Saturday, September 3, 2011

சிறுகதை முத்துக்கள்

சிறுகதை என்பது படித்து முடிக்கையில் மனதை ஏதாவது ஒரு வகையில் தாக்க வேண்டும். மன நிறைவையோ, கண்ணீரையோ, மனதில் சம்மட்டி அடைத்தாற்போலதொரு உனர்ச்சியையோ அது கொடுத்தால் அது தான் நல்ல சிறு கதை என்பேன் நான். எழுத்தாளர்கள் அகிலன், ஜெயகாந்தன், அனுராதா ரமணனின் எழுத்துக்கள் இப்படித்தான் கனலாய் சுடும். சிறுகதை எழுத்துக்கு பல இலக்கணக்கங்கள் இருந்தாலும் பொதுவாய் புகழ் பெற்ற எழுத்தாளர்களுக்கு அவை பொருந்துவதில்லை. இலக்கணத்தை மீறினாலும் அவர்களின் எழுத்தின் தரம் அனைத்தையும் தாண்டி நிற்கிறது. இங்கே வலைப்பூ உலகில் வெளியுலகுக்குத் தெரியாத எத்தனை எத்தனை அருமையான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்! காதலும் வேதனையும் மன உணர்வுகளின் அலசலுமாய் ஜொலிக்கும் அவர்களின் சிறுகதை முத்துக்களில் சிலவற்றை பொறுக்கி எடுத்து இங்கே அறிமுகப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

தினமணி கதிர், சாவி, ஆனந்த விகடன் என்று வார இதழ்களில் சிறுகதைகள் சில நான் எழுதியிருக்கிறேன் என்றாலும் நான் ஏற்கனவே குறிப்பிட்ட, விரலில் ஏற்பட்ட ஒரு விபத்து என் கலைத்தாகங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி  வைத்து விட்டது அப்போது. இருப்பினும் ஆனந்த விகனுக்கு நான் அனுப்பிய முதல் சிறுகதை உடனேயே அங்கீகரிப்பட்டு வெளியிடப்பட்டதில் இன்றளவிலும் மனதில் மன நிறைவு இருக்கிறது!


இனி பதிவர்களின் சிறுகதை முத்துக்கள் தொடர்கின்றது.. .. ..

1. http://vidyasubramaniam.blogspot.com/ [ கதையின் கதை]

புகழ் பெற்ற எழுத்தாளரான வித்யா சுப்ரமண்யத்திற்கு நான் எதுவும் அறிமுகம் செய்ய வேண்டியதில்லை. பல நாவல்கள், சிறுகதைகள், விருதுகள் எல்லாம் அவரது முகவரியில் அடக்கம். ஆனாலும் ஒரு வலைப்பூவின் உரிமையாளர் என்ற நிலையில் அவரின் வாழ்வென்பது என்ற சிறுகதையை அடையாளம் காட்ட விரும்புகிறேன் இங்கே! ‘ பரந்த மனசு இருக்கிறவனுக்கு உலகமே உள்ளுக்குள் இருக்கும். இல்லாதவனுக்கு பூமியே சின்னப்புள்ளியாய் சுருங்கிப் போகும் ’ என்று மிக அழகாகச் சொல்லுகிறார் இந்தச் சிறுகதையில். படித்துப்பாருங்கள்.


2. http://suharaji.blogspot.com/ [ கற்றலும் கேட்டலும்]

நல்லதோர் வீணை செய்தே அதைக் கடவுள் நலங்கெட புழுதியில் எறிய மாட்டாரென்ற தன்னம்பிக்கையை ஊட்டும் சிறு கதை எழுதியிருக்கிறார் ராஜி இங்கே! மன நம்பிக்கையாலும் இறை நம்பிக்கையாலும் மரணத்தை எதிர்க்க முடியும் என்கிறார் இவர் தனது சிறுகதையில்!



கோபியின் எழுத்து மிக வலிமையானது. கட்டுரையாகட்டும், தகவல்களாகட்டும், சிறுகதையாகட்டும், நம்மை மிக சுவாரஸ்யமாக கடைசி வரை கொண்டு போகும் எழுத்து இவருடையது. இவரின் முன் முடிவுகள் சிறுகதையில் ஒரு சின்னக் குழந்தையை தவறாக எண்ணி விட்ட கதாநாயகனின் மன பாரத்தையும் சிறுமை உணர்வையும் அற்புதமாக எழுதியிருக்கிறார் இங்கே!

4. http://chennaipithan.blogspot.com/ [ நான் பேச நினைப்பதெல்லாம்]

சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் உள்ள முக்கியமான வேறுபாடு கருணைக்கும் கருணையின்மைக்கும் உள்ள வேறுபாடு தான் என்று தனது உயிர்களிடத்து அன்பு வேண்டும் என்ற சிறுகதையில் மிக அருமையாகச் சொல்லியிருக்கிறார் சென்னை பித்தன்!



இருட்டிலும் பிறகு வெளிச்சத்திலும் மாறுபடும் மன உணர்வுகளை தன் எழுத்தினால் அழகாய்ப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் திரு.காஷ்யபன் தனது நான் பாடும் பாடல் சிறுகதை மூலம்!


6. http://manjusampath.blogspot.com/ [ கதம்ப உணர்வுகள் ]

சகோதரி மஞ்சுபாஷணி மன உணர்வுகளை மையமாக வைத்து மனதைக் கவரும்படி தொலைக்க விரும்பாத அன்பு என்ற சிறுகதையை இங்கு கொடுத்திருக்கிறார்.


7. http://stalinfelix.blogspot.com/ [ காலப்பறவை ]

கடவுள் சிரித்தார் என்ற இந்த சிறுகதையை அருமையாக எழுதியிருக்கிறார் ஸ்டாலின் ஃபெலிக்ஸ். ‘ முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் ’ என்ற முதுமொழியை நினைவூட்டுகிறது இந்தச் சிறுகதை!

8. http://classroom2007.blogspot.com/ [ வகுப்பு அறை]

திரு.சுப்பையாவின் சிறுகதையான தந்தி மீனி ஆச்சி ஒரு உண்மைக்கதை போல செட்டி நாட்டு வழக்குப் பேச்சில் நம்மை ரசிக்க வைக்கிறது. இவருக்கு 2573 பின்தொடர்வோர்கள் இருக்கின்றார்கள் என்பது பிரமிக்க வைக்கும் சாதனை!


  
டேவிட் எழுதிய இந்த அப்பா என்ற சிறுகதை மனசை கனமாக்குகிறது. இன்றைய சமுதாயத்தில் பல வீடுகளில் ஏற்படும் மனதைக் கலங்கடிக்கும் சூழ்நிலை தான் இது! இது கற்பனை அல்ல. நிஜமே!  


10. http://poongundran2010.blogspot.com/ [ பூங்குன்றன் ]

ஒரு வித்தியாசமான, மறக்க முடியாத நினைவுகளுடன் வாழும் ஒரு இளைஞனது கதை தான் இந்த உன் பேர் சொல்ல ஆசை தான்! பூங்குன்றன் யதார்த்தமாய் அழகுற எழுதியிருக்கிறார்.

11. http://mudhalmazai.blogspot.com/  [ முதல் மழை]

யதேச்சையாகத்தான் இந்த வலைப்பூ பக்கம் வந்தேன். காக்கா டாக்டரு, காக்கா டாக்டரு என்ற இந்த சிறுகதையை பார்த்ததும் தலைப்பு வித்தியாசமாக இருந்ததால் உடனேயே படிக்க ஆரம்பித்தேன். உண்மையிலேயே தலைப்பைப் போலவே வித்தியாசமாக, அருமையாக இந்தச் சிறுகதையை நாடோடி இலக்கியன் எழுதியிருக்கிறார். அவசியம் படியுங்கள்.

12. http://aaranyanivasrramamurthy.blogspot.com/ [ ஆர்.ராமமூர்த்தி]

திரு. ராமமூர்த்தி அவர்கள் எழுதிய இந்த தளிர்கள் வேர்களையும் பார்க்கும் என்ற சிறு கதை மேலாகப் பார்க்கையில் நகைச்சுவையாகத் தென்பட்டாலும் இன்றைய யதார்த்தத்தை ஆழமாக உள் வாங்கிய நல்லதொரு கதை.

 
 
 
 
 
 

28 comments:

  1. சிறு கதை , நாவல் என்றாலே கொள்ளை பிரியம் எனக்கு , போய் பார்க்கிறேன் .:-)

    அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  2. கதைகள் என்பது தனி உலகம். அந்த உலகிற்கு சென்று சில நல்ல அறிமுகங்களை தந்துள்ளீர்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. சிறுகதை அறிமுகங்கள் மிக அருமை
    அதை வடிவாக நீங்கள் சொல்லிய்விதம் மிக அருமை மனோக்கா/

    ReplyDelete
  4. சிறுகதை முத்துக்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. "சிறுகதை முத்துக்கள் யாவும் நன்கு ஜொலிக்கின்றன”

    நல்ல அறிமுகங்கள் மிக நல்ல விளக்கங்களுடன், சிறப்பாகவே அடையாளம் காட்டப்பட்டுள்ளன.

    அனைத்து எழுத்தாள நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். vgk

    ReplyDelete
  6. என்னையும் அடையாளம் காட்டி அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி மேடம்

    பிற அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.இதில் நான் சென்றிராத நான்கு வலைத்தளங்கள்
    உள்ளன.அவற்றையும் சென்று பார்க்கிறேன்.பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  7. மிகவும் அருமையான அறிமுகங்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. வலைச்சரத்தில் என்னையும் அறிமுகம் செய்ததற்கு நன்றி மனோ. இதில் பல கதைகள் நான் வாசித்திருக்கிறேன். இன்னும் சிலவற்றை இனி வாசித்து விடுகிறேன், உண்மையில் உங்களுடைய பன்முகப் பரிமாணங்கள் என்னை வியக்க வைக்கிறது.

    ReplyDelete
  9. மிகவும் சிறப்பாக அறிமுகம் செய்திருக்கீங்க. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. என்னையும் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி மனோ சாமிநாதன் அவர்களே.
    அனைவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  11. ஸ்கூல் படிக்கும்போதே நாவல்கள் படிப்பதில் அதிக விருப்பம் எனக்கு....

    ரமணிச்சந்திரன் நாவல்கள் இந்திரா சௌந்திர ராஜன்...

    அருமையா கோர்த்திருக்கீங்க மனோ அம்மா,

    எல்லோரின் நாவல்கள் நிதானமாக படிப்பேன் கண்டிப்பாக

    அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் அன்பு வாழ்த்துகள்.....

    என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு அன்பு நன்றிகள் மனோ அம்மா....

    ReplyDelete
  12. ஒவியர்கள் அறிமுகத்திற்கு நன்றிகள்!

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் மனோ அக்கா,சிறிது இடைவெளிக்கு பின்பு திரும்பி வந்திருக்கிறேன்.மெதுவாய் அனைத்தையும் திருப்பி பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  14. அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து சிறுகதை முத்துக்களுக்கும்
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. நல்ல பகிர்வு.... அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. என்னை அறிமுகபடுத்தியதற்க்கு நன்றி http://stalinfelix.blogspot.com/2011/08/blog-post.html

    ReplyDelete
  18. மிக்க நன்றி மேடம்..தங்கள் அறிமுகத்திற்கு.....


    அன்புடன்,

    ஆர்.ஆர்.ஆர்.

    ReplyDelete
  19. இன்றைய அருமையான வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. அருமையான அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. அறிமுகங்கள் அருமை

    பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. அறிமுகம் செய்யப்பட அனைத்து பதிவர்களுக்கும், உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  23. அறிமுகத்திற்கு மிக்க நன்றி மேடம்

    ReplyDelete
  24. பல சிறுகதை எழுத்தாளர்களை அறிமுகப் படுத்தி உள்ளீர்கள்

    ReplyDelete
  25. சிறுகதை,

    குறுகிய நேரத்தில் ஒன்றிரண்டு கதா பாத்திரங்களை வைத்தே சிறந்த கருத்துக்களை உள் வைத்து உணர்த்திவிடும் வல்லமை கொண்டது.

    இன்றைய அறிமுகத்தில்
    ஏற்கனவே அறிந்த முகங்கள் இருந்தாலும், வாசிக்கத் தவறிய சில பதிவுகளை இப்போது வாசிக்கத் தூண்டியதற்கு நன்றி.

    ReplyDelete
  26. அன்பான பின்னூட்டங்களுக்கும் இனிய வாழ்த்துக்களுக்கும் என் உள‌மார்ந்த நன்றியை அன்புத்தோழமைகளான உங்களிடம் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்!!

    ReplyDelete
  27. நல்ல அறிமுகங்கள்.
    நன்றி அம்மா.

    ReplyDelete
  28. என்னை அறிமுகபடுத்தியதற்கு மிக்க நன்றி மேடம் ... வாழ்த்துகள் கூறிய அனைவர்க்கும் நன்றி..........
    David

    ReplyDelete