Friday, June 17, 2011

வலைச்சரம் - மி(சி)னி மீல்ஸ்!!

நேத்தே சொன்ன மாதிரி இன்னக்கி, அப்படியே சினிமா கொட்டா பக்கமா போயி கொஞ்சம் சினிமாவும், நிறைய கடலையும் போடலாம்.

"கீத்துக் கொட்டாய்"  ன்னு ஒரு தியேட்டர வச்சிக்கிட்டு நம்ம பழைய வவாச ல  இருந்த இராம், தேவ், கப்பி, வெட்டிப்பயல் எல்லாருமா பார்ட்னர்ஷிப்ல "ரீல் மச்சி ரீல்" னு பல மொழிப் படங்கள ஓட்டிட்டு இருக்காங்க.

இங்க போனா பல மொழிப்படங்கள அவங்க ஸ்டைல்ல பிரிச்சி அக்குவேற ஆணி வேறயா கலாய்க்கிறாங்க. பல ஹாலிவுட் படங்கள், ஹிந்திப் படங்கள் எல்லாம் கூட அருமையா விமர்சனம் பண்ணியிருக்காங்க.

இங்க போய் கொஞ்சமா மேய்ஞ்சு வச்சிக்கிட்டம்னா, சில அப்பாடக்கர் பார்ட்டிகள்ட்ட பீட்டர் வுடுறதுக்கு ரொம்ப வசதியா இருக்கும்!!

சினிமா, விமர்சனம்னு தமிழ் இணையத்துல நின்னுகிட்டு பேசினோம்னாலே நம்ம கேபிளாரப் பத்தி பேசாம இருக்க முடியாது. இவரோட சினிமா விமர்சனங்களைப் பற்றி சொல்லனும்னா, ஒரு படத்தோட விமர்சனத்த படிச்சிட்டு படம் பார்க்க போகறவங்கள விட படமே (சினிமா படம் தாங்க!) எடுக்கறவங்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்.

யாராவது சினிமா டைரக்ட் பண்ணனும்னாலும் சரி, இல்லன்னா தயாரிக்கனும்னாலும் சரி, சமீபத்தில் இவர் எழுதிய 50 படங்களோட விமர்சனத்த படிச்சாலே போதும், எது செய்யணும்கறத விட எதெதெல்லாம் செய்யக்கூடாது, என்பது தெளிவாகப் புரிந்து விடும். அந்த அளவிற்கு டெக்னிகல் குறைகளையும், கமர்ஷியலா ஹிட் ஆவறதுக்கு விடுபட்டதையும் மறுக்க முடியாத அளவிற்கு எழுதியிருப்பார்.

அதே சமயம் ஆரம்ப காலங்களில் ஒரு படம் பார்க்கப் போக வேண்டும் என்றால் இவர் விமர்சனங்களைப் படித்தாலே போதும். முடிவெடுத்து விடலாம். இவரோட கொத்து பரோட்டா, சாப்பாட்டுக் கடைக்கெல்லாம் நான் ரெகுலர் கஸ்டமர்.

அடுத்ததா வலையுலக 'முடி'சூடா மன்னன், ஜாக்கியாரைப் பற்றி (தலைவரே.. 'முடி' யப்பத்தி பேசுனதுல ஏதும் உள்குத்து இருக்கறதா யாராவது போட்டு குடுத்தாங்கன்னா நம்பிடாதீங்க!) சொல்லலன்னா இந்தப் பதிவ படிக்கறவங்களுக்கு தொண்டை நனையும் அளவிற்கு தண்ணீர் குடித்த திருப்தி ஏற்படாது!!

இவர் பதிவுகளோட அழகே அந்த "எழுத்துப் பிழையில்" தான் இருக்கு! ஆனா யார் கண்ணு பட்டுச்சோ தெரியல, இப்பல்லாம் அந்த அழகு அடிக்கடி எட்டிப்பார்க்க மாட்டேங்குது.

தமிழ் வலையுலகத்தில் மிகப்பெரிய வாசகர் கூட்டத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் இவர், தன்னைப் பற்றிய பிம்பத்தைப் பற்றியெல்லாம் எந்தவித கவலையும் எந்த நேரத்திலும் கொண்டதாகத் தெரியவில்லை. "நான் இப்படித்தான்" என்று பட்டவர்த்தனமாக, முகத்திலடித்தார் போல சொல்லும் அந்த தைரியம்..... "உண்மையாய் இருப்பதில் தான் வெற்றியே இருக்கிறது" என்பதை உணர வைக்கின்றது.

இவ்வளவு பெரிய வாசகர் கூட்டம் இருந்தாலும், இவருடைய பல காண்ட்ரவர்ஷியல் பதிவுகள், பலத்த எதிர்ப்பையும், தனிநபர் விமர்சனங்களையும் இவரை பல சமயங்களில் எதிர்கொள்ள வைத்திருக்கின்றன. (ஒரு தடவயாவது இவரை கன்னா பின்னான்னு திட்டி ஒரு பதிவு போட்டா, எனக்கும் கொஞ்சம் வாசகர் கூட்டம் ஏறும்னு நினைக்கிறேன்!)

ஜாக்கியைப் பற்றி சொல்லி விட்டு அவரது சினிமா விமர்சனத்தப் பத்தி சொல்லலேன்னு நினைக்கிறீங்களா? அது மேட்டரே இல்லீங்க. எல்லோருக்குமே தெரிஞ்ச விஷயம் தான். ஆனா அவரோட "சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்" இருக்கே.....!

ச்சே... அத நான் மிஸ் பண்ணவே மாட்டேன். அதுல ஒரே ஒரு விஷயம் மட்டும் எனக்கு சுத்தமா பிடிக்காது, அதாங்க அந்த "பலான" ஜோக்! அதமட்டும் நான் படிச்சதே இல்ல!!

நண்பர்களே, திடீர் என்று வந்த ஒரு அவசர அழைப்பின் காரணமாக இன்று (வெள்ளி) வெளியூர் செல்வதால், சுறுக்கமாக முடித்துக் கொள்கிறேன். தவறாக எண்ண வேண்டாம்! ("தப்பிச்சோம்னு" நீங்க சொல்றது என் காதுல விழவே இல்லையே!) இதற்கெல்லாம் வட்டியும் முதலுமாக சேர்த்து அடுத்தடுத்த பதிவுகளில் நிறைய அறிமுகங்களோடு சந்திக்கிறேன்.

6 comments:

  1. காலையிலே மீல்ஸ்ஸா...
    நல்லாயிருந்துச்சிங்க.. சினி மினி மீல்ஸ்...

    ReplyDelete
  2. இருதரப்புக்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. ஏன் இப்போதெல்லாம் புதியவர்களை யாரும் அறிமுகம் செய்வதே இல்லை?
    வலைச்சர ஆசிரியர் கவனிக்கவும்..வலைச்சரத்தின் நோக்கமே மாறிக்கொண்டிருக்கிறது

    ReplyDelete
  4. அவசரத்திலும் பதிவு போட்டிருக்கீங்களே.

    ReplyDelete