Sunday, July 31, 2011

முன்னுரையாக என்னுரை


என்னைப் பற்றி என்பதனை பதிவுலகில் நான் என்கிற அர்த்தத்தில் இதை எழுதுகிறேன்

கல்லூரி நாட்கள் முதலே எனக்கு எழுத்தில் அதிக நாட்டம் கொண்டு எழுதி வந்தாலும் கூடஎழுதியதைக் கொண்டு பத்திரிக்கையைத் தீர்மானிப்பது அல்லது குறிப்பிட்ட பத்திரிக்கைக்கென யோசித்து அதற்கேற்றார்போல எழுதுவது எல்லாம் கொஞ்சம்  பித்தலாட்டமாகப் பட்டதால்
எழுதுவதில் கொஞ்சம் நாட்டம் குறைந்து  கொண்டு வந்தது

அதேசமயம் படிப்பின் நிமித்தமும் வேலையின் நிமித்தமும் பெண்கள் அதிகமாக அடுப்படி விட்டும் வீடு விட்டும் வெளியேறத் துவங்க அவர்களது நடை உடை பாவனைகள் காலத்திற்கு ஏற்றார்போல மாறி யாக வேண்டிய அவசியம் நேர்ந்ததை போல ,அவசர யுகத்தில்இலக்கியத்தின்பால் மக்கள் கொண்டிருந்த அதிகப் பிடிப்பு குறைந்து மிக இலகுவாகச் சொல்லக் கூடிய விஷயங்களை மட்டுமே படிப்பது ரசிப்பது என்று உண்டான
மாறுதல் கூட என்னுள்ளும் ஒரு மாறுதலை ஏற்படுத்திப்போனது

இந்நிலையில் கடந்த ஜுலை மாதம் பதிவுலகு பற்றி நண்பர்கள் மூலம் அறிந்து
படிக்கத் துவங்கியபோது எனக்கு இது சரியாக வரும் போலப் பட்டது

இப்பதிவுலகில் யாருக்காகவும் எதற்காகவும் நம்முடைய சிந்தனையை
மாற்றிக் கொள்ளவேண்டியதில்லை.நாம் சொல்ல நினைப்பவைகளை
சொல்ல நினைக்கிற வகையில் எவ்வித கட்டுப்பாடும் இன்றி சொல்லக் கூடிய
சுதந்திரம் இருக்கிறது.அதனாலேயே நமக்கு பொறுப்பும் அதிகம் இருக்கிறது
எனவே இதில் கொஞ்சம் முயன்று பார்க்கலாமே என கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்பதிவிடத் துவங்கினேன்

கனமான விஷயங்களையே கருவாக எடுத்துக் கொள்வது என்றும்
அதனை எத்தனை எளிதாகச் சொல்ல முடியுமோ அப்படிச் சொல்ல முயல்வது என்றும்முடிவெடுத்து எழுதத் துவங்கினேன்.அதற்காகவே வசன கவிதைக்கும் உரை நடைக்கும் இடையிலான ஒரு நடையை அமைத்துக் கொண்டு தொடர்ந்து எழுதி வருகிறேன்

சிவாஜி நடித்த மோசமான படங்கள் உண்டு ஆனால் சிவாஜி மோச மாக நடித்த
படங்கள் ஏதும் இல்லையென நடிகர்திலகம் நடிப்புக் குறித்து சொல்வார்கள்
அதை போலவே  சில விஷயங்களை மிகச் சரியாக என்னால் நான் பதிவில்
சொல்ல முடியாது போனாலும் கூடநான் மோசமான விஷயங்களை பதிவிட்டதில்லை இனி பதிவிடப் போவதும் இல்லை என்கிற மன உறுதியோடு தொடர்ந்து பதிவிட்டு வருகிறேன்

மாதம் சராசரியாக நான்கு அல்லது ஐந்து பதிவுகள் என்ற கணக்கில் இதுவரை சுமார்ஐம்பது பதிவுகள் மட்டுமே எழுதி உள்ளேன் முதல் பத்து பதிவுகள் வரை
பின் தொடர்பவர்களோ  பின்னூட்டம் இ டுபவர்களோ இல்லை
ஆயினும் தொடர்ந்து எழுதிக்கொண்டுதான் வந்தேன்.
பின்னர் தொடர்பவர்கள் தொடர்ந்து வர வர முன்னர் எழுதிய பதிவுகளையே
மீள்பதிவு எனச் சொல்லாமல் புதிய பதிவாகப் போட்டு அனைவரின் அங்கீகாரத்தை பேற்றேன் என் கதைச் சுருக்கம் அவ்வளவே

மிக குறைந்த காலம்தான் பதிவுலகத் தொடர்பில் இருக்கிறேன் என்றாலும்
மிகக் குறைந்த பதிவுகளே கொடுத்துள்ளேன் என்றாலும் என்னையும் ஒரு பொருட்டாக மதித் துவலைசர ஆசிரியராக பணிபுரிய வாய்ப்புக் கொடுத்த பதிவுலகத் தந்தை திரு சீனா ஐயா அவர்களுக்கு ம்வலைசர ஆசிரியர் குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்

இதுவரை என் பதிவினைத் தொடராதவர்கள் கீழ்குறித்த பதிவுகளை வாசித்து
நான் மேலே சொன்னவைகளுக்கு ஒத்துப் போகிறதா என மதிப்பிடலாம்


50 comments:

  1. வாழ்த்துகள் வலைச்சர ஆசிரியரே..

    ReplyDelete
  2. ஆசிரியர் பொறுப்பேற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. மிகப்பொருத்தமான ஒருவரை இந்த வார வலைச்சர ஆசிரியராக நியமித்துள்ள, நம் மதிப்புக்குரிய சீனா ஐயா அவர்களுக்கும், மற்றும் வலைச்சர ஆசிரியர் குழுவுக்கும் முதலில் என் மகிழ்ச்சிகலந்த வணக்கங்களையும், பாராட்டுக்களையும், நன்றிகளையும் கூறிக்கொள்கிறேன்.

    இந்த வார புதிய வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றுள்ள திரு ரமணி ஐயா அவர்களை வருக வருக வருக என்று இருகரம் கூப்பி வரவேற்று வாழ்த்துக்கள் கூறி மகிழ்கிறேன்.

    திரு ரமணி ஐயா அவர்களின் இந்தப்பணி மிகச்சிறப்பாக அமையும் என்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
    அன்புடன் வை.கோபாலகிருஷ்ணன்.

    ReplyDelete
  4. கருத்து மிக்க பகிர்வுகளுக்கும், கலகலப்பிற்கும் இந்த வாரம் பஞ்சமிருக்காது.

    சிறப்புற செய்ய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. வலைச்சர ஆசிரியர் பணியை சிறப்புற செய்ய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. ரமணி சாருக்கு வரவேற்ப்பும் வாழ்த்துக்களும்!!

    ReplyDelete
  7. வாழ்த்துகள் ரமணி சார்.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் வலைச்சர ஆசிரியரே...

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  10. அன்பின் ரமணி - அட இவ்வளவு ஆர்வமா ? இரவு 11 மணீக்குப் பதிவா ? உறங்க வில்லையா ? என் அறிமுகப் பதிவு பார்த்தீர்களா ? மறு மொழி இல்லையே ! நான் அழைப்பு அனுப்பிய ஒரு மணீ நேரத்தில் சுடச் சுட ஒரு பதிவு. வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

    ReplyDelete
  11. அன்பின் ரமணி - தாங்கள் இடும் பதிவுகளுக்கு "ரமணி" என்று லேபிள் இடுக - நல்வாழ்த்துகள் ரமணீ - நட்புடன் சீனா

    ReplyDelete
  12. வாழ்த்துக்களும், வரவேற்புகளும்....

    ReplyDelete
  13. ஆசிரியர் பொறுப்பேற்றதற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. சில விஷயங்களை மிகச் சரியாக என்னால் நான் பதிவில்
    சொல்ல முடியாது போனாலும் கூடநான் மோசமான விஷயங்களை பதிவிட்டதில்லை இனி பதிவிடப் போவதும் இல்லை என்கிற மன உறுதியோடு தொடர்ந்து பதிவிட்டு வருகிறேன்

    super sir

    வாழ்த்துகள் ரமணி சார்.

    ReplyDelete
  15. ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  16. உங்கள் வலைபூவை மட்டும் பின் தொடர்ந்து சிறந்த எழுத்தாளர்களை கண்டுகொண்டேன். நீங்களே பல வலைப் பூக்களை அறிமுக படுத்த இப்படியொரு வாய்ப்பு உங்களுக்கு கிடைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

    இன்னும் கனமான விஷயங்களை எளிதாக புரிந்து கொள்ள ஏதுவாயிருக்கும்.

    ReplyDelete
  17. அமைதிச் சாரல் அவர்களுக்கு
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
    தமிழ்மண நட்சத்திரப் பதிவாளராக
    தேர்வு செய்யப்பட்டமைக்கு
    மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. அன்பார்ந்த வானதி அவர்களுக்கு
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  19. அன்பார்ந்த ஆமீனா அவர்களுக்கு
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  20. திரு.வை.கோ சார்
    தங்கள் வரவுக்கும் விரிவான மனங்கனிந்த
    வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  21. சத்திரியன் சார் தங்கள்
    மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்

    ReplyDelete
  22. ஸாதிகா மேடம்
    தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி

    ReplyDelete
  23. //நாய்க்குட்டி மனசு said...
    ரமணி சாருக்கு வரவேற்ப்பும் வாழ்த்துக்களும்!!//

    Thank you for your visit
    and greetings

    ReplyDelete
  24. //தமிழ் உதயம் said...
    வாழ்த்துகள் ரமணி சார்.//

    Thank You!!!

    ReplyDelete
  25. குமார் சார்
    தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி சார்

    ReplyDelete
  26. விஜய் சார்
    தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி சார்

    ReplyDelete
  27. அன்பு மனோ
    தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி

    ReplyDelete
  28. இந்திரா மேடம்
    தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி

    ReplyDelete
  29. சரவணன் தங்கள் விரிவான பின்னூட்டத்திற்கும்
    வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி

    ReplyDelete
  30. அமைதி அப்பா.//

    thank you for your
    visit and greetings

    ReplyDelete
  31. வெங்கட் சார்
    தங்கள் வரவுக்கும் விரிவான
    வாழ்த்துக்கும் மனம் கனிந்த நன்றி

    ReplyDelete
  32. வரவேற்பும் வாழ்த்துக்களும் ரமணி சார்

    ReplyDelete
  33. மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  34. மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் வலைச்சர ஆசிரியருக்கு.

    ReplyDelete
  35. வணக்கம் ரமணி அண்ணா,
    வித்தியாசமான ஒரு அறிமுகம், கூடவே வலைப் பதிவு பற்றிய ஒரு சிறு விள்ளக்கம் என வலைச்சரத்தில் முதற் பதிவினைத் தொடக்கியிருக்கிறீங்க.

    வாழ்த்துக்கள் அண்ணா. தொடர்ந்தும் பல புதுமையான அறிமுகங்களால் எம்மை இந்த வாரம் முழுவதும் நீங்கள் அசத்த வேண்டும்.

    ReplyDelete
  36. வை.கோபாலகிருஷ்ணன் said...
    மிகப்பொருத்தமான ஒருவரை இந்த வார வலைச்சர ஆசிரியராக நியமித்துள்ள, நம் மதிப்புக்குரிய சீனா ஐயா அவர்களுக்கும், மற்றும் வலைச்சர ஆசிரியர் குழுவுக்கும் முதலில் என் மகிழ்ச்சிகலந்த வணக்கங்களையும், பாராட்டுக்களையும், நன்றிகளையும் கூறிக்கொள்கிறேன்.//

    கோபாலகிருஷ்ணன் ஐயாவின் இந்தக் கருத்துக்களை நான் வழி மொழிகிறேன்.

    காத்திரமான ஒருவர் இவ் வாரம் வலைச்சரத்தில் பதிவுகளை மாலையாகத் தொடுத்து எமையெல்லாம் அசத்தப் போகிறார்.

    வருக! ரமணி அண்ணா,
    அசத்தலான அறிமுகங்கள் தருக!

    ReplyDelete
  37. சகோதரரே அன்பு வணக்கம்!

    கனமான விஷயங்களையே கருவாக எடுத்துக் கொள்வது என்றும்
    அதனை எத்தனை எளிதாகச் சொல்ல முடியுமோ அப்படிச் சொல்ல முயல்வது என்றும் சொல்லியிருக்கிறீர்கள்... சொல்லியபடியே உங்களது பதிவும் இருக்கிறது..தங்கள் வலைச்சர ஆசிரியராக இருக்கும் நாட்கள் வலைச்சரத்தில் ஒரு பொன்னாட்களாக இருக்கும் என்பதில் ஐயம் ஏதுமில்லை ...வலைசர ஆசிரியருக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  38. வலைசர ஆசிரியராக பணிபுரியம் வாய்ப்புக்கு வாழ்த்துக்கள் சகோதரர் ரமணி அவர்களே..! தங்களை நியமித்த பதிவுலகத் தந்தை திரு சீனா ஐயா அவர்களுக்கும் வலைசர ஆசிரியர் குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  39. வலைச்சர ஆசிரியரை வணங்குவதில் மகிழ்வு கொள்கிறோம்.எத்தனை பதிவுகள் இட்டோம் என்பதைவிட எத்தனை பேரின் மனங்களில் பதிந்தது என்பது உங்கள் சிறப்பான வலைப்பூவைப் பார்த்தாலே தெரியும்.முடிவின் விளிம்புக்கு மஞ்சு அவர்கள் இட்ட கருத்து, உங்கள் மனம் தொடும் எழுத்துக்கு எடுத்துக்காட்டு.

    ReplyDelete
  40. வலைச்சர ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துகள். வாரம் முழுவதும் உங்கள் பாணியில் அறிமுகம் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    ReplyDelete
  41. நிரூபன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி

    ReplyDelete
  42. raji //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி

    ReplyDelete
  43. ராமலக்ஷ்மி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி

    ReplyDelete
  44. இராஜராஜேஸ்வரி //
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி

    ReplyDelete
  45. மாய உலகம்//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி

    ReplyDelete
  46. Murugeswari Rajavel //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி

    ReplyDelete
  47. வெங்கட் நாகராஜ் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி

    ReplyDelete
  48. cheena (சீனா) //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி

    ReplyDelete