பாக்குறதுக்கு சிக்குன்னு நம்ம ”அமலாபால்” மாதிரி ஆகனும்-னு பெண்களும், ”தனுஷ்” மாதிரி ஆயிடனும்-னு ஆண்களும் நெனைக்கிறதுல எல்லாம் ஒரு குத்தமும் இல்லீங்க. நெனப்போட விடறதுதாங்க தப்பு. அப்புறம் என்ன தான்யா செய்யச் சொல்ற என்னை?. எங்க ஊர்ல தான் ஒரு ஜிம்மும் இல்ல, கும்மும் இல்லியே! பிறகு என்ன தான் வழி?
அதானே! என்ன தான் வழி...? வாங்க தேடுவோம்!
காட்சி : ஒன்று
கடந்த விநாகர் சதுர்த்தி அன்று போன மாதம் வாங்கிய புதுச்சட்டையை உடுத்திக் கொண்டு, நண்பர் ஒருவரின் புத்தக வெளியீட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கே என் நண்பருக்கும், எனக்குமிடையில் நடந்த உரையாடலைக் கேளுங்கள்.(சாரி படிங்க).நண்பர்:- (மிக அருகில் அழைத்து) ”சத்ரியன் சட்டை எங்க வாங்கனீங்க? நல்லாயிருக்கே!”.
நான் :- (எனக்கு பெருமை தாங்கவில்லை).பக்கத்தில இருக்கிற ”முஸ்தஃபா -வுல தான் அண்ணே”.
நண்பர்:- ஒஹ்..! முஸ்த்ஃபா-வுல 'பலாப்பழத்து'க்கெல்லாம் சட்டை விக்கிறாங்களா?, என்றாரே பாக்கலாம்,
நான்:- ???????!!!! (எம் பெருமையெல்லாம் பஞ்ச்சரான பலூன் மாதிரி ஆயிடுச்சி. நல்லவேளை, அதை யாரும் பாக்கல).
அந்த ஏளனத்துக்கான காரணத்த கேட்டீங்கன்னா நெசமாவே சிரிப்பீங்க. சொல்றேன். சிரிச்சிக்குங்க. எனக்கும் என் நண்பருக்கும் ஒரேயொரு வித்தியாசம் தாங்க.
அவரு ”வாரணம் ஆயிரம்” படத்துல வர்ர சூர்யா மாதிரி வயித்துல ஏழெட்டு ”பேக்” வெச்சிருக்கார். நான் ”அழகர்சாமியின் குதிரை” படத்துல வர்ர அப்புக்குட்டி மாதிரி வயித்துல ஒரேயொரு ”பேக்” தான் வெச்சிருக்கேன்.
SIX PACK இல்லாட்டி பரவாயில்ல. தொந்தியையாவது குறைக்கலாமேன்னு நெனைச்சி வழி தேடுனப்போ தான் கபால்-னு கண்ணுல பட்டுச்சி,
*சித்தார் கோட்டை என்னும் பல்சுவை வலைதளம்.அதில்,என்ற அருமையான பதிவு. உடற்பயிற்சி எப்படி செய்ய வேண்டும் என்ற விளக்கம் போதாதென்று, வீடியோ படமும் இணைத்திருக்கிறார்கள். SIX PACK-ற்கு தயாராகுங்கள்.
* பெண்களுக்காகவே,
போன்ற அருசுவை தகவல்கள் அடங்கிய ஒரு பொக்கிஷ வலைதளம் அருசுவை கண்டும், உண்டும் பயன் பெறுங்கள்.
***
காட்சி : இரண்டு
2) ஹூம்...! ரொம்ப நாளா ஆசை. எக்ஸர்சைஸ் செய்யனும், செய்யனும்னு நெனைக்கிறது. அதுக்கு எங்க நேரமிருக்குது?
- இது போன்று உங்களில் பலரும் புலம்புவீர்கள்.
( அங்க மட்டும் என்ன வாழுதாம்....னு எங்க வீட்டு சமையல் அறையிலிருந்து ஒரு அசரீரி கேட்கிறது. அது ஒன்னும் இல்லடா டார்லிங். நீ அந்த ஆஃப் பாயிலுக்கு லேசா மிளகு தூவி எடுத்துட்டு வா) .
நாம் உண்ணும் உணவுமுறையில் சில மாறுதல்களையும், எளிய உடற்பயிற்சிகளையும் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உடலமைப்பிலும், உடல் நலனிலும் நாளடைவில் பெரிய மாற்றத்தை உணர்வீர்கள். அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவுமுறையை
சகோதரி ஸ்நேகிதி அவர்கள் ”என் இனிய இல்லம்” என்னும் வலைதளத்தில்,
என்ற தலைப்பில் பதிவு செய்திருக்கிறார். அவர் தளத்தில் ஏராளமான சமையல் குறிப்புகளும் குவிந்துக் கிடக்கிறது. அடுப்படியில் வேலை செய்யும் ஆண்(மேன்)மக்களுக்கு பேருதவியாய் இருக்கும்.
நாம் உண்ணும் உணவுமுறையில் சில மாறுதல்களையும், எளிய உடற்பயிற்சிகளையும் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உடலமைப்பிலும், உடல் நலனிலும் நாளடைவில் பெரிய மாற்றத்தை உணர்வீர்கள். அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவுமுறையை
சகோதரி ஸ்நேகிதி அவர்கள் ”என் இனிய இல்லம்” என்னும் வலைதளத்தில்,
***
”மனம் என்னும் மந்திரப் பெட்டக(ம்)”-த்தைஒருமுகப் படுத்த பழகி விட்டோமானால், மாபெரும் சிக்கல்களைக் கூட எளியமுறையில் தீர்த்துக் கொள்ளும் சிந்தனைத் திறன் நமக்கு கைவந்து விடும். ’தன்னை அறிய’ முயன்றவர்களுக்கு இதன் வீரியம் தெரியும். தன்னையறிதல் என்பது ஒரு கலை. தனது ஆற்றலையும், அறிவையும் உணர்த்தும் வல்லமை மிக்கது. மனத்தை ஒருமுகப்படுத்த ஒரே வழி தியானம் செய்வது தான். தியானம் என்றால் அது சாமியார்களின் சமாச்சாரம் என்று ஒதுங்கும் நபர் நீங்களென்றால், உங்களுக்குகாகவே,
நம் எழுத்து சித்தர் - திரு.பாலகுமாரன் அவர்கள், தனது வலைப்பூவில்
என்ற கட்டுரையில் விளக்கம் கொடுக்கிறார். பிடித்திருந்தால் கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
***
நடிகர் சிவகுமார் அவர்களுக்கு இப்போது வாய்ப்பு கொடுத்தாலும் அவர் மகன் சூர்யாவுக்கு போட்டியாக கதாநாயகனாக நடிப்பார். அவரின் இளமை ரகசியம் என்னை போன்ற பலரையும் வியப்பில் ஆழ்த்துவது மறுக்கமுடியாத உண்மை. அந்த இளமைக்குக் காரணம் அவர் செய்துவரும் யோகாசனம் தான். முதுமையடைவதை தடுக்க முடியாது.ஆனால், தள்ளி போடலாமே!
”சத்குரு சிறீ பதஞ்சலி மஹரிஷி” என்னும் வலைப்பக்கத்தில் ”ஆன்ம விடுதலை நமது பிறப்புரிமை” என்னும் முழக்க வரிகளோடு
என்னும் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.கற்று பயன் பெறுங்கள். அது மட்டுமன்றி இன்னும் ஏராளமான தகவல்கள் அத்தளத்தில் இருக்கிறது .
****
எல்லாம் இருந்தும் நிம்மதியான, போதுமான உறக்கம் இல்லையென்றால் வாழ்வின் மேல் வெறுப்பு ஏற்பட்டு விடுகிறது. அதற்கான மூலகாரணம் நாமேதான். போதிய ஓய்வின்றி ஓடிக்கொண்டே இருக்கிறோம். மன உளைச்சலில் தவிக்கிறோம். அதற்கொரு எளிய தீர்வினை,
“வனப்பு” என்னும் அவரது வலைதளத்தில் சகோதரி சந்திரகௌரி அவர்கள்
என்ற தலைப்பில் எளிதான சில அறிவுரைகளைப் பகிர்ந்திருக்கிறார். படிச்சிட்டு தூங்குங்க.
***
நான் தூங்கச் சொன்னேன் -றதுக்காக, ஆஃபிஸ்ல ஆணி புடிங்கிக்கிட்டே வலையில மேயுறவங்க தயவு செஞ்சி பதிவ படிச்சிட்டு அங்கயே தூங்கிடாதீங்க. உங்களுக்கு புண்ணியமா போகும்!
குறிப்பு: தலைப்புக் காரணம்.ஆரோக்கியமாய் வாழ ”ஐம்பதிலும் ஆசை வரும்”-னு சொல்ல வந்தேன். ஹி.ஹி.ஹி
குறிப்பு: தலைப்புக் காரணம்.ஆரோக்கியமாய் வாழ ”ஐம்பதிலும் ஆசை வரும்”-னு சொல்ல வந்தேன். ஹி.ஹி.ஹி
***
”தன்னை அடக்கப் பழகிக் கொண்டவன் எதற்கும் வசப்பட மாட்டான். அவனே வாழத் தகுதியுள்ளவன்.” - சுவாமி விவேகானந்தர்.
இனிய காலை வணக்கம்!
ReplyDeleteசட்டையைப் பற்றிய உரையாடல் அருமை நண்பரே!... உடல் பலத்திற்கான பதிவர்களை அறிமுகபடுத்தியமைக்கு வாழ்த்துக்கள்..
இன்றைய வலைச்சர அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்...
இது போன்ற பதிவுகளை பார்க்கும் போது படிக்கும் போது வலையுலகத்தின் மேல் நம்பிக்கை பிறக்கின்றது.
ReplyDeleteஉடம்பை எப்படி கட்டுக்கோப்பாக வைத்துகொள்ளலாம் என்று கூறும் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி. அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅமலாபால் ஓகே, ஆர்யா, சூர்யாவை சொல்லியிருந்தால் ஓகே. அதென்ன "தனுஷ்"?????????
வணக்கம்ணே,
ReplyDeleteஇன்றைய சூழலுக்கு மிகவும் பயனுள்ள மருத்துவக்குறிப்புகள் கொண்ட வலைத்தளங்களை அறிமுகபடுத்தி அசத்தி விட்டீர்கள் அருமை...
நல வாரமா ?
ReplyDelete:)
கலக்கலான தொகுப்புகளுக்கு நன்றி!
ReplyDeleteஆரோகியத்திற்கான அறிமுகங்கள்.வாழ்த்துக்கள்.
ReplyDeleteகோட்டை என்னும் பல்சுவை வலைதளம்.அதில்,
ReplyDeleteதொந்தி குறைய எளிய உடற்பயிற்சி
என்ற அருமையான பதிவு. //
மாணவா உனக்குத்தான் அண்ணன் சொல்லியிருக்கார் போய் பாரு :))
இன்றைய வலைச்சர அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteதயவு செஞ்சி பதிவ படிச்சிட்டு அங்கயே தூங்கிடாதீங்க. உங்களுக்கு புண்ணியமா போகும்!//
ReplyDeleteநாங்களெல்லாம் தூங்கி முழிக்கிற டயத்துலதான் இந்த பதிவையே படிச்சோம் :))
சட்டை பற்றிய விஷயம்.. விளையாட்டாய் சொல்லி.. அதில், உடற்பயிற்சியின் முக்கியத்துவமும் கொண்டு வந்துட்டீங்க.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்! :)
வழக்கம்போல் பெர்பார்மான்ஸ் இன்னிக்கும் சூப்பரு அப்பு!
ReplyDeleteஎன்னங்கப்பா குண்டான வலைபதிவர்களை எல்லாம் கிண்டல் பண்றீங்க? என்ன பெரிய குண்டு.. அஜீத்தை விட ஒரு சுத்து பெரிசு.. அவ்வளவு தான்..
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள் சத்ரியன்,அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteகவரும் தலைப்பு-பலரும்
ReplyDeleteகாணவும் வலைப்பூ
எவரும் படிக்க-இங்கே
எடுத்துநீர் கொடுக்க
அமரும் யோகா-நன்கு
அறிந்திட ஆகா
தமரும் அனைவராய்-கருதி
தந்துளீர் வாழ்க
புலவர் சா இராமாநுசம்
புலவர் சா இராமாநுசம்
அறிமுகப்படுத்திய விதம் நல்லா இருக்கு. எல்லருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன்ன இருந்தாலும் இப்படி அழகர்சாமியின் குதிரை படத்தில் வரும் அப்புக்குட்டிக்கு இருக்கும் பேமிலி பேக் போலஉங்களுக்கும் இருக்குன்னு சொல்லிருந்திருக்க வேண்டாம்.. ஏன்னா நாங்க உடனே இமாஜின் செய்து பார்த்து சிரிச்சிட்டோம்ல? :)
ReplyDeleteரசித்தேன் சத்ரியன் முதலில் தன்னை நகைச்சுவையாக சொல்லி பின் நல்ல கருத்துகளை தந்து அசத்திட்டீங்க... நகைச்சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் படிக்க அருமையாகவும் நல்ல கருத்துகளை கலந்து தருவதில் முன்னோடின்னு உறுதி படுத்திட்டீங்க இந்த பகிர்வால்... பொருத்தமான தலைப்பு...
உண்மையேப்பா...
யோகாவும் மெடிட்டேஷனும் நம்ம வாழ்வில் இப்ப ஒரு அங்கமாகி விட்டது என்று சொன்னால் மிகையில்லை....
மேலை நாடுகளில் இப்ப யோகாவும் மெடிட்டேஷனும் முக்கிய பங்கு வகிக்கிறது...
உணவில் கட்டுப்பாடும் உடல்நலத்தில் அக்கறையும் உடல் ஆரோக்கியத்தில் கருத்தும் கொண்டால் கண்டிப்பா அமலா பால் , சூர்யா ஆகமுடியும்....அவங்க சினிமா உலகில் இடத்தை தக்கவைத்துக்கொள்ள போராடுறாங்க... ஆனா நாம எல்லாருக்கும் எடுத்துக்காட்டா இருக்க நாம முயற்சிக்கலாம் யோகாவும் தியானமும்....
என் அம்மா இப்பவும் யோகாவும் தியானமும் தினமும் தவறாமல் செய்கிறார்கள்... எல்லோரும் ஆச்சர்யமாக கேட்பது எப்படி இப்பவும் உடலை இத்தனை கச்சிதமாக வைத்திருக்கிறீர்கள் என்பது தான்...
அப்ப நான்? நான் சரியான சோம்பேறிப்ப்பா... தினமும் அம்மா கூப்பிடும்போதெல்லாம் எதுனா காரணம் சொல்லி தட்டிக்கழித்துவிடுவேன் நைசா...நல்லதெல்லாம் தான் நமக்கு ஒவ்வாதே :) தோட்டத்து மூலிகைக்கு வீரியம் கம்மின்னு அம்மா அடிக்கடி சொல்வாங்க... இனி அப்படி அசட்டையாக இருக்காமல் கண்டிப்பாக யோகா தொடர்வேன் உங்க இந்த பகிர்வு தான் அதற்கு முக்கிய காரணம்...
இப்படி நம்பிக்கையுடன் சொல்லி படைத்த இன்றைய பகிர்வு அசத்தல்பா...
அன்பு நன்றிகள் அருமையான பயனுள்ள பகிர்வுக்கு... இன்னமும் எனக்கு சிரிப்பு நிற்கவில்லை... (பலாப்பழத்துக்கு கூட சட்டை விக்கிறாங்களா என்ன? :) நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு..)
அறிமுகப்படுத்தப்ப நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துகள்....
உரையாடலுடன் கூடிய அறிமுகங்கள் சூப்பர்
ReplyDeleteஅறிமுகப்படுத்திய விதம் அழகு
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே.
நான்:- ???????!!!! (எம் பெருமையெல்லாம்
ReplyDeleteபஞ்ச்சரான பலூன் மாதிரி ஆயிடுச்சி.
நல்லவேளை, அதை யாரும் பாக்கல்ல\\\\\\
ம்ம்மம்ம..நான் பாத்தேனே!
கொழுகொழென்னு தும்பிக்கைமட்டும்
இல்லாமல்....
அடுத்தமுறை பார்க்கும் போது
முருகன்மாதிரி இருப்பீக போல.....
அப்படி ஆயிட்ட இன்னொன்னு
எங்கடா இன்னுகாணோமே
என்று எதிர்பாக்கபடாது!
{அழகமட்டும்தான் சொன்னேன்}
நேரமின்னையால் அறிமுகங்களைப் படிக்கவில்லை
{சேமித்துள்ளேன்} நேரம் கிடைக்கும்போது
பார்வையிடுவேன்
உங்கள் உழைப்புக்கு நன்றி
இந்த 70வயசில...80கிலோவில இதெல்லாம்
எனக்கு நடக்குமா அப்பு?
பேராசை ஒண்ணுமில்ல...ஒரு ஆசைதான்
கொடியிடையாவர......
உங்கள் தமிழ் பிளாக்கில் கூகுள் அட்சென்ஸ் விளம்பரம் இடம்பெற செய்து நிறைய சம்பாதிக்கலாம். உங்கள் பிளாக்கில் கூகுள் விளம்பரம் இடம்பெற வேண்டுமா? see this blog http://computernanban.blogspot.com/2011/05/blog-post.html
ReplyDeleteஅறிமுகப்படுத்திய விதம் அசத்தல்
ReplyDeleteஅப்ப நான்? நான் சரியான சோம்பேறிப்ப்பா... தினமும் அம்மா கூப்பிடும்போதெல்லாம் எதுனா காரணம் சொல்லி தட்டிக்கழித்துவிடுவேன் நைசா...நல்லதெல்லாம் தான் நமக்கு ஒவ்வாதே :) தோட்டத்து மூலிகைக்கு வீரியம் கம்மின்னு அம்மா அடிக்கடி சொல்வாங்க... இனி அப்படி அசட்டையாக இருக்காமல் கண்டிப்பாக யோகா தொடர்வேன் உங்க இந்த பகிர்வு தான் அதற்கு முக்கிய காரணம்\\\\\\\\\\\
ReplyDeleteசகோதரி...!
அம்மா சொல்லியே வளையாத பொண்ணு....
சத்ரியன் பதிவு வளைத்துவிட்டதா?
நான் உங்க அம்மாவைச் சந்திக்கவேணுமே!
{ஏதாவது வைத்திவைக்கதான்}}
ம்ம்ம.. தொடருங்கள்... தொடருங்கள்
உங்களை மேலும் அழகாக்கிய புண்ணியம்
இந்தப் புண்ணியவானுக்குப் போய்ச்சேரட்டும்
வாழ்த்துகள் முயற்சிக்கு தோழி!
இன்றைய உங்கள் அத்துணை தேர்வுகளும் அற்புதமானவை. உங்களின் தேடலுக்கு என் பாராட்டுக்கள் சத்ரியன்!
ReplyDeletekalakire maams ...
ReplyDeleteவணக்கம் ராஜேஷ்.
ReplyDeleteமுதல் ஆளா வந்து உற்சாகப்படுத்தி இருக்கீங்க. நன்றி.
உரையாடல்... கற்பனை தான்.
நன்றிங்க ஜோதிஜி.
ReplyDeleteவாங்க காந்தி,
ReplyDeleteநான் ஆர்யாவஒ=இயோ, சூர்யாவையோ சொல்லியிருந்தால் நீங்க எதிர் கேள்வி கேக்க ஒரு வாய்ப்பு போயிருக்கும் இல்லையா. அதுக்காகத் தான் “தனுஷ்”.
வாங்க சிம்பு,
ReplyDeleteஇது எல்லாமும் வேணும்-னு தெரிஞ்சும் கடைப்பிடிக்காம கோட்டை விட்டுட்டு, ஓடியோடி சம்பாதிச்சு, கடைசியில மருத்துவர்களுக்கு “கட்டி” கொடுத்திடறோம்.
அதே தான் கோவியார்.
ReplyDeleteவாங்க விக்கி சார். நன்றி.
ReplyDeleteவணக்கம், வாங்க ராம்வி. எல்லோரும் நலம் வாழ ஆசை. அதான் இந்த தொகுப்பு.
ReplyDelete//கோட்டை என்னும் பல்சுவை வலைதளம்.அதில்,
ReplyDeleteதொந்தி குறைய எளிய உடற்பயிற்சி
என்ற அருமையான பதிவு. //
மாணவா உனக்குத்தான் அண்ணன் சொல்லியிருக்கார் போய் பாரு :))//
வைகை மாப்ஸ்,
பங்காளிங்க எங்களுக்குள்ள எதையும் “மூட்டும்” உள்குத்து எல்லாம் எடுபடாது. ஹி..ஹி.
வாங்க குமார்.
ReplyDelete//நாங்களெல்லாம் தூங்கி முழிக்கிற டயத்துலதான் இந்த பதிவையே படிச்சோம் :))//
ReplyDeleteநான் அப்பாவி மக்களுக்கு சொன்னேன் சாமீய்...!
எல்லாத்துக்கும் ஒரு கடையோட சொன்னாத் தானே, நாம் கேக்குறோம்.
ReplyDeleteஅதுக்காக தான்.
நன்றிங்க ஆனந்தி.
வாங்க மிஸ்டர். வெளங்காதவன்.
ReplyDeleteநன்றி.
வணக்கம் சூர்யஜீவா சார்,
ReplyDeleteஅது சும்மா டமாசு.
நன்றிங்க சண்முகன் அண்ணே!
ReplyDeleteவணக்கம் புலவர் ஐயா.
ReplyDeleteதங்களின் மேலான கருத்திற்கும், வாழ்த்திற்கும் நன்றி.
வணக்கம் லஷ்மி அம்மா.
ReplyDeleteவணக்கம் மஞ்சுபாஷிணி,
ReplyDeleteஉடற்பயிற்சி, யோகா, மருத்துவம்... கேக்கவும், படிக்கவும் போரிங்-கான விஷயம்.
உங்களையெல்லாம் படிக்க வைக்கனுமே! அதுக்காகத்தான் என்னை “காமெடி பீஸ்” ஆக்கிட்டேன்.( நான் உருவத்தில் பலா அல்ல. பின்னே சுவை-யிலா, என்னும் எதிர் கேள்வி கேக்க கூடாது.)
இதுவரை அம்மா பேச்சை தட்டிக்கழித்து வந்த ”மஞ்சுபாஷினி” , இப்பொடியனின் கட்டுரையால் மனம் மாற் இருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
வாழ்த்துக்கள்.
வாங்க பிரகாஷ்,
ReplyDeleteசும்மா பில்டப்பு தான்!
வாங்க மகேந்திரன்,
ReplyDeleteதங்களின் ஊக்குவிப்பிற்கு நன்றி.
வாங்க கலா,
ReplyDeleteசந்தடி சாக்குல என்னை “யானை”-ன்னு சொல்லிட்டிங்க.
//இந்த 70வயசில ...80கிலோவில இதெல்லாம் எனக்கு நடக்குமா அப்பு?//
நடக்க முடியாட்டி, தள்ளுவண்டி அனுப்பி வைக்கப் படும். முகவரி அனுப்பி வையுங்கோ பாட்டி.
வத்தி வைக்கும் முயற்சி எல்லாம் வேணாம், கலா.
ReplyDeleteநடக்க முடியாத பாட்டிக்கு பேச்சை பாரு. லொள்ள பாரு.!
வாங்க மோகன்ஜி,
ReplyDeleteவருகைக்கும், வாழ்த்திற்கும், உங்களது இடையறாத பணி நடுவிலும் வந்து ஊக்கப் படுத்தியமைக்கும் நன்றி.
வாங்க ”பூங்கொத்து” மேடம்!
ReplyDeleteநன்றி.
வாங்க ஜமால் மாப்பி.
ReplyDeleteஏன் தாமதம்?