வலைச்சர நிர்வாகி சீனா சாருக்கும் அதன் குழுவினருக்கும் முதற்கண் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொண்டு.
வலைச்சரத்தின் ஆசிரியராக இந்தவாரம் பொறுப்பேற்றிருக்கும் இராஜராஜேஸ்வரி பற்றி முதல் பதிவில் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியத்தால் இந்த பதிவு...
பெரிய இனிய குடும்பத்தின் தலைவி. மகன்கள் அம்மாவுக்கு கம்ப்யூட்டரை இயக்கத்தெரியவில்லை என்று கூற கணவரை அழைத்துக்கொண்டு கணிணி கற்க மையத்திற்குச் சென்றார். அங்கு ஒன்றும் சொல்லிதரவில்லை என மகன்களிடம் சொல்ல மகன்கள் கணிணி வெடிக்காது அம்மா துணிந்து முயற்சி செய்து நாம் தான் கற்கவேண்டும் என உற்சாகம் சொல்ல மெதுவாக மெயில் அனுப்ப சாட் செய்ய கற்று,
கடைக்குட்டி செல்லமகனும் மேற்படிப்பிற்காக ஆஸ்திரேலியா சென்று ஹோம் சிக் என்று அவதிப்பட, தனியாக ஆஸ்திரேலியா சென்று மகனைப் பார்த்துவருமாறு குடும்பத்தினர் கிண்டலடித்தார்கள்.
நின்றால் பொதுக்கூட்டம், நடந்தால் ஊர்வலம் என்று எங்கும் தனியாகப் போய் பழக்கமில்லாத இவர் எங்கே சம்மதிக்கப் போகிறார் என்று சொல்ல, கிளம்ப விருப்பம் தெரிவித்ததை ஆச்சரியத்துடன் பார்த்து விசா எடுத்து ஆஸ்திரேலியா அனுப்பி வைத்தார்கள்.
அங்கே தினசரிப்பத்திரிகை படிக்க ஆன்லைனில் பார்த்தபோதுதான் வலையுலகம ஒன்று இருப்பது தெரிந்து படிக்க ஆரம்பித்து,
2011 ஜனவரி 21 ம் தேதி முதல் பதிவை எழுதினார்.. 200வது பதிவை விரைவில் எட்ட இருக்கிறார். மணிராஜ் என்னும் தமிழ் பதிவும் கிருஷ்ணா என்னும் ஆங்கிலப் பதிவும் நடத்துகிறார்.
பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் கொள்ள, விருப்பப்பட்டவர்கள், தேவைப்பட்டவர்களுக்கு தெரியப் படுத்தி பயன்படுத்திக்கொள்ளலாம்.
Kindly inform to those who require JOB.
jobmailservice@gmail.com
Providing JOB for educated, uneducated, experienced, fresher, male or female.
Only eligibility is they should be 18+ of age and of Indian nationality.
Thanks & regards
ஒரு அறிமுகப் பதிவர்தான். தன் பதிவுகளை தமிழ்மணத்திலோ வேறு திரட்டித்தளங்களிலோ இணைக்கத் தெரியாதவர். நலம் விரும்பிகள் தமிழ் மணத்தில் இணைக்கச் சொன்னார்கள். வழிமுறைகளைப் பின்பற்றியும் இணைக்க முடியவில்லை. டேஷ் போர்டிலும் பிளாக் பப்ளிஷ் ஆவதில்லை.எப்படியோ ஆத்மதிருப்திக்கு எழுதுகிறோம் என்று நினைத்துக் கொள்கிறார்.
மதுரைக்கே மல்லிகையை அறிமுகப்படுத்துவதா?
பிறந்தவீட்டின் பெருமையை உடன்பிறந்தானிடம் அளந்தமாதிரியாகவும், பத்துப்பிள்ளை பெற்றவளுக்கு தலைப் பிள்ளைக்காரி பத்தியம் சொன்ன கதையாகவும், பழ்ம் தின்று கொட்டை போட்ட அனுபவசாலிகளை முந்தாநாள் பெய்த மழையில் நேற்று முளைத்த காளான் அரசறிய வீற்றிருந்த ஆலமரத்தை அடையாளம் காட்டுவதாகவும் வந்திருக்கிறார். பொறுத்தருள்க....
கற்றோர் நிறைந்த அவையில் அறிவிலி ஆரவாரதோடு உரைக்கும் கவியை புன்னகையோடு ஏளனமாக அங்கீகரிப்பதைப்போல் ஏற்றுக்கொள்க...
திரு. வை. கோபாலகிருஷணன் ஐயா அவர்கள் தான் தனக்கு வந்த வாய்ப்பை இப்போதுதான் நடக்க கற்ற குழந்தையின் நடை அழகைப் பாராட்டி ஒலிம்பிக்கில் ஓடவிட “பரிந்துரை” செய்தவர்.
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன் என்று தன்னை சொல்லிக் கொள்வதிலிருந்தே சாதனையாளர் என்று உறுதிப்படுத்தலாம். தெளிந்தநடையும், அளவற்ற அனுபவ அறிவும் வாய்ந்தவர்.
கல்கி பத்திரிகை நடத்திய 12 வார தொடர் போட்டியொன்றில், தொடர்ச்சியாகக் கலந்து கொண்டு, இறுதியில் ஒட்டுமொத்த வெற்றியாளராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசும் பாராட்டும் பெற்றிருக்கிறார்.”
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன் என்று தன்னை சொல்லிக் கொள்வதிலிருந்தே சாதனையாளர் என்று உறுதிப்படுத்தலாம். தெளிந்தநடையும், அளவற்ற அனுபவ அறிவும் வாய்ந்தவர்.
கல்கி பத்திரிகை நடத்திய 12 வார தொடர் போட்டியொன்றில், தொடர்ச்சியாகக் கலந்து கொண்டு, இறுதியில் ஒட்டுமொத்த வெற்றியாளராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசும் பாராட்டும் பெற்றிருக்கிறார்.”
சென்னையிலிருந்து வெளிவரும் “நம் உரத்த சிந்தனை” என்னும் தன்னம்பிக்கையூட்டும் தமிழ் மாத இதழ் நடத்திய போட்டியில் கலந்துகொண்டு, இவரால் சமீபத்தில் வெளியிடப்பட்ட ”எங்கெங்கும்... எப்போதும்... என்னோடு...” என்ற சிறுகதைத்தொகுப்பு நூலுக்கு 15/05/2011 அன்று சென்னையில் நடந்த விழாவில், முதல் பரிசினை பெற்றிருக்கிறார்..
குறை ஒன்றும் இல்லை என்று பதிவிட்டு நாம் பட்ட சிரமம் எல்லாம் ஒன்றுமே இல்லை என்று உணர வைத்து கண் திறந்தவர் லஷ்மி அம்மாதான். இந்த வலைச்சர ஆசிரியர் பணியையும் ஏற்றுக்கொள்ள உற்சாகமளித்த்வர்.
எழுதிய பதிவுகளில் பிடித்தவை
- ஈச்சனாரி விநாயகர் முழுமுதற் கடவுள்.
- சிங்கப்பூர் விமானநிலையத்தில் புதிதாக நிர்மாணிக்கப் பட்டிருந்த டிராவலேட்டர்களின் மூலம் எல்லா டெர்மினல்களுக்கும் சென்று பார்வையிட்ட பறக்கும் ரயில் பயணம் அலாதியானது.
- தனது மகனைப் பார்க்க அடிக்கடி கிளிக்குவது இந்தச்சுட்டியைத் தான்.. Griffith University
- வெள்ளிக்கிழமைகளில் தரிசிப்பது பதினாறு லட்சுமிகள்
- பணம் படைத்தவர்களால், அதிக உடல்பலம் படைத்தவர்களால் நல்லோர்கள் ஏமாற்றப்படுதலும் வதைபடுதலும் அதிகம் நடக்கிறது. அப்படி சக்தி இல்லாதவர்கள் தங்களுடைய குறைகளை தெய்வத்திடம் முறையிடுகிற கோயில்களில் மிக முக்கியமானது பிரத்யங்கரா தேவி கோயில்.
- ஜூன் மூன்றாம் தேதிக்கான பதினாறு லட்சுமிகள் பதிவையும், மே 14ம் தேதிக்கான பிரத்யங்கராதேவி பதிவையும், ஜூன் 14ஆம் தேதி காபி பேஸ்ட் செய்து வெளியிட்டிருக்கிறார் >> GAYATHIRI
- இன்னும் பல பதிவுகளை மணிக்கணகாகச்சிந்தித்துப் படங்கள தேடித்தேடிச் சேர்த்ததை நொடியில் காபி பேஸ்ட் செய்து வெளியிடும் GAYATHIRI பதிவரை வாழ்க வளமுடன் என வாழ்த்தலாம்.
- எல்லா மலைவாசஸ்தலங்களும் ஆங்கிலேயரின் காலடிபட்டு, தேயிலைத்தோட்டங்களாக மாறிவிட அவர்கள் காலடி படாத கொல்லிமலைச் சாரல் பயணம் இனிமையானது>> கொள்ளை கொள்ளும் கொல்லிமலைச் சாரல்
- ஆஸ்திரேலிய பயணத்தில் பார்த்து மனம் பறிகொடுத்தது.. பூமரங்கள் வீசும் சாமரங்கள்
- உல்டா' ஹனுமன்' பாதாளம் நோக்கிப் பாய்ந்த அனுமன்
- திருச்சூர் போனால் திரிச்சுவர மனசிருக்காது: திருச்சூர் வடக்குநாதர்
- உத்தரகோசமங்கை மரகத நடராஜர் மண் முந்தியோ மங்கை முந்தியோ
- நிஷாகந்திப்பூ மகன் வாங்கித் தந்த அபூர்வ மலர்ச்செடி
- சிற்பக் களஞ்சியம் தாடிக்கொம்பு வியந்து ரசித்து வணங்கிய தலம்
- ஆஸ்திரேலியாவில் ரம்ஜான் எத்தனை நாட்டவர்களின் அறிமுகம்
- மகன் போட்டுக்கொடுத்த அருமையான காபி.. காபி in ஆஸ்திரேலியா
- Q1 உலகின் உயரமான குடியிருப்பு!! பசிபிக்கடலோரம் வாங்கிய காற்று
- கெடுவான் கேடு நினைப்பான் பட்டாம்பூச்சி
- ஞீலிவனேஸ்வரர் கோவில் வாழை
- விழி அழகு விசாலாட்சி
- சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள் அன்னையின் கருணை
- ஆஸ்திரேலியா - பெர்த் ஸ்ரீ பால முருகன் கோவில் தங்கத்திரை நாடான ஆஸ்திரேலியாவில் இத்தனை அனுபூதியான தலம்!
- காடம்புழா சேரநாட்டின் இயற்கை அழகு
வலைச்சர ஆசிரியைக்கு வாழ்த்துக்கள்!!
ReplyDeleteவாழ்த்துகள்.எல்லாரையும்
ReplyDeleteஎப்பிடியும் ஒரு வாரத்துக்குச்
சாமி கும்பிட வைக்கப்போறீங்க.
அரோகரா !
//திரு. வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் தான் தனக்கு வந்த வாய்ப்பை, இப்போதுதான் நடக்க கற்ற குழந்தையின் நடை அழகைப் பாராட்டி, ஒலிம்பிக்கில் ஓடவிட சிபாரிசு செய்தவர்.//
ReplyDelete’சிபாரிசு’ எல்லாம் இல்லை, மேடம்.
தங்களுக்குள்ள தனித்திறமைகளை வெளியுலகுக்கு எடுத்துக்காட்டிடவும், அதற்கு சிறப்பான ஒரு அங்கீகாரம் கிடைக்கச்செய்யவும் விரும்பிய நான், என்னிடம் ஆலோசனை கேட்டபோது, தங்கள் பெயரை முன்மொழிந்து, வழிமொழிந்து பரிந்துரை செய்தேன். அவ்வளவே தான். பிறகு என் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டதை அறிந்ததும் பெரு மகிழ்ச்சியடைந்தேன்.
The Right Man for the Right Job என்பது போல நீங்கள் இந்த வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு மிகவும் பொருத்தமானவரே. உங்களால் எதையும் அழகாக, நேர்த்தியாக, விரைவாக, வித்யாசமாக, துடிப்புடன், ஆக்கபூர்வமாக, அமைதியாக, வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும்.
“மெய் வருத்தம் பாரார்;
பசி நோக்கார்’
கண் துஞ்சார்;
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்;
செவ்வி அருமையும் பாரார்;
அவமதிப்பும் கொள்ளார்;
கருமமே கண்ணாயினார்”
என்பதற்கு எடுத்துக்காட்டு எங்கள்
திருமதி: இராஜராஜேஸ்வரி அவர்கள்.
தங்கள் பணி சிறப்பாக அமைய என் அன்பான வாழ்த்துக்கள். மனமார்ந்த ஆசிகள்.
பிரியத்துடன்,
vgk
எதையும் தன்
ReplyDeleteஆன்மீக பலத்தால் சாதிக்கும்
நீங்கள் இங்கும் வெற்றி கோடி கட்டுவீர்கள் என எனக்கு நம்பிக்கை உண்டு
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன் மேடம்
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
ReplyDelete@S.Menaga said...
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி.
@வை.கோபாலகிருஷ்ணன் said//
ReplyDeleteதங்கள் பணி சிறப்பாக அமைய என் அன்பான வாழ்த்துக்கள். மனமார்ந்த ஆசிகள்.//
ஆசிகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் மனம்ந்நிறைந்த நன்றிகள்.
@A.R.ராஜகோபாலன் said...//
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி.
உங்கள் பதிவுகள்தான் பெரும்பாலோனோர் காலையில் முதலில் படிக்கும் பதிவாக இருக்கும்.
ReplyDeleteவாழ்த்துக்கள் மேடம்
@Rathnavel said...
ReplyDeleteமனப்பூர்வ வாழ்த்துக்கள்.//
மனப்பூர்வ நன்றி.
@எல் கே said...//
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி.
@ஹேமா said...
ReplyDeleteவாழ்த்துகள்.எல்லாரையும்
எப்பிடியும் ஒரு வாரத்துக்குச்
சாமி கும்பிட வைக்கப்போறீங்க.
அரோகரா !//
அதற்குத்தான் என் இரண்டு வலைப்பூக்கள் மலர்ந்துள்ளனவே. இங்கும் சாமி கும்பிடச்சொன்னால் சலித்துக்கொள்ளுவார்களே...
வாழ்த்துக்க்ளுக்கு நன்றி.
வாழ்த்துகள். ஹேமா சொன்னது உண்மைதான்.
ReplyDeleteமணிராஜ் உங்கள் சேவை மனப்பான்மைக்கு ஒரு பூங்கொத்து.
@ JOTHIG ஜோதிஜி said... //
ReplyDeleteபூங்கொத்துக்கு நன்றி.
வாழ்த்துகள் மேடம்....உங்கள் புயல் பதிவுகள் இங்கும் சுழலட்டும்...
ReplyDeleteவருக வருக இராஜராஜேஸ்வரி - ஆன்மீகப் பதிவுகளை சுய அறிமுகத்தில் வெளியீட்டமை நன்று. நல்வாழ்த்துகள் - அடுத்த இடுகைகளீல் வழக்கம் போல் மற்ற பதிவர்களீன் இடுகைகளை அறிமுகம் செய்க. நட்புடன் சீனா
ReplyDeleteவாழ்த்துக்கள் இராஜராஜேஸ்வரி..
ReplyDeleteவிதி முறைகளில் குறிப்பிட்ட படி இவ்விடுகைக்கு லேபிள் இடுக
ReplyDeleteவலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆரம்பமே அமர்க்களமா இருக்கு.
தொடரட்டும் உங்கள் சிறப்பான பணி.
வாழ்த்துகள் மேடம்.
ReplyDeleteவலைச்சர ஆசிரியைக்கு வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஆசிரியப்பணி இனிதாய் தொடர்கிறது...
ReplyDeleteதங்களது ஆசிரியப் பணி இனிதே தொடங்கி இருக்கிறது... மேலும் வரும் நாட்களில் அமர்களமாக உங்கள் அறிமுகங்கள் வரவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்....
ReplyDeleteவாழ்த்துகள்...
மனம் நிறைந்த வாழ்த்துகள் இராஜராஜேஸ்வரி. ஆலய தரிசன வாரமென்றே அறிவித்துவிடலாம்.
ReplyDelete