அவன் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது, அவனது பாட்டி வீட்டில் ஆடு மேய்ப்பதற்காக இருந்த ஆள் உடல் நலக்குறைவினால் வேலையை விட்டு நின்று விட்டார். அந்தச் சிறுவன் படிப்பை தொலைத்து விட்டு ஆடுமேய்க்கும் வேலையை மனமுவந்து ஏற்றுக் கொண்டான். அவன் படித்த பள்ளியில் ”சத்துணவு பொறுப்பாளர் + ஆசிரியராக” பணியாற்றி வந்த ஒருவரால் ”அச்சிறுவன்” ஆடு மேய்க்க போய்விட்டதை ஜீரணிக்க முடியாமல், அவனது கல்வியறிவற்ற பெற்றோர்களைச் சந்தித்து கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொல்லி சிறுவனை மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைக்கும்படி சொல்லிவிட்டு போயிருந்தார்.
அன்றைய தினம் ஆடு மேய்த்து விட்டு வீடு திரும்பிய தன் மகனிடம் ஆசிரியர் வந்துச் சென்றதையும், நாளை முதல் பள்ளிக்குச் செல்லும்படியும் சொன்னார்கள். சி்றுவனுக்கோ ஆடு மேய்த்தல் வேலை பிடித்திருந்தது. அதனால், பள்ளிக்குச் செல்ல மறுத்து விட்டான். இரண்டு மூன்று நாட்கள் பொறுத்துப் பார்த்த ஆசிரியர் மீண்டும் சிறுவனின் வீட்டை நோக்கி படையெடுத்தார். அப்படையெடுப்பில் தோல்வியைத் தழுவினார்.
அடுத்த படையெடுப்புக்காக நான்கு மாதம் திட்டம் தீட்டி, தன்னுடன் நான்கு மாணவர்களைத் திரட்டிக் கொண்டு, ஒரு ஞாயிற்றுக்கிழமை நன்னாளில் சிறுவன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடத்திற்கேச் செல்ல, ஆசிரியரின் திடீர் படையெடுப்பை எதிர்ப்பார்க்காத அச்சிறுவன் புறமுதுகிட்டு ஓட, ஆசிரியரின் படை வீரர்கள் விரட்டிச் சென்று பிடித்து வந்து படைத்தலைவன் முன் நிறுத்தினர். சிறுவனின் கை, கால்கள் எல்லாம் நடுநடுங்கின.
இன்றைய போரில் தோல்வி கண்டவனின் தோலில் கை போட்டு பேசி, சாந்தப் படுத்தி போருக்குப் புறப்படும் முன் அவர் வாங்கி வந்திருந்த “தேன் மிட்டாயை”க் கொடுத்து அன்பொழுகப் பேசி, “ நாளை முதல் நீ பள்ளிக்கு வா, உனக்கு நான் தினமும் தேன் மிட்டாய் வாங்கித் தருகிறேன்”, எனச் சொல்லி மீண்டும் அச்சிறுவனின் படிப்பைத் தொடர வைத்தார். அந்தச் சிறுவன் ஓரளவிற்குப் படித்து இன்று அயல் நாட்டில் பணிபுரிந்து வருகிறான். இன்று அவன் குடும்பம் மிகவும் சிறந்த நிலையில், சிறப்பான வாழ்வு வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.
அவ்வாசிரியர் உரிய நேரத்தில், அச்சிறுவனக்கு அப்படியொரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்காமல் போயிருந்தால் அவனைச் சார்ந்த அக்குடும்பத்தை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.... !
அவன் யாரென்று தெரிந்துக் கொள்ள ஆவலாய் இருப்பீர்கள். இன்றையப் பதிவைத் தொடர்ந்து படித்து பாருங்கள்....தெரியும்!
***
இன்றைய பதிவில் அப்படிப்பட்ட ஆசிரியர்கள் சிலரை நீங்கள் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளேன்.
சத்ரியன்:
வணக்கம் திரு.மதுரை சரவணன், உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.”
மதுரை சரவணன்:
வணக்கம். உங்களை எல்லாம் சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்களுடன் நிறைய பேச ஆசை தான். ஆனாலும், இந்த அரிய நேரத்தை என் மாணவர்களுக்கு ஒரு பாடத்தையாவதுக் கற்றுக் கொடுக்க பயன் படுத்திக் கொள்ள நினைக்கிறேன். காரணம், ”சமச்சீர் கல்வி” என்னும் கடாயுதத்தால் ”நம் அரசு” மாணவர்களின் இரண்டு மாத காலத்தை பந்தடித்து விளையாடிவீணடித்து விட்டது. அதை சமன் படுத்த உங்களின் அனுமதியோடு, நான் வகுப்பிற்குச் செல்கிறேன்.
சிரமம் கருதாமல், மதுரை சரவணன் என்ற எனது வலைப்பூவில், எனது அனுபவங்களைக் கவிதைகளாகவும், கட்டுரைகளாகவும் பதிந்து வைத்திருக்கிறேன். படித்து விட்டு எதுவும் கேட்க விரும்பினாலோ, அல்லது எதுவும் பகிர்ந்துக் கொள்ள விரும்பினாலோ எனது கைத்தொலைபேசி எண்ணுக்கு (என்னைப்பற்றியில் காணவும்) அழையுங்கள். நன்றி.
***
சரி சரி. அவசரமா எல்லாரும் புறப்பட தயாராகுங்க. இப்போ நேரா ஜெய்ப்பூருக்கு போய் அன்புடன் அருணா மேடத்தை பாக்கப் போறோம்.
(இடையில் எனது கைத்தொலைபேசிக்கு ஒரு அழைப்பு ),
எதிர்முனையில் அருணா மேடம் :.
“சத்ரியன் தப்பா எடுத்துக்காதீங்க.இப்போதைக்கு ஜெய்ப்பூர் பயணமெல்லாம் வேண்டாம், நேத்து டெல்லியில குண்டு வெடிச்சதால இந்த பகுதியிலயும் கொஞ்சம் கெடுபிடியா இருக்கு. அதனால, இந்த பயணத்தை ரத்து செஞ்சிடுங்க. என்னை நேர்ல வந்து சந்திச்சாலும், என் வலைப்பக்கத்துல இருக்கும் என் பதிவுகளைப் படிச்சாலும் ஒன்னுதான். சிரமத்துக்கு மன்னிச்சிக்குங்க.”
சத்ரியன்:
அய்யோ இதுக்கெல்லாம் எதுக்குங்க பெரியப்பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிக்கிட்டு.! இதோ, உங்க வலைப்பூ முகவரிய(அன்புடன் அருணா) நம்ம நண்பர்களுக்கு தெரியப்படுத்திடறன். அப்படியே ஆசிரியர் என்பவர் எப்படி இருக்க வேண்டும் -ற பதிவை படிக்கச் சொல்றேங்க. சரிங்க. நிச்சயமாங்க. நன்றிங்க.
***
சரிங்க ஃப்ரண்ட்ஸ், நாட்டு நடப்பு இப்ப சரியில்ல, இப்ப உங்களை எங்கயும் வெளியில அழைச்சிட்டு போக முடியாது.அதனால, நான் படிச்சு தெரிஞ்சிக்கிட்ட இன்னும் சில ஆசிரியர்களோட வலைப்பூக்களை தெரியப் படுத்தறேன். எல்லாரும் அவிய்ங்க அவிய்ங்க வீட்லயோ, இல்ல ஆணி புடுங்கற எடத்துலயோ இருந்தே படிச்சி தெரிஞ்சிக்குங்க.
***
திருமதி. தென்றல் சரவணன், எண்ணத்தின் வண்ணம் என்னும் வலைப்பூந் தோட்டத்துக்குச் சொந்தக்காரர். தொழில்: ஆசிரியரே தான். ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் இவர் செய்த வேலையைப் போய் பாருங்களேன்.
***
திருமதி. ஆதிராமுல்லை. இவர் ஒரு கல்லூரி விரிவுரையாளர். அவரின் “ஆதிரா பார்வைகள்” என்னும் வலைப்பூவில் எட்டையயப்புரத்தின் நெட்டைக் கனவுகள் என்ற கட்டுரையைப் படித்துப் பாருங்கள். அவரது மற்ற படைப்புகளையும் விட்டு விடாதீர்கள்.
இதை கட்டாயம் நீங்கள் படித்தே ஆகவேண்டும். மற்ற நண்பர்களுக்கும் பகிருங்கள்.
இன்று “ஆசிரியர்கள்” அனைவருக்குமாக ”இரு ஆசிரியர்களை” அறிமுகப் படுத்த வேண்டியது எனது தலையாய கடமை. அதற்கு பேருதவி செய்தவர் சகபதிவர், நண்பர், சமூக சிந்தனையாளர்... கசியும் மௌனம் வலைப்பூவின் ஆசிரியர். திரு. ஈரோடு கதிர் அவர்கள். அவரது படைப்பில்,
”ஒற்றை மனிதனின் ஓங்கிய புரட்சி”
- யைப் படியுங்கள். புரட்சியைத் துவங்குங்கள்.
***
இதை கட்டாயம் நீங்கள் படித்தே ஆகவேண்டும். மற்ற நண்பர்களுக்கும் பகிருங்கள்.
இன்று “ஆசிரியர்கள்” அனைவருக்குமாக ”இரு ஆசிரியர்களை” அறிமுகப் படுத்த வேண்டியது எனது தலையாய கடமை. அதற்கு பேருதவி செய்தவர் சகபதிவர், நண்பர், சமூக சிந்தனையாளர்... கசியும் மௌனம் வலைப்பூவின் ஆசிரியர். திரு. ஈரோடு கதிர் அவர்கள். அவரது படைப்பில்,
”ஒற்றை மனிதனின் ஓங்கிய புரட்சி”
- யைப் படியுங்கள். புரட்சியைத் துவங்குங்கள்.
****
மேற்கூறிய கதையில் வந்த ஆடுமேய்த்தச் சிறுவன் , சாட்சாத் இந்த சத்ரியனே தான். சத்ரியனின் வாழ்வைச் செதுக்கிய அந்த மதிப்பிற்குரிய சிற்பி திரு. நடராசன் அவர்கள். கண் கண்ட தெய்வம்.
ஆடு மேய்த்த சிறுவனாக் இருந்த உங்கள் வாழ்க்கையையே மாற்ற காரணமாக இருந்த ஆசிரியர் உண்மையில் கண்கண்ட தெய்வந்தான்... ஆசிரியர்களான இன்றைய வலைச்சர அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteஆசிரியர்களை அறிமுகப்படுத்திய வலைச்சர ஆசிரியராகிய உங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.
ReplyDeleteஆடு மேய்த்த சிறுவன் யார் என்று தெரிந்துக்கொள்வதற்காக கடைசி பத்தியை முதலில் படித்துவிட்டு மீதியை பிறகு படித்தேன்.
இந்த(சத்ரியன்) கல்லை சிற்பமாக்கிய ஆசிரியர் திரு நடராசன் அவர்களுக்கு நன்றிகள் பல.
உங்களை நல்ல முறையில் வழிபடுத்திய அசிரியருக்கு நன்றி.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்..வாழ்த்துக்கள்.
ஆசிரியர்களான இன்றைய வலைச்சர அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteஆடு மேய்த்த அன்பரே-உம்
ReplyDeleteஆற்றல் கண்டு இன்புற
தேடி அளித்த பணியிது-சீனா
தேர்வுக்கும் சான்று இது
ஓடும் மேகம் விண்ணிலே-என
உலக காண கண்ணிலே
நாடி பல வலைகளே-தினம்
நல்கும் பணிக்கு நிகரிலே
புலவர் சா இராமாநுசம்
இருவர் தவிர, மற்றவர்கள் புதியவர்கள்...
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்...
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி!
#நீங்க ஆடு மேச்சீங்க... நான் மாடு மேச்சேன்...
சேம் ஸ்வீட்!
வித்தியாசமாக யோசித்து ஆசிரியர்களாக
ReplyDeleteஅறிமுகப் படுத்திய விதமும் அதற்கேற்ப
முன்னுரைகொடுத்துள்ள விஷயமும்
மிக மிக அருமை
அறிமுகங்கள் அனைவரின் பதிவும்
நான் தொடர்கிற அற்புதமான பதிவுகளே
தொடர வாழ்த்துக்கள்
உங்கள் தேடுதல் மற்றும் அறிமுகங்கள் புதுமையா இருக்கு
ReplyDeleteஆசிரியர்களை அறிமுகப்படுத்திய வலைச்சர ஆசிரியருக்கும் வழ்த்துக்கள்.
ReplyDeleteஆஹா... வாழ்த்துக்கள்... நல்ல பகிர்வுகள்.. ஆதிரா முல்லை மட்டும் படித்ததில்லை.. பார்க்கிறேன்...
ReplyDeleteஆசிரியர்கள் எப்போதுமே தெய்வத்துக்கு சமானம்.. உங்கள் ஆசிரியர் நடராசரும்..
சூப்பர் நைனா
ReplyDeleteஇன்றைய உங்க பகிர்வு நிஜம்மாவே அசத்தல் மட்டுமல்ல வித்தியாசமாவும் இருந்திச்சு சத்ரியன்..
ReplyDeleteஅட அப்டின்னு படிக்கும் எல்லாருக்குமே நினைக்க வெச்சிட்டீங்க...
ரொம்ப அருமையான விஷயம்பா.. கல்வி கிடைக்க வழி இல்லாமல் எத்தனையோ பேர் எப்படி எல்லாமே காணாம போயிட்டாங்க.. அப்படி நீங்க ஆகாமல் இருக்க உங்க ஆசிரியர் (திரு நடராசன் அவர்கள் )தேன்மிட்டாய் கொடுத்து உங்களை சக்ஸஸ்ஃபுல் ஆக்கி இருக்கார் பாருங்க..
என் முதற்கண் நன்றியை உங்களுடைய ஆசிரியருக்கு திரு நடராசன் ஐயாவுக்கு சொல்கிறேன்...
ஒரு பிள்ளையின் எதிர்காலம் பெற்றோரை விட ஆசிரியர்கள் கையில் தான் அதிகம் இருக்கு என்பதற்கு உங்களுடைய இந்த பகிர்வு ஒரு உதாரணமா இனி நீங்க கம்பீரமா சொல்லும்படி இருக்கும்பா...
ஆசிரியர்களை அறிமுகப்படுத்திய விதத்திலும் வித்தியாசமா அறிமுகப்படுத்தி இருக்கீங்க...
அறிமுகப்படுத்தப்பட்ட ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் என் அன்பு கலந்த வணக்கங்களுடன் கூடிய வாழ்த்துகள்....
அன்பு நன்றிகள் சத்ரியன் அருமையான பகிர்வுக்கு...
அப்படி ஆசிரியர் கிடைக்க கொடுத்து வைத்திருகிறீர்கள் சத்ரியன்.
ReplyDeleteபிற பதிவர்களில் பலர் எனக்கு புது அறிமுகமே.எல்ல தளங்களையும் சென்று பார்க்கிறேன்
பகிர்விற்கு நன்றி
ஐயா.ராசா!
ReplyDeleteபடித்துவரும்போதே நீனைத்தேன்
அந்தத் திருமால் நீங்கதானென்று.
அங்கு மேய்ந்ததைப் பாத்தீர்கள்
இங்கு மேய்வதைப் பார்கிறீர்கள்
குறிப்பறிந்துதான் பெயர் வைத்திருக்கிறார்கள்
சரம் தொடுத்தவிதம், மணக்கிறது.
ReplyDeleteபூக்கள் பறிப்பதுதான் சிரமம் இருந்தாலும்....
கொடுத்த வேலையைத் திறனுடன்
முடிக்கும் பொறுப்பு உங்களுடையது
மேலும் திறமைமிளிர.........
ஆற்றல் வெளிவரட்டும்
வணக்கம்ணே,
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள் மிகவும் புனிதமான கல்விப்பணியை செய்துகொண்டிருக்கும் ஆசிரியர்களை அறிமுகபடுத்தி அசத்தி விட்டீர்கள் சூப்பர்
அனைத்து ஆசிரியர்களையும் வணங்கி மகிழ்கிறேன் மென்மேலும் பல சிறந்த படைப்புகளை வழங்க வேண்டும்.
//அச்சிறுவனின் படிப்பைத் தொடர வைத்தார். அந்தச் சிறுவன் ஓரளவிற்குப் படித்து இன்று அயல் நாட்டில் பணிபுரிந்து வருகிறான். இன்று அவன் குடும்பம் மிகவும் சிறந்த நிலையில், சிறப்பான வாழ்வு வாழ்//
ReplyDeleteஉண்மையிலே நெகிழ்வாகவும் பெருமையாகவும் இருக்குண்ணே...
கல்லாய் இருந்த உங்களை சிலையாய் செதுக்கிய திரு. நடராசன் ஐயா அவர்களை வணங்குகிறேன்....
இன்றைய பதிவைப் படித்து கருத்துக்களைப் பகிர்ந்துக் கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
ReplyDeleteகொஞ்சம் வேலை அதிகமாக இருக்கும் காரணத்தால் உங்கள் அனைவருக்கும் தனித்தனியாக நன்றி கூற நேரம் இல்லை நண்பர்களே.
பொருத்தருள்க.
அன்புள்ள சத்ரியன்,
ReplyDeleteஅசத்தியுள்ளீர்கள் பதிவில்.
அந்தக் கண்ணன் மாடு மேய்த்தவன். இந்தக்கண்ணன் ஆடு மேய்த்தவன். இப்போது புனித மேய்ப்பன்....
உங்களை ஆளாக்கிய அந்த புனிதருக்கு நெஞ்சம் சொல்கிறது நன்றி.... நன்றி.... நன்றி.... நன்றி....நன்றி....
ஆசிரியர் தினத்தையொட்டி அறப்பணி செய்யும் ஆசிரியர்களைப் பற்றிய அழகான அறிமுகங்கள். நானும் ஒரு சிற்றுலா வருகிறேன்.
மிக அழகாக என்னையும் அறிமுகப் படுத்தி உள்ளீர்கள்... என் மனமார்ந்த நன்றிகள் சத்ரியன்...
வாழ்த்துககள் சத்ரியன்
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்
ஆதிரா நன்றாக எழுதுறீங்க. இத்தனை அலங்காரங்கள் உங்கள் வலைதளத்திற்கு தேவையா?
ReplyDeleteஆசிரியர்களை ஞாபகம் வைத்து...அறிமுகம் என்று எங்கள் நட்பு வட்டத்தை விரிவாக்கிய அன்பான மாணவனுக்கு வணக்கம் ,வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி சிறப்பாய் அறிமுகம் செய்ததிற்கு!