Sunday, October 16, 2011

வானவில்லின் ஏழாம் வண்ணம்



வலைச்சர ஆசிரியராக நான் பொறுப்பேற்று கடந்த ஆறு நாட்களாக உங்களுடன் என்னுடைய பயணம் நல்லவிதமாய் சென்று கொண்டிருக்கிறது.  இன்று இந்த வலைச்சர அனுபவத்தின் கடைசி நாள்.  வானவில்லைசூல் கொண்ட மேகங்களின் ஏழுவரிக் கவிதைஎன்று விமர்சிக்கிறார் ஒரு கவிஞர். வலைப்பூக்கள் எனும் மேகத்திலும் எண்ணிலடங்கா பூக்கள்...  அவற்றில் சிலவற்றை கடந்த ஆறு நாட்களில் பகிர்ந்திருக்கிறேன்.  ஏழாம் நாளான இன்று இன்னும் சிலவற்றைப் பார்ப்போம்.


ஹரிதாஸ் என்ற இயற்பெயர் கொண்டவர், புதுவை சந்திரஹரி என்ற பெயரில் வலைப்பூ ஒன்று வைத்திருக்கிறார்.  பிரபல வார மாத இதழ்களில் வெளிவந்த நூற்றுக்கும் மேற்பட்ட இவரது சிறுகதைகளும், ஒரு பக்கக் கதைகளும் புத்தகங்களாய் வெளிவந்து இருக்கின்றன.  இவரது சில கதைகளை தனது வலைப்பூவில் வெளியிட்டிருக்கிறார்.  படித்து இன்புற இங்கு செல்லுங்கள்.

ஸ்ரீரங்கத்தினைச் சேர்ந்த ரிஷபனுக்கு சிறுகதைகள் எழுதுவது கைவந்த கலை. அதுவும் மனதைத் தொடும்படி எழுதுவதில் இவருக்கு நிகர் இவரே. ஞாபகம் என்ற சிறுகதையில் தனது அம்மாவை நினைத்து, தன்னைத் தானே கேட்டுக் கொள்ளும் கேள்வியைப் பாருங்கள் ...


உன்னை ஞாபகம் வச்சிருக்க மாதிரி... என்னை வச்சிருக்க மனுஷாள நான் சேர்த்திருக்கேனாம்மா....’

அந்தக் கேள்வி பிரும்மாண்டமாய் என் எதிரில் நின்று கேலிப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தது.
தற்போது பெங்களூருவில் வசிக்கும் தேசிகன் சுஜாதாவின் பரம ரசிகர். தன்னுடைய பெயரையே சுஜாதா தேசிகன் என்று வைத்துக் கொள்ளும் அளவிற்கு!  அவரது கட்டுரைகள் சுவையாக இருக்கும்.  அவ்வப்போதுதான் எழுதுகிறார்.  இருந்தாலும் நன்றாக எழுதுகிறார்.  அவரது இந்தக் கட்டுரையை வாசித்துப் பாருங்கள்.

ராஜராஜ சோழன் என்ற புத்தகம் எழுதியுள்ள திரு .. கண்ணன் அவர்களது வலைப்பூவில் சமீபத்தில் சுஜாதாவின் "தோரணத்து மாவிலைகள்" புத்தகத்தில் புதிய எழுத்தாளர்களுக்கு சுஜாதா கொடுத்த 11 யோசனைகளைப் பகிர்ந்துள்ளார்.  மிக நல்ல யோசனைகள்பாருங்களேன்

உள்ளுவதல்லாம் உயர்வுள்ளல் என்று தனது "சிதறல்கள்" பக்கத்தில் சொல்லும் தீபா 2008-ஆம் ஆண்டிலிருந்து தனது வலைப்பக்கத்தில் எழுதிக் கொண்டு இருக்கிறார்.  அவரது கவிதைகள் எனக்குப் பிடித்திருந்தது.  அதிலிருந்து ஒரு சாம்பிள்...

வாத்தும் மீனும்...

குட்டை வற்றி மூச்சு முட்டியது
வெளியேறிய வாத்துக்கோ
கரையின் வெம்மை பொசுக்கியது
நீரின்றியமையாத மீனோ சேற்றுக்குள் அமுங்கியது
வட்டமிடும் கழுகுக்கும் மீன்பிடி வலைகளுக்கும்
இரண்டுமே இரையல்ல, உயிர் தானென்பது புரியுமா?

"வளர்ச்சிப் படிகள்"என்ற தலைப்பில் தனது மகளின் வளர்ச்சி பற்றி எழுதிக் கொண்டு வரும் மித்ரா அம்மா அக்டோபர் 2010-லிருந்து எழுதிக் கொண்டு வருகிறார்.  நன்றாக இருக்கிறது இவரது என் அன்பு மித்ரா!!!  பக்கம்.

விழுகின்ற மழைத் துளிகளில் ஒரு துளியையேனும் உள்ளங்கையுள் சேமித்து வைக்க துணிகின்றேன்...” என்று சொல்லும் இளங்கோ கோவையைச் சேர்ந்தவர்.  தான் எடுத்த புகைப்படங்கள், படித்த கவிதைகள் என்று பல விஷயங்களைத் தன்னுடைய பக்கத்தில் பகிர்ந்து கொள்கிறார் இவர்.  ஏற்காட்டில் எடுத்த புகைப்படங்களை இந்தப் பக்கத்தில் பாருங்கள்.

இந்த தலைமுறையினை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று சொல்லும் அருணா ஜெய்பூர் மாநில பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியை.  ’’எப்போதும் நானாக இருப்பது! அதுவே என் பலமும் பலவீனமும்!’’ என்று சொல்லும் அன்புடன் அருணா.   நான் தொடர்ந்து படிக்கும் வலைப்பூக்களில் ஒன்று.

கடந்த ஏழு நாட்களில் எனக்குக் கொடுத்த பணியினை செவ்வனே செய்து முடித்திருக்கிறேன் என எண்ணுகிறேன்.  முடிந்தவரை புதிய பதிவர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற காரணத்தினால் என் நட்பு வட்டத்தில் எல்லோரையும் அறிமுகப்படுத்த முடியவில்லை – அவர்கள் தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்ற தைரியத்தில்…

இந்த நாளில் எனக்கு இந்த ஆசிரியர் வாய்ப்பினை அளித்த சீனா ஐயா அவர்களுக்கும், அதற்குக் காரணகர்த்தாவான திரு வை. கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இந்த ஏழு நாட்களில் எனக்குத் தொடர்ந்து ஆதரவு தந்த அனைத்து வலைச்சர வாசகர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கு நன்றி. கண்டிப்பாக நன்றி சொல்லி ஆகவேண்டிய இன்னுமொரு முக்கிய நபர்வேற யாரு இந்த ஏழு நாட்களிலும் எந்தத் தொந்தரவும் தராத என் பொண்ணுதான்! 


டோராவின் ரகசியம்

ஒவ்வொருவரும் டோராவின் படத்தை வலைச்சரத்தில் இட்டதற்கானக் காரணத்தை யோசித்து வைத்திருப்பீர்கள். எதிர்பார்ப்புடன் காத்திருப்பீர்கள். இந்த ஒரு வாரமும் அம்மா வலைச்சர ஆசிரியராகவும், அப்பா தமிழ்மண நட்சத்திரமாகவும் இருந்ததால் பெரும்பாலான நேரத்தை கணினிக்கே செலவிட்டுக் கொண்டிருந்தோம். மகள் ரோஷ்ணிக்காக ஒதுக்கும் நேரம் குறைவாகிவிட்டது. அப்படியிருந்தும் எங்களைப் படுத்தாமல் சமர்த்தாக இருந்ததற்காக ரோஷ்ணிக்கு மிகவும் பிடித்த டோராவின் படத்தை தினந்தினம் பகிர்ந்தேன். கைக்குட்டை முதல் பென்சில் பாக்ஸ் வரை எல்லாவற்றிலும் டோரா படம் வேண்டும் என்பாள். இப்ப என்ன சொல்றீங்க, “அட என்னன்னமோ யோசிச்சோமே… அதெல்லாம் புஸ்ஸுன்னு போயிடுச்சே!” என்று சொல்றீங்களா? :)))))))


மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

ஆதி வெங்கட்.

30 comments:

  1. சோதனை மறுமொழி.....

    ReplyDelete
  2. அருமையன அறிமுகங்கள் நன்றிகள்....

    ReplyDelete
  3. சிறப்பான அறிமுகங்கள். முதல் மூவருக்கும் அவரவர் பிளாக்கின் லிங்கை ஹைலைட் செய்யுங்கள் சகோ.

    ReplyDelete
  4. சமையலுக்கு இத்தனை தளங்கள் இருக்குன்னு இங்க வந்த பிறகுதான் தெரிஞ்சுது. நன்றி.(உங்களின் முந்தைய பதிவுகள்)

    சோம்பேறி ஆகிட்டேன்.சமைப்பதே இல்ல..ஹோட்டல் சாப்பாடுதான் தினமும்.இதெல்லாம் பார்க்கும்போது மீண்டும் சமைக்கலாமோன்னு தோன்ற வைத்துள்ளது.

    பொதுவா சமையல் பற்றிய பதிவுகளை படிக்க மாட்டேன்.இப்ப கொஞ்சம் படிக்க ஆரம்பித்துள்ளேன்.

    இன்னிக்காவது சமையல் இல்லாத பதிவுகளை போட்டீங்களே!!! நன்றிகள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. @ ♔ம.தி.சுதா♔: நன்றிங்க.

    ReplyDelete
  6. @ கலாநேசன்: சுட்டி காட்டியதற்கு நன்றிங்க. எல்லாவற்றுக்குமே ஹைலைட் செய்தாச்சு.

    நன்றி.

    ReplyDelete
  7. @ மழை: நன்றிங்க.

    ReplyDelete
  8. அறிமுகங்களுக்கு நன்றி.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    சமர்த்தாக இருந்த ரோஷ்ணிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. இந்த ஒரு வார வலைச்சர ஆசிரியர் பொறுப்பினை, மிக அழகாகச் செய்து முடித்துள்ள தங்களுக்கு என் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    அறிமுகம் செய்யவதாக அடையாளம் காட்டப்பட்டுள்ள ஜாம்பவான்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.

    என் எழுத்துலக வழிகாட்டியும், என் நலம் விரும்பியும், என் எழுத்துலக மானஸீக குருநாதருமான திரு. ரிஷபன் ஸ்ரீனிவாஸன் அவர்களையும் தாங்கள் சுட்டிக்காட்டியுள்ளது எனக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தருகிறது. அதற்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  10. அருமையான் அறிமுகங்கள் ஆதி.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    உங்களுக்கு இட்ட பணியினை சிறந்த முறையில் செய்து முடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. கொடுத்த பொறுப்பை சிறப்பாக செய்து முடித்துள்ளீர்கள்.. வாழ்த்துகள்

    ReplyDelete
  12. ஆதி, பொறுப்பை ஏற்றுக் கொண்டு சிறப்பாய் முடித்தற்கு வாழ்த்துக்கள்.

    நல்ல பதிவர்களை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.

    சிறப்பாய் செய்ய இடையூறு செய்யாமல் இருந்த ரோஷ்ணிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. இன்று விடைபெறும் உங்களுக்கு வாழ்த்துகள்.
    தினமும் டோரா பயணம் செய்தாள்,இன்று பயணம் நிறைவடைகிறது என்று கூட சொல்லாமல் ஏமாத்திடீங்களே.எப்படியோ ரோஷ்ணி சந்தோசப்பட்டாள் சரி.அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. அடையாளம் காட்டிய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.நான் ரிஷபன் சாரின் எழுத்திற்கு தீவிர ரசிகை.அவரை குறிப்பிட்டது மகிழ்ச்சி.

    ReplyDelete
  15. என்னையும் சுட்டியதற்கு நன்றி.. என் மேல் அன்பு காட்டும் உள்ளங்களுக்கு வேறென்ன சொல்ல.. இதயம் நெகிழ்ந்த நன்றியைத் தவிர.

    ReplyDelete
  16. ஆஹா நன்றி! நன்றி!
    அருமையா தொடுத்திருக்கீங்க1

    ReplyDelete
  17. அழகிய ஏழு ஸ்வரங்களாய்
    பதிவுகள் இட்டு செவ்வனே பணிமுடித்த
    சகோதரிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.

    ReplyDelete
  18. மாதேவி: நன்றிங்க. ரோஷ்ணிக்கு சொல்லிடறேன்.

    ReplyDelete
  19. @ வை.கோபாலகிருஷ்ணன்: நன்றி சார்.

    ReplyDelete
  20. @ ராம்வி: நன்றிங்க.

    ReplyDelete
  21. @ பத்மநாபன்: நன்றிங்க சகோ.

    ReplyDelete
  22. @ கோமதி அரசு: நன்றிம்மா. ரோஷ்ணிகிட்ட சொல்லிடறேன்.

    ReplyDelete
  23. @ thirumathi bs sridhar: நன்றிப்பா.

    ReplyDelete
  24. @ ராஜி: நன்றிப்பா. நாங்களும் ரிஷபன் சாரின் எழுத்திற்கு ரசிகர்கள் தான்.

    ReplyDelete
  25. @ ரிஷபன்: நன்றி சார். தங்களை குறிப்பிட எனக்கு வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  26. @ அன்புடன் அருணா: நன்றிங்க.

    ReplyDelete
  27. @ மகேந்திரன்: நன்றிங்க.

    ReplyDelete
  28. எனது பதிவையும் பாராட்டி எழுதியமைக்கு என் அன்பு நன்றிகள்.

    ReplyDelete
  29. அறிமுகத்திற்கு மிக்க நன்றி ஆதி. ரோஷினிக்கு எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  30. நன்றி ஆதி வெங்கட்!

    ReplyDelete