Thursday, October 27, 2011

சமைக்க தெரியலைன்னா...!!!!!


என்னைக்கு பொழுதே போகல….  அடிக்கடி கரண்ட் கட் வேற. இப்படி பண்ணா எப்படி தான் பொழுது போகுமாம்? இந்த சின்ன பொண்ணு கூட இன்னும் வரல. ச்ச

என்ன சளிச்சுக்குற? கொம்பம் பாவக்கா தானே…. உனக்காக  மறக்காம எடுத்தாந்துட்டேன் பாரு!

அட போ பொண்ணு.

ஏன் என்ன ஆச்சு ஒனக்கு?

பின்ன என்ன பின்ன. ஒரே மாதிரி சமைக்குறேனாம். எதாச்சும் வித்தியாசமா செய்யுன்னு வீட்ல சத்தம் போடுதாக


ஹும்ஹும் வெளங்கிடும். மொதல்ல  பெட்டகம் போயி சமையல் அரிச்சுவடிய கத்துக்கோ. எல்லா விதமான தீப்பெட்டியும் அதுல இருக்கு.

ரொம்ப லொள்ளா போச்சு உன்னோட, சண்டைக்கு வந்துட போறாக. அது பேரு டிப்ஸு!

ஒன்னு ரெண்டு பெசகுறதுதேன். சரி நீ ஜலீலாக்கா வீட்டு பக்கம் போவீயா என்ன? அந்தக்காதேன் டஸ்ஸு புஸ்ஸுன்னு பேரு வச்சு டிஸ்ஸு செஞ்ஜாகலாம்ல


ஹும்ஹும்…… இப்படி பெரிய பேர வச்சா எப்படி தான் வாய்க்குள்ள நுழையுமாம். சரி அத செஞ்சு குடு, எல்லாரும் நல்லாயிருக்குன்னு சொல்லுதாக. பிரியா கிச்சன்க்கு போயிருந்தேன். பாட்சா செஞ்சுச்சு பாரு. அவ்வளவு ஈசியா!!!!!

அட நல்லா இருந்துருவ!!!! அது பாதுஷா,,,,,,,,,,

அய்யே……..அப்டியா?? ஹி…ஹி…ஹி…. என்கிட்ட தப்பா சொல்லிருக்கு பாரேன் ;-)

நீ சொல்றது சாயங்காலம் செய்றதுக்கு. காலைல என்ன செஞ்சு கொடுக்க?

தளிகா புள்ள இருக்கே,…. அது சொன்னபடி கோழிகறிய போட்டு சிக்கன் பிரட் பண்ணு. அழகா பின்னல் பின்னலா போட்ட அழக பார்த்தே சாப்பிடலாம்.

ப்ச்…….. அதெல்லாம் பொழுது சாய்ற நேரம் செஞ்சுகுடுக்குறது!  சரி உன்கிட்ட இப்படி கேட்டா சரிவராது, த்தியானம் அசத்துற மாதிரி சொல்லி கொடு!

என்ன இப்படி வெவரங்கெட்ட தனமா இருக்க?.  அய்யம்மாள் இருக்குல? அந்தபுள்ள பொள்ளாச்சி பிரியாணி சொல்லி கொடுத்துச்சு. அது செய்புள்ள!!! கடப்பாரையோ கடப்பாவோ ரேகா சொன்ன அன்னைக்கு சொல்லிட்டு போச்சே…. அது செய்! ஒரு நாள் அப்சரா செய்யுற மேத்தி தால் மங்குனி செய்யி.

யே அது மங்குனி இல்ல. மக்கனி

இதுக்குதேன் எனக்கு ஒத்துவார பேர வைக்க சொல்றது. பாத்தீயா எதாவது நிம்மதியா சொல்ல முடியுதா??

சரி கோச்சுக்காத. நீ என்ன செய்வ?. அடுத்து என்ன பண்ணலாம்?


ஜிம்பிளா தக்காளி சட்னி செய். ஆனா அன்னு பாதியிலேயே போட்டோ எடுக்காம விட்ட மாதிரி நீயும் பாதியிலேயே முடிச்சுடாத.

ஜோக்கு காட்டாத சின்ன பொண்ணு. மேல சொல்லு

அட யாருடி இவ. சொல்ல மாட்டாவளா? ஞாபகம் வர வர சொல்லிக்குறேன் கப்புன்னு புடிச்சுக்கோ.

ம்ம் சொல்லு

யாராச்சும் விருந்தாளி வந்தா ஒரே மாதிரியா பாயாசம் வைக்காம மேனகா வச்சாப்ல சௌசௌ பாயாசம் வைய்யி. கீதா ஆச்சல் சொன்ன தலப்பாகட்டு பிரியாணி வை.  சாயங்காலத்துக்கு  மிரா செய்யுற கர்நாடகா போண்டா செய்யி.

ஓ இவ்வளவு செய்யலாமா?

பின்ன? ஜிஜி பொண்ணு இருக்குல? அதுகூட அசோக்குமார் அல்வா செஞ்சுட்டு கேட்டுபாரேன் எப்படின்னு?

(வெளங்குன மாரிதேன்) அசோகா அல்வா சொல்றீயா? எனக்கும் செய்ய தெரியும். ஆனா என்னன்ன பொருள் போடணும்னு தெரியாது ;-) கேட்டுபாக்குறேன்! ம். சரி சின்ன பொண்ணு.  நீ காரசட்னி எப்படி வைப்ப?

எனக்கு என்ன தெரியும்? எல்லாம் ராதாராணி சொன்னாப்ல காரசட்னி பண்ணுவேன். டேச்டா இருக்கும். அதுகூட திவ்யாம்மா சொல்லி கொடுத்த கடாய் தோச செஞ்சு குடுத்தேன் பார்ரு…… அட அட….. அப்படிக்கா அய்லேசா சொல்லி கொடுத்த பிஷ் மஞ்சூரியன் செஞ்சு பாரு

ஆசியா காதுல விழுந்தா அவ்வளுவுதேன். அய்லேசா இல்ல. ஆசியா ;-)

ஆத்தி…….. சரி சொல்லிபுடாத…..  

ஹா...ஹா....ஹா.....

 அப்பறம் தக்காளி சூப் செஞ்சு கோப்பைல கொடுத்து தக்காளி சூப்புன்னு சொல்லு. சாதத்துல ஊத்தி குழம்புன்னு சொல்லு. அதான் பாசமலர் சொல்லி கொடுத்த தக்காளி சூப் குழம்பு

ம் நல்ல ஐடியா சின்ன பொண்ணு. வேலையும் மிச்சம் இல்லையா? உன்னால தான் நா பாராட்டு வாங்க போறேன். இனி ஜமாய்ச்சுடுவேனாக்கும்.

மகி புள்ள சொல்லி கொடுத்த சாம்பார் இட்லியையும் ஒருக்கா மறக்காம செஞ்சுடு. நல்லா இருந்துச்சு.

அப்படியா. ஓக்கே செஞ்சு பார்த்துடுதேன்


சரி பாவக்கா பழுத்துடும். இப்ப போயி வெங்காயம் போட்டு செஞ்சுட்டு அதோட மின்மினி சொல்லி கொடுத்த தக்காளி ரசம் ரொம்ப ஜூப்பரா இருக்காம். அத ஒருக்கா செய்யி. ஜோலி கெடக்கு. சீக்கிரமா கஞ்சி காய்ச்சி கொடுக்கணும். நாளைக்கு வாரேன். சரியா? இதுக்கு போயி மூலைய உர்க்காருவாகளா யாராச்சும்? ஹும்

அதானே….  நீ இருக்க என்ன பயம்? :-)

உங்க வீட்டுக்காரவுக வெளியூர்ல தானே இருப்பாக? அப்பன்னா யோகேஷ் சொல்லி கொடுக்குற சமையல்ல செய்ய சொல்லு. எல்லாமே பேச்சுலர்ஸ் சமையல் தான்

ரொம்ப தேங்க்ஸ் பொண்ணு!

பாத்தீயா இப்ப தான் ஞாபகம் வருது. சந்தேகம் வந்தா எங்கிட்ட கேளு! இல்ல மத்தவங்க கிட்ட கேளு! ஜெய்லானி கிட்ட மட்டும் கேட்டுடாத. ஆஹா சமையல்ன்னு வாசகர் சந்தேகத்த தீர்த்து வைக்கிறதா சொல்லி ஊர்ல எல்லாரையும் சுடுதண்ணி போடுறத கூட மறக்க வச்ச மவராசேன்!!

நல்ல வேள சொன்ன. வித்தியாசமா எப்படி இட்லி பண்ணனும்னு கேக்கலாம்னு நெனச்சேன் அவ்வ்வ்வ்வ்வ்
சரி சின்ன பொண்ணு இன்னைக்கு சமையல்லையே போயிடுச்சு. நாளைக்கு ஊர் நெலவரத்தையெல்லாம் சொல்லு. இல்லைன்னா தல வெடிச்சுடும்.

அது சரி.......... சரி வாரேன்…………
*******************
அடுத்த பதிவு- பார்த்ததும் ரசித்தேன் :-)

41 comments:

  1. சமையல் பற்றிய பதிவர்கள் இவ்ளோ பேர் இருக்கிறார்களா.. இதோ இப்பொழுதே ஒரு விசிட் பண்ணிடுறேன்... பகிர்வுக்கு நன்றி சகோ.. இன்றைய வலைச்சரத்தில் அறிமுகமாகிருக்கும் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. அருமையான அறிமுகங்கள். நன்றி சகோ.!

    ReplyDelete
  3. நல்ல அறிமுகங்கள் ஆமினா! எனது வலைப்பூவையும் குறிப்பிட்டமைக்கு நன்றி!

    ReplyDelete
  4. இன்றைய வலைச்சரத்தில் அறிமுகமாகிருக்கும் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அருமையான பகிர்வு..வித்தியாசமாக அறிமுகப்படுத்திருக்கீங்க..நன்றி ஆமினா.

    ReplyDelete
  6. வாசனை தூக்குது ஆமினா :-))

    ReplyDelete
  7. சமையல் நிபுணர்கள், ஆஹா

    ReplyDelete
  8. vasanaiyum rusiyum niramipiya arimukam vaazththukkaL anaivarukkum

    ReplyDelete
  9. அன்பிற்கினிய ஆமினா அவர்களுக்கு எனது பெட்டகம் வலைப்பூ கண்ணுற்று இன்றைய வலைச்சரத்தில் எனது வலைப்பூவையும் குறிப்பிட்டமைக்கு நன்றி!தாங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கு நன்றிகள் பல! தொடர்ந்து அனைத்து பக்கங்களையும் சுவைத்து அவ்வப்போது கருத்துக்கள் தெரிவிக்க விழைகின்றேன். நல்ல அறிமுகங்கள் ஆமினா! அன்புடன் A.S. முஹம்மது அலி

    ReplyDelete
  10. இதை படிச்சிட்டுதான் ஒரு கும்பல் கொலவெறியில என்னைய தேடிகிட்டு இருக்கு .திரும்பவும் முதல்ல இருந்தா ...!!! அவ்வ்வ் :-)))

    ReplyDelete
  11. அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்..!!! :-))

    ReplyDelete
  12. நிறைய சமையல் ராணியுடன் என்னையும் அறிமுகப்ப்டுத்தி இருக்கீங்க

    ரொம்பநன்றி ஆமினா.
    தால் மங்குனி

    இத மட்டும் அந்த கானா போன அந்த்a மங்குனி அமைச்சர் பார்த்தாரு காதுல இரத்தம் வந்துடும் அவருக்கு

    ReplyDelete
  13. இந்த பதிவு படித்ததும் ரசித்தேன்.

    ReplyDelete
  14. நகைச்சுவையா எழுதுறீங்க நல்லா இருக்கு.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  16. சிபி

    நன்றி சகோ

    ReplyDelete
  17. @மாயா
    நன்றி சகோ

    ReplyDelete
  18. @சகோ பாசித்
    நன்றி சகோ

    ReplyDelete
  19. @மகி
    வருகைக்கு நன்றி மகி

    ReplyDelete
  20. @சே.குமார்
    வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி சகோ குமார்

    ReplyDelete
  21. @ஆசியா
    :-)
    வருகைக்கும் ஒன்னும் சொல்லாம போனதுக்கும் நன்றி ஆயிஷா :-)

    ReplyDelete
  22. @அமைதிசாரல்
    //வாசனை தூக்குது ஆமினா :-)) //
    பின்ன சமையல் ராணிகள்ல :-)

    ReplyDelete
  23. @சூர்ய ஜீவா
    ஓஹோ :-)

    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  24. @மாமி
    மிக்க நன்றி மாமி

    ReplyDelete
  25. @சகோதரர் முஹம்மத் அலி
    கண்டிப்பாக பார்வையிடுவேன் சகோ
    வருகைக்கு நன்றிகள்

    ReplyDelete
  26. @ஜெய்
    //இதை படிச்சிட்டுதான் ஒரு கும்பல் கொலவெறியில என்னைய தேடிகிட்டு இருக்கு .திரும்பவும் முதல்ல இருந்தா ...!!! அவ்வ்வ் :-)))//

    இத இத இததான் எதிர்பார்த்தேன் :-)

    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  27. @ஜலீலாக்கா
    நீங்களும் ராணியாச்சே :-)

    அவுக இல்லாத தெகிரியம்தேன் ;-)

    ReplyDelete
  28. @சகோ நிஜாமுதீன்
    ஹா....ஹா...ஹா...
    தலைப்பையே மாத்தியாச்சா
    நன்றி சகோ

    ReplyDelete
  29. @மழை
    ரசித்தமைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  30. @ரத்னவேல் ஐயா
    மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  31. வலைச்சரத்தில் என்னை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி மேடம்.

    ReplyDelete
  32. அறிமுகம் ஆன அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்....

    ReplyDelete
  33. அட நான் தான் ஆமினா...அந்த மங்குனி அமைச்சர்.... ஆளாளுக்கு கூப்பிட கூப்பிட்ட குரலுக்கு வந்துட்டோமுல்ல...
    அம்மணி என்னயும் இந்த வலைச்சரத்துல அறிமுகம் செய்திருக்கீங்க...மனசுக்கு சந்தோஷமா இருக்குதுல்ல...
    ரொம்ப நன்றிங்க அம்மணி....அட சொல்ல மறந்துப்புட்டேன்...வாழ்த்துக்கள் அம்மணி உங்களுக்கும்,எக்ஸ்ட்ராவா மங்குனி அமைச்சர்னு பெயர் சூட்டிய நம்ம ஜலீலா அக்காவுக்கு நன்றியும்....
    சரி வரட்டா....

    அன்புடன்,
    அப்சரா.

    ReplyDelete
  34. ஆமினா மிக அழகாக தொகுத்து கொடுத்து இருக்கிறீரகள். வாழ்த்துக்கள். ஆனா ஒரே ஒரு குறை அதில் " ரியல் சமையல் கிங்கான "என் பெயர் மிஸ்ஸிங்க். பரவாயில்லை. நீங்கள் அமெரிக்கா வரும் போது சமைத்து போடுறேன். அதை சாப்பிட்டு விட்டு எழுதுங்கள்.( என்ன அமெரிக்கா வர டிக்கெட்டா? உங்களுக்கு அதெல்லாம் தேவையில்லை ஏனா நீங்கதான ஒபாமாவுக்கு வீட்டுக்கு ஒட விட்டு வரப் போகும் புதிய தலைவர்

    ReplyDelete
  35. @ரேகா ராகவன்

    வருகைக்கு நன்றி ரேகா

    ReplyDelete
  36. @சகோ வெங்கட்
    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  37. @அப்சரா

    மங்குனி அமைச்சர்ங்குறது இன்னொரு பிரபல பதிவர் பேரு மா. அவரும் கொஞ்ச நாளா காணாம போயிட்டார். அதான் ஜலிலாக்கா அப்படி சொல்லியிருக்காங்க

    ஓடி வந்து கலந்துகிட்டதுக்கு நன்றி அப்சரா... தொடர்ந்து எழுதுங்க!!!

    ReplyDelete
  38. @அவர்கள் உண்மைகள்

    அடடா... கலாய்க்குறதுன்னு முடிவே பண்ணியாச்சா??? கொடுமை :-)

    ReplyDelete
  39. ஓகோ...,ஸாரி ஆமினா...தவறா எழுதிட்டேன்.ஸாரி புரிஞ்சிக்கிட்டேன்.மேத்தி தால் மங்குனி என சொல்லியிருந்ததால் என்னைதான் சொல்றீங்களாக்கும்னு அவசரப்பட்டுட்டேன்.விளங்க வைத்ததற்க்கு நன்றி ஆமினா...

    அன்புடன்,
    அப்சரா.

    ReplyDelete
  40. எல்லா சமையல் ராணிகளின் சங்கமம் .சின்ன பொண்ணு கிட்ட சொல்லுங்க இன்னும் ஒரு ராணிய மறந்திட்டீக என்று அவுக சொல்லிகொடுத்த நாசி கோரெங் எங்க வீட்ல அடிக்கடி இப்ப செய்றேன்

    ReplyDelete
  41. வாழ்த்திட்ட கருத்திட்ட அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல!!

    உங்கள் உற்சாகத்தால் தான் என்னால் தொடர்ந்து செயல்பட முடிந்தது... உங்களின் பங்கு தான் இதில் அதிகம்

    அனைவருக்கும் மிக்க நன்றி சகோஸ்

    ReplyDelete