Tuesday, August 30, 2011

சமையல் முத்துக்கள்

முதலில் அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகட்கு என் இனிய பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


எல்லாவற்றுக்கும் முன்னால் சமையல் முத்துக்கள் மின்ன வருகின்றன. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நாம் வாழ்வதும் உழைப்பதும் இந்த ஒரு சாண் வயிற்றின் பசியை நீக்கத்தான். சரியான உணவு இல்லாவிடில் கவிதைகள் எழுதுதலோ, இலக்கியத்தேடலோ, சமுதாயச் சேவை செய்திடலோ எதுவுமே முழுமையாக நடைபெற இயலாது.

நம் பெண்கள் புகுந்த வீட்டில் நுழைந்த வினாடி முதல் தங்களின் வாழ்வின் இறுதி வரை குடும்பத்தினரின் பசி தீர்க்க அந்த சமையல் கட்டிலேயே உழலுகிறார்கள். திரு.விசு கூட, ஒரு படத்தில் ‘ எங்களுக்கெல்லாம் ரிடயர்மெண்ட் என்ற ஒன்று இருக்கிறது, பெண்களாகிய உங்களுக்கு மட்டும் இந்த அடுப்படியிலிருந்து ஓய்வே கிடைப்பதில்லை’ என்று சொல்லுவார். அது நூறு சதவிகிதம் உண்மை என்பது அனைவருக்குமே தெரியும். இப்படி அடுப்படியில் மற்றவர்களுக்காகப் பார்த்துப் பார்த்து சமைக்கிற அவளுக்கு, தனக்குப்பிடித்தது எது என்பதே மறந்து போகிறது. இப்படிப்பட்ட பெண் என்பவளுக்கும் அவளின் ருசியான சமையலுக்கும் முதல் மரியாதை செய்யும் வகையில் சமையல் முத்துக்கள் முதலில் வருகின்றன!

வெறும் சமையல் மட்டும் ருசிகரமாகச் செய்வதில் எந்த அர்த்தமுமில்லை. அதை அன்போடு பரிமாறுவதிலும் தன் அன்பிற்குரியவர்களைப் பார்த்து பார்த்து கவனிப்பதிலும் தான் அந்த சமையல் முழுமை அடைகிறது. அறுசுவை அன்னமும் பாலும் தேனும் பழங்களும் பல வகை விருந்தும் அன்பில்லாதோர் அளித்தால் அதுவே விஷமாகும், பழைய சோறானாலும் அன்போடு இட்டால் அதுவே அமுதமாகும்’ என்று விருந்தோம்பலைப்பற்றி அந்தக்காலத்தில் பழந்தமிழ்க் கவிதைகள் சொல்லியிருக்கின்றன!  

இப்படி சமையலைப்பற்றியும் விருந்து வகைகள் பற்றியும் விருந்தோம்பலைப்பற்றியும் சொல்லிக்கொண்டே போகலாம்! தாமதமாக்கினால் சமையலின் ருசி குறைந்து போகுமென்பதால் சமையல் தளங்கள் பக்கம் வந்து விட்டேன்!

1. http://gopu1949.blogspot.com/ [வை.கோபாலகிருஷ்ணன்]

முதலிடத்தில் வருபவர் சகோதரர் திரு.வை.கோபாலகிருஷ்ணன். அருமையான சிறுகதை எழுத்தாளரை இங்கு இழுத்து வருவதில் அவ்வளவாக எனக்கு உடன்பாடில்லை. ஆனால் இந்தப்பதிவினைப்படித்த பின் அவருக்குத்தான் பெண்களைக்காட்டிலும் முதல் இடம் கொடுப்பது நியாயம் என்று தோன்றி விட்டது. எந்நேரமும் சமையலறையிலேயே புழங்கும் பெண்களே அதிசயப்படும் அளவிற்கு சமையல் பொருள்கள், அவற்றை உபயோகிக்கும் விதம், ருசிகரமான சமையல் வகைகள், அதற்குத் தகுந்த ஜோடியாக கூட்டுப்பொருள்கள் என்று அசத்தியிருக்கும் இந்தப் பதிவைப் படித்துப் பாருங்கள்!



திருமதி. மேனகா தன்னுடைய இந்த வலைத்தளத்தில் 2009-ம் ஆண்டிலிருந்து ஆரம்பித்து, கிட்டத் தட்ட 500க்கு மேலான சமையல் குறிப்புகள் கொடுத்து, 500க்கும் மேலான பின் தொடர்வோரையும் பெற்று அசத்தி வருகிறார். அசுர உழைப்பு இது. இவருடைய சில்லி இட்லியை சுவைத்துப் பாருங்கள்.

3. http://samaiyalattakaasam.blogspot.com/ [சமையல் அட்டகாசங்கள்]

இவர் துபாய் நகரில் வாழும்- எனக்கு அறிமுகமான இனிய சகோதரி லீலா.
தலைப்பைப்போலவே அட்டகாசமான சமையல் குறிப்புகள் கொடுத்து வரும் இவர் 500க்கும் மேல் குறிப்புகள் கொடுத்து 11000க்கும் மேற்பட்ட பின்னூட்டங்களைப் பெற்றிருக்கிறார். சமையல் குறிப்புகளுக்கும் அப்பாற்பட்டு சிறு குழந்தைகள், கர்ப்பிணிப்பெண்கள் என அனைவருக்கும் சிறந்த டிப்ஸ்-ம் கொடுத்திருக்கிறார் இவரது வலைப்பூவில். இவருடைய பேரித்தம் பழம் இனிப்பு சட்னி-dates sweet chutney-மிகவும் ருசியாக இருக்கும்!

4. http://geethaachalrecipe.blogspot.com/ [என் சமையல் அறையில்]

 இந்த வலைப்பூவின் சொந்தக்காரர் கீதா! 300க்கு மேல் சமையல் குறிப்புகள் கொடுத்து, 5 லட்சத்திற்கும் மேல் பார்வையாளர்களைப் பெற்றிருக்கும் இவர், பார்லி, கொள்ளு, ராகி, ஓட்ஸ் போன்ற உடலுக்கு நன்மைகள் தரும் தானிய வகைகளில் சமையல் குறிப்புகள் கொடுத்து வருவது இவரது தனிப்பாணி! இவருடைய பார்லி தட்டை மிக வித்தியாசமானது-செய்து பாருங்கள்.

 

ப்ரியா இந்த வலைத்தளத்தில் 1600க்கு மேல சமையல் குறிப்புகள் கொடுத்து 11 லட்சத்துக்கும் மேல் பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறார். பிரமிக்க வைக்கும் சாதனை இது. புதுப்புது கற்பனைகள் செய்து குறிப்புகள் எழுதுவதில் வல்லவர். இவருடைய Minty Oats Thattai மிகவும் சுவையான ஒன்று!

 

கனடாவில் வசிக்கும் கிருஷ்வேணியின் சமையலறை இது. குறைவான குறிப்புகள் தான் கொடுத்திருக்கிறார் என்றாலும் எல்லாமே நிறைவான, அதி ருசியானவை தான்! இவருடைய Nutty Brinjal Rice பார்க்கும்போதே சாப்பிடத் தோன்றும்!

7. http://annaimira.blogspot.com/ [மிராவின் கிச்சன்]

 காஞ்சனா ராதாகிருஷ்ணன் இந்த சமையல் வலைப்பூவிற்கு உரிமையாளர். 200க்கு மேல் குறிப்புகள் கொடுத்து வரும் இவர் எளிமையான சமையல் குறிப்புகளை தொடர்ந்து கொடுத்து வருகிறார். இவருடைய செள செள அல்வா சுலபமாகச் செய்யக்கூடிய ஒரு இனிப்பு!


காரைக்குடியில் பிந்து பெல்ஜியத்தில் வாழும் சித்ரா ‘ காரைக்குடி சமையல்’ என்ற வலைப்பூவைத் தொடங்கி இருக்கிறார். சுவையான செட்டி நாட்டு குறிப்புகளை தொடர்ந்து கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம் இனி! இவருடய ரவா புட்டு மிகவும் ருசியான ஒன்று!


சிங்கப்பூரில் வாழும் இவரின் வலைப்பூ முழுவதும் சுவையான சமையல் குறிப்புகள். மிக அழகிய புகைப்படங்கள் இவரது தனிப்பாணி. பார்க்கும்போதே உடனேயே செய்யச் சொல்லும் இந்த இட்லியைப்பாருங்கள்


சென்னையில் வசிக்கும் தேனம்மை சமையலுக்கு அப்பாற்பட்டு,   கவிதைகள், கதைகள் எழுதுவதிலும்  வல்லவர். இவரின் செட்டி நாட்டு பாரம்பரிய சமையல் குறிப்புகள் எல்லாமே சிறப்பானவை. தமிழில் எழுதி, ஆங்கிலத்திலும் அதை மறுபடியும் எழுதி தமிழ் மொழி அறியாத எத்தனையோ பேருக்கு உதவியாக இருப்பது இவரது தனிச் சிறப்பு. இவரின் சீப்புச்சீடைக்காய் இங்கே!   

பின் குறிப்பு:

நேரமின்மையால் நான் நினைத்தவாறு இன்னும் அதிகமாக இங்கே பதிவர்களை அறிமுகப்படுத்த முடியவில்லை. இயன்றால் மறுபடியும் சமையல் பதிவர்களை அறிமுகப்படுத்துவேன்.

 
 

22 comments:

  1. தங்களால் அறிமுகப்படுத்திய சமையல் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சுவையான அறிமுகங்கள்,மனோ மேடம். அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. விருந்துடன் ஆரம்பமாகி இருக்கும்
    வலைசர கச்சேரி பிரமாதம்
    தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. தமிழ்மணம் 1

    சமையல் குறிப்புகள் முத்துக்களாய் ...

    ReplyDelete
  5. அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. அன்புள்ள திருமதி மனோசுவாமிநாதன் அவர்களுக்கு, முதற்கண் என் அன்பு கலந்த வணக்கங்கள்.

    பத்திரிக்கைகளில் மட்டுமே எழுதி வந்த என்னை, வலைப்பூவினில் வந்து எழுதுமாறும், அதனால் நமக்கு ஒரு ஆத்ம திருப்தி ஏற்படும் என்று சொல்லி, என்னை வலைப்பூவினில் எழுதத்தூண்டியதே தாங்கள் தானே!
    அதை என்னால் என்றுமே மறக்க இயலாதே!!

    முதல் நாள், முதல் முத்தாக, அதுவும் சமையல் முத்துக்களில் ஒன்றாக, என்னை அடையாளம் காட்டி அசத்துவீர்கள் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

    அந்தக்குறிப்பிட்ட பதிவும் [”உணவே வா.... உயிரே போ...”] தங்களின் வேண்டுகோளுக்கும், அன்புக்கட்டளைக்கும் அடிபணிந்து நான் எழுதிய தொடர்பதிவே என்பதும் உங்களுக்கு நினைவு இருக்கலாம்.

    இங்கு என் வீட்டில் எல்லா [மகன்கள்+ பேரன்கள்+பேத்தி என அனைத்து குடும்ப முத்துக்களும்] முத்துக்களும் வந்து என்னை அன்புடன் கூடிய முத்து மாலையாகக் கோர்த்துக் கொண்டிருப்பதால், இந்த மாதம் முழுவதும் அதிகமாக வலைப்பூப் பக்கம் வர முடியாத சூழ்நிலையில் உள்ளேன்.

    தாங்கள் அறிமுகம் செய்துள்ள அனைத்து முத்துக்களுமே அருமை.

    அனைவருக்கும் + உங்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள்.

    என்றும் அன்புடன் தங்கள் vgk

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  8. சிறப்பான அறிமுகங்கள்.அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. நல்ல அறிமுகங்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. அருமையான அறிமுகங்கள் வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு ......

    ReplyDelete
  11. அறிமுகத்துக்கு நன்றி மனோ. பகிர்வுக்கு நன்றி மாய உலகம்..:)

    ReplyDelete
  12. அறிமுகத்துக்கு நன்றி மனோ.

    ReplyDelete
  13. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!!!

    ReplyDelete
  14. நல்ல அறிமுகங்கள்.

    ReplyDelete
  15. முதல் முத்து சமையல் முத்தாக அமைந்து விருந்து முத்தாகி விட்டது

    அதிலும் முதல் முத்து "நள முத்து" . அற்புதம்

    ReplyDelete
  16. அறிமுகத்திற்கு மிக்க நன்றி அம்மா. அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. ஊக்கப்படுத்தியும் வாழ்த்துக்கள் சொல்லியும் பின்னூட்டங்கள் தந்த அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமன நன்றி!!

    ReplyDelete
  18. தங்களால் அறிமுகப்படுத்திய சமையல் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. முதல் அறிமுகங்களே சமையல் முத்துக்களா?

    அட்டகாசமான அறிமுகங்கள்,

    எல்லோரும் மறந்து போன என்னை நீங்கள் அறிமுகப்படுத்தியது ரொம்ப சந்தோஷம், மனோ அக்கா..

    ReplyDelete
  20. Thank you so much madam, appreciate all bloggers, keep going.......

    ReplyDelete
  21. வலைச்சர அறிமுகத்திற்க்கு மிக்க நன்றி மனோ அம்மா...மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete