வீணை ஒரு நரம்பு இசைக்கருவி.மிக அழகிய இசைக்கருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது.இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்த கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம். பழங்காலம் முதலே வீணை வாசிக்கப்பட்டு வந்தாலும்,கி.பி. 17ம் நூற்றாண்டில்தான் அது தற்போதைய உருவத்தை அடைந்தது.
வீணை மீட்டு கருவிகளின் வகையைச் சேர்ந்தது. வீணையில் 3-1/2 ஸ்தாயிகள் வாசிக்கலாம். 4 தந்திகள் வாசிப்பதற்கும், 3 தந்திகள் சுருதிக்காகவும் தாளத்திற்காகவும் அமைந்துள்ளன. பலா மரத்தினால் வீணை செய்யப்படுகின்றது.
நான்கு வாசிப்புத் தந்திகள் தண்டின் நுனியிலுள்ள வளையங்களில் முடியப்பட்டு, மெட்டுக்களின் மேல் சென்று மற்றொரு முனையில் பிணைக்கப்பட்டிருக்கும்.பக்கவாட்டில் 3 தாளத் தந்திகள் உண்டு.வலதுகை
ஆள்காட்டி விரல் மற்றும் நடு விரல் கொண்டும்,இடது கை ஆள்காட்டி விரல், நடுவிரல் கொண்டும் வாசிக்கப் படுகிறது.
வலைச்சரத்தில் இன்றைய எனது நிறைவுப் பதிவில் ஆறாம் இடத்தை வகிக்கும் ஸ்வரம 'த' மற்றும் ஏழாம் இடம் வகிக்கும் ஸ்வரம் 'நி' இடம் பெறுகின்றன.
6. தைவதம்: தெய்வ சம்பந்தமானதாலும், தைரியத் தன்மையை அடைந்துள்ளதாலும் ஆறாம் சுரம் தைவதம் எனப்பட்டது. ஸ்வர எழுத்து "த"
7. நிஷாதம்: ஸட்ஜம் முதல் ஆறு ஸ்வரங்களும் தன்னிடம் முடிவு பெற்றதால், ஏழாவது ஸ்வரம் நிஷாதம் எனப்பட்டது. ஸ்வர எழுத்து "நி"
தன், தனது என்ற 'த' நிலையிலிருந்து, இறையிடத்தில் நீயே கதி என்ற 'நி' நிலைக்கு செல்லும் உயிர்கள் உயர்வடைகின்றன.எங்கு முட்டி மோதினாலும் முடிவில் ஆன்மிகமே மனிதனை பக்குவமாக்குகிறது என்பதால் இந்த பதிவில் இசை மற்றும் ஆன்மிகம் சம்பந்தப் பட்ட பதிவுகள் அறிமுகம் செய்யப் படுகின்றன.
இசை ரசிகர்கள் இன்புறுவதற்காக இசை இன்பம் தரும் பதிவு இது.இதில் ஏழு பேர் பயணிக்கின்றார்கள்.உங்களுக்கும் பயணிக்க வேண்டுமா?சென்று பாருங்கள்.
கண்ணன் பாடல்கள் கேட்கவும் பாடல் வரிகள் தெரிந்து கொள்ளவும் இங்கே
செல்லவும்
தமிழ்ப் பாடல்களின் வளர்ச்சிக்காக தமிழிசைக்குரல் ஏற்படுத்தி இருக்கார் இவர்
ராகம் பாடுங்கன்னு தன்னோட ராக ஆலாபனை பதிவுக்கு கூப்பிடறார் இவர்
இசையின் ஈர இயக்கங்கள் அப்படின்னு இசை சம்பந்தமான எல்லாத்தையும்
வகைப் படுத்தி எழுதிக்கிட்டு வராங்க நித்யவாணி.
இசைக் கலைஞர் ஒருவரை சந்தித்தது பற்றி இங்க குறிப்பிட்டு எழுதி இருக்கார் கிருஷ்ணப்ரபு.அந்த இசைக் கலைஞரின் உரையையும் இங்கே தொகுத்திருக்கிறார்.
இசையின் அடுத்த நிலை ஆன்மிகம் ஆகும்.அடுத்து வரப் போறவங்க அந்த நிலைக்கு நம்மை கூட்டிக்கிட்டு போறவங்க.
சிதம்பர ரகசியத்தைப் பத்தி தெரிஞ்சுக்க நம்மை கூப்பிடறார் சிதம்பரம் சரவணன்.
அந்த ரகசியம் தெரிஞ்சுக்கிட்டு வந்தா இந்த குடந்தையூர்காரர் நம்மை அப்படியே திருத்தாளமுடையார் கோவில் கூட்டிக்கிட்டு போறார்.
ஆலய தரிசன்ம் பண்ண போற நமக்கு இவர் எம்பார் வைபவம் சொல்லித் தரார்.
அங்கேருந்து இங்க வந்து சுந்தர காண்டம் தெரிஞ்சுக்கலாம்.உள்ள நுழையும் போதே பதிவில ஆண்டாளும் ரங்கமன்னாரும் நாங்க இருக்கோம்னு சொல்றாப்ல சேவை தராங்க.
கடம்ப வனத்துலேருந்து ஒரு குயில் வந்து தேவி வழிபாடு பற்றி சொல்றாங்க.
பக்தில நவவித பக்தி இருக்கு.அது என்ன என்ன பக்தின்னு சந்தானம் சொல்றார்
இப்படி பக்தி சம்பந்தப்பட்ட விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டு நாம வற்றாத வரமருளும் வடதிருநள்ளாறு போவோம்.அப்பறம் அனுகூலங்கள் அருளும் அனுமனை சேவித்து விட்டு, அங்கிருந்து ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில்
சென்று கோவிலின் அழகை ரசித்து ஓம் நமோ நாராயணாய நமஹ என்று சொல்லி நம் பாவங்களை கரைக்க இறையை நாடுவோம்.
கல்யாணி : கல்யாணி என்றால் மங்களம் என்பது பொருள். நம் மனதில் தோன்றும் பயம் என்னும் இருளை நீக்கி ஒளி தரும் ராகம்.இருளைப் போக்கி இறையை ஒளிர விடுவோம்.
நிதி சால சுகமா....
Artists: EGayathri
எழுத்தும் இசையும்:
ஸ்வரங்களுடன் கூடிய இந்த வார அறிமுகங்களை ரசித்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.இன்னும் எனக்குப் பிடித்த ராகங்கள் பட்டியல் மத்யமாவதி,ரீதிகௌளை,தோடி,தர்பார்,கானடா,பிருந்தாவன சாரங்கா,ஆபேரி,அடாணா என்று நீள்வது போல் வலையில் பதிவுகளின் பட்டியலும் நீள்கின்றன.இருப்பினும் பெருங்கடலின் ஒரு பகுதியில் கால் நனைக்கும் சுகம் போல் நிறைவாக விடை பெறுகின்றேன்.இந்த வார வலைச்சர பணியை செம்மையாக நிறைவேற்ற ஊக்கமளித்து உடன்வந்த அனைவருக்கும் எனது நன்றிகள்.இந்த வாய்ப்பை எனக்களித்த திரு சீனா அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
இசையாய் ஒரு வார கால பயணம் இனிதே நிறைந்திருக்கிறது.
ReplyDeleteநல்ல பல பதிவர்களை அறிமுகம் செய்தது மட்டுமன்றி இசை பற்றிய தகவல்களையும் எங்களுக்கெல்லாம் சொல்லி இருப்பது அழகு.
தொடரட்டும் உங்களது பகிர்வுகள்....
வலைச்சர வாத்தியாரம்மாவிற்கு நன்றிகள். நிறைய புதிய பதிவர்கள் அறிமுகம் நிறைவாக இருந்தது.
ReplyDeleteமங்களமாக முடித்துவிட்டீர்கள். அருமை. :-)
சுஸ்வரமாய் முடித்து விட்ட பணிக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteபல விஷயங்களைத் தொகுத்து இருக்கிறீர்கள். மகிழ்ச்சி ராஜி.
ReplyDeleteநிறைவாக ஸ்வரங்களுடன் எமது இரண்டு பதிவுகளின் சுட்டிகள் தந்து பெருமைப்படுத்திய தங்களுக்கு
ReplyDeleteஇதயம் நிறைந்த நன்றிகள்.
அருமையான தகவல்கள்
ReplyDeleteஸப்த ஸ்வரங்களுடன் கூடிய அறிமுகப்பதிவுகளுடன் இந்த வாரம் மிக அமர்க்களமாக நகர்ந்து செல்ல வழிவகை செய்த உங்களுக்கு எங்கள் பாராட்டுக்கள்.
ReplyDeleteதங்களின் அழகான திட்டமிடுதலையும், கடின உழைப்பையும் கண்டு பிரமித்துப் போனோம்.
எனக்கு மிகவும் பிடித்த, என் பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய, தெய்வாம்சம் பொருந்திய பதிவராக நான் நினைத்து, தினமும் படித்து மகிழ்ந்துவரும் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் மிகச் சிறந்த படைப்புகளில் இரண்டை இன்று அடையாளம் காட்டிச் சிறப்பித்துள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
”வற்றாத வரமருளும் வடதிருநள்ளாறு” +
“அனுகூலங்கள் அருளும் அனுமன்”
இரண்டையும் மீண்டும் ஞாபகப் படுத்தி படிக்கச் செய்தது மிகுந்த மனமகிழ்ச்சி தருவதாக உள்ளது.
சந்தோஷத்தின் எல்லையைக் கண்டது போன்ற பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிறு ஸ்வரம் ‘த’ ‘நி’ இரண்டையும் சேர்ந்து படித்ததும்,
குளுமையான ப த நி (பதனி) அருந்தியது போன்ற திருப்தியும், மயக்கமும் ஏற்பட்டது என்றால் அது மிகையாகாது.
இன்று அறிமுகம் அகியுள்ள மிகச்சிறந்த ஆன்மீகப் பதிவர்கள் அனைவருக்குமே என் அன்பான நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
vgk
கண்ணன் பாடல்கள் நன்று.பகிர்ந்தமைக்கு நன்றிகள் :)
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்... அமர்க்களமான இசை வாரம் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிகமிக நன்றி சகோதரி. பலகாரணங்களால் என்னால் பதிவுக்கே வரமுடியவில்லை. கணிணியையே தொடமுடியாதபடி வேலைப்பளு. அதனால்தான் தாமதமான வருகை.
ReplyDeleteஎன் ஆன்மீக பதிவை அறிமுகப்படுத்தியமைக்கு மீண்டுமொருமுறை என் நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன். சக்திவழிபாட்டின் தொடரை கூட 2மாதம் கழித்துதான் தொடரகூடிய சூழ்நிலை. விரைவில் தொய்வில்லாமல் அனைவரையும் சந்திப்பேன் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்.
இசை பற்றிய தகவல்களை சொல்லி இருப்பது, பதிவர்கள் அறிமுகம் அழகு. தொடரட்டும் பணி. வாழ்த்துக்கள்!
ReplyDeleteVetha. Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com
வெற்றிகரமாக கல்யாணியில் நிஷாதத்தோடு முடுத்திவிட்டீர்கள். கல்யாணிக்கு ஜீவஸ்ரம் "நி" தான். பாலமுரளி கல்யாணியில் இதை முக்கியப்படுத்தி' நி ரஜ தள லோச நி நி கில லோக ஜன நீ நீரஜ...."
ReplyDeleteஎன்ற பல்லவியில் கல்யாணியை அலசி அலங்கரித்துள்ளார். அதுபோல நீ ங்களும் ஒரு வாரமாகமாக ஸ்வர ராக சுதா வாக கலக்கிவிட்டீர்கள். நிறைய பதிவர்கள் அறிமுகம். ஒரு வாரம் போனதே தெரியவில்லை .உங்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமையில் ஒரு பங்கு மட்டும் ஒளிவிட்டது
வீணையை பற்றிய குறிப்பு அருமை.
ReplyDeleteஎன்னுடைய சுந்தரகாண்டம் பதிவையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.
@வெங்கட் நாகராஜ்
ReplyDeleteதங்களைப் போன்றோர் ஊக்கம் இருக்கையில் எல்லாம் சாத்தியப்படும்.
கருத்திற்கும் வருகைக்கும் நன்றி
@RVS
முடிந்த வரையில் புதிய பதிவர்களை குறிப்பிட வேண்டும் என எண்ணினேன்.
கருத்துக்கு நன்றி :-)
@மாதவி
தொடர்ச்சியாக வருகை தந்து என்னை பலமூட்டியமைக்கு நன்றி மாதவி.
@கிருஷ்ணப்ரபு
நன்றி
@இராஜராஜேஸ்வரி
'நி' என்ற நிறைவில் ஜொலிப்பவர்
அல்லவோ தாங்கள்!
@suryajeeva
தொடர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
@வை கோபாலகிருஷ்ணன் சார்
இந்த வாரம் இவ்விதம் நகர்ந்து செல்ல வழி வகுத்தவர் தாங்கள் அல்லவோ?!
தங்களுக்கு மட்டுமன்றி அனைவரின் பெருமதிப்பிற்கும் உரிய இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு நான் தந்த பதிலையும் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கருத்துக்கு நன்றி
@மழை
@சே குமார்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@கடம்பவன குயில்
வருகைக்கு நன்றி.விரைவில் பதிவுகளை தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
@kavithai
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி
@தி ரா ச
பாலமுரளி அவர்களின் கல்யாணி பற்றிய தகவல் அருமை.பகிர்விற்கு நன்றி.பாராட்டிற்கும் நன்றி.
@RAMVI
தங்கள் பதிவைத் திறந்ததும் அசந்து விட்டேன் ஆண்டாள் ரங்கமன்னாரின் கோலம் கண்டு.பதிவும் அதற்கு இணையாகவே உள்ளது.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
வீணையைப் பற்றிய பதிவு அருமை. அத்தோடு என்னுடைய 'தமிழிசைக் குரல் ' பதிவையும் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி. தொடர்ந்து என்னுடைய எழுத்திற்கு ஆதரவு தரவேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteஎன்றும் இசையோடு நன்றிகள்.
ஆஹா.. புதிதான ஒரு அனுபவம் உங்களால் வலைச்சரத்தில்.
ReplyDeleteஸ்வரம் கூட்டிய இனிமையான இசைச்சாரலில் நனைந்து நெகிழ்கிறேன்.
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.பாடல்களுக்கு நன்றி.
ReplyDeleteஇசையின் ஈர இயக்கங்கள் எனும் என் வலைப்பகுதியை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி... நான் மலேசிய வாழ் தமிழிச்சி.... தமிழகத்தில் உள்ளவர்கள் இசையில் கைத்தேர்ந்தவர்கள் என்றே கூற வேண்டும்.... அவர்களைக் காட்டிலும் எனக்கு இசை அறிவு மிகவும் குறைவே.... உங்களைப் போன்றவர்களின் ஆசிர்வாதமும் ஆதரமும் எனக்கு உற்சாகம் ஊட்டுகின்றது.... என் வலைப்பகுதியைத் தொடர்ந்து வாசிக்கும் வாசகர்களுக்கும் மிக்க நன்றி...
ReplyDeleteநன்றி... --நித்தியவாணி--
அருமையான அறிமுகங்கள்... அமர்க்களமான இசை வாரம் வாழ்த்துக்கள்.
ReplyDelete@ப கோபாலகிருஷ்ணன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@ரிஷபன்
வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.தங்கள் பின்னூட்டம் இல்லாது இந்த வாரம் முடிந்து விடுமோ என நினைத்தேன்.இதோ வந்தேன் என்று வந்து விட்டீர்கள்.நன்றி
@shanmugavel
நன்றி
@Nithyavani Manikam
இசைக்கு மொழி ஏது நித்யவாணி?!
அது தமிழர்களையும் தாண்டி தரணி ஆள்வது அல்லவோ? :-))
மேலும் மேலும் பல புதிய இசைப் பதிவுகள் எழுதுமாறு வேண்டுகிறேன்.தங்களிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன் நிதயவாணி.நன்றி
வலைச்சர ஆசிரியர் பணியை மிகச் சிறப்பாக நிறைவேற்றியதற்கு அன்பு வாழ்த்துக்கள் ராஜி!
ReplyDelete@மனோ மேடம்
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம்.தங்கள் கருத்துரை மகிழ்ச்சியளிக்கிறது
ஒரு வாரமாக Dash Board இல் பதிவுகள் வரவில்லை. இன்று தான் கிடைக்கிறது.
ReplyDeleteஎங்களது பதிவை அறிமுகப்படுத்தியதற்கு வலைச்சரத்திற்கும்
எங்கள் ஊர் திருமதி ராஜிக்கும் மனப்பூர்வ நன்றியும் வாழ்த்துக்களும்.
@Rathnavel sir
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி
@லக்ஷ்மிமா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா
அடேயப்பா இசைக்கடலில் முழுகி முத்தெடுத்து விட்டமைக்கு பாராட்டுக்கள். உடனுக்குடன் பின்னூட்டம் இட இயலவில்லை. மன்னிக்கவும்.
ReplyDelete@வித்யா சுப்ரமணியம் மேடம்
ReplyDeleteபாராட்டிற்கு மிக்க நன்றி மேடம்.
பெரியவர்கள் மன்னிப்பு போன்ற வார்த்தைகளை என்னிடத்தில் கூறலாமா?
தாமதான பின்னூட்டமாக நினைக்கவில்லை.தேவையான பின்னூட்டம் அல்லவா?