வலைச்சர வாசக நண்பர்களே, மூன்று நாட்களாக சிறிதும், பெரிதுமாய் உணவகங்கள், பழமுதிர் சோலைகள் எல்லாம் சென்று ருசித்துக் கொண்டிருந்த நம் பயணம், க்ளைமேட் நன்றாக இருப்பதால், அப்படியே பொடிநடையா ஒரு எட்டு பீச்சாங்கரைக்குப் போய் காத்து வாங்கிவரலாம்னு திட்டம். என்ன தயாராயிட்டீங்களா? வாங்க போலாம்!
பீச்சுக்கு வந்தவுடனேயே ஒரு கையில டின்னும், இன்னொரு கையில பேசினுடனும் வரும் நபர்களைப் பார்த்து எச்சில் விடக்கூடாது. இந்தப் பக்கமா கொஞ்சம் காதை திருப்புங்க. அங்க ஒருத்தர் உட்கார்ந்து பாடிட்டிருக்கார் பாருங்க. என்னது...? சிவக்குமாரா?... ம்ம் ஜேசுதாஸா...? ஹலோ பீச்சு, பாட்டுன்னா இவங்களத் தவிர வேற யாரும் நியாபகத்துக்கு வர மாட்டாங்களா? அவங்கள்லாம் பாறை மேல ஒக்காந்துகிட்டு, மனுசப்பயலுங்க அண்ட முடியாத அலைகளைப் பார்த்து தான் பாடுவாங்க!
இவரு பாடுறத கொஞ்சம் நல்லா கேளுங்கப்பா, நம்மோட ஃபீலிங்ஸ என்னமா நமக்கு பதிலா, நாம பாடற மாதிரியே பாடுறாங்கன்னு! "பலவிதமா பள்ளிக்கூடம் இருக்குது...!" ன்னு இந்த பாட்டப் போய் கொஞ்சம் படிச்சிட்டு வந்து அவரோட சேர்ந்து பாடுனா என்னமா இருக்கும் தெரியுமா?
இவரு யாரா..? பேரு "மோகனன்", "தமிழ் கானா பாடல்கள்" னுட்டு ஒரு வலைதளம் தனியா வச்சிக்கிட்டு, என்னமா புதுசு புதுசா கானா பாட்டெல்லாம் எழுதி தள்ளிக்கிட்டிருக்காரு தெரியுமா? சிச்சுவேஷனுக்கு ஏத்தா மாதிரி அந்த பட்டியல்லேருந்து ஒரு பாட்ட தேர்ந்தெடுத்துகிட்டு, யூசுவல் ட்யூன்ல நாமே பாடிக்கலாம். அவ்ளோ பாட்டு குமிச்சி வச்சிருக்கார். இதோ இந்த கடலைப் பற்றியே "கடலுக்குள்ள போய் வருவோம்...!" னு ஒரு பாட்டு போட்டுருக்கார் பாருங்களேன். அத்தனை ரசமும் கொட்டிக் கிடக்குது!
அப்படியே நம்ம பசங்களப் பத்தி "பிரௌசிங்கு சென்டருல பிட்டு படம் பாக்குறான்...!" ன்னு கும்மாங்குத்து பாட்டு ஒன்ன கேட்டுட்டு, கொஞ்சம் ரூட்ட மாத்திகிட்டு மரியாதையா இங்க வாங்க. ஏன்னா நாம அடுத்ததா பார்க்கப் போற இவரு கொஞ்சம் டீசண்ட் பார்ட்டி, அதான் சொல்லிட்டேன் பார்த்து சூதானமா நடந்துக்கணும் புரியுதா?!
சார், ரொம்ப நிதானமானவங்க. பிரபல தமிழ் பத்திரிகைகளில் எழுதியிருப்பதோடு, கிழக்கில் நூல்களும் எழுதியுள்ளார். பெங்களூர்ல தான் வாசம்னாலும், அவருடைய எழுத்தையெல்லாம் பார்க்கும் பொழுது, சதாசர்வ காலமும் தமிழ், தமிழ் நாடு, தற்கால இலக்கியங்களின் வளர்ச்சி, அதற்கு தமிழக அரசும், முதல்வர்களும் மற்ற மாநில முதல்வர்கள் போல முழு வீச்சில் செயல்படலயேன்னு ஒரு ஆதங்கம்... னு இதே சிந்தனையாத்தான் இருப்பார்னு தோனுது. ஏன்னா? இவருடைய பெரும்பாலான பதிவுகள் இந்த விஷயங்களைப் பற்றியே வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன.
"அமுதவன் பக்கங்கள்" ங்கற பேர்ல வலைதளத்துல எழுதிக்கிட்டிருக்காங்க. இவரோட பதிவுகளை படித்தவுடனேயே, "நியாயம்தான?" அப்டீன்னு உடனே சொல்லத்தோனும். சாரோட அனைத்து பதிவுகளுமே எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுல இரண்டை மட்டும் இங்க உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். இரண்டுமே நிகழ்கால தமிழ் இலக்கிய படைப்புகள், படைப்பாளிகள் புறக்கணிக்கப்படறத பற்றிய ஆதங்கத்தை கொட்றது தான். எனக்கும் சேம் ப்ளட் என்பதால், உங்களுக்குள்ளும் அது தொற்றிக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அறிமுகம் செய்கின்றேன்.
1. தற்காலத் தமிழ் இலக்கியம்- தேவை புதிய பார்வை! 2. தற்காலத் தமிழ் இலக்கியத்திற்கு என்ன இடம்?
அடுத்ததா நாம போகப்போறது ஒரு முக்கியமான இடம். கைய கட்டிக்கிட்டு, வாயெல்லாம் பொத்திக்கிட்டு வரணும் (என்னாது..? கைய கட்டிக்கிட்டா வாய யார் பொத்துறதா..?... பிச்ச்சிபுடுவேன் பிச்சி..! சின்னப்புள்ள தனமால்ல இருக்கு? அவர பாத்துட்டு வந்து ஒங்கள எல்லாம் வச்சிக்கிறேன்.. வச்சி!!)
இவங்கதான் நம்ம "சுதேசமித்திரன்" அவர்கள். ரொம்ப பிரபலம். அதிகமா எதுவும் இவரைப் பற்றி சொல்லத் தேவையில்லைன்னு நினைக்கின்றேன். இவரோட எழுத்து எனக்கு ரொம்ம்ப பிடிக்கும். பெரிய எழுத்தாளர்னு எல்லோரையும் சும்மா சொல்லிட முடியாது. ஒரு தலைப்பை கொடுத்தா, அது தொடர்பான விவரங்கள் அனைத்தையுமே திரட்ட வேண்டும். பின்பு அதை அழகாக கோர்க்க வேண்டும். அவருடைய இந்தப் பதிவை படித்து விட்டுச் சொல்லுங்கள், அவர் எவ்வளவு பெரிய எழுத்தாளர் என்று. இதோ அந்தச் சுட்டி: "பசுமை நிறைந்த அறுபதுகள்".
அவரோட இன்னுமொரு பதிவுக்கான சுட்டியையும் தருகின்றேன். இதில் சாதாரணமான ஒரு நிகழ்வில் இருக்கும் நம் அனைவருக்கும் தெரிந்த அல்லது தெரியாத ஒரு அரசியலை அல்லது அறியாமையைப் பற்றி, எவ்வளவு இலகுவாகவும், வெளிப்படையாகவும் சொல்லியிருப்பார். இதுவும் எனக்குப் பிடித்த அவரது அனைத்து பதிவுகளிலும் ஒரு சாம்ப்பிள் அவ்வளவே.! இதோ அதன் சுட்டி: "விளக்கணைச்ச நேரத்திலே..."
ரொம்ம சீரியாஸாயிட்டிங்கன்னு நினைக்கிறேன். வாங்க கொஞ்சமா உங்களை அமைதியாக்கி வீட்டுக்கு அழைச்சிட்டு போறேன். சமுத்திரத்திற்கு வந்து அலைகளையும் பார்த்து மனம் அமைதியா போனாத்தான நல்ல உறக்கம் வரும். அங்க பாருங்க, அழகா ஒரு குடில் மாதிரி போட்டுக்கிட்டு, ஒருத்தர் "நேர்மறையான எண்ணங்கள்" தான் வாழக்கையில் வெற்றியடைவதற்கான வழி என்று உபதேசம் செஞ்சி, அதுக்கு பயிற்சியும் கொடுத்துக்கிட்டு இருக்கார். அதுல கொஞ்சம் பயிற்சி எடுத்துக்கிட்டு அப்பாலிக்கா வூட்டுக்கு போலாம்! (ச்சே.. ஏதாவது மாற்றம் கொண்டுவரனும்னு நாம நெனச்சா, இந்த சென்னை நம்மளையே மாத்திடுது!!)
"வாரியர்" ன்னு ஒரு வலைத்தளத்தை வச்சிக்கிட்டு, சும்மா வாளை கையில்பிடிச்சு என்னமா சுழட்டறாறு?! அந்த தளத்துக்குள்ளாற போனா அள்ள அள்ளக் குறையாக பொக்கிஷங்கள் நமக்கு இருக்கு. ஆனாலும் "நேர்மறை எண்ணங்களின் வலிமை" பற்றிய அவசியத்தை விவரித்து கற்பிக்கும் இந்த சுட்டிய மட்டும் இப்ப தற்றேன். மத்தத நீங்க "வாரியர்" உள்ளாற போயி பார்த்துக்குங்க சரியா?
இன்னிக்கு டைம் ஆயிடிச்சி, எல்லாரும் வீட்டுக்கு கிளம்புங்க. நாளைக்கு அப்பிடியே சினிமாவுக்கெல்லாம் போயி கடல போட்டுட்டு வராலாம்...!!

வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் அறிமுகங்களுக்கும்...
சுவாரசியமான எழுத்து நடை ரசிக்க வைக்கிறது...
ReplyDeleteஅறிமுகங்கள் சில தெரியாதவை...இனி படித்துவிடுகிறேன் அவற்றையும்...
வாழ்த்துக்கள்...வித்தியாசமான பார்வைகள்/அறிமுகங்கள் தொடரட்டும்.
அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி,
ReplyDeleteசௌந்தர், கௌசல்யா & ராஜ ராஜேஸ்வரி.
அன்பின் சௌம்யன் - அழகாகச் செல்கிறது - அனைத்தும் சென்று படித்து மறு மொழி இடுகிறேன் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள். சென்று பார்க்கிரேன். நன்றி.
ReplyDeleteபட்டாணி சுண்டல்......செம சூடு........!
ReplyDeleteவாழ்த்துக்கள் செளம்யன்!
வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நன்றி,
ReplyDeleteசீனா சார், தேவா & லெக்ஷ்மி அம்மா.
வலைதள நிர்வாகி சீனா ஐயா அவர்களுக்கு இந்த தளம் முழுவதும் அனைத்தும் மற்ற தளங்களின் லிங்க் என்பதால் ஒரு லிங்க்கை க்ளிக் செய்தால் உங்கள் தளம் மறைந்து மற்றவர்களின் தளம் வந்துவிடுகிறது ஆதாலால் வாசகர்கள் அந்த லிங்கோடு சென்று விடும் வாய்ப்பு உள்ளது.
ReplyDeleteஇதனால் மற்ற லிங்க்குகள் அறிய முடியாமல் போய்விடும். இந்த பிரச்சினையை தவிர்க்க அனைத்து லின்க்கும் அடுத்த டேபிள் திறக்கும் படி செய்ய இந்த http://www.vandhemadharam.com/2010/08/open-link-in-new-tab_09.htmlலிங்கில் சென்று அங்கு உள்ள ஒரு வரி கோடிங்கை உங்கள் பிளாக்கில் சேர்த்து விட்டால் அனைத்து லிங்க்குகளும் அடுத்த டேபிள் திறக்கும்.
உபயோகமாக இருக்கும் என்று கூறினேன். ஏதேனும் தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும் .
உபயோகமான பதிவு
ReplyDeleteஇன்று எனது வலையில்
ReplyDeleteஅவன்-இவன் திரைவிமர்சனம்
”வாரியர்” தவிர மற்றது அனைத்துமே எனக்குப் புதியவை.. பார்க்கிறேன். நன்றி!!!
ReplyDeleteஅன்பின் சசிகுமார் - தகவலுக்கும் ஆலோசனைக்கும் நன்றி - பயனுள்ள தகவல் தான் - பயன் ப்டுத்திடுவோம். நல்வாழ்த்துகள் சசிகுமார் - நட்புடன் சீனா
ReplyDeleteஉங்க அறிமுகங்கள் எல்லாமே புதுமையா இருக்குங்க... தொடர்ந்து கலக்குங்க. வாழ்த்துக்கள்..! :)
ReplyDelete