இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற சகோதரி மிடில் கிளாஸ் மாதவி, ஏழுஇடுகைகளில் 50 பதிவர்களையும் 93 இடுகைளையும் அறிமுகப்படுத்தியும் - சுய அறிமுகத்தில் தன்னுடைய 19 இடுகைகளையும் அறிமுகப்படித்தியும் - முன்னூறுக்கும் மேலாக மறுமொழிகள் பெற்றுமிருக்கிறார்.
இவர் ஒவ்வொரு அறிமுக இடுகையிலும் ஒரு அழகான முன்னுரையும் - அதற்கேற்ற படமும் இட்டு பின்னர்தான் அறிமுகங்களைத் துவங்கி இருக்கிறார். அறிமுகப் படுத்தப்பட்ட இடுகைகள் புதியவை. இவ்வாறாக தான் ஏற்ற பொறுப்பினை - சரி வர நிறைவேற்றி, மன நிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.இவருக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகள் கூறி, வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.
நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் சகோதரி திருமதி பி.எஸ்.ஸ்ரீதர்.
இவரது இயற்பெயரை விடுத்து - இவரது பெற்றோர் இவரை ஆச்சி என்றே அழைப்பதால், அவர்கள் அழைப்பது போல எண்ணி ஆச்சி ஆச்சி என்று இவரது பதிவிற்கு தலைப்பும் வைத்துக் கொண்டிருக்கிறார். இவர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிக்கல் என்ற ஊராட்சியை சேர்ந்தவர். டிப்ளமோ இன் எலக்ட்ரானிக்ஸ் படித்தவர்.திருமணத்திற்கு பின் ஹரியானா மாநிலத்தில் கணவர் மற்றும் நாலரை வயது மகளுடன் வசிக்கின்றார்.தற்போழுது ஹரியானா வந்து ஆறுவருடங்களாகிறது.குடும்பத் தலைவியாக இருக்கும் இவர் கிடைக்கும் நேரங்களில் பதிவுகள் எழுதியும் மற்றவர்கள் பதிவுகளை படித்தும் வருகின்றார்.
சகோதரி திருமதி பி.எஸ்.ஸ்ரீதரை வருக ! வருக என வரவேற்று அறிமுகங்களைத் தருக ! தருக ! என வேண்டி - வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் மிடில் கிளாஸ் மாதவி
நல்வாழ்த்துகள் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர்
நட்புடன் சீனா
சோதனை மறுமொழி
ReplyDeleteசிறப்பான வாரமாக அமைய வாழ்த்துக்கள், புதிய ஆசிரியருக்கு.
ReplyDeleteவருக வருக வருக !
ReplyDeleteஎன்று பேரன்புடன் அழைக்கின்றோம்.
vgk
ஆச்சி வாரம் அசத்தல் வாரமாக வாழ்த்துக்கள்!
ReplyDeleteஆசிரியர் ஆச்சியின் வாரம் சிறப்புற்றிருக்க என் வாழ்த்துக்கள்
ReplyDeleteநட்புடன்
சம்பத்குமார்
சீனா சார் அவர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
ReplyDelete@மிடில் கிளாஸ் மாதவி
மிக்க நன்றி
@வை.கோபலகிருஷ்ணன் சார்
மிக்க நன்றி
@கோகுல்
@சம்பத்குமார்
மிகுந்த நன்றிகள்
”திருமதி பி.எஸ். ஸ்ரீதர்” என்றவுடன்
ReplyDeleteஎங்கோ கேள்விப்பட்ட பெயராக உள்ளதே யாராக இருக்கும்? என்று சற்று நேரம் தலையைப் பிய்த்துக் கொண்டேன்.
பிறகு நம் மதிப்புக்குரிய சீனா ஐயா அவர்களின் முழு விபரங்களையும் படித்துப்பார்த்தேன்.
அடடா, நம்ம ’சிக்கல்’காரர் அல்லவா!
ஜில் ஜில் ரமாமணியல்லவா!! என்று நினைத்து பெரு மகிழ்ச்சியடைந்தேன்.
தங்களின் வலைச்சர ஆசிரியர் பணி மிகச்சிறப்பாக அமைய என் அன்பான வாழ்த்துக்கள்.
மிகச்சிறப்பாகச் சேவை செய்துவிட்டு வெற்றியுடன் வெளியேறும் திருமதி மி.கி.மாதவி அவர்களையும் மனதார பாராட்டி அன்புடனும், நன்றியுடனும் வழியனுப்புகிறோம்.
vgk
வானவில்லின் ஏழு வண்ணமாய் தனது ஏழு நாட்களையும் சிறப்பாக செய்து முடித்த அன்பு சகோதரி மிடில்கிளாஸ்மாதவி அவர்களுக்கு நன்றிகள் பல...
ReplyDeleteஅடுத்து வரும் ஆசிரியர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் அவர்களை அன்போடு வரவேற்கிறேன். வருக வருக, படைப்புகளை அள்ளித்தருக.
ஆச்சி வாரம் அசத்தல் வாரமாக வாழ்த்துக்கள்!
ReplyDeleteவானவில்லின் ஏழு வண்ணமாய் தனது ஏழு நாட்களையும் சிறப்பாக செய்து முடித்த அன்பு சகோதரி மிடில்கிளாஸ்மாதவி அவர்களுக்கு நன்றிகள் பல...
ReplyDeleteஅடுத்து வரும் ஆசிரியர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் அவர்களை அன்போடு வரவேற்கிறேன். வருக வருக, படைப்புகளை அள்ளித்தருக.
இனிதான வரவேற்பும் வாழ்த்துக்களும் ஆச்சி :-))
ReplyDelete@மகேந்திரன்
ReplyDelete@மாய உலகம்
@ராஜி
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றிகள்
திரு சீனா அவர்களுக்கு நன்றி!
ReplyDeleteஅன்பு தெரிவித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!
ஆசிரியர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் அவர்களுக்கு வந்தனம். வாழ்த்துக்கள்!
காத்திருக்கிறோம்
ReplyDeleteநல்வாழ்த்துகள் மிடில் கிளாஸ் மாதவி
ReplyDeleteநல்வாழ்த்துகள் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர்