Tuesday, August 2, 2011

இனிக்கும் 2ஆம் நாள்



ஐயப்ப சாமி கோவிலுக்கு இருமுடிகட்டி போய் வந்தவர்களுக்குத் தெரியும்
ஒவ்வொரு அணிக்கும் குரு சாமி எவ்வளவு முக்கியமோ எவ்வளவு
கன்னிச் சாமிகளும் அவ்வளவு முக்கியம்.முதல் மரியாதை கூட
கன்னிச் சாமிகளுக்குத்தான்,அந்த வகையில் என்னுடைய துவக்க
அறிமுகமாக 2011 ஆண்டில் பதிவுலகில் நுழைந்து மிக அழகாக
பதிவிட்டு வரும் இவர்களை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்

                                ---------------------------------------
அதற்கு முன்பு ஜாலியாகத் தொடர நகைச் சுவைத் துணுக்குகள்
காது மிகச் சரியாகக் கேளாத இருவர் பேசிக்கொள்கிறார்கள்

  முதலாமவர்:     உன் பையன் எங்கே மதுரைக்கா போயிருக்கான் ?

இரண்டாமவர்:    இல்லையே அவன் மதுரைக்கில்ல போயிருக்கான்

  முதலாமவர்:      அதுதானே பார்த்தே நான் கூட மதுரைக்குத்தான்
                                  போயிருக்கான்னு நினைச்சேன்

( நம் கருத்தை காதில் வாங்காமல் பேசுவோருக்கு நான் இதை
 உதாரணமாக சொல்வதுண்டு)
                                  -------------------------------------


முதலாமவர் :        நிலா ராத்திரியில் வரும்
                                   ரயில் தண்டவாளத்தில் போகும்
                                    என் வயது என்ன ?

இரண்டாமவர்:    (கொஞ்சம் யோசித்து) முப்பத்து ஆறு

முதலாமவர்:        ஆச்சரியமாக இருக்கே எப்படி மிகச் சரியாகச்
                                    சொன்னாய்

இர்ண்டாமவர்:    அது ஒன்றும் கஷ்டமில்லை
                                   எங்கள் வீட்டுக்கு எதிரில்
                                   ஒரு அரை லூசு இருக்கிறார்
                                   அவருக்கு வயது 18
                            ----------------------------------------------

திருமண மண்டபத்தில் முஹூர்த்த நேரம் நெருங்கி கொண்டிருக்கிறது

சாஸ்திரிகள் சொல்கிறார்:
பொண்ணை சீக்கிரம் அழச்சிண்டு வாங்க
நல்ல நேரம் போகப் போகுது

மாபிள்ளையின் தோழன்:
 இப்படித்தாண்டா என் கல்யாணத்தன்னைக்கும்
 ஐயர் சொன்னார் அன்னைக்கு
போனநல்லநேரம்தான்
இன்னைக்கு வரைக்கும் வரவே இல்லை
                                                         -------------------------------
பதிவர் அறிமுகம்

ராஜேஸ்வரி-மணிராஜ் (http://jaghamani.blogspot.com/)

 ஜனவரி 2011 ல் பதிவிடத் துவங்கிய இவர் இதுவரை
 230 தரமான பதிவுகளை கொடுத்து 216 க்கும் மேற்பட்ட
 பின் தொடர்பவர்களையும் கொண்டு பதிவுலகின்
 சாதனையாளராகத் திகழ்கிறார்.நாள் தவறினாலும்
 இவருடைய ஆன்மிகப் பதிவுகள் வரத் தவறுவதில்லை
 இவர் பதிவைப் படித்தபின் நாளைத் துவங்கும் பலருள்
  நானும் ஒருவன்.இவர் பதிவைக் கொண்டே அறிமுகத்தைத்
 தொடர்வதை பெருமையாகக் கருதுகிறேன்

வெங்கட் http://menthiran.blogspot.com/
மென் திறன் பயிற்சியாளராகவும் பொறியாளராகவும் உள்ள
இவருடைய பதிவில் பல்வேறு சிந்தனைகள் குறித்த  பதிவுகள் 
இருந்தாலும் காயத்திரி மந்திரம் குறித்த  இவரது பதிவு
குறிப்பிடத்தக்கது .நான் தொடர்ந்து பதிவிட அவ்வப்போது  
ஊ க்கம் தருபவர் இவர்தான்
 http://menthiran.blogspot.com/2011/04/blog-post_9802.html


மாலதியின் சிந்தனைகள் (http://thmalathi.blogspot.com/)

 மார்ச் 2011 ல்  பதிவை துவங்கிய இவர் இதுவரை 19 பதிவுகள்தான்
கொடுத்துள்ளார் ஆயினும் 60 க்கும் மேற்பட்ட
பின் தொடர்பவர்களைக்கொண்டிருப்பதைக் கொண்டே
இவருடைய பதிவின் தரத்தை உணர முடியும்.
இவரது பதிவு ஒரு கவிதைப் பூங்கா

புலவர் ராமானுஜம்(http://pulavarkural.blogspot.com/)

புலவரும் மார்ச் 2011 இல்  தான் பதிவிடத் துவங்கியிருக்கிறார் 
எனினும் இவரது 40 ஆண்டுகால இலக்கியத் தொடர்பும்
 ஈழத் தமிழர் குறித்தஎழுச்சிமிக்க கவிதைகளும்
இவருக்கு பதிவுலகில் ஒரு உயரிய அந்தஸ்தைக்
கொடுத்துள்ளது என்றால் அது மிகை ஆகாது
.இவரைக் குருவாகக் கொண்டுள்ள பலருள் நானும் ஒருவன்


ஆயுத எழுத்து ஏ.ஆர். ராஜகோபால்  http://arr27.blogspot.com/)       
 மார்ச் 2011 இல் புயலாக நுழைந்த இவர் இதுவரை
 70 பதிவுகள் கொடுத்துஅசத்தியுள்ளார்
.சமகால பிரச்சனைகள் குறித்த இவருடைய
 நடு நிலையான அலசல்கள் இவருக்கு பதிவுலகில்
ஒரு கவனிக்கத் தக்க இடத்தைக்கொடுத்துள்ளதுஇவர் பதிவு
 சமகாலப் பிரச்சனைகளில் நாட்டமுள்ளோருக்கு
 உதவும் பதிவு


மின்சாரம்http://minsaaram.blogspot.com/

சென்னை நண்பர் ஏப்ரல் 2011 இல்தான் பதிவிடத் துவங்கியுள்ளார்
 ஆயினும்இதுவரை 82 பதிவுகளுக்கு மேல் கொடுத்து அசத்தியுள்ளார்.
இவர் பதிவு அரசியல் நெடிஉள்ள சுவையான பதிவு
அனைவரையும் கவரக் கூடிய பதிவு

                                 
M.R. அன்பு உலகம்(http://thulithuliyaai.blogspot.com/)
 ஏப்ரல் 11 ல் பதிவிடத் துவங்கிய இவர் இதற்குள்
 78 க்கு மேற்பட்ட பதிவுகளைக கொடுத்து
 33 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைபெற்றிருக்கிறார்
 இவரின் மனம் கவரும் பதிவான அன்பு உலகத்திற்குள்
 ஒருமுறை நுழைந்தால் போதும்
 நீங்கள் அவரின் தீவிர ரசிகராகி விடுவீர்கள்


மாய உலகம் (http://maayaulagam-4u.blogspot.com/)

 ஜூன் 2011 இதான் பதி உலகில் அடியெடுத்துவைக்கிறார்
 எனினும் இவரதுவேகம் பிரமிப்பூட்டுவது
.மிகக் குருகிய காலத்தில்25 பதிவுகள் கொடுத்து
  46 க்கும் மேற்பட்ட பின் தொடர்பவர்களைப் பெற்றதே
 இவரது திறனுக்கு  சான்று இவர் தொடர்ந்த
 முத்தான மூன்று முடிச்சு தொடர்பதிவு
 சமீபத்திய  பதிவுலகில்அனைவரையும்
 கவர்ந்தது குறிப்பிடத்தக்கது

நுனிப்புல்லில் ஓர் பனித்துளி(http://tamilyaz.blogspot.com/)
ரியாஸ் அகமது

 ஏப்ரல் 2011 இல் துவங்கி 96 பதிவுகள் கொடுத்து
55 பின் தொடர்பவர்களைப் பெற்றுள்ள இவரின் பதிவு
 ஒரு கவனிக்கத் தக்க பதிவு.
இவரது பதிவை ஒரு முறை படித்தவர்கள்
நிச்சயம் விடாது தொடர்வீர்கள்


முடிவாக முன்சொன்னவர்கள் எல்லாம்
 முன் உதாரணமாக கொள்ள வேண்டிய பதிவர் இவர்
2011இல் பதிவைத் துவங்கி 117 பதிவுகள் கொடுத்து
 8900 க்கு மேல் பின்னூட்டங்கள் பெற்று
134000  க்கு மேல் பக்கப் பார்வை பெற்றுள்ளது
 இவரது பரந்துபட்ட  பார்வைக்கும் பதிவின் தரத்திற்கும் சான்று
.இவரது அணுகுமுறையைப் புரிந்து கொண்டால்
 நாமும் பதிவுலகில் ஒருமுத்திரையை நிச்சயம் பதிக்க முடியும்

                        அதே அரிசி அதே கோதுமை என்றாலும்
அதனைக்கொண்டே விதம் விதமாக சிற்றுண்டி செய்து
அசத்தும் தாய்க்குலம் போல திரும்பத் திரும்ப பதிவுலகில்
தொடர்ந்து இருக்கிற சிறந்த பதிவர்களையும் அதில் நாம்
அறிந்தவர்களையும்தான் மீண்டும் மீண்டும்
சொல்லவேண்டியுள்ளது.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியை எடுத்துக்கொள்கிறார்கள்.
அந்த வகையில் நான் இந்த ஆண்டு பதிவுலகில் நுழைந்து
அசத்துகிற சிலரைக் குறிப்பிட்டுள்ளேன்
     
                       மீண்டும் நாளை சந்திப்பினைத் தொடர்வோம் ........ 

58 comments:

  1. மனம் நிறைந்த நன்றி ஐயா. முதல் அறிமுகமாக என்னைக்குறிப்பிட்டு உற்சாகப்படுத்தியதற்கு.

    ReplyDelete
  2. அறிமுகப்படுத்திய கன்னிசாமிகள் அனைவரும் தங்கள் அறிமுகத்தால் வளர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அறிமுகங்களுக்கு நன்றி..

    ReplyDelete
  4. நிச்சயம் உங்கள் அறிமுகங்கள் சிறந்தனவாக தான் இருக்கும். வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. அன்பரே! இரமணி!
    முதற்கண் என் நன்றி
    கலந்த வணக்கம்
    வயதில் மூத்தவனேயன்றி
    வலைப் பதிவு உலகில் மிகவும்
    இளையவன். வலைச்சரத்தில்
    என்னை அறிமுகப்படுத்தியதோடு
    குரு என்றும் கூறிய தங்களின்
    பெருந்தன்மை நான் பெற்ற பேறே

    நன்றி! நன்றி! நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  6. ( நம் கருத்தை காதில் வாங்காமல் பேசுவோருக்கு நான் இதை
    உதாரணமாக சொல்வதுண்டு)
    ------------------------//

    ஹா...ஹா...செம கடி இது.

    ReplyDelete
  7. அது ஒன்றும் கஷ்டமில்லை
    எங்கள் வீட்டுக்கு எதிரில்
    ஒரு அரை லூசு இருக்கிறார்
    அவருக்கு வயது 18
    -----------------------------------//

    ஸப்பா அரை லூசிற்கு 18 என்றால்,
    முழு லூசிற்கு 36 ஆ....ஹா....ஹா...

    ReplyDelete
  8. பதிவுலகின் பெரு மலைகளுக்கு நடுவே, என்னையும் அறிமுகப்படுத்தியிருக்கிறீங்க.

    தங்களின் அன்பிற்கும், என் பதிவுகளைப் பற்றிய விமர்சனத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள் அண்ணா.

    ReplyDelete
  9. நண்பரே என் கண்களை பனிக்க செய்தது உங்கள் அறிமுகம் ...நன்றி ..இதை நான் மறக்கவே மாட்டேன் ..
    இன்று எனது நூறாவது பதிவுடன் கூடிய அறிமுகம் அல்லவா?நன்றி நன்றி ..உங்கள் நம்பிக்கையை காப்பாற்ற நிச்சயம் முயல்வேன் ..நன்றி நன்றி

    ReplyDelete
  10. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. நண்பர் ரமணி அவர்களுக்கு நன்றி .

    என்னை தங்களது வலைச்சரத்தில் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி நண்பரே .

    தங்களின் மேலான ஆதரவிற்கு கோடான கோடி நன்றிகள் நண்பரே

    ReplyDelete
  12. மதி நிறை ரமணி சார்
    வணங்கி மகிழ்கிறேன்...,
    பெறுதலுக்கு அரிய பேறு இன்று நான் பெற்றது
    உங்களால்
    உங்களின் மாண்பான, மணியான வார்த்தைகளால்
    அறிமுகப்படுத்தப் பட்டு இருப்பது
    எனக்கு பெருமை.
    உங்களின் இந்த அற்புத அறிமுகம்
    என் எழுத்தை
    பண்படுத்தும்
    பலப்படுத்தும்.
    நன்றி
    நிறைவான நன்றி
    நிலையான நன்றி
    ரமணி சார்

    ReplyDelete
  13. மணிராஜைத் தவிர அனைவரும் எனக்குப் அறிமுகமில்லாதவர்கள் தான்.
    அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ரமணி சார்.

    பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. அநேகர் அறிந்திராத பதிவர்கள்.அவசியம் சென்று பார்க்கிறேன்.

    ReplyDelete
  15. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. முதல் நாள் அடையாளம் காட்டப்பட்டுள்ள அனைவருக்கும் என் அன்பான பாராட்டுக்களூம், வாழ்த்துக்களும்.

    முதல்நாள் முதல் அறிமுகமே அழகிய தாமரை பூத்தது போல நம் பேரன்புக்குரிய திருமதி இராஜராஜேஸ்வரி [மணிராஜ்] அவர்கள் என்பது என் மகிழ்ச்சியை இரட்டிப்பு ஆக்கியது.

    அதற்கு திரு. ரமணி சாருக்கு என் மனமார்ந்த ஸ்பெஷல் நன்றிகள்.

    தொடரட்டும் இந்த மகத்தான அறிமுகப்படலம்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  17. நகைச் சுவைத்துணுக்குகள் யாவும் ரசிக்கும்படியாகவே இருந்தன.

    நன்றி.

    ReplyDelete
  18. அன்பு சகோதரர் ரமணி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்... பதிவுலகில் மறக்கமுடியாத நபராகிய நீங்கள் வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதிற்கு நன்றியுடன் நமஸ்காரம்

    ReplyDelete
  19. //பொண்ணை சீக்கிரம் அழச்சிண்டு வாங்க
    நல்ல நேரம் போகப் போகுது
    மாபிள்ளையின் தோழன்:
    இப்படித்தாண்டா என் கல்யாணத்தன்னைக்கும் ஐயர் சொன்னார் அன்னைக்குபோனநல்லநேரம்தான்
    இன்னைக்கு வரைக்கும் வரவே இல்லை //

    கலக்கல் நகைச்சுவை ... அருமையாக இருந்தது...

    ReplyDelete
  20. சிறந்த அறிமுகங்கள்...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. பல நேரங்களில் இன்னும் நன்றாகச் செயல் பட வித்தியாசமான கோணத்தில் சிந்திக்க வேண்டியுள்ளதை பகிர்ந்து கொள்ள வலைப்பூ அமைத்தேன். மக்களுக்குப் பயனுள்ளதாய் உள்ள கருத்துக்களை வெளியிட்டு வரும் எனக்கு உங்கள் மூலம் கிடைக்கும் அங்கீகாரம் ஒரு பெரும் பாக்கியம்.
    மனமார்ந்த நன்றி ஐயா.

    ReplyDelete
  23. நன்றி ரமணி சார்.
    அருமையான அறிமுகங்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. இராஜராஜேஸ்வரி //

    தங்கள் வரவுக்கும்
    மனங்கனிந்த வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. அமைதிச்சாரல்


    தங்கள் வரவுக்கும்
    மனங்கனிந்த வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. /
    தமிழ் உதயம்//




    /தங்கள் வரவுக்கும்
    மனங்கனிந்த வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. புலவர் சா இராமாநுசம்


    /தங்கள் வரவுக்கும்
    மனங்கனிந்த வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்

    ReplyDelete
  28. நிரூபன் said..


    தங்கள் வரவுக்கும்
    மனங்கனிந்த வாழ்த்துக்கும்
    .மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  29. ரியாஸ் அஹமது


    தங்கள் வரவுக்கும்
    மனங்கனிந்த வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  30. தமிழ்வாசி - Prakash //

    தங்கள் வரவுக்கும்
    மனங்கனிந்த வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. M.R //

    தங்கள் வரவுக்கும்
    மனங்கனிந்த வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  32. A.R.ராஜகோபாலன் //


    தங்கள் வரவுக்கும்
    மனங்கனிந்த வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றிA.R.ராஜகோபாலன் //

    ReplyDelete
  33. இந்திரா //



    தங்கள் வரவுக்கும்
    மனங்கனிந்த வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  34. ஸாதிகா //


    தங்கள் வரவுக்கும்
    மனங்கனிந்த வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. Chitra //

    தங்கள் வரவுக்கும்
    மனங்கனிந்த வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி said...//

    ReplyDelete
  36. வை.கோபாலகிருஷ்ணன்//

    தங்கள் வரவுக்கும்
    மனங்கனிந்த வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  37. மாய உலகம் //


    தங்கள் வரவுக்கும்
    மனங்கனிந்த வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. சே.குமார்.//


    தங்கள் வரவுக்கும்
    மனங்கனிந்த வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றிசே.குமார்.//

    ReplyDelete
  39. VENKAT said.//

    தங்கள் வரவுக்கும்
    மனங்கனிந்த வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  40. Rathnavel //

    தங்கள் வரவுக்கும்
    மனங்கனிந்த வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி//

    ReplyDelete
  41. முதலில் பணிவான வணக்கங்களும் நன்றிகளும் என்னை வலை சரத்தில் அறிமுக படுத்தியமைக்கு . உங்கள் போல அறிவில் சிறந்தவர்களின் இந்த இனிமையான அறிமுக படுத்து தலை தலைவணங்கி ஏற்கிறேன் . எனது எண்ணம் என் சமுகம் விழிப்படைய வேண்டும் என்பதே .என்னுள்ளத்தையும் திறக்க இது நல்ல வாய்ப்பு அல்லவா ? உங்களின் கனிவான வாழ்த்துகள் இருப்பின் வளர்வேன் எம்மோடு வலைசரத்தில் அறிமுகமான அத்துணை பேருக்கும் பணிவான வணக்கங்களும் நன்றிகளும் .வாழ்த்துகளும் .

    ReplyDelete
  42. அறிமுகப் படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  43. இனிய வாரத்திற்கு இனிய வாழ்த்துகள்.நேற்றுத் தவறவிட்டுவிட்டேன்.அருமையான வாரமாக அமையும் நிச்சயம்.
    திறமையானவர்களின் அறிமுகங்கள் !

    ReplyDelete
  44. மாலதி மேடம்
    தங்கள் வரவுக்கும் விரிவான வாழ்த்துக்கும்
    எனது மனம் கனிந்த நன்றியினை
    தெரிவித்துக் கொள்கிறேன்
    தங்கள் வலையுலகப் பணி
    மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  45. அமைதி அப்பா//

    தங்கள் வருகைக்கும்
    அறிமுகமான அனைவருக்கும்
    வாழ்த்து தெரிவித்தமைக்கும்
    எனது மனப்பூர்வமான நன்றி

    ReplyDelete
  46. ஹேமா //

    தங்கள் வருகைக்கும்
    மனப்பூர்வமான வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  47. அது ஒன்றும் கஷ்டமில்லை
    எங்கள் வீட்டுக்கு எதிரில்
    ஒரு அரை லூசு இருக்கிறார்
    அவருக்கு வயது 18//ரமணி அண்ணா, சூப்பர் ஜோக்.
    எல்லா அறிமுகங்களும் சூப்பரோ சூப்பர்.

    ReplyDelete
  48. நகைச்சுவைகள் அனைத்தும் ரசித்தேன் ரமணி சார்

    அறிமுகங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  49. நல்ல துவக்கம் ரமணி சார்! உங்கள் அறிமுகங்கள் அனைத்தும் அற்புதம். புதிய பதிவர்களை ஊக்கப் படுத்தும் நல்ல முயற்சி

    ReplyDelete
  50. அன்பு வானதி
    தங்கள் மேலான வருகைக்கும்
    மனங்கனிந்த வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  51. r.v.saravanan //..

    தங்கள் மேலான வருகைக்கும்
    மனங்கனிந்த வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  52. அன்பு மோகன் ஜீ சார்
    தங்கள் மேலான வருகைக்கும்
    மனங்கனிந்த வாழ்த்துக்கும் மிக்க
    நன்றி சார்

    ReplyDelete
  53. சிறப்பான பதிவுகளைத் தரும் ரமணி சாரின் அறிமுகங்கள் சிறப்பானதாகவே இருக்கும்.

    ReplyDelete
  54. இனியதோர் நகைச்சுவை துணுக்குகளோடு, நல்ல பல பதிவர்களின் அறிமுகமும் நன்று. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  55. நகைச்சுவைகள் இட்டு எல்லோரையும் மகிழ்வித்தமைக்கும் சிரிக்கவைத்தமைக்கும் அன்பு நன்றிகள் ரமணி சார்....

    அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துகள்....

    ReplyDelete
  56. Murugeswari Rajavel //

    தங்கள் மேலான வரவுக்கும்
    மனமார்ந்த வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  57. வெங்கட் நாகராஜ்//

    தங்கள் மேலான வரவுக்கும்
    மனமார்ந்த வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  58. மஞ்சுபாஷிணி //.

    தங்கள் மேலான வரவுக்கும்
    மனமார்ந்த வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete