Sunday, October 2, 2011

வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர்!




இன்று தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாள். அவருக்காக மகாகவி பாடிய ஒரு பாடல்:

வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க, வாழ்க!

வலைச்சரத்தில் எனக்கு இடப்பட்ட பணியினை நிறைவு செய்யும் பதிவு. கல்கி அவர்கள் ஓரிடத்தில், குழந்தை கையில் பலகாரத்தை வைத்துக் கொண்டு, சாப்பிடவும் ஆசை, சாப்பிட்டு முடித்த பின் தீர்ந்து விடுமே என்று அதற்கும் யோசனை என்று தவிப்பதாகக் கூறியிருப்பார்! இன்று சொல்லப் போகும் சில பதிவர்களையும் முதலிலே சொல்லாமல், இப்படித் தான் இறுதி வரை என் குறிப்புகளில் வைத்திருந்தேன்!

'நான் ஒரு எழுத்தாளனும் அல்ல, கவிஞனும் அல்ல, மொழி ஆர்வலனும் அல்ல ஆனால் நேர்மையாக வாழ துடிக்கும் ஓர் கிராமத்தான்...' என்று சொல்லித் தம் எழுத்தால் நம்மைக் கவர்ந்திழுக்கும் சங்கவி - அஞ்சறைப்பெட்டி என்று அவ்வப்போது உள்ளூரிலிருந்து உலகச் செய்தி வரை கலந்து கொடுப்பார்! மருத்துவக் குறிப்புகளும் உண்டு - இதோ வேப்பிலையைப் பற்றி!



மொக்கைகளும் பின்னே ஞானும் - என்றும் சொல்லிக் கொண்டு, நாம் மகிழ்வதைக் காட்டிலும், பிறரை மகிழ்விப்பதிலேயே அதிக மகிழ்ச்சி இருக்கிறது என்றும் சொல்பவர், ஜெய்லானி - பிளாக்-கின் பெரிய சந்தேகத்தைத் தீர்த்து வைப்பதிலாகட்டும், ஒரு மௌஸின் துணையோடு வாங்க பழகலாம்னு சொல்வதிலாகட்டும், சுவாரஸ்யமாக எழுதுகிறார்!

தம்மைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கு என்று மட்டும் சொல்லியிருக்கும் MANO நாஞ்சில் மனோ - அனைவருக்கும் அறிமுகமானவர்! இவரது பின்னூட்டங்களிலேயே உற்சாகம் தொற்றிக் கொள்ளும்! குடும்பத்தை விட்டு வெளிநாட்டில் வாழ்வோரின் உணர்வுகள் பற்றி இவர் பதிவுகளில் தெரிந்து கொள்ளலாம். சிரிப்பின் வகையில் யாரையாவது/எதையாவது விட்டு வைத்திருக்கிறாரா, பாருங்கள்! கி்ண்டல் பதிவுகள் தவிர, சில தகவல் களஞ்சியங்களும் அளிப்பார் - இதோ கன்யாகுமரி மாவட்டம் பற்றி!

நினைவில் நின்றவை என்ற வலைப்பூவில் எழுதும் கே.ஆர்.விஜயன் அவர்களும் சமூக அக்கறையுடன் பற்பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார். புற்றுநோய் பற்றிய அவர் விழிப்புணர்வுப் பகிர்வு இதோ! மருந்தால் தீராதது மந்திரத்தால் தீருமா எனற அவர் கேள்வி அனைவரின் மனதிலும் எழும்!

ரோஜாப்பூந்தோட்டம் -என்று தலைப்பையே அழகாக வைத்திருக்கும் பாரத்..பாரதி... (சொல்லாம விடலாமா?!) அரசியல் பதிவுகளையும் உள்ளூர ஓடும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லுநர். இதோ விஜயகாந்திற்கு ஒரு ஆலோசனை!

உயர்ந்த உள்ளங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பது வெற்றியன்று... போராட்டமே என்ற வாசகத்தோடு எழுதும் தமிழ் உதயம் - சிறுகதைகள், கட்டுரை என்று நன்றாக எழுதுகிறார். எங்கும் அமைதி..எதிலும் மகிழ்ச்சி, விவாகரத்து சரியா, தவறா போன்ற இவர் பதிவுகள் என்னைக் கவர்ந்தவற்றுள் சில.


குமரன் அவர்கள் எழுதும் தமிழ் வளர்ப்போம் என்ற வலைப்பூவில் பல தொழில்நுட்பத் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. Excel , pinnacle, இன்னும் விளையாட்டுக்கள் எனப் பல இடுகைகள்!
இன்றுடன் என் வானவில் பதிவர்களின் படடியல் வலைச்சரத்தில் நிறைவு பெறுகிறது! என்னைக் கவர்ந்த பதிவர்கள் இன்னும் உளர்! நாள்தோறும் வளரும் நம் பதிவர்களினால் இந்த எண்ணிக்கையும் நீளும்! நான் எனக்குப் பிடிதத ஏழு படிகள் வரை சொல்லியிருக்கிறேன்! ஆனால், இந்தப் படிகள் முடிவேயில்லாதது, இந்தப் படத்தைப் போல:
(வானவில்லின் கடைசி நிறமான சிவப்பு - உற்சாகத்தின் வெளிப்பாடாகும்! ஆசை, உற்சாகம், சக்தி, வெற்றி இவற்றைக் குறிக்கும் நிறமுமாகும்!)

என்னை இங்கே எழுத வைத்த வலைச்சர ஆசிரியர் குழுவுக்கு மறுபடி என் நன்றி! ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் நன்றி! குறை இருப்பின் மன்னித்து விடுங்கள்! நன்றி!

36 comments:

  1. தங்களின் வானவில்லில் அறிமுகப்படுத்திய ஒவ்வொரு பதிவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    வாழிய செந்தமிழ் வாழியவே..

    நன்றியுடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  2. @ சம்பத்குமார் - தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  3. அட எல்லாம் பரிச்சியம் உள்ள வலைத்தள அறிமுகங்கள், எல்லாருக்கும் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  4. என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி நன்றி நன்றி மாதவி....

    ReplyDelete
  5. ஜெயலானியை கொஞ்சம் போட்டு தாளிச்சிருக்க கூடாதா ஹே ஹே ஹே சந்தோஷமா இருந்துருக்கும் எனக்கு ஹி ஹி....

    ReplyDelete
  6. அருமையான அறிமுகங்கள்

    ReplyDelete
  7. எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. முதல் நாளில் இருந்து ஏழாம் நாள் வரை
    தலைப்பும் சரி முக உரையும் சரி
    தரமான பதிவர்களை அறிமுகப் படுத்திய விதமும் சரி
    மிக மிக அருமை
    சாமி பேரை வைக்கவேண்டும் என்பதற்காக கிராமங்களில்
    சிவப்பாக இருப்பவர்களுக்கு கருப்பசாமி என
    பெயர்வைத்துவிடுவார்கள் அப்படித்தான் நீங்களும்
    மிடில் கிளாஸ் மாதவி என பெயர் வைத்துள்ளீர்கள்
    உண்மையில் நீங்கள் சூப்பர் கிளாஸ் மாதவி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. கொலுவின் ஏழு படிகளும் சிறப்பாய் அமைந்தது.சிறந்த பணி அறிமுகமான அணைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்,

    ReplyDelete
  10. அன்பின் நாஞ்சில் மனோ - உங்களை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி சொல்லீட்டிங்க - சரி - எப்ப ஆசிரியப் பொறுப்பேற்று - மத்தவங்கள எப்ப அறிமுகப் படுத்தப் போறீங்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  11. நல்ல அறிமுகங்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. @ MANO நாஞ்சில் மனோ - உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!

    அடுத்த ஆசிரியர் நீங்களா? களைகட்டும்!!

    ReplyDelete
  13. @ suryajeeva - கருத்துக்கு நன்றி!

    ReplyDelete
  14. @ சே.குமார் - வாழ்த்துக்களுக்கு அனைவர் சார்பிலும் நன்றி!

    ReplyDelete
  15. @ Ramani - மிக்க நன்றி ஐயா! என் கணவரிடம் காட்டி பெருமைப்பட்டுக் கொண்டேன்!

    ReplyDelete
  16. மிடில் கிளாஸுன்னு பேரை வச்சுகிட்டு ஹை கிளாஸா எழுதி இருக்கீங்க :-))

    நான் போகும் இடங்கள்தான் இருந்தாலும் வித்தியாசமான அறிமுகம் :-))

    ReplyDelete
  17. @ கோகுல் - வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    ReplyDelete
  18. @ Rathnavel - வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  19. என்னையும் இந்த காந்தி தின நாளில் அறிமுகப்படுத்தியதுக்கு நன்றி..நன்றி..நன்றி... ((யாருய்யா அது அதுக்குள்ளே மைக்கை பிடுங்கரது)) ;)

    ReplyDelete
  20. @ ஜெய்லானி - கருத்துக்கு நன்றி!
    :-))

    ReplyDelete
  21. சிறப்பாகவே முடித்துள்ளீர்கள் இந்த வாரத்தை.! வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. //MANO நாஞ்சில் மனோ

    ஜெயலானியை கொஞ்சம் போட்டு தாளிச்சிருக்க கூடாதா ஹே ஹே ஹே சந்தோஷமா இருந்துருக்கும் எனக்கு ஹி ஹி.... //

    மக்கா...நல்ல வேளை என்னோட சமையல் குறிப்பை யாரும் பாக்கல..பாத்திருந்தா...ஹி..ஹி... -))).

    ReplyDelete
  23. //அன்பின் நாஞ்சில் மனோ - உங்களை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி சொல்லீட்டிங்க - சரி - எப்ப ஆசிரியப் பொறுப்பேற்று - மத்தவங்கள எப்ப அறிமுகப் படுத்தப் போறீங்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா //

    சீனா சார் , பயப்புள்ள திரும்பவும் காணாம போயிடப்போகுது ஹா..ஹா... :-))

    ReplyDelete
  24. வலைச்சரத்தில் அழகாக கலக்கிவிட்டீர்கள்... இன்றைய வலைச்சர அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. @ ஸ்ரீராம் - வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  26. @ மாய உலகம் - //வலைச்சரத்தில் அழகாக கலக்கிவிட்டீர்கள்...// மிக்க நன்றி!

    ReplyDelete
  27. கடந்த ஒரு வாரமாக அந்த வானவில் போலவே அழகழகாக வர்ண ஜாலங்கள் வார்த்தை ஜாலங்களில் வலைச்சரத்தை ஒரு கலக்குக் கலக்கிவிட்டீர்கள்.

    இன்று புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டவர்களுக்கு [ஏற்கனவே நல்ல அறிமுகமானவர்களை அடையாளம் காட்டியுள்ளதற்கு] என் அன்பான வாழ்த்துக்கள்.

    தங்களின் சிறப்பான/கடுமையான ஒரு வார பணிகளுக்குப் பாராட்டுக்கள்.

    அன்புடன் vgk

    [மி.கி.மா
    என்றால்

    ”மிகவும்

    கிளர்ச்சியூட்டும் விஷயஞானம் கொண்ட

    மாதவி”

    என்று அறிந்து கொண்டோம்]

    ReplyDelete
  28. தங்கள் பதிவில் சேர்த்துக்கொண்டமைக்கு மிக்கநன்றி உங்கள் சேவைதொடர வாழ்த்துக்கள்.

    அன்புடன்.
    குமரன்

    ReplyDelete
  29. காந்தி பிறந்த நாளில் அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    நிறைவான ஹை-கிளாஸ் பணிக்குப் பாராட்டுக்கள்

    ReplyDelete
  30. @ வை. கோபாலகிருஷ்ணன் - ரொம்பப் புகழ்கிறீர்கள்!

    நான் மிடில் கிளாஸ் மாதவியாகவே இருந்து விட்டுப் போகிறேன் - நீங்கள் சொன்னது மி.கி.வி.கொ. மாதவி என்று வரும்! கினா வேறு சரிப்படவில்லை!

    உங்கள் ஊக்கத்துக்கு மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
  31. @ kumaran - தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  32. @ இராஜராஜேஸ்வரி - //நிறைவான ஹை-கிளாஸ் பணிக்குப் பாராட்டுக்கள்// ஆகா, நீங்களும் ரொம்பப் புகழறீங்க. :-))

    நன்றி!

    ReplyDelete
  33. ரசித்து படித்தேன் மாதவி....

    எங்கும் பாரதியின் கைப்பிடித்து ஏழு நாட்களும் வலைச்சரம் வலம் வந்து பதிவர்களை புதுமையாக அறிமுகம் செய்து காந்தியின் சிறப்பு நாளான இன்று காந்தியை நினைவு கூர்ந்து நாட்கள் போனதே தெரியாம சுவாரசியமா இருந்ததுப்பா....

    சிகப்பு கலரா இன்று... அருமைப்பா...

    அன்பு வாழ்த்துகள் மாதவி...

    அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பு வாழ்த்துகள்..

    அட மனோ :)

    ReplyDelete
  34. அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்....

    ReplyDelete
  35. நன்றி மாதவி....அறிமுகம் செய்யப்பட்ட பதிவர்களுக்கும் வாழ்த்துகள்....

    ReplyDelete
  36. நான் இப்போழுது அதிகமாக ப்ளாக் பக்கம் வருததில்லை என்றாலும் என்னையும் ஞாபகம் வைத்து எழுதியதை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். நன்றி.

    ReplyDelete