கழித்து மக்களெல்லாம் என்னை பத்தி படிப்பாங்களே அப்போ என் வாழ்க்கை தான் வரலாறு. அதில் நான் தான் வரலாற்று நாயகன். ஹி ஹி.. இப்படி எவ்வளவோ பில்டப் கொடுத்துகிடலாம். ஏன்னா இது இப்போ என் ஏரியா.!! ஹி ஹி. சரி என்னடா இவன் இப்ப வரலாற பத்தி பேசிட்டு இருக்கானே அப்படினு நீங்க யோசிச்சா நான் சொல்றேன் இந்த பதிவு வரலாறுக்காக மட்டும் தான்.

எனக்கு பழையன, பழமை இதிலெல்லாம் ரொம்ப ஆர்வம். அப்படி என்னை போலவே ஆர்வம் வாய்ந்த சில சகாக்களின் பதிவுகள் தான் ஒரு சிறிய வரலாற்று தொகுப்பு.

முதலில் பிரபல பதிவர் மைந்தன் சிவா பக்கம் போவோம். இவர் சமீபத்தில் அசோக பேரரசர் பற்றிய ஒரு பதிவு போட்டிருக்கார். இன்னும் இங்கிருக்கும் சிலருக்கு அசோகர் இருந்தார் என்று மட்டுமே தெரிந்த நிலையில் இந்த பதிவினை சற்று எட்டி பார்த்து இன்னும் விளக்கிக்கொள்ளலாமே.!

ஈரானில் இருந்த கண்டோவன் என்னும் கிராமத்தை பற்றிய வரலாறை தருகிறார் நண்பர் அசோக். இங்கே எல்லா வீடுகளும் மலையில் குடைந்தது, கூம்பு வடிவில் தான் இருக்குமாம். படங்களோடு பதிவு பக்கா.!!

அடுத்து பிரபல பதிவர் மாணவன். நோபல் பரிசு இல்ல நோபல் பரிசு- அது எப்படி உருவாச்சு, ஆல்ஃப்ரட் நோபல் பற்றிய பதிவு. சும்மா சொல்லகூடாது நல்லாவே எழுதியிருக்காரு. போய் படிங்க. ஆனா என்கிட்ட நோபல் பரிசுன்னா என்னனு கேக்கலாம் கூடாது.

நம்ம தலைவர். சமீபத்துல மறைந்த மனிதர். மிகவும் திறமைசாலி. ஒசாமா பின்லேடனை பற்றி தெரிஞ்சுகிடணுமா.? ஹி ஹி. நான் சொல்லமாட்டேன். ஆனா ஒருத்தவங்க கூவி கூவி சொல்லிகிட்டு இருக்காங்க இங்க போய் பாத்துக்கோங்க.

உலகையே தமது இசையால் கவர்ந்த ஒருவர். தமிழகத்திலிருந்து சென்று இரண்டு ஆஸ்கர் விருதை அள்ளி வந்த ஏ.ஆர்.ரஹ்மான். அவரை பற்றி நம்ம தமிழ்வாசி பிரகாஷ் சொல்லுறாரு. இங்கிட்டு வந்து அத கொஞ்சம் பாருங்க.

லியோ டால்ஸ்டாய் கடிதங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் நண்பர் வழிபோக்கன். லியோ டால்ஸ்டாய் பத்தி இங்கு நான் சொல்லி தெரியவேண்டும் என்ன அவசியம் நம்மவர் யாருக்கும் இருக்காது என நண்புகிறேன். இங்கு போய் படியுங்கள். மறக்காமல் எல்லா கடிதங்களையும் படியுங்கள்.

பேரழகி க்ளியோபாட்ரா. பிலாசபி பிரபா நோ நோ.!! கம்ப்யூட்டர் விட்டு தள்ளி போங்க. அவரை பற்றி வரலாற்று பதிவு. பாக்கும் போது எனக்கே கண்ணுகட்டுது. மனுசன் போன வருசத்தில இருந்து தொடர்ந்து எழுதுகிறார். இதுவரை 47 பகுதிகள் எழுதியிருக்கிறார். இதுல இன்னும் வேற எழுதுவாறாம். ம்ம்.. நெல்லைசாரலில் இருக்கும் இதன் முதல் பகுதி இதுல இருக்கு. அங்க போயி மத்த எல்லா பகுதியையும் படிச்சுக்கோங்க.

வைரம்.!! அட இது யாரோ ஒருவரின் பெயர்னு நினச்சுடாதீங்க. உண்மையான வைரம் தான். அதான் ஜொலிக்குமே அதேதான். அதை பற்றி ஒரு சில சுவாரஸ்ய தகவல்களோடு கமான் கமான்னு கூப்பிடுறாரு அபு அஜ்மல். வைரத்தை பத்தி தெரிஞ்சுக்க உங்களுக்கு கசக்குமா என்ன.? இங்க போய் பாருங்களேன்.

கிரிக்கெட் உலகில் எனக்கு மிகவும் பிடித்தவர்களில் இருப்பவர் இலங்கை அணியின் முத்தையா முரளிதரண். அவரை பற்றிய ஒரு சில குறிப்புகள் இங்கே இருக்கிறது. என்னை போலவே முரளியை புடித்தவர்களும், இல்லை விரும்பாதவர்களும் கூட போய் பாக்கலாம். முரளி கோச்சிகிட மாட்டார்.

கேட்பாரற்று கிடக்கும் ஒண்ணை தூக்கி தலையில வச்சுகிட்டு பேசுறார். வேற ஒண்ணும் இல்லைங்க நம்ம தமிழை தான். அருள்மொழிவர்மன் சங்க இலக்கியம், தமிழ் மொழியின் வரலாற்றை காட்டு கத்தாக கத்திகொண்டு இருக்கிறார். வந்து பாருங்களேன்.

இந்த வரலாற்று பகுதியின் கடைசியில் இப்போ நாம உண்மையில் ஒரு சரித்திர நாயகனை பாக்க போறோம். நான் முதலில் படித்து மயங்கிய சே குவேரா தான் அது. அவரை பற்றி நண்பர் வருணன் தொடர்ந்து எழுது வருகிறார். சற்று எட்டி பாருங்கள்.!! மனக்கதவு தட்டி திறக்கும்.

சரி இப்ப இம்புட்டு தான். அடுத்த பதிவுக்கு சீக்கிரமே ஓடுவோம்.!!

''ஒன்றை நீ அடைய எண்ணினால் முதலில் நீ அனைத்தையும் இழக்க வேண்டும்''-சே குவேரா

Monday, May 30, 2011

இவுங்க மேல எல்லாம் எனக்கொரு பாசம்.!!


பதிவுலகில நான் காலடி எடுத்து வைத்த நொடியிலிருந்து இப்போது வரைக்கும் நிறைய பதிவர்களின் பதிவுகளை படித்திருக்கேன். அதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை என்ற பெயரில் எனக்கான சில ரசனைகளில் சில பதிவர்கள் என்னை மிகவும் கவர்ந்தனர்.

அப்படி கவர்ந்தவர்களை இங்கே பகிர விரும்புகிறேன்.


முதலில் பிலாசபி பிரபாகரன். இவரிடத்தில் என்ன பிடிக்கும்னு கேக்குறீங்களா.? ஹெல்ப்பிங். அதாங்க உதவுறது.!! அதுக்குனு அவரு முக்குல மூணு அனாதை ஆசிரமம் நடத்துறாரு, அந்தாண்ட நாப்பது பசங்கல படிக்க வைக்கிறாருனு நினச்சுடாதீங்க. எனக்கு ப்ளாக் எப்படி இருக்கணும்னு சொல்லிகொடுத்த குரு அவரு. ரொம்ப புல்லரிக்குதா பிரபா.?

அடுத்து ஹைக்கூ அதிர்வுகள் ஆனந்தி. இவுங்க கிட்ட இருந்து நிறைய கத்துகிட்டேனு தான் சொல்லணும். எவ்வளவோ நல்ல விடயங்களை கத்துகிட்டு இருக்கேன். அது பதிவுலகில் மிக அவசியம் இல்லாட்டியும் என் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியமானது. தேங்க்ஸ் ஆனந்தி. இவுங்க பதிவை விட தலைப்பும், படமும் சூப்பரா இருக்கும்.

அப்பரம் யாரு.? கிடு கிடுனு உச்சத்துக்கு போன நிரூபன் தான் அது. உடனே கத்தி கம்ப தூக்கிட்டு வந்திடாதீங்க நிரூ. ஏனா அவருக்கு புகழ்ந்தா பிடிக்காது. அவரு இன்னும நாற்றாவே இருக்கிறாராம். சரி, இவருகிட்ட என்னை போல கமண்ட்டு போடுறது ரொம்ப பிடிக்கும். ஆனா அவரு சொல்லும்போது அவர போலவே நான் கமண்ட் போடுறன்னு சொல்லுவாரு. ஹி ஹி. இவரோட குழந்தை பருவ நிகழ்வுகள் அனைத்தும் அவரு சொல்லும்போது ரொம்ப பிடிக்கும்.

கல்பனா.!! எனக்கு இவருகிட்ட பிடித்ததுனு பாத்தா கொஞ்சம் வித்யாசம் தான். அதாவது இவங்களோட கவிதைக்கு இவங்களோட TAG ஒண்ணு போடுவாங்க. அது ரொம்ப பிடிக்கும். பதிவுலகில் சுத்தி வரும் பாச மலர்னே(மலரா.!?) சொல்லலாம்.

பன்னிகுட்டி ராம்சாமி- இவர தெரியாதவரோ.! இல்ல இவரு ப்ளாக் பக்கம் எட்டி பாக்காதவறே இருக்கமாட்டாங்க. ஆளு கொஞ்சம் காமெடியா எழுதினாலும் என்கிட்ட கொஞ்சம் சீரியஸாவே பேசுவாரு. எனக்கு இது தாங்க புரியவே மாட்டேங்கது. இவர எனக்கு எதுக்காக பிடிக்கும்னே தெரியலங்க.!!

நாஞ்சில் மனோ + சிபி- இவுங்க ரெண்டு பேருகிட்டயும் புடிச்சது ஒண்ணே ஒண்ணுதான். சாலியா பேசுறது. என்ன டெரரா பேசினாலும் சாலியா எடுத்துப்பாங்க. இவுகள எந்த லிஸ்ட்ல சேக்குறதுனே தெரியலங்க. ஆனா இப்ப சிபி கொஞ்சம் சீரியஸா மாறிகிட்டே கிடக்காரு. வேணாம் சிபி.. வேணவே வேணாம்..

ராஜ நடராஜன்- ரொம்பவே சீரியஸாவே பதிவு போடுறவரு. இவர பத்தி எனக்கு அதிகமா தெரியாது. இருந்தாலும் ஒருவரின் பதிவுகளை மட்டுமே வைத்து எனக்கு மிகவும் பிடித்தவரானவராக இவரை நச்சென சொல்லலாம். சூப்பர் ராஜ நட.

கயல்விழி- ரொம்ப பேமஸ் இல்லாத ஒரு பதிவர். ஆனா அவருடைய கவிதைகள் எல்லாம் பக்காவா இருக்கும். சரியான வார்த்தை அமைப்பு, சரியான வரி அமைப்புனு எல்லாமே பக்காவா எழுதுவாங்க. படிப்பு, எக்ஸாம்னு  ரொம்ப படிக்கிறவங்க அதனால பதிவுலகில் அதிகமா சுத்தாதவங்க. எக்ஸாம் முடிஞ்சதும் ஒரு பெரிய ரவுண்டு வருவேன்னு சொல்லி இருக்காங்க. 10வது 12வது ஸ்டேட் ரேங்க் எல்லாம் வாங்கினவங்க. ஹி ஹி..

பலே பிரபு- ஹி ஹி.. ஆமாம் இவர எதுக்காக எனக்கு பிடிக்கும்.? அது ஒண்ணுமில்ல நாங்க ரெண்டு பேரும் ஒரு நல்ல நண்பர்கள். எல்லாத்தையும் ஷேர் பண்ணிப்பாரு. நடந்து முடிந்த இறுதிகட்ட தேர்வில் 88.5% மார்க் எடுத்தாராம். என்ன செய்ய ஒரு வாழ்த்தை சொல்லிகிடுவோம். அடுத்ததா என் பக்கம் வேற வர்றாரு. அதாவது எதிர்கால புதிய தலைமுறை இதழே இவர நம்பி தான் இருக்கு. ஹி ஹி. அப்பரம் அவருகிட்டயே கேட்டுகிடுங்க.

எல்.கே.,- என்ன பதிவு எழுதினாலும் முதல் ஆளா வந்து ஊக்குவிக்கிறவரு. இவருடைய கடவுள் நம்பிக்கைகள், எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் வெளிப்படையாக பேசுவது, மெச்சூரிட்டியான கவிதை எல்லாமே சூப்பரு.

ரஜீவன்- இவரு நம்ம ஓட்ட வடை. ரொம்ப திறமையான ஆட்டக்காரர். ஆட்டக்காரரா? ஹி ஹி. விடுங்க விடுங்க. மாத்தி யோசிக்கிறன் மாத்தி யோசிக்கிறன்னு எல்லாத்தையும் மாத்திடுவாரு போல. அப்படி பட்டவர் எனக்கு ஒரு நல்ல நண்பர்னு சொல்றதோட நிறுத்திகிடுறன்.

ரேவா- இவரோட எனக்கு ஆரம்ப காலத்துல ஒரு ஒட்டலு உரசலாவே ஓடிகிட்டு இருந்தது. காரணம்.? இவரது பதிவுகள் எல்லாமே காதல் கவிதைகள். எனக்கு காதல் கவிதைகள்னு சொன்னாலே உவ்வேனு இருந்தது. அதுக்குபிறகு அதன் கருத்தை விடுத்து, ஒருவரின் எழுதுதலுக்கு முக்கியத்துவம் தரணுமே என்னும் என் அறிவுக்கண்ணை திறந்தவர்.

இவர்களை தவிர்த்து ரசிகன் சௌந்தர்தோழி பிரஷாகலியுகம் தினேஷ்வானம் வெளித்த பின்னும் ஹேமாநாய்க்குட்டி மனசுபச்சைத்தமிழன் பாரி போன்றோரையும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி. சௌந்தரின் நக்கலு, பிரஷா-வின் கவிதைகள், தினேஷ்-ன் சித்தர் புத்தி(ஹி ஹி), ஹேமாவின் அக்கரை, நாய்க்குட்டி மனசு அவர்களின் பாசம், பாரி ஏதோ பதிவு போடுறோம்னு நினச்சுகிட்டு காமெடி பண்றது என அனைத்தும் பிடிக்கும்.

இன்னொருவரையும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவர் பதிவுலகின் புதிய எழுச்சி. எழுத்தில் கார்மேகம் மழை போல பொழிவார். அறிவானவர், வடிவானவர், அர்த்தமுள்ளவர். யாருனு கேக்குறீங்களா.? இங்க போய் பாருங்க.


''இன்று என்னை பற்றிய அறிமுகம் நாளாதலால்-இது ஒரு எக்ஸ்ட்ரா இடுக்கை. இதில் அறிமுகம் என்று பெரியளவில் சொல்லமுடியாது. இருப்பினும், என் மன வெளிபாடை வெளிபடுத்துகிறேன். அவ்வளவே.!!''


''இது ஒரு சாதாரண விளையாட்டில்ல, ஆயுதங்களுக்கு இடையே நடக்கும் புரட்சி''-சே குவேரா

குடு மார்னிங் ஆபிஸர்ஸ்.!!

வலைச்சரம்--!! ஒரு வார ஆசிரியர்.!! நான் தான் நானே தான். எங்க ஆபிஸ்ல கூட யாரும் என்ன மதிக்காதபோது எனக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த சீனா ஐயா முதல்கொண்டு அனைவருக்கும் எனது நன்றிகள் மட்டும் சொல்லிகிடுறன். இன்னும் ஒரு வாரத்துக்கு வலைச்சரம் என் கையில சிக்கி படாத பாடு பட போகுது.

வலைசரத்தில் எனக்கு பிலாசபி பிராபகரின் பங்கு ரொம்ப பிடிச்சது. அவரை போலவே பர்சனல் இன்ட்ரோ இல்லாம நாமும் ஒரு நாள் ஆசிரியராக ஆகும் போது செய்யணும்னு இருந்தேன். ஆனா என்ன செய்ய.? இப்ப எனக்கு வாய்ப்பு வந்த போது நான் ஒண்ணும் பெரிய ஆளா இல்லையே.! அதனால என்ன பத்தியும் ஒரு 'பிட்'அ போடுறது தான் பெஸ்ட்னு தோணுது.!(ஏன் யா நான் சரியா பேசுறேனா.?)

முதலில் நான் இங்கு வந்த போது என் பெயரில் கூர்மதியன் என வரக்கூடாது கூர்மதியான் என வரவேண்டும் என பலரும் சொன்னர். அது எனக்கு தெரியாமல் இல்லை. ஆனால் என் பெயர் எதற்காக இப்படி வந்ததோ அதை மரபுக்காக மாற்ற விரும்பவில்லை. எதற்காக வந்தது.? அதை அண்ணன் எல்.கே., அழைப்புக்கு இணங்க என் பெயருக்கான புராணம் என்று எழுதி முடித்தேன். இலக்கணமோ இலக்கியமோ.!! கூர்மதியன் என்றே இருக்கட்டும்.

அப்பரம் நான் ரொம்ப ஃபீல் பண்ணி எழுதின பதிவுனா அது எங்க ஸ்கூல பத்தினு சொல்லலாம். ஸ்கூல்..!! என் பள்ளி அழுவதை கண்டேன் என்னும் அந்த பதிவு-மனதில் ஒருவித சோகத்தோடே எழுதினது.

வேலை விசயமா அடிக்கடி வெளியில சுத்துவேன் அப்படி ஒரு நாள் வேலை விசயமா போயிருந்தப்போ அங்க பார்த்தது ரொம்பவே நல்லா இருந்தது.  இதெல்லாம் எங்கயா போச்சு என்னும் பதிவில் அதை பற்றி குறிப்பிட்டிருப்பேன்.

அடுத்ததா அரசியல்..!! அரசியல்னா எனக்கு உயிர்னு கூட சொல்லலாம். CRICKET EXPERTனு சொல்றாங்களே அது போல எல்லா மனிதர்களுக்கும் நான் ஒரு POLITICS EXPERT-ஆக தெரியணும்னு எனக்கொரு ஆசை. ஏதோ எனக்கு தெரிந்த விடயங்களை கொண்டு கலைஞரும், திருவாரூரும், தேர்தலும்னு ஒரு பதிவு போட்டேன்.

அதே சமயம் எனக்கு அப்பப்போ கவிதைகள் எழுதுறது ரொம்ப பிடிக்கும். இப்ப கொஞ்ச நாளா அதிக ஆணி என்பதால் எழுதாம இருந்தேன். நான் எழுதியதில் எனக்கு பகிரகூடிவை என்று பார்த்தால், நான் கண்ட மீசையின் பெயர் என்ன.?எனக்காக என்னை பிரிந்தால்.!அதை நானும் அனுபவித்திருக்கிறேன் இருப்பினும்.!? போன்றவை. அரசியல் கவிதைகள்னு கூட எழுதிகிட்டு திரிவேன். அப்படி எழுதியதில் கலைஞரே-நீ ஒரு உத்தமன் என்னும் பதிவு ஒரு வித வருத்தத்தோடே எழுதியது.

இப்படி என்னுடைய பதிவுகள் மூலம் என்னை பத்தி சொல்லணும்னா சொல்லிகிட்டே போவேன். ஆனா கேக்குறதுக்கு யாராச்சும் இருக்கணும்ல. அதனால இதோட ஸ்டாப்பிக்குறேன்.!! இனி ஒன் வீக் வலைச்சரம் என் கட்டுப்பாட்டுல. யாராச்சும் உள்ளாக்க பூந்து இம்சிச்சீங்கோ போட்டுதள்ளிடுவன்.

''நம் செயலுக்கு ஒத்துவராத மற்றவர்கள் வார்த்தைகள் நமக்கு முக்கியமற்றது''-சே குவேரா

Sunday, May 29, 2011

தம்பி கூர்மதியன் சேலம் தேவாவிடம் இருந்து பொறுப்பேற்கிறார்

அன்பு நண்பர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்குப் பொறுப்பேற்ற நண்பர் சேலம் தேவா - தான் ஏற்ற பொறுப்பினை மகிழ்வுடன் நிறைவேற்றி, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் ஏழு இடுகைகள் இட்டு 85 மறுமொழிகள் பெற்றிருக்கிறார். வித்தியாசமான முறையில் அறிமுகங்கள் செய்திருக்கிறார். புகழ் பெற்ற எழுத்தாளர்கள், கவிஞர்கள் , பழம் பெரும் எழுத்தாளர்கள் - இவர்களின் தளங்களை அறிமுகப் படுத்தி இருக்கிறார். இவரது ஊரான சேலத்தினைச் சார்ந்த பதிவர்களை அறிமுகப் படுத்தி இருக்கிறார். ஒளிப்படக் கலைஞரான இவர் ஒளிப்படக் கலையினைப் பற்றிய பல தளங்களை அறிமுகப் படுத்தியிருக்கிறார்.

நல்லதொரு பணியினைச் செய்த சேலம் தேவாவினை, நல்வாழ்த்துகள் கலந்த நன்றியுடன் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்.

அடுத்து, நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் தம்பி கூர்மதியன். இவரைப்பற்றிச் சொல்ல வேண்டுமானால் மூன்று தமிழ் வலைப்பூக்களையும், ஒரு ஆங்கில வலைப்பூவையும் நடத்தி வருகிறார். ஒன்று தெளிவான விசயங்கள், மக்கள் பிரச்சனைகள், விமர்சனங்கள், செய்திகளுக்காக இவர் எழுதும் 'நான் சந்தித்தவை' என்னும் வலைப்பூ. இவரது படைப்புகளுக்காக 'யௌவனப் புலர்வுகள்'(முன்னர் கிறுக்கனின் கிறுக்கல்கள் என்று இருந்தது) என்னும் வலைப்பூ. பிறகு மொக்கைகளுக்காக 'ஐ ஆம் சீரியஸ்' என்னும் வலைப்பூவாக மொத்தம் மூன்று வலைப்பூக்கள். இந்த மூன்றிலும் சேர்த்து மொத்தம் 94 பதிவுகள் இட்டிருக்கிறார். 1749 கருத்துகள் பெற்றிருக்கிறார். சென்னையில் வசிக்கிறார். அரசியல் எழுத்துகளில் அதிக ஈடுபாடு கொண்டவர். வெளிநாடுகளில் வேலை செய்வதை வெறுப்பவர்.

அருமை நண்பர் தம்பி கூர்மதியனை வருக ! வருக ! என வரவெற்று - அறிமுகங்களை அள்ளித் தருக ! என வேண்டி, வாழ்த்தி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.

நல்வாழ்த்துகள் சேலம் தேவா
நல்வாழ்த்துகள் தம்பி கூர்மதியன்

நட்புடன் சீனா

கதைகளும்.. கவிதைகளும்...!! தொடர்ச்சி.

நேற்று இடப்பட்ட பதிவு பலபேருக்கு தெரிந்தாலும் சில பேருக்கு பயனுள்ளதாக இருந்ததாக பின்னூட்டங்கள் தெரிவிக்கின்றன.அதனால்,இன்னும் சில எழுத்துலக பிரம்மாக்களை இன்று பெருமைப்படுத்தலாம்.(அவர்களை அறிமுகப்படுத்த நாம் யார்..?!)

பாமரன் அவர்கள் கம்யூனிச பார்வையில் சமகால நிகழ்வுகளை நக்கலான தொனியில் எழுத்தில் கொண்டு வரும் எழுத்தாளர்.நகைச்சுவையாக இருந்தாலும் சமூகம் குறித்த கோபத்தை இவரது எழுத்தில் காணலாம்.

கல்யாண்ஜி
கவிதைகள்,கதைகள்,பத்திரிக்கையாளர்,சினிமா உதவி இயக்குனர் என இவருக்கு பல முகங்கள்.தற்போது புதிய தலைமுறை இதழில் பணியாற்றி வருகிறார்.இவருடைய பிரபலங்களுடனான நேர்காணல்களை படித்து பாருங்கள்.சுவாரசியமாக இருக்கும்.


என்.சொக்கன்
காந்தி கொலை வழக்கு பற்றியும் எழுதுகிறார்.கம்யூட்டர் கையேடும் எழுதுகிறார்.சிலப்பதிகாரமும் எழுதுகிறார்.பட்டியல் போடமுடியாத அளவிற்கு நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார்.பிரபலங்களின் வாழ்க்கைச்சரித்திரங்களை இவருடைய புத்தகங்களில் படிக்கும்போது நமக்கும் உத்வேகம் வரும்.ட்விட்டரிலும் கலக்குகிறார்.


பேயோன்
சமகால எழுத்தாளரான இவர் உலக இலக்கியத்தின் உள்ளூர் கிளை என முகவுரையிலேயே சுவாரசியமானவர்.ட்விட்டரில் இவர் எழுதியவை ஒரு புத்தகமாகவே வந்திருக்கிறது.குறிப்பிடத்தகுந்த ஓவியரும் கூட.  :)


முகில்
கிழக்கு பதிப்பகத்தின் முதன்மை துணை ஆசிரியராக பணிபுரியும் இவருடைய புத்தகங்கள் நம்மை படிக்க தூண்டுபவை.அகம்,புறம்,அந்தப்புரம் ஒரு உதாரணம்.


அ.முத்துலிங்கம்
விஞ்ஞானமும்,சார்ட்டட் அக்கவுண்டட் படிப்பையும் முடித்து,ஐ.நாவில் பணிபுரிந்து ஒய்வுபெற்றுவிட்டு இப்போது எழுத்தாளராக உள்ள திரு.அ.முத்துலிங்கம் அவர்களுடைய தளம்.தமிழ்நாட்டின் பல எழுத்தாளர்கள் இவரின் எழுத்தை சிலாகிக்கிறார்கள்.ஏன் என்பதை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.


ப்ரியன்
எண்ணங்களை உணர்வுகளை எழுத்தாக்கி மகிழும் ஓர் தமிழ் குழந்தை என தன்னைப்பற்றி கூறுகிறார் ப்ரியன் கவிதைகள் எழுதும் வெங்கடேஷ்.கவிதைகள் ரசிக்க வைக்கின்றன.


அழகன்
காதல்காரா என்ற வலைப்பூவில் காதலும் காதல் சார்ந்த உளறல்களையும் கவிதையாக வடித்து வைத்தருக்கிறார் இவர்.புகைப்பட ஆர்வலரும் கூட..

ஆசிரியர்களின் மீது இப்போதுதான் எனக்கு மதிப்பு கூடுகிறது.ஒரு வார ஆசிரியர் பணிக்கே நான் நிறைய படிக்கவேண்டியதாயிற்று.முழுநேர ஆசிரியர்களை நினைத்தால் மரியாதையாகவும்,பாவமாகவும் உள்ளது.எப்படியோ வலைச்சர ஆசிரியர் பணியை வேலைப்பளு என்னை அழுத்தியபோதும் நசுங்கிவிடாமல் என்னளவில் சிறப்பாக செய்திருக்கிறேன் (அத நாங்க சொல்லணும்) என்று நினைக்கிறேன்.அடுத்து விரிவுரையாளர்,பேராசிரியர்,கல்லூரி தலைவர் என்று அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு உங்கள் ஆசிகள் தேவை.(திருந்தவே மாட்டானா..?!)ஹி..ஹி...

நாலுபேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை என்று என்னையும் நம்ம்ம்பி இந்த வாய்ப்பளித்த சீனா அய்யா அவர்களுக்கும், பதிவுகளை படித்து பின்னூட்டம் அளித்த இணைய நண்பர்களுக்கும்
நன்றி..!! நன்றி..!! நன்றி..!!







Saturday, May 28, 2011

கதைகளும்.. கவிதைகளும்...!!

ஏற்கனவே தெரிந்தவர்கள் விட்டு விடுங்கள்.தெரியாதவர்கள் பயன் பெறுங்கள். இணையத்தில் உள்ள நான் அடிக்கடி பார்க்கும் சில எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களின் தளங்களை இந்த பதிவில் இணைத்துள்ளேன்.


தமிழ் எழுத்தாளர்களை ஒருங்கிணைக்கும் ஒரு வலைத்தளம்.கட்டுரைகள்,சிறுகதைகள்,கவிதைகள்,நேர்காணல்கள் என இந்தியாவில் உள்ள தமிழ் எழுத்தாளர்கள் மட்டுமன்றி,இலங்கை,மலேசியா,சிங்கப்பூரில் வாழும் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளும் தொகுக்கப்பட்டுள்ளது.


எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்களின் பதிவுகள் கிருஷ்ணதுளசி என்பவரால் தொகுக்கப்படும் பலகணி.ஆன்மிக தேடல் உள்ளவர்களுக்கு ஏற்ற தளம்.



இப்போதுள்ள எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர்.இவருடைய கதைகளும் கட்டுரைகளையும் படித்திருப்பீர்கள்.வாசிப்பவர்களை கதைக்குள் இழுத்துச் செல்லும் லாவகமான எழுத்து இவருடையது.எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்.



சமீபத்தில் சூடிய பூ சூடற்க எனும் படைப்புக்காக சாகித்ய அகாதமி விருது பெற்ற நாஞ்சில்நாடன் அவர்களின் படைப்புகளை சுல்தான் என்பவரால் தொகுக்கப்படும் தளம்.ஆனந்தவிகடனில் இவர் எழுதிய கட்டுரைகள் பிரசித்தி பெற்றவை.



நவீன தமிழ்சிறுகதை உலகிம் முடிசூடா மன்னன் என்ற பாராட்டு பெற்ற வண்ணதாசன் அவர்களின் தளம்.புதிதாக எழுத வருபவர்கள் வண்ணதாசனை படிக்க வேண்டும் என்று சுஜாதாவால் பாராட்டப்பெற்றவர்.


எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் தளம்.சர்ச்சைகள் அவ்வப்போது கிளம்பும் இவரது எழுத்துகளால்...எந்த ஒரு விஷயத்திலும் மாறுபட்ட பார்வை கொண்டவர்.நான்கடவுள்,அங்காடித்தெரு திரைப்படங்களின் வசனகர்த்தாவும் கூட...



ஜெ.மோவைப்பற்றி எழுதிவிட்டு சர்ச்சைக்குரிய சாருநிவேதிதாவைப்பற்றி எழுதாமல் விடக்கூடாது.தமிழ்நாட்டைவிட கேரளாவிலும்,      வெளிநாடுகளிலும்தான் அதிகம்பேருக்கு தெரிந்திருக்கிறது என்பதை அவரே சொல்லியிருக்கிறார்.இவர் அடிக்கடி மேற்கோள் காட்டும் எழுத்தாளர்களின் பெயர்களை படிக்கும்போது பெயரையே நம்மால் படிக்கமுடிய வில்லையே இவர் எப்படி அவர்களுடைய படைப்புகளை படிக்கிறாரோ..?!என்று வியந்துபோவேன்.சுவாரசியமான எழுத்து.அவ்வப்போது வாசகர்களை திட்டுவதை பொறுத்துக்கொள்ள வேண்டும்.  :)



எழுத்தாளர் பா.ராகவனின் அவர்களின் வலைப்பூ. அபாரமான நகைச்சுவை உணர்வுடன் இவர் எழுதும் கட்டுரைகளை வாசித்து பாருங்கள்.காஷ்மீர்,பாகிஸ்தான் ஒரு புதிர், அல்கொயிதா, டாலர்தேசம், நிலமெல்லாம் இரத்தம், ஹிட்லர் என்று பல தலைவர்களின் வரலாற்றையும் புத்தகங்களாக வெளியிட்டுள்ளார்.



பயமறியா பத்திரிக்கையாளர் ஞாநி அவர்களின் வலைத்தளம்.எந்த ஒரு விஷயத்தையும் ஆழமாக விவாதிக்க கூடிய அதன் பொருளை மக்களுக்கு உணர்த்தக் கூடிய பத்திரிக்கையாளர்.யார் ஆட்சியில் இருந்தாலும் நான் நிரந்தர எதிர்கட்சிபோல் மக்களுக்காக விமர்சிப்பேன் என்று கல்கியில் வரும் ஓ பக்கங்களில் எழுதியுள்ளார். பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற பத்திரிக்கையாளர்.



சுஜாதா அவர்களின் மீதுள்ள பற்றால் சுஜாதாதேசிகன் என்ற பெயரால் எழுதிவரும் மென்பொருள் பொறியாளரான தேசிகன் என்பவருடைய தளம்.சுஜாதா அவர்களால் என் கதைகளின் அத்தாரிட்டி இவர் என்ற பாராட்டை பெற்ற இவருடைய எழுத்துகளும் சுஜாதா பாணியில் அமைந்துள்ளது.



திரைப்பட கவிஞர் யுகபாரதியின் தளம்.கவிதைகள் மட்டுமன்றி நல்ல பல கட்டுரைகளையும் எழுதுகிறார்.


காதல்கவிஞன் தபூ சங்கரின் வலைப்பூ.அழகியலோடு இவர் கவிதைகள் மனதை கொள்ளை கொள்ளும்.வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்,விழியீர்ப்பு விசை,அடுத்த பெண்கள் கல்லூரி 5 கி.மீ என இவர் எழுதியிருக்கும் தொகுப்புகளின் தலைப்புகளே வசியப்படுத்துகின்றன.



விகடனில் அதிகமாக வந்திருக்கிறது இவரது கவிதைகள்.புகைப்பட கலைஞராகவும், டிசைனராகவும் உள்ள இவரது தளத்தின் முகவரி.



சமீபத்தில் திரைக்கு வந்த நஞ்சுபுரம் திரைப்படத்தின் பாடலாசிரியர்.தமிழ்ப்புலமை பெற்றவர்.இவரின் வலைப்பூவில் அண்மைய பதிவை படிக்கும் போது இதை எழுதும் எனக்கு சற்று பயமாகத்தான் இருக்கிறது. :)



Friday, May 27, 2011

அனைத்தும் கிடைக்கும்.!


கோர்ட் பிரச்சினை - கூகிள்
நம்ம குழந்தைகளுக்கு ஏதாச்சும்ன்னா துடிச்சி போயிடறோம்.புதிதாக குழந்தை பெற்றவர்களுக்கும் குழந்தை பராமரிப்பை பற்றி தெரியாதவர்களின் பாடும் திண்டாட்டம்தான்...திடீர்ன்னு காய்ச்சல் வரும்.திடீர்ன்னு வயித்துவலியில அழுவும்.இது போன்ற சந்தர்ப்பங்களை தவிர்ப்பதற்கு வருமுன் காப்போம்ன்னு ஒரு திட்டம் இருக்கு.அரசு திட்டம் இல்லீங்க...நம்ம விழிப்புணர்வை சொன்னேன்.குழந்தைகள் மருத்துவர் திரு.ராஜ்மோகன் அவர்களுடைய குழந்தைநலம் என்ற இந்த வலைத்தளத்தில் குழந்தை பிறந்ததிலிருந்து அது வளரும் வரை வரும் பல மருத்துவபிரச்சினைகளுக்கு எளியநடையில் விளக்கம் அளிக்கிறார்.வருமுன் காப்பதற்கு வழிமுறைகளை சொல்கிறார்.மருத்துவபணியே ஒரு புண்ணியம் என்றால் குழந்தைகளுக்கு மருத்துவம் பார்ப்பது அதைவிட உயர்வானதும் மகிழ்ச்சியும் தரக்கூடிய பணி.ஆனந்தவிகடன் வரவேற்பரையிலும் இடம்பெற்ற மருத்துவரின் இந்த சேவையை வாழ்த்துங்கள் நண்பர்களே..!!குழந்தைகளுக்காக அம்மாக்கள் நடத்தும் இந்த வலைப்பூவையும் பாருங்கள்..!!

என்னதான் வலைப்பூ எழுதும் ஆர்வம் இருந்தாலும் கணினியைப் பற்றி அடிப்படை தகவல்கள் தெரிந்திருந்தால் நல்லது.கணினியில் எழுதுவது அறிவியல்,வன்பொருள் கற்றவர்களுக்கு எளிதானது.ஆனால்,கலை ஆர்வமும்,எழுத்தாற்றலும் மட்டுமே நிரம்பியவர்களுக்கு கணினியின் செயல்பாடுகள் பற்றியும்,மென்பொருள்கள் பற்றியும்,புதிய தொழில்நுட்பங்கள் பற்றியும் எழுதும் பல்வேறு வலைப்பூக்களை திரட்டும் ஒரு தளம்தான் சுதந்திர மென்பொருள்.கணினியைப் பற்றி நன்றாக எழுதக்கூடிய அனைத்து வலைப்பூக்களையும் இங்கே கண்டு பயனடையலாம்.கற்றுக் கொள்ளுங்கள் நண்பர்களே..!!


இணையத்தில் உள்ள எழுத்தாளர்களை தேடும்போது சுஜாதா,எஸ்.ராமகிருஷ்ணன்,சாருநிவேதிதா,ஜெயமோகன்,மனுஷ்யபுத்திரன் போன்றவர்களை தவிர பழம்பெரும் எழுத்தாளர்களின் படைப்புகளை பார்க்க முடிய வில்லையே என்று ஏங்கியபோது கிடைத்த பொக்கிஷம்தான் இந்த அழியாச்சுடர்கள்.மிக நல்ல அரிய படைப்பாளிகளின் படைப்புகளை தொகுத்துள்ளனர் இந்த தளத்தில்.உலக இலக்கியங்களுக்காக தனியாக ஒரு தளமும் உள்ளது.வாசிப்பு ஆர்வம் உள்ளவர்களுக்கு சரியான இடம்.வாசிக்க தரவிறக்கி படிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த வலைப்பூவில் மின்நூல்கள் கிடைக்கின்றன.


கடவுள் நம்பிக்கை என்பது ஒவ்வொருவருக்கு மாறுபடும்.எனக்கு சித்தர்கள் மேல் நம்பிக்கை உள்ளது.நம்பிக்கை உள்ளவர்களுக்கு நல்ல தளம் இந்த சித்தர்கள் இராச்சியம்.வலையுலகில் பிரபலமான தோழி என்பவர் எழுதும் தளம்.வடிவமைப்பிலேயே ஒரு தெய்வீக அனுபவத்தை தரும் தளம்.


ஆன்மிகம்,கணினி,உடல்நலம்,நடப்புச்செய்திகள்,மகளிருக்காக பயனுள்ள தகவல்கள் என பத்திரிக்கைகளிலும்,இணையத்திலும் படித்த,பார்த்த பயனுள்ள தகவல்களை தொகுத்தளிக்கிறார் உங்களுக்காக.



Wednesday, May 25, 2011

போட்டோசாப் கத்துக்கலாம் வாங்க..

வரைகலை மென்பொருள்களில் அருமையானதும்,எளிமையான மென்பொருள்களில் அடோப் நிறுவனத்தின் போட்டோஷாப் உலகஅளவில் முதன்மையானது. ஒவ்வொரு கனிணியிலும் இருக்கவேண்டிய அருமையான மென்பொருள் ஆகும்.

இந்த மென்பொருளில் டிசைன் செய்வதற்கு அடிப்படை தகவல்கள் தெரிந்து கொண்டால் யாரும் டிசைன் செய்யலாம்.கற்பனைத்திறன் இருந்தால்போதும்.அதை நமக்கு எளிமையாகவும்,அருமையாகவும் சொல்லித்தரும் தளங்களை இன்று பார்க்கலாம்.

இதில் டிசைன் செய்த சில நகைக்கவைக்கும் படங்களை பார்த்துவிடலாம்.



கேக்கறவன் முட்டாளா இருந்தா எருமை ஏரோப்ளேன் ஓட்டுமாம்-ன்ற பழமொழி கேட்டிருப்பிங்க...இங்க யானை பைக் ஓட்டுது பாத்திங்கில்ல...



 இந்தமாதிரி பூனையை புலி ஆக்கலாம்.கற்பனைக்கு வானமே எல்லை.


உங்க மௌஸையும் எதுக்கும் சோதனை பண்ணிடுங்க..கடிச்சி வச்சிரப்போவுது.ஹி.ஹி..

தமிழில் போட்டோசாப் பாடம் என்ற இந்த தளத்தில் எளிமையான முறையில் சொல்லித்தருவது போல வேறு எங்கும் நீங்கள் பார்க்க முடியாது.வெறுமனே டூல்களின் பயன்களை சொன்னால் கற்றுக்கொள்பவர்களுக்கு புரியாது என்று ஒவ்வொ படிநிலையையும் படங்களுடன் விளக்கும் இவருடைய பாடங்களை பார்த்தால் நீங்கள் இந்த மென்பொருளை கற்றுக்கொள்வது உறுதி.பிளாக் ஆரம்பித்து பல வருடங்கள் ஆகியும் யாராவது நம்மை பின்தொடர்வார்களா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் ஒரு சிலருக்கு(நான் என்ன சொல்லல) மத்தியில்(அதுக்கு நீ முதல்ல உருப்படியா ஏதாவது எழுதணும்) இவர் ஆரம்பித்த ஒரு வருடத்திற்குள் 835 பின்தொடர்பவர்களை பெற்றிருக்கிறார் என்றால் இந்த தளத்தின் சிறப்பை புரிந்து கொள்ளுங்கள். 61 பாடங்கள் போட்டோசாப்பில் முடித்துள்ள திரு.கான் அவர்கள் அடுத்ததாக கோரல்ட்ரா பற்றிய பாடங்களை ஆரம்பிக்க இருக்கிறார் என்பது வரைகலை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி.

வேலன் என்பவருடைய இந்த தளத்திலும் எளிமையான போட்டோசாப் பாடங்கள் நிறைய இருக்கிறது.சுவாரஸ்யமான சிறிய அளவுள்ள மென்பொருள்களையும்,குழந்தைகளுக்கு பயன்படும் மென்பொருள்களையும் தருவது இந்த தளத்தின் சிறப்பு.

எஸ்.கே அவர்களுடைய மனம்+ தளத்தில் அடோபி நிறுவனத்தின் போட்டோசாப் மட்டுமன்றி பிளாஸ்,பையர் வொர்க்ஸ் சம்பந்தமான பதிவுகளும்,மனோதத்துவம் படித்திருப்பதால் அது சம்பந்தமான பதிவுகளும் சுவாரஸ்யமான வகையில் தொகுத்துள்ளார்.

அனிமேசன் துறையில் உங்களுக்கு ஆர்வமிருந்தால் கருப்பு பெட்டி என்ற இந்த தளத்தில் அதைப்பற்றி சில கட்டுரைகள் எழுதியுள்ளார்.உலகப்படங்களையும்,இந்தியபடங்களையும் அனிமேசன் பார்வையில் விமர்சனங்களும் உண்டு இந்த தளத்தில்.

தோழமை என்ற இந்த தளத்திலும் சுவாரஸ்யமான போட்டோசாப் பாடங்களும்,நம் பிளாக்கை அழகுபடுத்தும் சில கோடிங்குகளும்,வித்தியாசமான மென்பொருள்களும் கிடைக்கபெறுகிறது.

பொன்மலர் என்பவருடைய இந்த தளத்தில் தொழி்ல்நுட்பம்,மென்பொருள்கள் பற்றி விளக்கமான கட்டுரைகளை எழுதி வருகிறார்.பாஸ்போர்ட் போட்டோவைப் பற்றிய இந்த பதிவு நிச்சயம் பலபேருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

ப்ரியமுடன் வசந்த் அவர்களின் கற்பனை போட்டோசாப்பில் புகுந்து விளையாடியிருப்பார்.ரசிக்கத்தக்க வகையில் போட்டோசாப்பை பயன்படுத்தியிருப்பார்.இவருடைய தளத்தில் போட்டோசாப்பை கற்றுத்தரவில்லை.ரசிக்கவைக்கிறார்.

மீண்டும் நாளை தொழில்நுட்ப பதிவுகளுடன் சந்திப்போம்.




Tuesday, May 24, 2011

சொல்லித் தெரிவதில்லை ஒளிப்படக்கலை..!!

ஆம்..பார்த்தால்தான் தெரியும் ஒளிப்படங்களின் அருமை.



"மனிதனுக்கு மனிதனைப் பற்றிய விளக்கமளிக்கக்கூடிய மாபெரும் சக்தி ஒளிப்படக்கலை" - எட்வர்டு ஸ்டிச்மென்.




"கற்பனைத்திறன் ஓர் ஒளிப்படக்கலைஞனுக்கு 'ஆடம்பரத்'தேவையில்லை..!!மாறாக,அவசியம் தேவையாகும்..!! - ஜீன் ஹியூஸ்டன்.




"ஆயிரம் வார்த்தைகள் சொல்லாததை ஒரு முழுமையான ஒளிப்படம் சொல்லும்..!!" - நெப்போலியன்.




"ஒளிப்படம் எடுத்தலும்,ஓவியக்கலைபோல் ஓர் அரியகலையாகும். காரணம்,இரண்டும் அழகினை தேடுவதையே நோக்கமாக கொண்டது..!!" - ஜீலியா மார்கரெட்


                                      

மேலேயுள்ள பொன்மொழிகள் எல்லாம் நான் சார்ந்துள்ள புகைப்படத்தொழில் குறித்தவை.படங்கள் எல்லாம் நான் எடுத்தவை,(ஒரு வௌம்பரம்...)இன்று நான் படிக்கும் சில ஒளிப்படங்கள் பற்றிய தளங்களை தருகிறேன்.வலைச்சரத்தில் இருக்கும் ஒளிப்பட ஆர்வலர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

எளிய தமிழில் ஒளிப்படங்கள் எடுப்பது,கேமராக்களை தேர்ந்தெடுப்பது,எடுத்த படங்களை அலசி ஆராய்வது,உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள்,நிபுணர்களின் ஒளிஓவியங்கள்,ஒளிப்படபோட்டிகள் நடத்துவது என தமிழின் முழுமையான ஒரு ஒளிப்படத்தளம் இது என்றால் மிகையாகாது.

சினிமாவில் ஒளிப்பதிவாளராக இருந்து கொண்டு தான் கற்ற கலையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு கலைஞர்.தொழில்நுட்பங்கள்,புதிய கருவிகள் பற்றிய விளக்கங்கள்,உலகத்திரைப்படங்கள் பற்றிய விமர்சனங்கள் என இவருடைய தளமும் ஒளிப்பட ஆர்வலர்களுக்கு பயனுள்ளது.

ஆனந்த் விஜய் என்பவரின் தளத்தில் வித்தியாசமான ஒளிப்படங்கள் கொட்டிக் கிடக்கிறது.வித்தியாசமான கோணங்களில் அசத்தியிருப்பார்.

சர்வேசன் அவர்களின் படங்களும் பாடங்களும் சுவாரஸ்யமானவை.

ராமலக்ஷ்மி அவர்களின் படங்கள் குறித்த ஆர்வம் வியப்புக்குரியது. வாழ்க்கையை சுவாரஸ்யமாக பார்க்கும் பெண்மணி.

பறவைகள் பலவிதம்.ஒவ்வொன்றும் ஒருவிதம்.இவருடைய கேமராக்கண்களில் மாட்டிய பறவைகளின் அழகை பாருங்கள்..!!

இவருடைய தளத்திலும் பறவைகளின் படங்கள் நன்றாக இருக்கும்.

நேர்த்தியான தொழில்முறை ஒளிப்படங்கள் இந்த தளத்தில் உள்ளது.

புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனின் தளம் இது.

இவர்களுடைய வரிசையில் முன்ணனி ஒளிப்படகலைஞர் விடுபட்டுள்ளார்.அவர் எப்போதும் விளம்பரங்களை விரும்புவதில்லை என்பதாலும்,மல்லிகைப்பூவுக்கு விளம்பரம் தேவையில்லை என்பதாலும் இங்கு அவரைப்பற்றி எழுதவில்லை.கண்டிப்பாக நீங்கள் அவரைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால் இங்கு போய் பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு தெரிந்த ஒளிப்படகலைஞர்களின் இணைப்பை கொடுத்தால் அனைவரும் பயனடைவோம்.நன்றி.

                                          

    



Monday, May 23, 2011

வலைச்சரத்துக்கு வணக்கம்..!!


அன்பும்,அறிவும் நிறைந்த பதிவுலக தோழர்களுக்கு சேலம் தேவாவின் இனிய வணக்கங்கள்..!!

ஒவ்வொரு மனுசனுக்கு ஒவ்வொரு பீலிங்ஸ்...இந்த தத்துவத்தை அடிப்படையாக கொண்டு வெற்றிகரமாக இயங்கும் வலைச்சரத்தில் எனது பங்களிப்பையும் இருப்பதை நினைத்து பேருவகை கொள்கிறேன். 
என்ன இது வலைச்சரத்துக்கு வந்த சோதனை என்று யாரும் நினைத்து வருந்தவேண்டாம்.ஒரு வாரம் மட்டும் பொறுத்துக்கொள்ளுங்கள்.நான் கற்றதையும்(படிச்சது பத்தாங்கிளாஸ்) பெற்றதையும்(பெரிய சுஜாதான்னு நெனப்பு) பற்றி எழுதுகிறேன்.

பொதுவாகவே எனது அறிமுகத்தை இணையத்தில் இருக்கும் ஒரு தளம் விடாமல்(Facebook,Twitter,Buzz,etc.,) செய்து கொண்டிருந்தவன் இப்போது வலைச்சரம் வேறு கிடைத்ததால் மௌஸ், கீபோர்டு புரியாமல் ஆடிக்கொண்டிருக்கிறேன்.ஹி.ஹி..முதல்இடுகை முழுவதும் எனது தளத்தில் தெளித்த சிந்தனை சிதறல்களை வலைச்சரத்தில் தெளிக்கிறேன்.

இன்றுள்ள பாஸ்ட்புட் கலாச்சாரத்தில் உடல்நலம் குறித்து யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை.அட்டாக் வந்தபிறகுதான் ஆஸ்பத்திரிக்கு செல்கிறார்கள்.இவர்களுக்காகவே நடைபயிற்சி ,சாதத்தை தவிர்ப்பது ,தலை"மை" ,காய்ச்சலால் நான் பட்டது ,இதுபோன்ற உடல்நலம் சம்பந்தப்பட்ட பதிவுகளை படித்து பயனடையுங்கள்.தொலைபேசியால் ஏற்படும் கஷ்டங்களை சொல்லும் பதிவு.

எங்கள் ஊரைக் குறித்து நான் இட்ட இந்த பதிவு சேலத்து வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியது.

இப்போது தொல்லைக்காட்சிகளில் குழந்தைகளை வைத்து நடத்தப்படும் பாட்டுப்போட்டிகள் பார்க்கும்போது எனக்கு ஏற்பட்ட கோபத்தில் உதித்த பதிவு.

அரசியல்வாதிகள் செய்யும் ஊழலை பற்றிய விழிப்புணர்வு பதிவு.

நம்முடைய கருத்துகளை உலகத்திற்கு பரப்ப இலவசசேவையாக ப்ளாக்கரை தரும் கூகிள் நிறுவனத்தின் பெருமையை சொல்லும் பதிவு..!!(யாராவது கூகிள்ல சொல்லி என்ன கொ.ப.செ ஆக்குங்கப்பா..)

எப்படி விளையாட வேண்டும் என்பதை ஒரு திறமையான விளையாட்டு வீரரின் பார்வையில் எழுதப்பட்ட பதிவு.

பழமொழிகளின் சிறப்பை விளக்கும் பதிவுகள்.

வாழ்த்து சொல்லி நான் வாங்கிகட்டிக்கொண்டது.

இதுபோல் சொல்லிக்கொண்டே போகலாம்.(இவ்ளோதான் தேறிச்சு)ஆனால்,படிப்பதற்கு நீங்கள் இருக்க வேண்டுமே..?!அதனால் எனது சுயபிரதாபங்களை இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.மீண்டும் நாளை சந்திப்போம்.

சேலம் தேவா பொறுப்பேற்க - கவிதை வீதி சௌந்தர் விடை பெறுகிறார்.

அன்பின் சக பதிவர்களே !

22.05.2011 - வார இறுதி நாளான நேற்று, நண்பர் கவிதை வீதி சௌந்தர் , ஏற்ற பொறுப்பினைச் சரிவரச் செய்த மகிழ்ச்சியுடன் நம்மிடமிருந்து, விடை பெறுகிறார். இவர் ஆறு இடுகைகள் இட்டு, ஏறத்தாழ இருநூற்று ஐம்பதிற்கும் மேலாக் மறுமொழிகள் பெற்றுள்ளார். இவரது வாரத்தில், இவர் 48 பதிவர்களை அறிமுகம் செய்து 39 இடுகைகளை அறிமுகம் செய்திருக்கிறார். வடிவமைப்பு நன்ற்கச் செய்திருந்தார். அறிமுகம் செய்யப்பட்ட பதிவர்களில் பெரும்பான்மையினர் புதிய பதிவர்களாவர்.

நம்மிடமிருந்து விடை பெறும் நண்பர் கவிதை வீதி சௌந்தரை, நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

இன்று துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் நமது நண்பர் சேலம் தேவா. இவர் தேவாவின் தேடுதல் என்ற வலைப்பூவினில் எழுதி வருகிறார். தேவராஜன் என்ற இயற்பெயரினைச் சற்றே சுருக்கி, ஊர்ப் பெயரையும் சேர்த்து, சேலம் தேவா என்ற பெயரில் எழுதி வருகிறார். இவர் சேலத்தில் ஒளீப்படக் கலைஞராகப் பணியாற்றுகிறார்.

தமிழ் மீது கொண்ட அளவற்ற காதலால் அனைத்து தமிழ் வலைப் பதிவுகளையும் படித்துக் கொண்டிருந்தவர் நகைச்சுவை அதிகம் பிடிக்கும் என்பதால் சொந்தமாக வலைப்பதிவு தொடங்கி அதில் நாட்டுக்கு தேவையான பல நல்ல கருத்துகளையும்,பதிவுகளையும் எழுதி வருகின்றார். வாழ்க்கையில் அனைவரும் ஏதாவதொன்றை தேடிக்கொண்டே இருப்பதை மனதில் வைத்து "தேவாவின் தேடுதல்"என்ற வலைப்பதிவை இயக்குகிறார்.அனைத்தையும் ரசிப்பவர்.

நண்பர் சேலம் தேவாவ்னை வருக வருக ! அறிமுகப் அடலம் துவக்குக என வாழ்த்தி வரவேற்று மகிழ்கிறேன்.

நல்வாழ்த்துகள் சௌந்தர்
நல்வாழ்த்துகள் தேவா

நட்புடன் சீனா

Saturday, May 21, 2011

வர்களை ம்பி த்தனைபேரா.. ன்ன ச்சரியம்.. (Top 10 Blogs)

வாங்க நண்பர்களே... வணக்கம்..

பொதுவாக பதிவெழுத வரும்போது தன்னுடைய பதிவுகளுக்கு பின்னுட்டங்கள் வராதா, யாராவது தன்னுடைய தளத்தை யராவது பின்பற்றமாட்டார்களா என்ற ஏக்கம் இருக்கும். அப்படி பின்னூட்டங்கள் மற்றும் பாளோவர் வந்துவிட்டால் மிகவும் மகிழ்ச்சியடைவோம்....


தன்னுடைய பதிவுகள் மீது நம்பிக்கை வைத்து, பதிவுலகில் நயமான பதிவுகளிட்டு....  படிப்பார்கள் மத்தியிலும் மற்ற பதிவர்கள் மத்தியிலும் நல்ல பெயர் வாங்கி அதிகமான பின்னூட்டங்கள் பாளோவ்ர்ஸ் பெறுவது அவ்வளவு சாதாரண வேலையல்ல...

அப்படி அதிகமான FOLLOWERS  பெற்ற  TOP 10  பதிவர்களை இன்று பார்ப்போம்.....

முதல் இடத்தில் உள்ளவர்  

 வகுப்பறை

 2007 ஜனவரி 14-ம் தேதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது..
இந்த தளத்தின் மொத்த பின் தொடர்பவர்கள் : 2355
இது வரை வெளிவந்த பதிவுகள் : 841
அதிக பட்ச பதிவு வகுப்பறை என்ற பெயரில் : 750
இத்தளம் பெற்றுள்ள ஹிட்ஸ் : 18 லட்சத்திற்கும் மேல்...
2009 தமிழ்மண ரேங்கிங் : 

இரண்டாவது இடத்தில் உள்ளவர்  


 2003 அக்டோபர் 27-ந் தேதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது..
இவரின் வாலைப்பூவை பின்பற்றுபவர்கள் : 1688
இது வரை இவர் இட்டுள்ள பதிவுகள் : 3343
அதிக பட்சமாக அரசியல் சார்ந்த பதிவுகள் : 836.
இத்தளம் இது வரை பெற்றுள்ள ஹிட்ஸ் : 16 லட்சத்திற்கும் மேல்...

மூன்றாவது இடம் :

! ❤ பனித்துளி சங்கர் ❤ !

இத்தளம் 2009 ஆகஸ்ட் 5-ல் ஆரம்பிக்கட்டது.
இவரின் வாலைப்பூவை பின்பற்றுபவர்கள் :  1444
இதுவரை வெளியிடப்பட்டுள்ள பதிவுகள்  : 710
பெற்றுள்ள ஹிட்ஸ் : 674000 த்திகு மேல்
2009 தமிழ்மண ரேங்கிங் :  22

‌நான்காவது இடம்

முதல் பதிவை 2006 அக்டோபர் 11 ம் தேதி வெளியிட்டப்பட்டுள்ளது.
இத்தளத்தை பின்தொடர்பவர்கள்  1428
இவர் இது வரை வெளியிட்டுள்ள பதிவுகள் 822
2010 தமிழ்மண   தரவரிசை 2
ஐந்தாவது இடம் :


இவர் முதல் பதிவை 2006 அக்டோபர் 11 ம் தேதி வெளியிட்டார்.
இத்தளத்தை பின்தொடர்பவர்கள்  1091
இவர் இது வரை வெளியிட்டுள்ள பதிவுகள்   364
பெற்றுள்ள பின்னூட்டங்கள் : 22149
2010 தமிழ்மண   தரவரிசை 6

ஆறாவது இடம் :


இவர் தன்னுடைய முதல் பதிவை 
ஏப்ரல் 14 2008ம் தேதி வெளியிட்டார்.
இத்தளத்தை பின்தொடர்பவர்கள்  1058
இவர் இது வரை வெளியிட்டுள்ள பதிவுகள் 818
2010 தமிழ்மண   தரவரிசை 8
ஏழாவது இடம் :


இவர் தன்னுடைய முதல் பதிவை 
2010 பிப்ரவரி 22 ம் தேதி வெளியிட்டார்.
இத்தளத்தை பின்தொடர்பவர்கள்  1047
இவர் இது வரை வெளியிட்டுள்ள பதிவுகள் 454
பெற்றுள்ள பின்னூட்டங்கள் : 22144

எட்டாவது  இடம் :

வேலன்

இத்தளம் ஆர‌ம்பிக்கப்பட்டது  2008 நவம்பர்.
இத்தளத்தை பின்தொடர்பவர்கள் 983
இவர் இது வரை வெளியிட்டுள்ள பதிவுகள் 555
பெற்றுள்ள ஹிட்ஸ் 635000



ஒன்பதாவது  இடம் :

 உண்மைத்தமிழன்  

இத்தளம் ஆர‌ம்பிக்கப்பட்டது  டிசம்பர் 2005.

இத்தளத்தை பின்தொடர்பவர்கள் 919
இவர் இது வரை வெளியிட்டுள்ள பதிவுகள் 740
பெற்றுள்ள ஹிட்ஸ்  9 லட்சம்

2010 தமிழ்மண   தரவரிசை 3


பத்தாவது  இடம் :


குசும்பு 
இத்தளம் ஆர‌ம்பிக்கப்பட்டது  2007  மார்ச்

இத்தளத்தை பின்தொடர்பவர்கள் 789
இவர் இது வரை வெளியிட்டுள்ள பதிவுகள் 450

 
நண்பர்களே இவ்வளவு பின்தொடர்பவர்களை பெருவது என்பது சாதராண விஷயம் அல்ல. அதை பெற அவர்கள் அளித்துள்ள உழைப்பை நாம் பாராட்டியே ஆகவேண்டும். அவர்கள் தொடர்ந்து சிறப்பாக வளர என்வாழ்த்துக்கள்..
 

இத்தகவல் என் அறிவுக்கு எட்டிய அளவுதான். இதில் மாற்றம் இருக்கலாம்.
யாராவது அதிக FOLLOWERS   பெற்றிருந்தால் தெரிவிக்கவும்.

(இத்தகவல்கள் இறுதியாக திரப்பட்ட நாள் : 18-05-2011)


(இவை Blogspot மட்டுமே பொருந்தும் .com மற்றும் Wordpress -க்கு பொருந்தாது.)