Thursday, July 28, 2011

வலைச்சாரத்தில் ஒரு குயிலிறகு-4


கவிதைகள்

சூத்திரம்
மான்குட்டியை கவ்வும் வேங்கை 
தன்குட்டியை கவ்வும் பாங்கை
                       புரிந்து கொள்கிறேன்.
,
உறவுகளுக்கும் சூத்திரம் 
                            அதுதானென்பதோ,
பிறழ்வுகள் நேரும்வரை 
                        புரிவதேயில்லை.

மயக்கம் 

என்னதான் சொல்லு 
எச்சில் மாங்காய் 
என் விரதத்தைக் கலைத்ததேயில்லை

உன் பல்பதிந்த பகுதி.தவிர்த்து
மறுபுறம் சுவைக்கிறேன்.

உன் வாய்ப்பட்ட மாங்காய் 
புளிப்பானதென்று 
உன் முகச்சுழிப்பு ஒன்றாலேயே
தெரிகிறதெனக்கு.


முகமாயம் 

இற்றுப் போன குடிசைக் கூரைக்கு
மஞ்சள் பூசி அலங்கரிக்கும் 
                  பூசணிப் பூக்கள். 

சாந்துப்பொட்டாய் உச்சியில் ஒரு குயில் 

இருபுறமும் புருவமாய்   
வாலசைக்கும் அணில்களும். 

கண்களாய் சார்ந்த
கருப்பு டயரிரண்டு .

மூக்காய் முதிர்ந்த பூசணிக்காய்.
வாயாய் அகன்ற குடிசை வாசல் .

குடிசைக்கு எல்லாம் தான் இருக்கிறது 
வயிறொன்றைத் தவிர.


சலிப்பு 
எனக்கு பழகிவிட்டது
உன் ஈர முத்தமும் 
கண்டக்டர் எச்சிலும்  

உலரும் ஈரங்கள் 
ஊர்ப்பட்ட வாகனப்புகை 
உள்ளிழுக்கும் போக்குவரத்து போலீசை,
பார்க்கும் போதெல்லாம் 
பாவமாய்த்தான் இருந்தது.....

சாலைக் கடந்த தள்ளுவண்டி மடக்கி,
ஆப்பிள்களை அள்ளியதை காணும்வரை.

 இனி பதிவர்கள் அறிமுகப் படலம் 

எங்க கலையாத சங்கத்து சாமியாடிகள்!

மூன்றாம் சுழி : பதிவர் அப்பாதுரை அவர்களின் வலைப்பூ. இதில் இவர் வெளியிடும் கதைகள், நாடகங்கள், தேர்ந்த திரையிசைப் பாடல் அனைத்துமே இவரின் புதுமையான, வழக்கமான சிந்தனையை தவிர்த்தவையாய், தனித்து நிற்கின்றன. சட்டெனத் தலையில் தட்டி திருப்பும் வரிகள். கொஞ்சம் அதிர்ச்சி, கொஞ்சம் ஆச்சரியம், நிறைய வியப்பு, கொஞ்சமே கொஞ்சம் சீண்டலெல்லாம் கலந்துகட்டிய உணர்வை உங்களுக்கு ஏற்படுத்தக் கூடும்.
இவரின் நசிகேத வெண்பா இவரின் மேதைமையை வெளிப்படுத்தும் இன்னொரு வலைப்பூ. கடோபநிஷதத்தின் சாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, அதன் கட்டுமானத்தை மீறாமல், இவரின் சில கொள்கைகளுக்கும் பங்கம் வராமல் எடுத்தாண்டிருக்கும் ரசவாதத்தை நீங்களே படித்தால்  மட்டுமே அனுபவிக்க இயலும். தளைதட்டாத வெண்பாக்களின் அழகா, வந்துவிழுகின்ற வார்த்தைகளின் வசீகரமா, தொடரும் விளக்கங்களா... எதைச் சொல்வேன்?..

தீராத விளையாட்டுப் பிள்ளை : ஆர்.வீ.எஸ் அவர்களின் புன்னகைப்பூ.இந்த ஐ.டீ அசுரன் தொடாத துறையில்லை. எல்லாவற்றையும் நகைச்சுவை லாரியில் அள்ளிக் கொண்டு வந்து அதகளப்படுத்தும் பொல்லாத பிள்ளை.
எதையும் நகையுணர்வோடு பார்க்கும் இவரின் எழுத்துக்களில் வார்த்தை ஜாலம், நக்கல் , சுய எள்ளல்எல்லாமும் உண்டு. 'சூப்பர், கலக்கல்' என்று பின்னூட்டம் போட்டுவிட்டு அலைபேசியில் திட்டும் உரிமை எனக்குண்டு. கொஞ்சம் மூடு கெடும் போதெல்லாம் இந்த வலைத்தளத்துக்கு செல்லுங்கள். விசிலடித்துக் கொண்டு திரும்புவீர்கள்!

ஆனந்த வாசிப்பு: பத்மநாபன் அவர்களின் வலைப்பூ. இவர் பதிவுகளை அத்திப்பூ என்று சொல்ல மாட்டேன். அடிக்கடி தென்படாத குறிஞ்சிப்பூ. ஆனாலும் ரசமான பின்னூட்டங்களால் அனைவர் தளத்தையும் அழகுபடுத்தும் வண்ணத்துப் பூச்சி இவர். வானவில்லின் நிறப்பிரிகையில் இவரின் சாயம்கூட ஒட்டிக் கொண்டிருக்கிறது. நன்றி பத்மநாபன்.

சிவகுமாரன் கவிதைகள் : கவிதையை சுவாசிக்கும் என் அன்புத்தம்பியை படித்தால் நீங்களும் நேசிப்பீர்கள். சந்தங்களின் அந்தம் காட்டும் இவர் கவிதைகளின் சொல் புதிது. பொருளும் புதிது. அருட்கவியென்று இன்னொரு ஆன்மீகப்பூவும் இவர் தோட்டத்தில் உண்டு. சென்று பாருங்கள். இருந்தமிழை இருந்து படியுங்கள்.

கைகள் அள்ளிய நீர் : சுந்தர்ஜி அவர்களின் வலைப்பூ. நானும் இவரின் கருத்துப் புனலை கைகளில் அள்ளி விடத்தான் பார்க்கிறேன். இயலவில்லை.  சங்கோஜ நடையுமுண்டு.. சாட்டை அடியுமுண்டு. பொலிவான சுந்தர்ஜீயின் வலையை அவசியம் பார்க்கவேண்டும் நீங்கள்..

ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி அவர்களின் அழகு வலைப்பூ. இவர் தேவன், கல்கி ஜாதி. 'மூவார்முத்து' என்று நான் சூட்டிய பேருக்கு இதுவரை சண்டை போடாதவர்.மெல்லிய நகைச்சுவை இழையோடும் உறுத்தாத தமிழை ரசிக்கலாம். தரனின் கீர்த்தனாஞ்சலி எனும் இன்னொரு வலைப்பூவில் இவரின் கீர்த்தனை சமைக்கும் அழகையும் பார்க்கலாம்.

ரிஷபன்: தோளில் தூக்கிய குழந்தை படம் போட்ட வலைப்பூங்க!. இவர் கதைகளைப் படித்தால் நீங்களும் அவர் தோளில் அமைதிமாய் கவலை மறந்து வாசிப்பானுபவம் கொண்டு மிதக்கலாம். சிறுகதை செதுக்கும் வித்தையை இவர் சில பதிவுகள் போட்டு இளைய தலைமுறைக்கு வழிகாட்டவேண்டும் என்பது என் ஆவல்.

வை.கோபாலகிருஷ்ணன்: இவர் ஒரு எழுத்து பாக்டரி வைத்திருக்கும் இளைஞர். பழைய நிகழ்வுகளை அசைபோடும் அழகே தனி. பாருங்கள்.

 வானம் வெளித்த பின்னும் ஹேமா: என் கோபக்கார, சுவீகாரத் தங்கை. இவரின் இன்னொரு வலைப்பூ உப்புமட சந்திஎன் தங்கையாக இவள் இருப்பதால்தானோ என்னவோ, எதுஎழுதினாலும் எனக்கு பிடித்து போகிறது. அதனால் நீங்களே பார்த்துவிட்டு  மார்க் போடுங்கள். ( கொஞ்சமா போட்டீர்களானால் நான் அழுதுடுவேன் !)

மைத்துளிகள் மாதங்கி மௌளியின் வலைப்பூ . சிக்கனமான வார்த்தைப் பிரயோகத்தில் மனக்காட்சியை ஏற்படுத்தும் நல்ல எழுத்து. வித்தியாச பார்வை. இன்னமும் நிறைய எழுதுங்கள் மாதங்கி!

பாகீரதி :எல்.கே அவர்களின் வலைப்பூ. பாசாங்கில்லாத எழுத்து இவருடையது. புதுமையான கருத்துக்கள் கொண்ட இந்தப் பதிவர்  ஒரு நல்ல நாவலை செதுக்க வேண்டும். இது இந்த அண்ணனின் அன்புக் கட்டளை!

உள்ளதை (உள்ளத்தை)சொல்லுகிறேன் :சாய் அவர்களின் வலைப்பூ. ஒளிவு மறைவு இல்லாத எழுத்து. இவருடையது. ரசமான பதிவுகள் உண்டு. பாருங்கள் உடனே!

மணிராஜ் இராஜராஜேஸ்வரி: இவரின் ஸ்தல யாத்திரை பதிவுகள் கன்னத்தில் போட்டுக் கொள்ள வைக்கும். மேடம் பிடியுங்க இந்தப் பட்டத்தை...
"லையுலக சுந்தராம்பாள்  .K.P.S போல பக்தியை பரப்புங்கள்.

எங்கள் பிளாக் ஸ்ரீராம் அவர்களின் வலைப்பூ. நாங்கள் அவரை அழைப்பதென்னவோ பின்னூட்டப் பெருமாளு என்று. சுவையான கருத்துக்களை பதியும் இவரின் பதிவுகளை கண்டிப்பாய் ரசிப்பீர்கள் என்பதற்கு நான் உத்தரவாதம்.

இன்னமும் இருக்குங்க 'பதிவார் திருக்கூட்டம்' . நாளை சந்திப்போம்.   
  
      






              

47 comments:

  1. அருமையான கவிதைகள். மாங்காய்க்கடி கவிதை ரொம்பப் பிடித்.

    ரிஷபனின் பரிமாணங்கள் வியக்க வைக்கின்றன. கோபாலகிருஷ்ணன் அறிமுகம் செய்திருந்த திருச்சி எழுத்தாளர்கள் பதிவை படித்தீர்களோ?

    வலையுலக சுந்தராம்பாளா? (இராரா.. ஆட்டோ அனுப்ப அட்ரெஸ் வேணுமென்றால் சொல்லுங்க)

    எங்கள் பிளாகுக்கு பட்டம் எதுவும் இல்லையா?

    அறிமுகத்துக்கு நன்றி.

    ReplyDelete
  2. மாதங்கி மாலியா மௌலியா?

    ReplyDelete
  3. சுந்தர்ஜியின் வலைப்பூவில் ஆளையடிக்கும் சைசில் தலைப்புப்படம் ஸ்பெஷல்.

    ReplyDelete
  4. வைகோ அவர்களின் வலைப் பக்கத்தில் பிடித்த உணவு வகைகள் பற்றி அவர் ஒரு பதிவு எழுதியிருந்தார். அதுவும் மிக ரசிக்கத்தக்கது. 'எங்கள்' அறிமுகத்துக்கு நன்றி. அறிமுகப் படுத்தப்பட்டுள்ள மற்ற பக்கங்களும் நான் பார்த்து ரசிப்பவை என்பதில் ஒரு சந்தோஷம். ஒவ்வொரு பக்கத்தையும் அறிமுகப் படுத்தும் உங்கள் வரிகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன.

    ReplyDelete
  5. கவிதைகள் ஒன்றுக்கொன்று சளைக்காமல்....ஆஹா..ஆஹா போட்டு ரசிக்க வைக்கின்றன...

    கலையாத சங்க உறுப்பினர்களில் இந்த எழுத்தமைதியாளனுக்கும் இடம் நன்றி.....அனைவரையும் அறிமுக படுத்திய விதம் அருமையாக இருந்தது..

    ReplyDelete
  6. அறிமுகங்களும், கவிதைகளும்.. ஆஹா ரகம் :-))

    ReplyDelete
  7. நான் தொடர்ந்து படிக்கும் பல தளங்களின் அறிமுகம் அருமை.

    ReplyDelete
  8. தாங்கள் அறிமுகப் படுத்திச் செல்லும் பதிவுகள் எல்லாம்
    நான் தவறாது தொடரும் தரமான பதிவுகள்
    கவிதைகள் அனைத்தும் அருமையிலும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. எழுத்தமைதியாளனைத் தொடர்ந்து நானும் ஒரு வணக்கம் போட்டுக்கறேன் வாத்யாரே!!

    பெரிய பெரிய ஜெயண்ட்ஸ் கூட இந்த்ச் சிறியவனையும் அறிமுகப்படுத்தியதற்கு.

    சுந்தராம்பாள்...

    சுந்தர்ஜீயின் முகப்புப் படம் எப்போதும் அருமை. எங்க இருந்து தேத்துகிறார் என்ற ரகஸியத்தை சொல்ல மாட்டேன் என்கிறார்.

    மூனுசுழிக்காரர் ஒருவரை அறிமுகப் படுத்தினீங்களே... அப்பப்பாதுரை அவரு.

    மீதமிருக்கும் பதிவார் திருக்கூட்டத்தையும் பார்போம். :-)

    ReplyDelete
  10. //எனக்கு பழகிவிட்டது
    உன் ஈர முத்தமும்
    கண்டக்டர் எச்சிலும் //

    சூப்பர்..

    அறிமுகப் பட்டியலும் அருமை.
    கலக்குங்க.

    ReplyDelete
  11. மாங்காய்க்கடி கவிதை அருமை. அறிமுகங்களும் அருமை.

    ReplyDelete
  12. மோகண்ணா...பெரியவர்களோடு நானும்.சந்தோஷம் என்னையும் சேர்த்துக்கொண்டதுக்கு.இவர்களில்
    சிலர் பெரிய பெரியவர்கள்.கொஞ்சம் பயம்.அதனால் பார்த்துவிட்டு மட்டும் வந்துவிடுவேன் !

    கவிதைகள் எல்லாமே ஒன்றுக்கொன்று போட்டி போடுகிறது.அதுவும் வயிறில்லாத கூரை வீடு மனசை ஊருக்குக்
    கூட்டிப் போகிறது !

    ReplyDelete
  13. பூவோடு சேர்ந்த நாராக, மிகச்சாதாரணமான என்னையும், இந்தச் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பெறச்செய்துள்ள தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    இன்று அடையாளம் காட்டப்பட்டுள்ள அனைத்து ஜாம்பவான்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  14. பட்டமும் கொடுத்து அறிமுகத்திற்கு நன்றி.

    ReplyDelete
  15. சூத்திரம் மான்குட்டியை கவ்வும் வேங்கை தன்குட்டியை கவ்வும் பாங்கை புரிந்து கொள்கிறேன். , உறவுகளுக்கும் சூத்திரம் அதுதானென்பதோ, பிறழ்வுகள் நேரும்வரை புரிவதேயில்லை. //

    ஆழமிக்க பாங்கான பகிர்வு..

    ReplyDelete
  16. அப்பாதுரை சார்! உங்கள் பாராட்டுக்கு நன்றி! அந்த மாங்காயை நீங்களும் காக்காய்க்கடி கடிப்பீர்கள் என்று தெரியும். அறிமுகமான அன்பர்கள் அனைவரும் நம் இதயத்துக்கு மிக அருகாமையில் உள்ளவர்கள் அல்லவா?

    ReplyDelete
  17. அப்பாதுரை! உங்க பிளாகுக்கு பட்டம் கொடுக்காமலா போயிடுவேன்? இருடீ.. இரு!

    ReplyDelete
  18. மாதங்கி மாலியா மௌலியா? கொழப்பிட்டீங்களே! தங்கச்சீ! எங்கிருந்தாலும் உடனே மைக் ஸ்டெண்டுக்கு வந்து வேவரம் சொல்லணும்னு சங்கத்தின் சார்பாய்க் கேட்டுக்கிறோம்.. டேய்! கொடுக்காபுளி! சோடாவ உடைடா!

    ReplyDelete
  19. சுந்தர்ஜியின் முகப்புப் படம் தோரண வாசல் வாழைmaரம் அல்லவா?

    ReplyDelete
  20. ஸ்ரீராம்! வை.கோவின் பிடித்த உணவு ஒரு ஸ்டார் பதிவு. அவரை இரண்டாம்பாகம் தொடங்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
    உங்கள் பாராட்டுகளுக்கெல்லாம் நன்றி ஸ்ரீராம்!

    ReplyDelete
  21. மிக்க நன்றி அமைதிச் சாரல்!

    ReplyDelete
  22. கலாநேசன் சார்! பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  23. ரமணி சார்! உங்கள் ரசனைக்கு மிக்க நன்றி !

    ReplyDelete
  24. அன்பு ஆர்.வீ.எஸ்! வணக்கம் ஏற்றுக் கொள்ளப் பட்டது. உம்மை சிறியவன்னு சொல்லிக் கொண்டால் விட்டு விடுவோமா? நிறைய எழுதுங்க பாஸ்!(ஒழுங்கா எழுதுற வரைக்கும் விட மாட்டோம்!) உங்கள் பார்வையில் சொன்ன பதிவர்கள் காமெண்ட்ஸை ரசித்தேன்!

    ReplyDelete
  25. நன்றி பத்மநாபன் ! எழுத்தாமைதியாளரே! நம் கலையாத சங்கத்தில் அனைவருமே கைப்புள்ளை தானே?

    ReplyDelete
  26. sreeraam said.....

    பிறழ்வுகள் நேர்ந்தும் புரியாமைக்கு இது ஓகே. நல்ல கவிதை.இந்த உறவுப் பிணைப்புகளைப் பற்றி தனிப் பதிவே போடலாம். உலரும் ஈரங்கள் சிரிக்க வைத்து விட்டது.
    நீங்கள் சகபதிவர்களை அறிமுகப்படுத்தும் அழகு சுவையாக இருக்கிறது.அட, எங்கள் ப்ளாககுமா... நன்றி...ஆனால் நீங்கள் அந்தப் பக்கம் அதிகம் வருவதில்லையே ஜி...அது எங்களுக்குக் குறைதான்!

    ReplyDelete
  27. பாராட்டுக்கு நன்றி ஸ்ரீராம்! பணியும் பயணமும் என் நேரத்தை சூறையாடி வருகின்றன. இயன்ற வரையில் எஞ்சிய நேரத்தை வலை மேய செலவிடுகிறேன். இனி அடிக்கடி வருகிறேன் நண்பரே!

    ReplyDelete
  28. பாராட்டுக்கு நன்றி ஸ்ரீராம்! பணியும் பயணமும் என் நேரத்தை சூறையாடி வருகின்றன. இயன்ற வரையில் எஞ்சிய நேரத்தை வலை மேய செலவிடுகிறேன். இனி அடிக்கடி வருகிறேன் நண்பரே!

    ReplyDelete
  29. APPADURAI SAID.....

    ஓ.. இது வேறு அது வேறா?

    ReplyDelete
  30. அப்பாதுரை!அதுவே இதுவாய், இதுவே அதுவாய் ஆகும் ஆனந்தப் பெருவெளியில் அண்ணே!

    ReplyDelete
  31. RAJARAJESWARI SAID:

    உறவுகளுக்கும் சூத்திரம்
    அதுதானென்பதோ,
    பிறழ்வுகள் நேரும்வரை
    புரிவதேயில்லை.//

    அழகான வரிகள்.

    என்னைஅறிமுகப்படுத்திப்பட்டமும் கொடுத்திருக்கிறீர்களே..
    நன்றி. நன்றி.

    ReplyDelete
  32. KOUTHAMAN SAID.............
    // அப்பாதுரை சொன்னது…
    ஓ.. இது வேறு அது வேறா?//

    எது?

    ReplyDelete
  33. அன்பின் கௌதமன் ! வாங்க! அதுவா? இதுவா? எதுவாயின் என்? சோற்றுருண்டையும், சேரத்திண்ணையும், கூறக் கவிதையும், கொள்ள அன்பும் இருந்தால் போதாதோ?

    ReplyDelete
  34. அப்பாதுரை சார் ! இன்னைக்கு உங்களுக்கு கௌதமன் சார் தான் அகப்பட்டாரா?! காஸ்யபன் சார் எழுத்துக்கு ஒரு நமஸ்காரம்..

    ReplyDelete
  35. SE.KUMAAR SAID.........

    அனைவரையும் அறிமுக படுத்திய விதம் அருமை

    ReplyDelete
  36. G.M.BALASUBRAMANIYAN SAID......
    உறவுகளின் சூத்திரங்களும் பிறழ்வுகளும் கூறும் நீங்கள் என் பதிவு “உறவுகள் “படியுங்களேன்.ஸ்ரீராம் சொல்வதை ஏற்கனவே செய்துவிட்டேன். வாழ்த்துக்கள்.

    28 ஜூலை, 2011 4:33 pm

    ReplyDelete
  37. G.M.B சார்! உங்கள் வாழ்த்துக்கு நன்றி! உங்கள் பதிவை இன்று படித்து விடுவேன் சார்

    ReplyDelete
  38. SIVKUMARAN SAID...........

    தினம் வலைக்கு வருகிறீர்கள். அலசுகிறீர்கள்.தங்கள் தம்பி என்று சொல்லிக் கொள்ளும் தகுதி எனக்கு இருக்கிறதா தெரியவில்லை.
    அறிமுகப்படுத்தியதற்கு நன்றி அண்ணா.

    உறவுகள் பற்றிய சூத்திரம் நிறைய யோசிக்க வைத்தது. நான்கே வரிகள். நச்சென்று நடு மண்டையில் விழுந்தது போன்று இருந்தது.

    28 ஜூலை, 2011 6:06 pm

    ReplyDelete
  39. SIVKUMARAN SAID...........

    தினம் வலைக்கு வருகிறீர்கள். அலசுகிறீர்கள்.தங்கள் தம்பி என்று சொல்லிக் கொள்ளும் தகுதி எனக்கு இருக்கிறதா தெரியவில்லை.
    அறிமுகப்படுத்தியதற்கு நன்றி அண்ணா.

    உறவுகள் பற்றிய சூத்திரம் நிறைய யோசிக்க வைத்தது. நான்கே வரிகள். நச்சென்று நடு மண்டையில் விழுந்தது போன்று இருந்தது.

    28 ஜூலை, 2011 6:06 pm

    ReplyDelete
  40. SIVKUMARAN SAID...........

    தினம் வலைக்கு வருகிறீர்கள். அலசுகிறீர்கள்.தங்கள் தம்பி என்று சொல்லிக் கொள்ளும் தகுதி எனக்கு இருக்கிறதா தெரியவில்லை.
    அறிமுகப்படுத்தியதற்கு நன்றி அண்ணா.

    உறவுகள் பற்றிய சூத்திரம் நிறைய யோசிக்க வைத்தது. நான்கே வரிகள். நச்சென்று நடு மண்டையில் விழுந்தது போன்று இருந்தது.

    28 ஜூலை, 2011 6:06 pm

    ReplyDelete
  41. SIVKUMARAN SAID...........

    தினம் வலைக்கு வருகிறீர்கள். அலசுகிறீர்கள்.தங்கள் தம்பி என்று சொல்லிக் கொள்ளும் தகுதி எனக்கு இருக்கிறதா தெரியவில்லை.
    அறிமுகப்படுத்தியதற்கு நன்றி அண்ணா.

    உறவுகள் பற்றிய சூத்திரம் நிறைய யோசிக்க வைத்தது. நான்கே வரிகள். நச்சென்று நடு மண்டையில் விழுந்தது போன்று இருந்தது.

    28 ஜூலை, 2011 6:06 pm

    ReplyDelete
  42. SIVKUMARAN SAID...........

    தினம் வலைக்கு வருகிறீர்கள். அலசுகிறீர்கள்.தங்கள் தம்பி என்று சொல்லிக் கொள்ளும் தகுதி எனக்கு இருக்கிறதா தெரியவில்லை.
    அறிமுகப்படுத்தியதற்கு நன்றி அண்ணா.

    உறவுகள் பற்றிய சூத்திரம் நிறைய யோசிக்க வைத்தது. நான்கே வரிகள். நச்சென்று நடு மண்டையில் விழுந்தது போன்று இருந்தது.

    28 ஜூலை, 2011 6:06 pm

    ReplyDelete
  43. அதென்ன அப்படி சொல்லி விட்டாய் சிவா? நமக்கெல்லாம் ஒரே தகுதி தமிழ்க் காதல் ஒன்று தானே? பாராட்டுக்கு நன்றி சிவா!

    ReplyDelete
  44. R.RAMAMURTHY SAID.......

    அட... நானுமா?

    ReplyDelete
  45. மூவார்! நீரே தான்

    ReplyDelete
  46. கவிதைகள் அருமை

    ReplyDelete