வணக்கம்.
இந்த வார வலைச்சர ஆசிரியர் வாய்ப்பை எனக்களித்த மதிப்பிற்குரிய திரு.சீனா
சாருக்கு எனது வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வாய்ப்பிற்கு என்னைப் பரிந்துரை செய்த திரு கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
இந்த வலைப்பதிவில் நான் காலடி வைக்க காரணமாக இருந்த வித்யா சுப்ரமணியம் மேடத்திற்கும், முதன் முதலாக எனக்கு ஊக்கமளித்த திரு கோபி அவர்களுக்கும், பதிவுலகில் நட்பு பாராட்டி உதவும் திரு எல் கே,திரு ரமணி, திரு, ஆர்விஎஸ், திரு ரிஷபன் திரு வெங்கட் நாகராஜ், திரு சி பி செந்தில்குமார், தோழி ஆச்சி, ஆதி, மற்றும் தொடர்ந்து பின்னூட்டம் மூலம் ஊக்கமளிக்கும் திருமதி சாகம்பரி,லக்ஷ்மிமா,மாதவி,அமைதிச்சாரல்,ராமலக்ஷ்மி,இராஜராஜேஸ்வரி ,அப்பாவி,மனோ மேடம்,சித்ரா, திரு நாஞ்சில் மனோ மற்றும் திரு ரத்னவேல் அவர்களுக்கும், இன்னும் எனக்கு ஊக்கம் தரும் பலருக்கும் இந்த வாய்ப்பைச் சமர்ப்பிக்கிறேன்.
இனி என் 'பயோடேட்டா' தான்..
வாழ்க்கையில் எப்பொழுதும் எல்லோருக்கும் ஏதோ ஒன்றைக் கற்கும் சந்தர்ப்பங்கள் அமைந்து கொண்டேதான் இருக்கின்றன.சமயத்தில் படித்தும்,
சமயத்தில் கேள்வி வழியாகவும் அறிகிறோம்.இந்த கருத்தை மையமாகக் கொண்டே எனது பதிவு "கற்றலும் கேட்டலும்" என மலர்ந்தது.
நான் கற்று, கேட்டவைகளையும் அறிந்தவைகளையும் பகிர எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு இது.
எப்பொழுதுமே எனக்கு கவிதையின் பால் இருக்கும் ஈடுபாட்டின் காரணமாக
நான் எழுத ஆரம்பித்த காலங்களில் முதன் முதலாக எழுதிய கவிதையை
எனது வலைப்பூவில் 'காயென நினைத்தேன்' என்று பதிவிட்டேன்.
நாம் 'அன்பு செய்வோம்' என்று கூறி 'அத்யயனம்' செய்யவும் சொல்லியிருந்தேன்.
அது மட்டும் போதாதென்று ஆரோக்கியம் பற்றி 'குருதியில் உறுதி வேண்டும்' என ரத்த நோய் பற்றியும் அதனால் துன்புறுபவர்களுக்கு உதவுமாறும் கேட்டிருந்தேன்.'தமிழ் மடி' யில் தவழும் நான் 'பிராணாயமத்தின்' அவசியம்
உணர்த்தினேன்.
'கிராமத்துக் காற்று' கிடைக்காத வருத்தத்தில் 'ஈர மனதுடன்' 'அலமேலுவின் அட்டஹாசங்கள்' பகிர ஆரம்பித்தேன். நடுவில் 'சோளிங்கரும் கணுப்பிடியும்'
கொண்டாடி 'தவிப்புடன்' 'நினைவாஞ்சலி' செலுத்தினேன்.'துக்கடா'க்கள் எழுதும் என்னை பதிவுலகில் சிலர் நட்பாய் 'லாஜி' என்று அழைப்பார்கள்.
'அம்பேத்காரும் நானும்' ஒருமுறை சேர்ந்து வந்தோம்.பின்னர் இந்த 'ராஜபாளையம் ராஜி' 'அம்மாளைத் தந்த அம்மாள்' பற்றி கூற, 'இந்திய இலக்கியச் சிற்பிகள்' வலம் வந்தனர். 'நார் எடுப்போம் போர் விடுப்போம்' என்று முழங்க அனைவரையும் 'துணை'க்கு அழைத்தேன். 'ஒரு தலை ராகம்' என்று இல்லாமல் 'நல்லதோர் வீணை செய்தே' , 'மைத்ரீம் பஜத' பாடினேன்.
'உணவே வா உயிரே வா' என்று 'ரசம்' குடித்து தெம்பாக 'திருக்குளந்தை' சென்று 'கோவிலின் சில தாத்பர்யங்கள்' தெரிந்து கொண்டேன். 'எந்தையும் தாயும்' தந்த 'உயிர் காத்த உறவும் நட்பும்' போற்றினேன்.'பாசியாய்' வழுக்காமல் 'அழகு' கவிதை தந்தேன்.
என் 'மனவெளியில் முன்னுரைகள்' 'புரிதல்கள்' கொண்டதே.
பின்னூட்டம் மூலம் என் பதிவுகளை 'பிச்சைப் பாத்திரம்' என்றில்லாமல் அட்சய பாத்திரமாகவே நிரப்பினர்.நானும் 'நெய்வேலி சந்தனம்' தந்து என் 'கருவிழியே' என அவர்களை நட்பாக்கிக் கொண்டேன்.
'இரண்டு காலும் நாலு காலும்' வைத்து 'புவி தீர்ப்பு விசை'யை அளந்தேன்.
'நீயும் நானும்' என்று 'தொலைந்த தொழிலாளி' யைத் தேடினேன்.
'மௌனத்தின் விடியல்' கொண்டு 'ஜெய்ப்பூர் உதய்ப்பூர்' ரசித்தேன்.
என் எழுத்து 'பரோபகாரம்' என்று இருக்கிறதா என்பதை இனி நீங்கள்தான்
கூற வேண்டும்
நாளையிலிருந்து ஞாயிறு வரை வலைச்சரத்தில் எனது கச்சேரி உள்ளது.ஏழு ஸ்வரங்களிலும் அணி வகுக்கப் போகும் அறிமுகங்களை அனைவரும் வந்து ரசித்து வாழ்த்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
சோதனை மறுமொழி
ReplyDeleteநல்வாழ்த்துக்கள் ராஜி:)!
ReplyDeleteநல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பதவியைப் பொறுப்பேற்றியிருப்பதற்கு அன்பு வாழ்த்துக்கள் ராஜி!
ReplyDeleteஇந்த வார ஆசிரியர் சகோ ராஜிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்... கலக்குங்க!
ReplyDeleteஅட, நம்ம பொண்ணு! . அருமையான பதிவுகளின் அறிமுகத்திற்காக காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள் ராஜி
ReplyDeleteஆசிரியருக்கு வாழ்த்துகள்
ReplyDeleteஅசத்திடீங்க....,கச்சேரிக்கு நானும் தவறாமல் வந்துடுறேன்.வாழ்த்துகள்.
ReplyDeleteகச்சேரி அருமையாக ஆரம்பமாகி உள்ளது
ReplyDeleteவாரம் முழுவதும் ராக மழை பொழிய வாழ்த்துக்கள்
நல்வாழ்த்துகள் லாஜி :-)
ReplyDeleteஏழு ஸ்வரங்களா... பலே...
ReplyDeleteஓ இந்த வாரம் ரேவதி வாராம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா வாழ்த்துக்க்கள் .
ReplyDeleteவாய்பாட்டு கச்சேரியும் உண்டா
மனமார்ந்த வாழ்த்துக்கள். இது பெண்கள் வாரம் போல. வலைச்சரத்தில் நீங்க, தமிழ்மண நட்சத்திரமாக வல்லிம்மா :))
ReplyDeleteதெலுங்கில் ரா என்றால் வாங்க என்று அர்த்தம். ஸம்ஸ்கிருதத்தில் ஜி என்றால் ஜி ஜெயி to conquer வெற்றி அடைதல் என்று அர்த்தம் .
ReplyDeleteSo ராஜி வந்து ஜெயிக்கப்போகிறீர்கள்
"கற்றவையும் கேட்டவையும் முன்னுரையாக........"
ReplyDeleteதலைப்பே அருமையாக உள்ளது.
தங்களின் அனைத்துப் படைப்புகளையும்
அழகாக கோர்வையாகக் கொண்டு வந்து நிறுத்தியுள்ள சுய அறிமுகமும் அருமை.
வாழ்த்துக்கள்!
ஆரம்பமே அமர்க்களம். கலக்குங்க.
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துகள் ராஜி.
ReplyDeleteகச்சேரிக்கு நானும் தினமும் வரேன்ப்பா.
வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅடேங்கப்பா!! தூள் கிளப்புங்க..
ReplyDeleteஆசிரியருக்கு வாழ்த்துகள்! :-)
@ராமலக்ஷ்மி
ReplyDeleteமுதல் வாழ்த்திற்கு நன்றி
@கோபி ராமமூர்த்தி
@மனோ மேடம்
@வெங்கட் நாகராஜ்
வாழ்த்திற்கு நன்றி
@சாகம்பரி
என்னிக்கும் நான் உங்க பொண்ணுதான்.வாழ்த்திற்கு நன்றி
@வைரை சதிஷ்
@திருமதி பி எஸ் ஸ்ரீதர்
ஊக்கத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி
@ரமணி
கட்டாயம் ராக மழை உண்டு சார்.
வாழ்த்திற்கு நன்றி
@அமைதிச்சாரல்
நன்றி சாந்தி
@suryajeeva
ஆமாம். நாளை முதல் ஸ்வரங்கள் ஆரம்பம்.வந்துடுங்க தவறாம.
@தி ரா சா
இத்தனை பேர் ஊக்கம் தர இருக்கும் பொழுது வெற்றிப் படி ஏற தடை என்ன?வாய்ப்பாட்டு கச்சேரி உண்டு.
வாழ்த்திற்கு நன்றி
@புதுகைத்தென்றல்
ஓ!ஆமாம்.போன வாரம் வலைச்சரத்துல ஆதி,அதுக்கும் முன்னாடி ஆச்சி,மாதவி.
மகளிர் சக்தி கொஞ்சம் பலம்தான் போல.வாழ்த்திற்கு நன்றி
@வை கோபாலகிருஷ்ணன் சார்
தங்களின் வாழ்த்து தலைப்பை விட அருமை.நன்றி
@சே குமார்
@ரேகா ராகவன்
@கோவை2தில்லி
@போத்தி
@RVS
@திகழ்
வாழ்த்துக்களுக்கு நன்றி
வாழ்த்துக்கள்.
ReplyDeleteதன்னிலை அறிமுகம் மிக அருமை.
ReplyDeleteவலைச்சரப் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
தொடுக்க உள்ள சரங்களை எண்ணி எண்ணி
வியக்க ஆவலாய் உள்ளோம்.
வாவ லாஜி தூள கிளப்பு.
ReplyDelete@லக்ஷ்மிமா
ReplyDelete@மகேந்திரன்
வாழ்த்துக்களுக்கு நன்றி
@வித்யா சுப்ரமணியம் மேடம்
அப்பாடி! வலைக்குள்ள கூட்டிக்கிட்டு வந்தவங்களை வலை வீசி தேடியும் காணோமேன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்.கிடைச்சுட்டீங்களா?
//தூள் கிளப்பு//
இதுக்குத்தான் அடுத்த பதிவு போட கொஞ்சம் வெயிட் பண்ணினேன்.இதோ கிளப்பிடறேன் மேடம்.