24.07.2011ல் முடிவடைந்த வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் முனைவர் இரா.குணசீலன் - தான் ஏற்ற பொறுப்பினை - பொறுப்பாக நிறைவேற்றி - மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெற்றார். இவர் ஏழு பதிவுகள் இட்டு, அவற்றில் துறை வாரியாக, அறிமுகப் படுத்திய பதிவர்கள் நூறு. பெற்ற மறு மொழிகளோ இருநூற்றுப் பதினைந்து.
பல பணிகளுக்கு இடையேயும் - சிரமம் பாராது - இங்கும் ஆசிரியப் பொறுப்பாற்றிய நண்பர் முனைவர் இரா குணசீலனை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்.
நேற்று 25.07.2011ல் ஆசிரியப் பொறுப்பேற்க இசைவு தெரிவித்து பொறுப்பேற்றவர் மோகன் ஜி. இவர் ஹைதராபாத்தில் ஒரு புகழ பெற்ற அரசுடமை வங்கியின் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் முதுநிலைப் பயிற்சியாளராய்ப் பணி புரிகிறார். இவர் பல்வேறு துறைகளில் முதுகலைப் படிப்பும், சில துறைகளில் பட்டயப் படிப்பும், சட்டப் படிப்பும் படித்திருக்கிறார். இவர் வானவில் மனிதன் என்னும் வலைப்பூவினில் ஓராண்டு காலமாக நூற்றுக்கும் மேலான பதிவுகள் இட்டிருக்கிறார்.
இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர். மேலும் தமிழிலக்கியம், சிற்பக்கலை, பயணங்கள் மற்றும் இசையில் ஆர்வமிக்கவர். பள்ளிப் பருவம் தொட்டே கவிதை எழுதுவதில் ஆர்வம் காட்டி - பல்வேறு கவியரங்களில் நடுவராகப் பணியாற்றியவர்.
மேலும் இவர் வானொலியில் இலக்கியம் பற்றியும் மாமனிதர்களின் பெருமை பற்றியும் பல உரைகள் நிகழ்த்தியுள்ளார்.
மோகன் ஜீயினை வருக வருக ! அறிமுகங்களை அள்ளித் தருக என்று வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் குணசீலன்
நல்வாழ்த்துகள் மோகன் ஜீ
நட்புடன் சீனா
சோதனை மறுமொழி
ReplyDeletethank you!
ReplyDeleteபல்திறன் வாய்ந்த திரு. மோஹன்ஜி அவர்களை வருக! வருக! வருக! என இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபலப் பல வண்ணங்கள் போலவே பலப்பல திறமைகளை தன்னுள்ளே கொண்டுள்ள எங்கள் மோகன்ஜி அவர்களுக்கு வாழ்த்துகள். அசத்துங்க நண்பரே...
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமுனைவர் திரு குணசீலன் அவர்கள் தன் பணியை அருமையாக ஆற்றி சென்றார், அவருக்கு என் வாழ்த்துக்கள்
ReplyDeleteதிரு மோகன்ஜி அவர்களுக்கு மனம் நிறைந்த வரவேற்பு.
விக்கியுலகம் நன்றி1
ReplyDeleteவை.கோ சார்! உங்கள் வரவேற்பிற்கு என் வந்தனம்
ReplyDeleteமிக்க நன்றி வெங்கட் உங்கள் அன்பிற்கு!
ReplyDeleteகங்கை மகன் சார்! உங்கள் வாழ்த்துக்கு நன்றி
ReplyDeleteஅன்பு ராஜகோபாலன் சார்! உங்கள் வரவேற்புக்கு நன்றி! நீங்கள் சொன்னது போல் குணசீலன் அவர்கள் செவ்வனே தான் பணியை ஆற்றிச் சென்றிருக்கின்றார்
ReplyDelete