Sunday, September 4, 2011

அனுபவ முத்துக்கள்

வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு புதிய அனுபவம் நமக்காகக் காத்துக் கொண்டே இருக்கிறது. சில நமக்கு அலைஅலையாய் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. சில நெத்தியடியாய் நமக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறது. சில நம்மை விதிர்விதிர்க்கச் செய்கிறது. சில நம்மை அப்படியே ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுகிறது. எத்தனையோ வகை அனுபவங்கள் என்றாலும் அவை எல்லாவற்றையும் சுமந்து கொண்டு இந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம். வாழ்க்கைப்பாதையில் நடந்து கொண்டே இருக்கும்போது, சற்றே நின்று திரும்பிப் பார்த்தால் எந்த அனுபவங்கள் நம்மைப் பதப்படுத்தியிருக்கின்றன, யாய் யார் உண்மையான அன்புடன் நம்மைப் பின் தொடர்ந்து வருகிறார்கள் என்பது புரியும். நம் அனுபவங்களில் நாம் சாதித்தது என்னவென்றும் புரியும்.

வலைப்பூக்களில் சுவாரஸ்யமான அனுபவ முத்துக்கள் கொட்டிக்கிடக்கின்றன.  ஒவ்வொரு முத்தும் இன்னொரு முத்துடன் போட்டி போடுகின்றன. அத்தனையும் நமக்கு அருமையானதொரு நிறைவையும் கொடுக்கின்றன. நிறைய அனுபவ முத்துக்களைப் பொறுக்கியெடுக்க கால அவகாசம் போதுமானதாக இல்லை. கூடியவரை நல் முத்துக்களாக் இங்கே தந்திருக்கின்றேன்.


1. http://echumi.blogspot.com/2011/08/blog-post_05.html [குறை ஒன்றும் இல்லை ]

முதல் அனுபவ முத்து நம் சகோதரி லக்ஷ்மிக்குச் சொந்தமானது. இவரது தைரியத்தையும் அனுபவங்களையும் இந்தத் தொடர் பதிவான மூணு மூணாய்த்தான் சொல்லணுமாம் என்பதில் புரிந்து கொள்ள முடியும். இதில் அவரின் சில நல்ல கருத்துக்களையும் தெரிந்து கொள்ள முடியும். சில அனுபவங்கள் நிறைய பேருக்கு நல்ல பாடங்களாகவும் அமையும். இரண்டு முறை இதயத்தாக்குதல் ஏற்பட்டும் விருப்ப ஓய்வு போலத் தனிமையைத் தேர்ந்தெடுத்து வாழும் அவரது தைரியத்துக்கு இங்கே ஒரு சல்யூட்! 

2. http://yennachidharal.blogspot.com/ [ எண்ணச்சிதறல் ]

மார்கழி மாத அனுபவங்களை களி, தாளகம், பொங்கல் என்று மிகுந்த சுவையுடன் தன் .மாதங்களில் அவள் மார்கழி என்ற இடுகையில் அருமையாகச் சொல்லியிருக்கிறார் கீதா சந்தானம் இங்கே! இதைப்படிக்கும் போது எல்லோருக்குமே தன் சின்ன வயது நினைவுகள் வந்து விடும்!


3. http://somayanam.blogspot.com/ [ சோமாயணம் ]

பாரதி பிறந்த எட்டயபுரம் வீட்டைப் பார்க்கப்போன போது தனக்கேற்பட்ட மனக்குமுறல்களை பாரதியைப் பார்க்கப் போயிருந்தேன் என்ற இந்தப்பதிவில் அருமையாய்ச் சொல்லியிருக்கிறார் கலாநேசன். ‘ பாரதியைப்போன்ற நன்னிலத்தில் தானே வளரும் தவ வலிமை கொண்டது தமிழ். அதை யாரும் தங்கள் தோட்டத்தில் நட்டு வைக்கத் தேவையில்லை ’ என்று சீறுகிறார் இங்கே!


4. http://nanjilmano.blogspot.com/ [ நாஞ்சில் மனோ ]

நாஞ்சில் மனோ தன் அனுபவத்தையே இங்கு அந்தப்பிரிவின் நேரம் செத்துப்போகாதா என்று ஒரு கண்ணீர்க்கவிதையாக எழுதி நம்மையும் கலங்க வைக்கிறார்! அதுவும் அந்த சிறு குழந்தை கடலையே பார்த்துக்கொண்டு நிற்கும் விதம், அதன் முகத்தைப்பார்க்காமலேயே நம் மனதைப் பிசைகிறது. கவிதையின் தாக்கமிது என்று நினைக்கிறேன்.


5. http://kovai2delhi.blogspot.com/ [ கோவை2தில்லி]

தன் சின்ன வயது கோடை விடுமுறை நாட்களை, தன் சொந்த ஊரில் அது இன்பமாய்க் கழிந்த விதத்தை ஆதி இங்கே கோடை விடுமுறை-பகுதி 1 என்ற தலைப்பில் அழகாய்ப் பகிர்ந்திருக்கிறார். சின்னஞ்சிறு சிறுமியாய் ஆடிப்பாடியது, தோழியருடன் கதைகள் பல பேசியது அனைத்தும் பசுமையாய் மனதில் நிழலாடச் செய்து விட்டார்!

6. http://vanavilmanithan.blogspot.com/2010/12/blog-post.html [ வானவில் மனிதன் ]

அருமையான அனுபவப் பதிவு இது. எல்லோருக்குமே ஒவ்வொரு காலக்கட்டத்தில் இப்படி ஒரு அனுபவம் நேர்ந்திருக்கும். சிறு வயதில் அன்னை மேல் கோபம் கொண்டு வீட்டை விட்டு சில மணித்துளிகள் விலகி இருந்த அனுபவத்தை மோகன்ஜீ மிக அருமையான தமிழ்நடையில் கம்பீரமாக எழுதி இறுதியில் தன் நெகிழ்வுகளை தன் அன்னைக்கே சமர்ப்பணம் செய்திருக்கிறார் வீட்டைத்துறந்தேன் என்ற இந்தப்பதிவில்!


7. http://kjailani.blogspot.com/ [ ஜெய்லானி  ]

 தனக்கு அளித்த விருந்து பற்றியும் விருந்தோம்பல் பற்றியும் வழக்கமான நகைச்சுவை ததும்ப விவரிக்கும் சகோதர் ஜெய்லானி, அஜீரணம் சரியாக ஒரு ரூபாய் மருத்துவம் எப்படி செய்யலாம் என்பதையும் அழகாகச் சொலுகிறார் இந்தப்பதிவில்!


8. http://anbudanananthi.blogspot.com/  [ அன்புடன் ஆனந்தி ]

தன் அப்பாவைப்பற்றி பெருமிதம் மிளிர, பாசம் பொங்க, உணர்ச்சிப்பெருக்குடன் அன்புக்கவிதைகளால் தன் தந்தையை அர்ச்சனை செய்கிறார் ஆனந்தி இங்கே!

9. http://pirathipalippu.blogspot.com/  [ கண்ணாடி ]

தன் அன்பு மனைவிக்கு தன் வார்த்தைச் சரங்களால் ஒரு பெரிய மாலையையே இங்கே அணிவித்திருக்கிறார்  திரு. தமிழமுதன். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்கிறார் இவர்.


10. http://maniyinpakkam.blogspot.com/ [ எழிலாய்ப் பழமை பேச ]

பழமை பேசியின் தன்னாய்வு மிகப் பிரமாதம் இங்கே! எந்த அளவு தன்னம்பிக்கையும் சகிப்புத்தன்மையும் இருந்தால் ஒருவன் ஜெயித்துக்காட்ட முடியும் எனபதற்கு இவரது கதையே மிகச் சிறந்த உதாரணம்!

11. http://gokisha.blogspot.com/ [ என் பக்கம் ]

கனியிருப்பக் காய் கவர்தல்  என்று இலக்கியத் தலைப்பில் ஆரம்பிக்கும் இவரது அனுபவம் நம்மையும் சுவாரஸ்யமாகப் பின்தொடரச் சொல்லுகிறது இறுதியில் சின்னக்குழந்தையிடம்கூட, பொறுமையுடனும் அன்புடனும் அவர்களின் தவறுகளைத் திருத்தி சொல்லிக்கொடுத்தால் அவை அப்போது புரியாவிட்டாலும் நாளடைவில் குழந்தைகள் புரிந்து கொள்ளும். என்று அழகாய் முடிக்கிறார் அதிரா!


12. http://yaavatumnalam.blogspot.com/ [ யாவரும் நலம் ]

மாமியாருக்கு இடியாப்பம் செய்த அனுபவங்களையும் சின்ன வயது இடியாப்ப நினைவுகளையும் மிக அழகாக தனது மாமி வந்தாச்சு என்ற இந்தப் பதிவில் செதுக்கியிருக்கிரார் சுசி இங்கே!



அம்மாவை நினைத்து அருமையாக உருகிறார் வித்யா இங்கே! தனக்கென ஒரு குழந்தை என்று வரும்போது தான் எல்லாப் பெண்களுக்கும் எப்படியெல்லாம் தன்னை கஷ்டப்பட்டு வளர்த்திருப்பாள் தன் தாய் என்ற உண்மை முழுவதுமாகப் புரியும். அதை அப்படியே இங்கே பிரதிபலித்திருக்கிறார் வித்யா தன் ம்மா என்ற இடுகையில்!


14. http://maduragavi.blogspot.com/ [ மதுர கவி ]

தமிழ் நாட்டை விட்டு வெளியே சென்று வசிக்கும்போது தான் மற்ற மாநிலத்தவரின் செயல்பாடுகள். சினேகிதம், பழக்க வழக்கங்கள் எல்லாம் நமக்குப் புரிகிறது. கன்னட மாநிலத்து சினேகிதர்கள் நம் தமிழர்களிடம் வைத்திருக்கும் மரியாதையை எண்ணி ராம்வி பூரிக்கிறார் அவரின் இந்த தமிழன் என்று சொல்லடா என்ற இந்த இடுகையில்!


[ கொஞ்சம் வெட்டிப்பேச்சு ]

சித்ராவைப் பற்றி நான் அதிகமாகச் சொல்ல வேண்டியதில்லை. எந்த இடுகைக்குமே மிக அதிகமான பின்னூட்டங்கள் பெறுவது அவராகத்தான் இருக்கும் பதிவுலக வரலாற்றில்! அவரின் சிரிப்பு எல்லோரையும் பற்றிக்கொள்ளும் வசீகரம் வாய்ந்தது. மனித நேயம் எத்தனை முக்கியமானது என்பதையும் நமக்குப் பசிக்கும்போது, அடுத்தவரின் பசியையும் போக்க வேண்டும் என்பதையும் அவரின் இந்த விருந்திலே ஒரு இருதயம் முளைக்கிறதோ என்ற இடுகையில் அருமையாய்ச் சொல்லி நம்மை நெகிழ வைக்கிறார்!









 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

31 comments:

  1. சொன்ன விதங்கள் அருமை

    பாதி தெரியாத வலைபூக்கள்....

    ரசித்தேன்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. எல்லாமே சிறந்த பூக்கள்....

    ReplyDelete
  3. அனுபவ முத்துக்களின் கோர்வை அற்புதம் !

    ReplyDelete
  4. அத்தனை அறிமுகங்களும் முத்துக்கள்.
    சில வலைத்தளங்கள் கண்கலங்க வைத்து விட்டன.
    நன்றி அம்மா.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html

    ReplyDelete
  5. என்னையும் அறிமுகப்படுத்தியதுக்கு நன்றி மேடம்...

    ReplyDelete
  6. இதில் நிறைய பேர் நமக்கு அறிமுகம்தான் இருந்தாலும் எல்லாருக்கும் என் அன்பார்ந்த வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  7. உங்கள் விமர்சனங்கள் அருமையா இருக்கு மேடம்...!!

    ReplyDelete
  8. I have started some of these blogs. Thanks for ur recommendation.

    Good work for the past 1 week madam.

    ReplyDelete
  9. எனக்குப் புதிதாக இருப்பவர்களை நானும் பின்பற்றுகிறேன்! நன்றி!

    ReplyDelete
  10. என்னையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றிம்மா..

    ReplyDelete
  11. அனுபவ முத்துகள் தங்கள் அனுபவம் சொல்கின்றன.

    ReplyDelete
  12. சிறந்த அறிமுகங்கள்.

    தொடர்ந்து செல்ல முயற்சிக்கிறேன்.

    நன்றி மேடம்.

    ReplyDelete
  13. நன்றி மனோ மேடம் என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு.

    ReplyDelete
  14. அனுபவ முத்துக்களின்
    அறிமுகங்கள் அருமை அம்மா.

    ReplyDelete
  15. வலையுலகின் பால் மிக மிகஅதிகமான
    விருப்போடும் ஈடுபாட்டோடும் இல்லையெனில்
    இத்தனைச் சிறந்த பதிவர்களை அடையாளம்
    காட்ட்டுவதும் மிகச் சரியாக அறிமுகம் செய்வதும்
    மிக மிகக் கடினம்.தங்களுக்கான வலைச்சர
    ஆசிரியர் பணியை மிகச் சிறப்பாக செய்துள்ளீர்கள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. ஆ....நாமும் அனுபவ சாலியாஆஆஆ.... நம்பவே முடியல..ஒரு டன் ஐஸ் கட்டிய உச்சந்தலையில வச்சமாதிரி இருக்கு :-)


    கொஞ்சம் தெரிந்தவர்களும் இருப்பதால் மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்களுக்கு என் நன்றியும் :-)

    ReplyDelete
  17. அனுபவ முத்துக்களில் பலவும் பழகிய முத்துக்களே ஆனாலும்,

    [முத்துச்சிதறலாகிய தங்களால் பாலீஷ் செய்யப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளதால்]

    இன்று அவை மிகவும் பிரகாசிக்கின்றன. ஜொலிக்கின்றன.

    அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்.
    vgk

    ReplyDelete
  18. தங்கள் அனுபவங்களை சுவைபட சொல்லுவதற்கு ஒரு தனித் திறமை வேண்டும்.
    அப்படிப்பட்ட சிறந்த அனுபவ முத்துக்களை தாங்கள் தேர்ந்தெடுத்து வழங்கியிருப்பது
    பல விஷயங்களை அறிய உதவுகிறது.அறிந்த முத்துக்கள் தவிர மற்றவைகளை
    அறிய வைத்திருப்பதற்கு நன்றி.அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. சில இடுகைகளை வாசித்துச் சிலாகித்தேன். மிக்க நன்றி. எஞ்சி இருப்பவற்றையும் வாசிக்க வேண்டும்!

    ReplyDelete
  20. என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு அனுபவத்தை அனுபவ முத்துக்களின் மூலம் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி அம்மா. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. நெகிழ்ந்தேன். என்னையும் அறிமுகப்படுத்தி வாழ்த்தியமைக்கு நன்றிகள் பல, அம்மா.,

    ReplyDelete
  22. அனைவரும் அருமையான பதிவர்கள். அறிமுகப்படுத்திய அம்மா அவர்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  23. உங்கள் அன்பிற்கும் அறிமுகத்துக்கும் நன்றி மனோமேடம். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. மனோ மேடம் என்னையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு
    நன்றி. மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. உண்மையே மனோ அம்மா, வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் நமக்கு கிடைக்கும் அனுபவங்கள் நம்மை எத்தனையோ நல்லவை சொல்லியும், சிலது பயமுறுத்தியும், சிலது வேதனைப்படுத்தியும் எப்படியோ நாட்கள் மட்டும் வேகமாக போய்விட்டது...

    மரணிக்கும் அவஸ்தைகளுடன் பல நாட்கள், துளி சந்தோஷத்தால் ஒரு நாள் சிரித்து அழுது சந்தோஷப்பட்டு மனிதர்களை படிக்கவைக்கும் சந்தர்ப்பம் கொடுத்து அனுபவங்களை நமக்கு பாடமாக்குகிறது காலமும்...

    அப்படிப்பட்ட நல்முத்து அனுபவங்களை நீங்கள் கோர்த்து தந்திருப்பதை கண்டு வியக்கிறேன் அம்மா....

    அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வாழ்த்துகள்....

    அனுபவக்கோர்வைகளை அழகாய் தொகுத்தமைக்கு அன்பு நன்றிகள் மனோ அம்மா...

    ReplyDelete
  26. என்னை அறிமுகப்படுத்தியதுக்கு ரொம்ப நன்றிங்க.

    புதிய வலைப்பக்கங்களை போய் பார்க்கிறேன்.

    ReplyDelete
  27. மனோ அக்கா.. முதலில், இங்கு ஆசிரியர் பதவியேற்றிருக்கும் உங்களுக்கு என்பார்ந்த வாழ்த்துக்கள்.

    இது நீங்கள் சொல்லியிருக்காவிட்டால் பார்த்திருக்க வாய்ப்பில்லை எனக்கு.

    என்னையும் ஒரு பொருட்டாக மதித்து, இங்கே எடுத்துக் கூறியிருப்பமைக்கு என் மிக்க மிக்க நன்றிகள்.

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  28. அன்பான பின்னூட்டங்களும் வாழ்த்துக்களும் தந்து என்னை உற்சாகப்படுத்திய அனைவருக்கும் என் அன்பு நன்றி!

    ReplyDelete
  29. மிக்க நன்றி என்னையும் அறிமுக படுத்தியதற்கு..!

    ReplyDelete
  30. சூப்பர் மனோ. அசத்திட்டீங்க.

    ReplyDelete
  31. அன்பிற்கினிய மனோ அம்மா,

    நீங்க என்னை அறிமுகப்படுத்தி இருந்த விதம் கண்டு.. கண்ணில் நீர் வந்துவிட்டது. எனக்கு மிகவும், பிடித்த என் தந்தையை பற்றி நான் எழுதியிருந்த பதிவை நீங்க சுட்டிக் காட்டியதில் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம். உங்கள் அன்பிற்கும், அறிமுகத்திற்கும் நன்றிகள் கோடி!!!!

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    என்றும் அன்புடன்
    ஆனந்தி

    (கால தாமதமான எனது வருகைக்கு மன்னிக்கவும்)

    ReplyDelete