Saturday, October 15, 2011

புறாவும் பூவும் – ஒரு குட்டிக் கதை:

 

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் குட்டிக்கதைகள் படிக்க நன்றாக இருக்கும்.  அப்படி ஒரு குட்டிக் கதையுடன் இன்றைய அறிமுகங்களைப் பார்க்கலாம். முதலில் கதை...

 

 

ஒரு பக்தன் அழகான  மண்டபம் ஒன்றைக் கட்டினான்.  அது எண்கோண வடிவில் இருந்தது.  அதன் எட்டுப் பக்கச் சுவர்களிலும் நிலைக் கண்ணாடிகள் பதித்திருந்தான்.  எந்த உருவமும் எந்தத் திசையில் பார்த்தாலும் தெரியும்படி அமைக்கப்பட்டிருந்தது. 

 

மண்டபத்தின் நடுவே அழகான ஒரு மலரைக் கொண்டு வந்து வைத்தான் பக்தன். அழகான மலர், எட்டுப் பக்கங்களிலும் எட்டு மலர்களாகத் தோற்றம் அளித்தது. அவன் கதவை மூடுமுன் அந்த மண்டபத்துக்குள் சிறு வெண்புறா ஒன்று நுழைந்து விட்டது.  அது கண்ணாடியில் தனது பிம்பத்தைப் பார்த்தது. 

 

கண்ணாடியில் தெரியும் பிம்பத்தையே உண்மை என்று எண்ணி அதை நோக்கிப் பாய்ந்து பறந்தது.  எட்டு திசைகளிலும் அது மாறி மாறிப் பறந்தது.  கண்ணாடியில் மோதிற்று.  ஆனால் அந்தப் பறவையால் வெளியேற முடியவில்லை. 

 

கடைசியில் புறா சோர்ந்து போய்த் தரையில் விழுந்தது.  அதன் அருகே இருந்த அழகான மலரை அது அப்போது தான் பார்த்தது.  அந்த இடத்தில் அதுவே உண்மை என்பதை உணர்ந்து கொண்டது. 

 

வாழ்க்கையில் அந்தப் புறாவைப் போலவே, நாம் மாய நிழல்களைத் தேடி அலைகிறோம்.  நமக்குள்ளேயே இருக்கும் இறைவனை நாம் உணருவதில்லை. வாழ்க்கையில் தோல்விகளை அடைந்து, மனம் சலித்துப் போய் விழும் வேளையில் நிதர்சனமான உண்மை எது என்பதை உணருகிறோம்.”

 

என்ன கதை படிச்சீங்களா?  கதையில் சொன்ன புறா மாதிரி இருக்காம இருக்க முயற்சிப்போம். சரி இன்றைக்கான அறிமுகங்களைப் பார்க்கலாமா?

 

 

 

நாய்க்குட்டின்னா இவருக்கு ரொம்பவே பிடிக்கும் போல.  அதனால அவரோட வலைப் பூவின் பெயரை ”செல்ல நாய்க்குட்டி” என்று வைத்துக்கொண்டு நிறைய பதிவுகள் எழுதுகிறார் ஒரு சகோ.  அவருடைய “எண்ணச் சிதறல்கள்” தொடர் நன்றாக இருக்கிறது. 


எழுச்சியூட்டும் கவிதைகள் படிக்க வேண்டுமா.  நீங்கள் செல்ல வேண்டிய இடம் அம்பாளடியாள் அவர்களின் வலைப்பக்கத்திற்கு.

மலர்களை நாம் எதற்குப் பயன்படுத்துவோம்இறைவனை பூஜிக்க, கார்குழலில் சூடிக்கொள்ள. அல்லது விழாக்களில் அலங்காரங்கள் செய்ய.  ஆனால் அவற்றுக்கு மருத்துவ குணமும் உண்டு என்பதை தன்னுடைய இப்பகிர்வில் சொல்லி இருக்கிறார் பதிவர் M.R. 


பெரும்பாலும் சினிமா சார்ந்த பதிவுகள் அதிகமாய் இருக்கும் வலையுலகில் அறிவியல் சார்ந்த பதிவுகள் மிகவும் குறைவே.  அதிலும் தமிழில் நமக்குப் புரியும் படி அறிவியல் சார்ந்த விஷயங்களைஅறிவியல் கருத்துகளை தமிழில் அளிக்கும் முயற்சிஎன எழுதுகிறார் நண்பர் ராஜசங்கர் "தமிழில் அறிவியல்" என்ற வலைப்பூவில்.


முனைவர் இரா. குணசீலன் தமிழ்க் காற்று  என்று ஒரு புதிய வலைத் திரட்டியை ஆரம்பித்து உள்ளார்இதில் இலக்கியக் காற்று வீசும் இணையதளங்கள் பலவற்றை திரட்டித் தருகிறார்.  இது ஒரு நல்ல முயற்சி.  நீங்களும் சென்று பாருங்க

இலங்கையிலிருந்து எழுதும் சகோ தன்னுடைய நெருங்கிய நண்பருக்கு, அவருக்கு உதவி தேவைப்படும்போது செய்யமுடியாது போன ஒரு நிகழ்வினைமன்னித்து விடு என் இனிய நண்பாஎன்று உருக்கமாகக் கூறியிருக்கிறார் இங்கே.  

வங்கிப் பணியிலிருந்து விருப்ப ஓய்வுப் பெற்று இணையத்திலும் பத்திரிக்கைகளிலும் எழுதிக் கொண்டு இருப்பவர் காஞ்சனா ராதாகிருஷ்ணன். அவரின் சிறுவர் உலகத்தில்  நீதிக்கதைகள் என்று நிறைய பகிர்ந்து வருகிறார்.  இவை குழந்தைகளுக்கு மட்டுமல்ல, நம்மைப் போன்று வளர்ந்த குழந்தைகளுக்கும் நிச்சயம் உதவும்.  படித்துப் பயன்பெறுங்க.


இன்றைக்கு ஏழு பதிவர்களைப் பற்றிப் பார்த்திருக்கிறோம்.  நாளை ஞாயிறு அன்று  இந்த வலைச்சர வாரத்தில் என்னுடைய கடைசி பகிர்வு.  நாளை சந்திப்போமா!

நட்புடன்

ஆதி வெங்கட்

38 comments:

  1. சோதனை மறுமொழி....

    ReplyDelete
  2. நல்ல கதையோடு .. தெளிவான அறிமுகங்கள் ..வாழ்த்துகள் சகோ....

    ReplyDelete
  3. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. புறாக்கதை அருமை... நாம் நிறைய நேரங்களில் புறாவைப்போல் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்... மாற்ற முயற்சிப்போம்.. பகிர்வுக்கு நன்றி.. வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. அருமையான அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  7. தமிழில் அறிவியல் புதியவர் .நல்ல அறிமுகம்.அணைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  9. புறாக் கதை அருமை.
    ரோஜா பூ அருமை.
    அறிமுகங்கள் சிலர் தெரிந்தவர்கள், சிலரை படிக்கிறேன். எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. அருமையான கதை சகோ

    என்னை அனைவரும் அறிய செய்தமைக்கு நன்றி சகோ

    மற்ற அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. சுவாரசியமான குட்டிக்கதையோடு அருமையான அறிமுகங்கள்.வாழ்த்துக்கள் ஆதி.

    ReplyDelete
  12. சிறுவர் உலகம் வலைக்கும் டோராவுக்கும் சம்பந்தம் உண்டா? கண்டுபிடித்து விட்டேன்.

    ReplyDelete
  13. @ பத்மநாபன்: நன்றிங்க சகோ.

    ReplyDelete
  14. @ கலாநேசன்: நன்றிங்க.

    ReplyDelete
  15. @ thirumathi bs sridhar: நன்றிப்பா.

    ReplyDelete
  16. @ மாய உலகம்: நன்றிங்க.

    ReplyDelete
  17. @ வைரை சதிஷ்: நன்றிங்க.

    ReplyDelete
  18. @ கோகுல்: நன்றிங்க.

    ReplyDelete
  19. @ middleclassmadhavi: நன்றிங்க.

    ReplyDelete
  20. @ கோமதி அரசு: நன்றிம்மா.

    ReplyDelete
  21. @ M.R: நன்றிங்க.

    ReplyDelete
  22. @ ராம்வி: நன்றிங்க.

    ReplyDelete
  23. @ NIZAMUDEEN: சம்மந்தம் இல்லை.
    நன்றிங்க.

    ReplyDelete
  24. இந்தக் கதையில் வருவதுபோல நான் பணியாற்றும் அலுவகத்தில் இப்படித்தான் ஒரு குயில் உள்ளே வந்து கண்ணாடியில் மோதி இறந்து போனது. அன்று முழுவதும் எனக்கு மனநிலை சரியில்லாமல் போய்விட்டது. மேலும், ஸ்ரீவில்லிப்புத்தூரில் கண்ணாடி மண்டபம் ஒன்று உள்ளது. அதன் ஞாபகமும் வந்தது.தங்கள் அறிமுகங்கள் அருமை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  25. நல்ல கதை கூறினீர்கள்.

    சில தெரிந்தவை சில புதியவை.

    அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. அருமையான கதைக்கும் அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  27. அருமையான கதைக்கும் அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். vgk

    ReplyDelete
  28. குட்டிக்கதை அருமை.அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  29. அருமையான அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  30. வலைச்சரத்தில் தங்கள் பதிவில் என் சிறுவர் உலகம் வலைப்பூ பற்றி எழுதியமைக்கு நன்றி

    ReplyDelete
  31. @ சித்திரவீதிக்காரன்: தாங்கள் கூறிய சம்பவம் எனக்கும் மனதை வாட்டியது.

    நன்றிங்க.

    ReplyDelete
  32. @ மாதேவி: நன்றிங்க.

    ReplyDelete
  33. @ இராஜராஜேஸ்வரி: நன்றிங்க.

    ReplyDelete
  34. @ வை.கோபாலகிருஷ்ணன்: நன்றி சார்.

    ReplyDelete
  35. @ ராஜி: நன்றிப்பா.

    ReplyDelete
  36. @ மகேந்திரன்: நன்றிங்க.

    ReplyDelete
  37. @ Kanchana Radhakrishnan: நன்றிங்க.

    ReplyDelete
  38. தமிழ்க் காற்றை அறிமுகம் செய்து வைத்தமைக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete