வலைச்சர ஆசிரியர் திங்கள்
எனக்கே நம்ப முடியாத விஷயம் இது. நிறையபேரு வலைச்சரம் ஆசிரியராக இருந்து சிறப்பாக செய்திருக்கிறார்கள். பதிவுலகைப் பொறுத்தவரை நான் ஒரு கத்துக்குட்டிதான். தீவிரமாக பதிவு எழுத ஆரம்பித்தே 6- மாதங்கள்தான் ஆகிரது. நிறைய பேரு ஒரு வருடம் , இரண்டு வருடம் , மூன்று வருடம் என எழுதுபவர்கள். அவர்களுக்கு முன்பு என்னால் இந்த வலைச்சர ஆசிரியர் பொறுப்பை திறமையாக செய்யமுடியுமா என்று ஒரு தயக்கம் இருந்தது. ஆனாலும் தேடி வரும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும் நினைத்தேன். களத்தில் இறங்கிவிட்டேன்.
இன்று முதல் நாள் அறிமுகமாக நான் தேர்ந்தெடுத்திருக்கும் பதிவர்கள் நாம் ஏற்கனவே அறிந்திருக்கும் பிரபல பதிவர்கள்தான்.அதனால தலைப்பையும் பூக்கடைக்கே விளம்பரமா? என்கிர தினுசில் பிரபல பதிவர்களுக்கே அறிமுகமா? என்று ஆரம்பித்திருக்கேன்.
திருப்பதிக்கே லட்டா?, திருனெ வேலிக்கே அல்வாவா?என்கிர தினுசில் இன்றைய அறிமுகம்.
பில்ட் அப் எல்லாம் அமர்க்களமா இருக்கே?
1. என் முதல் அறிமுகமாக நம் வலைச்சரத்தையே குறிப்பிட விரும்புகிறேன்.பல பதிவர்களுக்கும் வலைச்சரம் ஆசிரியர் என்னும் பொறுப்பைக்கொடுத்து பெருமைப்படுத்தி வரும் வலைச்சரம் பொறுப்பாசிரியருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வலைச்சரத்தை முதன் முதலாக அறிமுகம் செய்ய நினைக்கிறேன் . இதுவரை யாராவது வலைச்சரத்திலேயே வலைச்சரத்தை அறிமுகம் செய்திருகாங்களான்னு தெரியலை.இனிப்பு உருண்டையில் எந்தப்பகுதி இனிப்ப கேட்டால் நம்மால் என்ன பதில் சொல்ல முடியுமோ அதேபதில் தான், வலைச்சரத்தில் எந்த பதிவு எனக்கு பிடிக்கும் என்று கேட்டால். வலைச்சரத்தில் ஒருபதிவருக்கு அறிமுகம் கிடைத்துவிட்டால் அவர்களின் வாசகர்களும் அதிகரிப்பதை நாம் எல்லாருமே கண்கூடாக கண்டிருக்கோம்.
(இது கொஞ்சம் ஓவரா இருக்கோ?)
2. rockzsrajesh என்னும் வலைபூவில் எழுதிவரும் ராஜேஷ் என்னும் பதிவர் மிகச்சமீபமாக எனக்கு அறிமுகமான மிக அருமையான நண்பர். வேலைப்பளு காரணமாக இவரால் நிறைய பதிவுகள் எழுதமுடிவதில்லை. ஆனாலும் எதை எழுதுகிறாரோ அதை படிப்பவர்கள் நன்கு புரிந்து கொள்ளும் விதத்தில் அழுத்தமாக தெளிவாக சொல்வதில் திறமையானவர்.இவரின் பதிவில் எனக்குப்பிடித்தது தமிழ் வழி கல்வி அவசியமா? என்னும் பதிவு நல்லா இருக்கு. தன் கருத்துக்களை நன்றாகச்சொல்லி இருக்கார். அதுமட்டுமில்லை .tamilrockz என்றும் ஒரு வலைப்பூவும் நடத்துகிறார். இதில் என்ன ஸ்பெஷல் என்றால் எழுத ஆர்வமுள்ள நண்பர்களுக்கு வாய்ப்புகொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தி வருகிரார். நிறைய நண்பர்கள் இந்தவலப்பூவில் எழுதி பயனடைந்து வருகிரார்கள் ( நண்பேண்டா).
அதுமட்டுமில்லே நண்பர்கள் பேசி மகிழ ஒரு chat box நிறுவிஇருக்கார்.அதில் எல்லா நண்பர்களும் மிகவும் சந்தோஷமாக கலந்துரையாடல் செய்கிறார்கள். வேலைப்பளுவினால் டென்ஷனோ அல்லது மனது பாரமாகவோ இருக்கும் சமயம் இந்த சாட் பாக்சில் போய் ஒரு அரைமணி நேரம் கலகல்ப்பாகப் பேசி வந்தால் மனசே ரிலாக்ஸ் ஆகி மனது பூரா ஒரு உற்சாகம் நிரம்பியிருக்கும். இந்த சாட்பாக்ஸ் வசதி வேறு எந்த வலைபூவிலுமே இதுவரை நான் பார்த்ததில்லை. ரொம்ப நல்லா இருக்கு. நண்பர்களை மதிக்கும் மிக நல்ல நண்பர்.
சோப்பு நழுவாம எப்படி குளிப்பது என்று ஒரு நகைச்சுவைப்பதிவு போட்டு எல்லாரையும்
சிரிக்க வைக்கிறார் .
3. அடுத்து பாகீரதி நம்ம எல்லாருக்கும் நன்கு பரிச்சயமான எல்.கே. அவர்கள் .பருப்பில்லாமல் கல்யாணமா? என்ற சொல்வதுபோல கார்த்தி இல்லாம பிரபல பதிவர்கள் அறிமுகமா? கார்த்தி, இதுவரை எத்தனையோ பேரு உங்களை இந்த வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்காங்க, இப்போ அந்த லிஸ்டில் என்னையும் சேர்த்துக்கோங்க. இவரின் பதிவு எல்லமே எனக்கு பிடிக்கும் குறிப்பாக ஜகத்குரு. துப்பறீயும் தொடரா, லவ்ஸ்டோரியா, விழிப்புணர்வு பதிவா எல்லாவற்றிலுமே தன் திறமையை நிரூபிப்பவர். கவிதை எழுதுவதிலும் திறமையானவர். உதவுவோம் வாருங்கள். நல்லா இருக்கு.
4. தக்குடு இவரின் பேரைக்கேட்டாலே சிரிப்பு பொத்துகிட்டு வரும். அப்படி ஒரு நகைச்சுவை ததும்பும் எழுத்துக்கு சொந்தக்காரர். ஒவ்வொரு பதிவுமே நகைச்சுவை தூக்கலாக இருக்கும்படி எழுதும் திறமைசாலி. உம்மாச்சி காப்பாத்துன்னும் ஒரு வலைபூ எழுதி வருகிரார். அதில் முழுவதும் ஆன்மீக உணர்வு ததும்ப எழுதியிருப்பார். இரண்டு வலைப்பூவுமே ரசிக்கும் படி இருக்கு எனக்குப்பிடித்தபதிவுன்னா சாஸ்தா ப்ரீதி என்னும் பதிவுதான். இவரின் வலைப்பூ பக்கம் போனா மனம் விட்டு, வாய்விட்டு சந்தோஷமா சிரிச்சுட்டு வரலாம். நேயர் விருப்பம்.
5. பலே பிரபு முதலில் பலேபாண்டியா என்ற பெயரில் வலைப்பூ நடத்திவந்தார். இப்போது இரண்டு மாதங்கள் முன்பு அந்தவலைப்பூவின் பெயரை பலேபிரபு என்று மாற்றி இருக்கிறார். நிறைய பஸ்ஸல் க்விஸ் கேள்விகள் கேட்டு வாசகர்களிடம் பதில் சொல்லச் சொல்பவர். நிறைய தொழில் நுட்ப பதிவுகளும் எழுதி வருகிரார்.இவரின் வலப்பூவில் எனக்குப் பிடித்த பதிவு ஸ்ஸலுக்கு விடை சொல்லு விருது பெற்றிடுப பதிவு.கம்ப்யூட்டர் வேகமாக இயங்க.
6. பாமரன் பக்கங்கள் என்ற வலைப்பூவில் வானம்பாடிகள் என்பவர் பலதரப்பட்ட ரசனைகளை எழுத்தில் கொண்டு வரும் திறமைசாலி. ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு ரசனையை வெளிப்படுதுகின்றன. எனக்கு நிழலின் அருமை வெயிலில் என்ற பதிவு பிடித்தது.
7 பி கே பி என்பவர் பி கெ பி என்கிற பெயரிலேயே வலைப்பூ வைத்திருக்கிரார். தொழில் நுட்பத்தகவல்கள் பற்றி நிறைய எழுதி இருக்கிறார். எனக்குப் பிடித்த பதி வு மெல்ல விடு என்னும் பதிவில் மெதுவாக மூச்சை விட்டு அதிக நாட்கள் உயிர் வாழும் விதம் பற்றி சொல்கிறார்.சக்தே இந்தியா நல்லா இருக்கு.
8. பிச்சைக்காரன் என்னும் வலைப்பூவை பார்வையாளன் என்பவர் நடத்தி வருகிரார். தேர்தல், அரசியல் பற்றி நிறைய எழுதி இருக்கார். உலகைப் படைத்தது கடவுளா, அறிவியலா என்னும் தலைப்பில் வந்துள்ள பதிவு நல்லா இருக்கு.ஏன் ,ஏன், ஏன்
9.பிரியமுடன் ரமேஷ் என்னும் வலைப்பூ பிரியமுடன் ரமேஷ் எழுதிவருகிறார். நிறைய திரை விமர்சனங்கள். சிறு கதைகள்.என்று எழுதி வருகிறார். எனக்குப்பிடித்த சிறுகதை உயிரின் விலை நல்லா எழுதி இருக்கார்.கண்கள் இரண்டால் சிறுகதை
10.வேடந்தாங்கல் எனும் வலைப்பூவுக்கு சொந்தக்காரர் கருன். இவர் வலைப்பூ ஒரு பல்சுவை அங்காடி மாதிரி இருக்கு, ஒரு பதிவில் வாழ்க்கையின் முரன்பாடுகளைப் பற்றி சொல்கிரார். அடுத்த பதிவில் சினிமா செய்திகள், அடுத்துஅன்னையின் அருள்மொழிகள் என்று ஆன்மீகம்பற்றி, அடுத்து , நகைச்சுவையாக ஹி, ஹி, காமெடி பஜார்னு இருக்கு கொஞ்சம் அரசியலும் பேசுகிறார். எனக்கு பிடித்தது, வாழ்க்கையில் நாம் தவற விட்ட தருணங்கள். என்கிற பதிவு. உனக்குள்ளேயே நீ விலகி நில்
11.சூரியனின் வலை வாசல் வலைப்பூ அருண் பிரசாத் நடத்துகிறார். ஒருபதிவில்2010, நிகழ்ச்சிகளை அசை போ்டுகிறார். அடுத்ததில், பதிவுலக பஞ்ச் டயலாக் பற்றி காமெடி சொல்றார், அடுத்து, மொரீசியஸ் தைப்பூசம் காவடி பற்றி எழுதுகிறார். புதிர் போட்டு தமிழ் சினிமாக்களை கண்டு பிடிக்கச்சொல்கிறார். எனக்குப் பிடித்த பதிவு ஊழலுக்கு எதிரான முதல் அடி- அண்ணா ஹஸாரே.
12 தமிழ்வாசி என்னும் வலைப்பூ தமிழ்வாசி பிரகாஷால் நடந்து வருகிறது. தினசரி எப்படித்தான் ஒரு பதிவு போட இவரால் முடிகிரதோ என ஆச்சர்யப்பட வைப்பவர். ஒரு பதிவில் கனிமொழி கைதாவாரா என்று அரசியல் பேசறார் , தனபாலு, கோபாலுவை வைத்து ரகளை செய்கிறார், சினிமா கிசு கிசுவையும் விட்டு வைக்கலை. டண் டணக்கான்னு ஜோக்கும் சொல்றார். மின்சாரமே எங்கே ஒளிந்திருக்கேன்னு தேடுறார் , இப்ப சமீபத்திய பதிவில் ப்ளாக் திடீரென தடை செய்யப்பட்டால்னு கேட்ட நேரம் அடுத்த நாளே எல்லா ப்ளாக்கும் ஓபன் ஆகவே இல்லே. காக்கை உக்கார பனம்பழம் விழுந்த கதைதான் ஆச்சு. எனக்குபிடித்த பதிவுன்னா தனபாலும், கோபாலும் அடிக்கர லூட்டி தான்.
13 நண்பேன்டா வலைப்பூவுக்கு சொந்தக்காரர் மனோஜ். இவரின் வலைப்பூவில் சினிமா செய்திகளும் விஜய் டி. வி. டாக் ஷோ நிகழ்ச்சிகளும் நிறைய இருக்கு. காபி வித் அனு எனக்கு பிடித்து. சிங்கம் சிங்கிளா சிங்கப்பூர் போகுது.
14.தொப்பி தொப்பி வலைப்பூ தொப்பி தொப்பி எழுதுகிரார். ஒருபதிவில் ஜனநாயகத்துகாக வரச்சொல்லி பதிவர்களுக்கு அழைப்பு அனுப்புகிரார்.உலக மகளிர் தினம் பற்றி காட்டமான ஒரு பதிவும் இருக்கு. அரசியல் பற்றியும், சாய்பாபா மரணம் ப்ற்றியும் சொல்கிரார். எனக்குப்பிடித்தது கொக்கா, மக்கா பதிவுதான்.
15. நான் கண்ட உலகம். speed master வலைப்பூ. அவரின் வலைப்பதிவை பின்பற்றுபவர்களுக்கு நன்றி சொல்கிறார். எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்னு மிரட்டறார். .கேட்க்கக்கூடாத கேள்விகளும் ஏடாகூட பதில்களும் சொல்கிறார். தேவையான ஆணி என்று ஒரு முன்னெச்சரிக்கை பதிவும் போடாராரு. எனக்கு பிடித்தது கல்கத்தா பதிவுதான்.
16.அந்நியன்2 வலைப்பூ அந்நியனுக்கு சொந்தமான வலைப்பூ. ஹா, ஹா, வி. ஐ. பி சூட்கேஸ் என்று சிரிக்கச்சொல்றார். அவர் வசிக்கும் தீவு பற்றி சுவாரசியமாகச் சொல்கிறார், மனித இனம் நாயை விடக் கேவலமானதா என்கிறார். பெண்ணாய்ப் பிறந்தால் இதெல்லாம் சகஜமாம். அரசியல்வாதிகள் திருந்துவது எப்போதுன்னு ஆணித்தரமாக கேட்கிறார். எனக்குப் பிடித்த பதிவும் இதே.
17.அமைதி அப்பா வலைப்பூவுக்கு சொந்தக்காரர் அமைதி அப்பா. விவசாயம் செய்வோம் வாருங்கள் என்று அழைப்பு விடுகிறார் . 30 நாட்கள் இடை வெளியில் அரசியலில் என்ன நடக்கும் என்று கணிக்கிறார் .தேர்வு முடிவு தெரிந்ததும் என்ன செய்ய வேண்டும் என்கிறார் எனக்குப் பிடித்தது. எந்தப்படிப் பில் சேரலாம்? என்கிற பதிவு .
18. பனித்துளி சங்கர் பனித்துளி சங்கர். கொட்டிக்கிடக்குதுன்னு அரிய குட்டித் தகவல்களை அள்ளித்தருகிறார். சரவெடியாக நகைச்சுவையும் சொல்கிறார். நினைவுச்சுவடுகள் என்று அமர்க்களமாக கவிதையும் சொல்கிறார். இன்று ஒரு தகவலில் தாமஸ் ஆல்வா எடிசனைப் பற்றி என்ற பதிவு எனக்கு பிடித்தது.
19. தமிழ்25- Aaqil muzammil வலைப்பூ. நிறைய தொழில் நுட்ப செய்திகள் பற்றி சொல்லி இருக்கார். இதைத்தான் ஏ ஜோக் என்பார்கள் என்கிறார். ஹிந்தி சினிமா, ஆங்கில சினிமா பற்றியும் சொல்கிரார். இன்னொரு புவி நாள் என்கிற விழிப்புணர்வு பதிவு எனக்கு பிடித்தது.
20. மாத்தியோசி ஓனர் ஆஃப் ஓ. வ. நாராயணன். பெண்பதிவர்கள் காமெடி கும்மியில் கலந்துக்கலாமா என்கிறார்.ஓட்டை வடைக்கு வந்த வாழ்வு என்று வலைச்சர ஆசிரியர் பொறுப்பு பற்றி கலக்கலா ஒரு பதிவில் சொல்றார் . வீட்டுக் குறிப்புகள் என்று பயம் காட்டறார் .ஒரே தடவையில் மூன்று பதிவு போட சொலித் தறார். நயந்தாராவை வைத்து சினிமாவும் பேசுகிறார். புரட்சித்தலைவியின் எழுச்சி என்று அரசியலும் சொல்றார் எனக்குப்பிடித்த பதிவும் இதேதான்.
21.சூர்யா கண்ணன் வலைப்பூவுக்கு சொந்தக்காரர் சூர்யாகண்ணன். பெரும்பாலும் தொழில் நுட்பச் செய்திகளையேபதிவாகப் போட்டிருக்கார். அனைவரும் படித்து பயன்படும் வகையில் இருக்கு. வீட்டைக்கட்டிப்பார் என்றும் ஒரு பதிவு போட்டிருக்கார். இது நல்லா இருக்கு. இணையத்தில் நேரத்தை வீணடிப்பதைத்தவிற்க.
22.பச்சைத்தமிழன் வலைப்பூ பாரி டி. மூர்த்தி நடத்துகிரார். ஆப்ரேஷன் ஆரியப்ட்டா தொடராக தொடர்ந்து வருகிறார். பெயர் சரித்திரமும் சொல்கிறார்.வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு ஆனந்த அதிர்ச்சியையும் வெளிப்படுத்தறார்.ஒரு மாணவரைப் பற்றி முடியாதது எதுவுமில்லை என்கிறார்.இது நல்லா இருக்குபழனியில் நடக்கும் கொள்ளை
23. மதியோடை, வலைப்பூவை ம. தி. சுதா நடத்துகிறார்.பதிவுலகில் சமூகப் பதிவாளனாக தன்னை முத்திரை குத்திய சாதனை பற்றி சொல்கிறார். பாத்திரமின்றி, விரகின்றி சுடச் சுட தேனீர் தயாரிக்கலாம் என்கிறார். பதிவுலகில் இருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள் என்கிறார். வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களையும் தீர்த்து விடுங்கள் என்கிறார். என் மலர் விழியைக்கண்டீங்களான்னு கவிதையும் சொல்கிரார். இது நல்லா இருக்கு,
24.வெங்கட் நாகராஜ் வெங்கட் நாகராஜ் பெயரிலேயே வலைப்பூ வைத்திருக்கார். ஃபட் ஃபட்டியான்னு தலைப்பில் டில்லியில் ஓடும் டெம்போக்களைப் பற்றி சொல்கிறார். காட்டுக்குள்ளே என்கிற தலைப்பில் வாக்காளர் அடையாள அட்டை விநியோகம் பண்ணினதை பற்றி சொல்கிறார், விடை தெரியாதகேள்விகளும் கேட்கிறார். சொர்க்கம் என்ற தலைப்பில்
பிறந்து வளர்ந்த ஊர் ஞாபகங்களைச்சொல்கிறார். இது நல்லா இருக்கு.
பிறந்து வளர்ந்த ஊர் ஞாபகங்களைச்சொல்கிறார். இது நல்லா இருக்கு.
25 .ஐ ஆம் சீரியஸ் வலைப்பூ தம்பி கூர்மதியானுக்கு சொந்தமானது. கிரிக்கெட் பற்றி நிறைய பதிவு போட்டிருக்கார். சகபதிவர் பற்றியும் எழுதி இருக்கார்.கள்ள ஓட்டைக் கண்டு பிடிக்கும் மிஷின் பற்றியும் சொல்கிறார்.சின்னச் சின்ன ஆசைகள் தன் சிறகை ஒடித்த ஆசைகள் பற்றியும் சொல்லி இருக்கார். இது நல்லா இருக்கு
மீண்டும் நாளை சந்திப்போம்.
வலைச்சர ஆசிரியர் லக்ஷ்மி அம்மா! சொல்லும்போதே சந்தோஷமா இருக்கும்மா...
ReplyDeleteநிறைய பதிவர்களை அறிமுகம் செய்து இருக்கீங்க... மிக்க நன்றி.
அடியேனையும் அறிமுகம் செய்தமைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்....
ஒரே பதிவில் இவ்வளவு பதிவர்கள் அறிமுகமா கலக்குங்க அம்மா ......
ReplyDeleteவெங்கட் முதல் வருகைக்கு நன்றிகள்.
ReplyDeleteதினேஷ் குமார், நன்றிங்க.
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
முதல் பதிவிலேயே இத்தனை பதிவர்களை அறிமுகம் செய்து மலைக்க வைத்துவிட்டீர்களே..
ReplyDeleteவலையுலகில் புதியவர்களுக்கு வழிகாட்டுதலாக இப்பதிவுகள் இருக்கும் அம்மா.
அடேங்கப்பா ஒரு பதிவில் இத்தனை அறிமுகங்களா? அருமை மேடம். வாழ்த்துகள்
ReplyDeleteகல்யாண ஆத்துல,மத்த விஷேஷ இடங்கள்ல போட்டோகாரர் ஓடி ஆடி எல்லாரையும் படம் பிடிப்பார், ஆனா அவரை நிக்க சொல்லி யாரும் ஒரு போட்டோ எடுக்க மாட்டா. ஆனா நம்ப லக்ஷ்மி அம்மா வலைசரத்தையே அறிமுகம் பண்ணி கலக்கிட்டாங்க. வாழ்த்துக்கள்! இந்த சுண்டெலியையும் மறக்காம சொன்னதுக்கு ஒரு ஸ்பெஷல் நன்னிஹை!..:)
ReplyDeleteஎன்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி
ReplyDeleteஉண்மையில் பெரியவங்க பெரியவங்கதான்
ReplyDeleteஎவ்வளவு தெளிவா
அழகாக இருக்கு
நான் பார்த்திலேயே சிறப்பான தொகுப்பு இதுதான்
நன்றி.. என்னைபற்றி சொன்னதற்கு...
ReplyDeleteமற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
முனைவர் இரா,குணசீலன் நன்றி.
ReplyDeleteவேலைபளு காரணமாக சில நாட்களாய் பதிவு எழுத முடியவில்லை....
ReplyDeleteசரியான நேரத்தில் என் வலைப்பூவை பற்றி சொன்னதற்கு நன்றி... விரைவில் என் பிளாக்கை தூசு தட்டி எடுக்கிறேன்....
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
லட்சுமி மேடத்திற்கு சிறப்பு நன்றிகள்
மோகன் குமார் நன்றி.
ReplyDeleteதக்குடு நல்லா பின்னூட்டமும் போடுரே.
ReplyDeleteநன்றி.
ஸ்பீட் மாஸ்ட்டர், நன்றி.
ReplyDeleteகருன், நன்றி.
ReplyDeleteஅருண் நன்றி.
ReplyDeleteதயவு செய்து புதியவர்களை அறிமுகப்படுத்துங்கள்
ReplyDelete@ தக்குடு,
ReplyDelete//ஆனா நம்ப லக்ஷ்மி அம்மா வலைசரத்தையே அறிமுகம் பண்ணி கலக்கிட்டாங்க. வாழ்த்துக்கள்! இந்த சுண்டெலியையும் மறக்காம சொன்னதுக்கு ஒரு ஸ்பெஷல் நன்னிஹை!..:) //
தெய்வமே எங்கேயோ போயிட்டீங்க.
அறிமுகம் ஆகியுள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅறிமுகம் செய்துள்ள உங்களுக்கும் என் அன்பான பாராட்டுக்கள்.
சமுத்ரா சனிக்கிழமை பூரா புதியவர்
ReplyDeleteகள்தான்மா.
அனாமிகா நன்றிம்மா.
ReplyDeleteகோபால்சார் நன்றி.
ReplyDeleteஇவளவு அறிமுகங்களா !???? வியப்பாக இருக்கிறது இந்த பதிவின் தொகுப்பை வாசிக்கையில் .மீண்டும் வலைச்சரத்தில் என்னை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் பல . அறிமுகமான அனைத்து பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் . உங்களின் இந்த வார ஆசிரியர் பணி இன்னும் சிறப்பாக அமைவதற்கு என் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅதிரடி ஆரம்பம் அசத்தலான அறிமுகம்...
ReplyDeleteநிறைய பதிவர்களை இன்றை பதிவில் அறிமுகம் செய்து அசத்திவிடடிர்கள் அம்மையே...
தங்களுக்கும்.
இன்று அறிமுகமான அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்..
வலைச்சர அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteபதிவர்களை அறிமுகப்படுதிள்ள முறை மிகவும் அருமை . தொடரட்டும் உங்கள் பணி.
ReplyDeleteபனித்துளி சங்கர், வருகைக்கும் கருத்
ReplyDeleteதுக்கும் நன்றி.
கவிதை வீதி சௌந்தர், நன்றி.
ReplyDeleteஇராஜ ராஜேஸ்வரி, நன்றிம்மா.
ReplyDeleteஈரோடு தங்கதுரை, நன்றிங்க.
ReplyDeleteநன்றீம்மா என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு..
ReplyDeleteநேரம் கிடைக்காமையால் இந்த வாரம் யாருடைய புளொக்கும் வர முடியயாமல் போயிட்டுது....
கடந்த ஆறு மாதமாக நான் எந்த பதிவுமே எழுதவில்லை என்றபோதும் என்னை மறவாமல் நியாபகம் வைத்து அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சியும் கூட.
ReplyDeleteஅறிமுகங்கள் அனைத்தும் அருமை
ReplyDeleteஉங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
ReplyDeleteம. தி. சுதா வருகைக்கு நன்றி.
ReplyDeleteபிரியமுடன் ரமேஷ் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteஎன் ராஜ பாட்டை ராஜா வருகைக்கு நன்றி.
ReplyDeleteஒரே பதிவில் இத்தனை அறிமுகங்களை பார்ப்பது பிரமிப்பாக இருக்கிறது. உங்கள் நல்லெண்ணம் புரிகிறது . என்னையும் அறிமுகம் செய்ததற்கு நன்றி .
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. ஒருத்தருக்கு ஸ்பெஷல் வாழ்த்து..
ReplyDeleteThanks Amma
ReplyDeleteஅம்மாவை வாழ்த்த வயதில்லை, வணக்குகிறேன்.
ReplyDeleteவலைசரத்தில் அறிமுக படுத்துற அளவுக்கு நான் என்ன எழுதிட்டேன் தெரியல . ஆனா வரவங்க கண்டிப்பா சிரிச்சு ரசிசுட்டு போற அளவுக்கு ஏதோ எனக்கு தெரிஞ்சத எழுதுறேன் . கண்டிப்பா முகம் சுளிகாத எழுதி இருக்கேன். அதுக்காக ஆண்கள் வர முடியாத பெண்கள் பதிவோன்னு நினைக்க வேண்டாம் , ஆண்கள் வந்தாலும் கண்டிப்பாக ரசிக்க முடியும் .
அம்மா இங்கு குடுத்த அறிமுகம் எனக்கு மிக பிரியா பெருமை.
வலைச்சரதுக்கும் நன்றி .
நன்றி அம்மா . . .
அம்மா ஆட்சிய புடிசுட்டிங்க , இனி போட்டு தாக்குங்க ஹி ஹி ஹி
அம்மா வாழ்க . . .
அம்மா வாழ்க . . .
லக்ஷ்மி அம்மா வாழ்க . . .
(இதுல அரசியல் எதுவும் இல்லபா . . ஹி ஹி )
இங்க அறிமுக படிதபட்டு இருக்கும் அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள் . .
பாசமுடன் ,
ராஜேஷ் .
இங்கு அறிமுக படுத்திய பிறகு , நெறைய பேரு என்னோட பதிவுக்கு வந்துட்டு போறாங்க ரொம்ப சந்தோசம இருக்கு . படிச்சுட்டு மட்டும் போகாமல் , கமெண்ட்ஸ் போடுற அளவுக்கு இருக்குன நானும் ஏதோ எழுதி இருக்கேன்ன்னுதான் நினைக்குறேன் , நான் எப்பவோ இல்ல பதிவுக்கு இன்னுமும் கமெண்ட்ஸ் வராத நினைச்ச மனசுக்கு ரொம்ப சந்தோசம இருக்கு . இதுதான் அங்கீகாரம் . .
ReplyDeleteஎல்ல புகழும் அம்மாவுக்கே . . .
மீண்டும் ஒரு முறை வலைச்சரதுக்கும் , அம்மாவுக்கும் நன்றிகள் . . .
அன்புடன் ,
ராஜேஷ் . . .
"வலைச்சரம்" வாழ்த்துகின்றோம்.
ReplyDeleteபார்வையாளன் வருகைக்கு நன்றி.
ReplyDeleteவானம் பாடிகள் நன்றி.
ReplyDeleteகோவை2தில்லி, நன்றிங்க.
ReplyDeleteபிரபு நன்றி.
ReplyDeleteராஜேஷ் இவ்வளவு ஓவரால்லாம்
ReplyDeleteபுகழாதீங்க. கூச்சமா இருக்கு.
மாதேவி நன்றி.
ReplyDeleteஅம்மா... என்னை வலைச்சரத்தில் குறிப்பிட்டதுக்கு நன்றி... மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதுவக்கம் பிரமாதம். தொடர்ந்து நல்லவர்களை அரிமுக படுத்தவும். நன்றி சொன்னவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் அம்மா...
ReplyDeleteபிரகாஷ் நன்றி.
ReplyDeleteராம் சார் வாங்க வாங்க. சந்தோஷம்
ReplyDeleteமுதல்ல இது யாருன்னு பாத்தேன்.
போட்டோ பாத்ததும்தான் நீன்னு
தெரிந்தது.
என்னால் நம்ப முடியவில்லை. இவ்வளவு பேரை முதல் நாளே அறிமுகப் படுத்தும் தாங்கள், இன்னும் எவ்வளவு பேரை வரும் நாட்களில் அறிமுகப்படுத்தப் போகிறீர்களோ?!
ReplyDeleteஇத்தனைப் பதிவர்களின் பதிவுகளை உங்களால் எப்படி படிக்க முடிகிறது என்கிற ரகசியத்தை மட்டும் எனக்கு சொல்லுங்களேன்.
என்னை பிரபல பதிவர் என்கிற டைட்டிலின் கீழ் அறிமுகப் படுத்தியதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை.
மிக்க நன்றி மேடம்.
அமைதி அப்பா, எல்லார்ப்ளாக்கும் போயி படித்ததால் தான் சிறப்பானவற்றை அறிமுகம் செய்ய
ReplyDeleteமுடிந்தது. நன்றி.
வணக்கம் மேடம்! என்னை அறிமுகம் செய்திருக்கிறீர்கள் என்பத்ற்காக சொல்லவில்லை, உண்மையிலேயே அருமையான தொகுப்பு!
ReplyDeleteநிறைய பதிவர்கள், அவர்களது பல பதிவுகள் என்று அசத்தலாக ஆரம்பித்துள்ளீர்கள் உங்கள் பணியை! இதனை செவ்வனே செய்து முடித்திட ஆண்டவன் அருள்புருவாராக!!!!!
ஆச்சரியமான் அறிமுகம்
ReplyDeleteநன்றி
வித்தியாசமான அறிமுகங்கள்...
ReplyDeleteகலக்கல் அம்மா.
மனம் நிறைந்த வாழ்த்துகள் லக்ஷ்மி.
ReplyDeleteஅருமையான எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரத்தைப் பாராட்டுகிறேன்.
இத்தனை வலைப் பதிவாளர்கள் இருப்பதே எனக்குத் தெரியாது.
மிகவும் நன்றி.
வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். உழைப்பும் கவனமும் தெரிகிறது ஒவ்வொரு அறிமுகங்களிலும். தொடருங்கள்.
ReplyDeleteஅடியேனையும் அறிமுகம் செய்தமைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்....
ReplyDeleteதொடர்ந்து புதிய பதிவர்களாக ஆறுமுகம் செய்யுங்கள்
ஓ.வ. நாராயனன், வருகைக்கும் கருத்
ReplyDeleteதுக்கும் நன்றிங்க.
ஓ.வ. நாராயனன், வருகைக்கும் கருத்
ReplyDeleteதுக்கும் நன்றிங்க.
தொப்பி தொப்பி, நன்றிங்க.
ReplyDeleteநிரூபன், நன்றிங்க.
ReplyDeleteவல்லி சிம்ஹன், கருத்
ReplyDeleteதுக்கும் வருகைக்கும், நன்றிங்க.
ராமலஷ்மி நன்றிம்மா.
ReplyDeleteகார்த்தி, பின்னாலயே புதியவங்க வந்து
ReplyDeleteகிட்டிருக்காங்க.முதல்ல தெரிந்தமுகங்க
ள்.
என்னை மறு முறையும் வலைச் சரத்தில் அறிமுகப் படுத்தி கவுரவித்தமைக்கு நன்றி அம்மா.
ReplyDeleteநீங்கள் அறிமுகப் படுத்திய அனைத்து உள்ளங்களும் போற்றப் படக்கூடியவர்கள் ஊரில் நான் இருப்பதாலும்,கடந்த பத்து நட்க்களாக உடல் நிலைக் குறைவாலும் வலைப் பக்கம் வர இயலாமைக்கும் கருத்துரைகளை பதிவிடாமைக்கும் வருந்துகிறேன்.
அந்நியன்2, லேட்டாவந்தாலும் மறக்காம
ReplyDeleteபின்னூட்டம் கொடுத்திருக்கீங்களே
நன்றிங்க.
வலைசரத்தில் ஆசிரியராக லஷ்மி ஆண்டி இங்கு இருக்கிங்க என்று தெரிந்ததும் ஒரே சந்தோஷமாகவும் அதே போல் நிறய்ய நல்ல பயனுள்ள விஷயங்களும் பல புதிய வலையுலக நட்புகளும் தெரிந்துகொள்ள வாய்புக்கள் என்னை போன்றவர்களூக்கு பெரிய வரப்ரசாதம்.
ReplyDeleteநிறய்ய பதிவர்களை அறிமுகம் செய்திருக்கிங்க நல்ல விஷயம். நன்றி.எல்ல பதிவர்களும் வணக்கங்கள்.
லகஷ்மி ஆண்டி வணக்கம், வாழ்த்துக்கள்.மீண்டும் வருகிறேன்.