Sunday, July 31, 2011

சென்று வருக மோகன் ஜி - வருக வருக ரமணி

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்குப் பொறுப்பேற்ற நண்பர் மோகன் ஜி - தான் ஏற்ற பொறுப்பினை நல்ல முறையில் நிறைவேற்றி - மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவர் எட்டு பதிவுகள் போட்டு ஏறத்தாழ இரு நூற்றைமபது மறுமொழிகள் பெற்றிருக்கிறார். இவர் அறிமுகப் படுத்திய பதிவர்களோ முப்பத்து நான்கு நண்பர்கள்.

இவர் புதுமையாக, அறிமுகத்தினைத் தவிர முன்னுரையாக கதை கவிதை நகைச்சுவை எனப் பலவும் பதிவினில் சேர்த்திருக்கிறார். நண்பர் மோகன் ஜீயினை நல்வாழ்த்துகளுடன் விடை அளிப்பதில் பெருமை அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் வருகிறார் நண்பர் ரமணி . இவர் " தீதும் நன்றும் பிறர் தர வாரா " என்னும் வலைப்பூவினில் எழுதி வருகிறார்.

இவர் மதுரை மண்ணின் மைந்தர். சிறு வயது முதலே இலக்கியத்தின் மீது காதல் கொண்டு, கல்லூரி நாட்களிலேயே சிறு பத்திரிகைகளில் கவிதைகள் வெளியிட்டும், வீதி நாடகங்கள் எழுதியும், நடித்தும், பிறகு நிஜ நாடக இயக்கத்தில் பங்கேற்றும் பொறுப்பினை வகித்தும் இருக்கிறார். சங்கீத நாடக அகடமியின் சார்பில் நடைபெற்ற இந்தியாவின் சிறந்த நாடகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடகத்தில் - டெல்லியில் நடித்தும் பங்கேற்றும் இருக்கிறார்.

பணி நிறைவு செய்த பின்னர் - ஓய்வு நேரத்தினை - மற்றவர்களுக்குப் பயன்படும்படியாக - அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக வலைப்பூ ஆரம்பித்து எட்டு மாத காலமாக ஏறத்தாழ ஐம்பதற்கும் மேற்பட்ட பதிவுகள் போட்டிருக்கிறார்.

நண்பர் ரமனியினை வருக ! வருக ! என வரவேற்று - அறிமுகங்களை அள்ளித் தருக என்ற வேண்டுகோளுடன் வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் மோகன் ஜி
நல்வாழ்த்துகள் ரமணி

நட்புடன் சீனா


6 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. அன்பின் ரமணி சார்! புதிய பொறுப்புக்கு என் வாழ்த்துக்கள். உங்கள் ஆழமான கருத்துக்களையும் கேட்க ஆவலாய் உள்ளேன். ஜமாயுங்கள்.

    ReplyDelete
  3. அன்பின் ரமணி சார்! புதிய பொறுப்புக்கு என் வாழ்த்துக்கள். உங்கள் ஆழமான கருத்துக்களையும் கேட்க ஆவலாய் உள்ளேன். ஜமாயுங்கள்.
    சீனா சார்! மறுபடியும் நன்றி உங்களுக்கு! சந்திப்போம்

    ReplyDelete
  4. வான்வில் போலவே அழகாகவும் மனதிற்கு நிறைவாகவும் பணியாற்றி விடைபெற்றுச்செல்லும் திரு.மோகன்ஜி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    ”வானவில் தோன்றி மறைந்தால் என்ன, அது இயற்கை தானே! வானமாக மழை பொழிய நான் இருக்கிறேன்” என்று கூறி புதிய பொறுப்பேற்றிருக்கும் திரு ரமணி சார் அவ்ர்களை வருக வருக வருக என வரவேற்போம்.

    அவர் பணிகள் மிகச்சிறப்பாக அமைய வாழ்த்துவோம்.

    ReplyDelete
  5. மோஹன் ஜிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும், ரமணி அவர்களுக்கு
    புது ஆசிரிய பொறுப்புக்கு வரவேற்பு.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் மோகன்ஜி நிறைவாகப் பணியாற்றினீர்கள்.

    பணிசிறக்க வாழ்த்துக்கள் ரமணி.

    ReplyDelete