Monday, November 7, 2011

முதல் சுவடுகளும் மனதிற்கு நெருக்கமானவையும்

அனைவருக்கும் வணக்கம்.

பதிவுலகத்திற்குள் எப்படி வந்தேன் என்பது பற்றிப் பார்த்துவிடுவோம். குமுதத்தில் வெளியான முதல் பத்து பதிவர்கள் பட்டியல் பார்த்துப் பதிவுலகத்திற்கு வந்தவன் நான். வந்த புதிதில் பதிவுகளைப் படிக்க மட்டுமே செய்தேன். அதுவும் ஒரே ஒருவரின் (பரிசல்காரன்) பதிவுகள் மட்டுமே. பின்னூட்டமிடத் தோன்றியதே இல்லை.

பரிசலின் நூல் வெளியீடு பற்றிய அறிவிப்பு வந்ததும் மகிழ்வாக இருந்தது. அவரை அழைத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளத் தயக்கமாக இருந்தது. அதை மீறி அவருடன் அலைபேசியில் தொடர்புகொண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டேன்.

அடுத்தடுத்து இருமுறை பெங்களூர் வந்திருந்தபோது அவரை சந்தித்தேன். ‘நீங்க பதிவுகள் எழுதுங்க’ என்று உற்சாகப்படுத்தினார். எழுதும் ஆசை ஒரு குட்டிப் பூனை போல என்னுள்ளும் எட்டிப் பார்த்தது. அலுவலகத்தில் எளிதில் அனுமதி கிடைக்கவில்லை. தொடர்ச்சியாக சம்பந்தப்பட்டவர்களைத் தொல்லை செய்ததன் பயனாக ஏகப்பட்ட நிபந்தனைகளுக்குப் பிறகு அனுமதி கிடைத்தது.

வலைச்சரம் பற்றி எப்படித் தெரிந்துகொண்டேன்? திருமதி. வித்யா சந்திரசேகரன் அவர்கள் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றபோது அவர் அது குறித்து ஒரு இடுகை இட்டிருந்தார். ‘வலைச்சர ஆசிரியர்’ என்பவர் யார் என்று அவரிடமே கேட்டேன். வலைச்சரம் எனக்கு அறிமுகமானது இப்படித்தான்.

மனதிற்கு நெருக்கமான என்னுடைய சில இடுகைகள் இப்போது:

சம்ஸ்காரா நாவல் பற்றிய பதிவு

அம்பேத்கர் திரைப்படம் பற்றிய பதிவு

பாஸ்கர் சக்தி சிறுகதைகள் பற்றிய பதிவு

சில முதல் சுவடுகள்:

முதல் பதிவு பள்ளி ஆண்டு விழா

முதல் சிறுகதை

பிடிவாதம்

முதன் முதலாக எழுதிய சினிமா சார்ந்த பதிவு

இனிது இனிது

மீண்டும் நாளை சந்திப்போம் நண்பர்களே

இந்த வாய்ப்பை அளித்த சீனா ஐயா அவர்களுக்கு என் நன்றிகள்.

22 comments:

  1. அறிமுகம் நன்று...
    தங்களின் வலைச்சரப்பணி சிறக்க
    வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் கோபி அண்ணா....

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் கோபி.

    ReplyDelete
  4. வலைச்சர ஆசிரியர் ஆனதற்கு வாழ்த்துகள்....

    ReplyDelete
  5. கோபி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வருக...வருக... தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் பாஸ்

    ReplyDelete
  8. ஆவலுடன் காத்திருக்கிறேன்

    ReplyDelete
  9. மன்ம் நிறைந்த வாழ்த்துக்கள்.
    சுய அறிமுகம் அருமையாக உள்ளது.
    நாளை முதல் அசத்துங்கள், நண்பரே!
    ஆவலுடன் காத்திருக்கிறோம்.
    அன்புடன் vgk

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள். பகிர்விற்கு நன்றி. புதிய அறிமுகங்களுக்காக காத்திருக்ககிறேன்.

    ReplyDelete
  11. கலக்குங்கள் .. வாழ்த்துகள்

    ReplyDelete
  12. சுவாரஸ்யம் நிறைந்த தங்களின் இடுகைகள் இன்னும் நிறைய உள்ளனவே
    இன்னும் சிலவற்றையும் குறிப்பிட்டிருக்கலாமே

    ReplyDelete
  13. என்னுடைய வாழ்த்துக்கள் கோபி.

    ReplyDelete
  14. கோபி தங்களின் வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே...உங்களுடன் இணைந்து வரும் நாட்களை கொண்டாட ஆவலுடன் காத்திருக்கும் ஒரு சாதாரணமான பதிவாளரிகளில் நானும் ஒருவன்

    ReplyDelete
  15. @அப்பாதுரை, மிக்க நன்றி

    @மகேந்திரன், மிக்க நன்றி

    @மேவி, மிக்க நன்றி

    @ராம்வி, மிக்க நன்றி

    @வெங்கட் நாகராஜ், மிக்க நன்றி

    @ஜலீலா கமால், மிக்க நன்றி

    @மிடில்கிளாஸ்மாதவி, மிக்க நன்றி

    @விச்சு, மிக்க நன்றி

    @லக்ஷ்மி, மிக்க நன்றி

    @K.S.S. Rajh, மிக்க நன்றி

    @Suryajeeva, மிக்க நன்றி

    @வை. கோபாலகிருஷ்ணன், மிக்க நன்றி

    @சாகம்பரி, மிக்க நன்றி

    @அவர்கள் உண்மைகள், மிக்க நன்றி

    @தோழி பிரஷா , மிக்க நன்றி

    @ராஜி மேடம், மிக்க நன்றி

    @என் ராஜபாட்டை ராஜா, மிக்க நன்றி

    @நிஜாமுதீன், மிக்க நன்றி

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள்,நானும் ராஜி சொன்னதையே வழிமொழிகிறேன்,தினமும் கூட உங்களின் பதிவு ஒன்றை பகிரலாமே!சிம்பிளாக முடிச்சிட்டீங்க சகோ.

    ReplyDelete
  17. @Asia Omar, நாளைக்கும் என் பதிவில் இருந்து சில பதிவுகளுக்கு சுட்டி தருகிறேன்:-)

    ReplyDelete
  18. நல்வாழ்த்துகள் சகோதரர் கோபி. நேற்றே பார்த்திருக்க வேண்டியது. தவற விட்டு விட்டேன். உங்கள் ஒரு வாரப்பயணம் சிறக்கட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  19. @கவிதை, மிக்க நன்றி

    ReplyDelete