Wednesday, November 16, 2011

வலைச்சரத்தில் புதன்..


வணக்கம்..



File:Mercury transit 1.jpg



புதன்கிழமை  நம் சூரிய குடும்பத்தின் முதல் கிரகமும், மிகச்சிறியதுமான  புதன் கிரகத்தின்  பெயரால் வழங்கப்படுகிறது. புதன், சூரியனைச் சுற்றிவரும்  வட்டப்பாதை மிகச் சிறியது, எனவே இது சூரியனை  ஒரு முறை  சுற்ற  எடுத்துக்கொள்ளும் காலம்  88  நாட்கள் மட்டுமே. புதன் சிறியதாக இருந்தாலும், தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் காலம் 59 நாட்களாகும். தோற்றத்தில் நிலவை ஒத்துள்ள இதற்கும் நிலவு மாதிரியே வளிமண்டலம்   கிடையாது. இந்த  கிரகம்  சூரியனுக்கு  மிக  அருகில்  இருப்பதால்  மிகுந்த வெப்பத்துடன்  காணப்படுகிறது. மேலும், சூரியனின் ஓளியில் இது மறைக்கப்படுவதால் இதனைக்காண்பது மிக அறிது. எனவே நம் முன்னோர்கள் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது எனக்கூறியுள்ளார்கள்.






பொன்னான புதன் கிழமையில் படிப்பதைப்பற்றி அறிமுகங்கள்...


நாம் புத்தகத்தை படிக்கும் போது எப்படி கையாளுவோம்? சிலர் அதனை மடித்து வைத்து படிப்பார்கள், சிலர் அதனை சுருட்டி வைத்து படிப்பார்கள். நான் எப்படிப் படிப்பேன் தெரியுமா? எனக்கு முது வலி, கை வலி, கால் வலி வந்தாலும் பரவாயில்லை ஆனால் புத்தகத்துக்கு வலிக்கக்கூடாது என்ற விதமாக புத்தகத்தை வைத்து படிப்பேன். சிலர் புத்தகத்தை இரவல் வாங்கிச்சென்று திருப்பித்தரும்போது அதனை கிழித்து கசக்கி கொடுப்பார்கள். அதை பார்க்கும் போது எனக்கு ரத்தக்கண்ணீர் வரும். திரு.கணேஷ் அவர்களுக்கு எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாமா அவருடைய புத்தகத்தை நேசிப்பவர்களா நீங்கள். பதிவிலிருந்து..



சரி புத்தகம் படித்தாயிற்று, படித்துவிட்டு பேசாமல் இருந்தால் எப்படி விமர்சனம் செய்ய வேண்டமா? ஒரு புத்தகத்தை படிப்பது மிக எளிது அதனை புரிந்து கொண்டு விமர்சனம் செய்வது என்பது மிகக் கஷ்டம்.
புத்தக விமர்சனம் படிக்கும் போதே அந்த புத்தகத்தை படிக்கலாமா? வேண்டாமா? என்று நாம் முடிவு செய்யவேண்டும்.அப்படி புத்தக விமர்சனம் செய்வது ஒரு கலை. திரு கோபி அவர்களுக்கு அது கைவந்த கலை. அவருடைய . மரக்கால்,  ,    பின் தொடரும் நிழலின் குரல்.  ஆகிய நாவல்களின் விமர்சனத்தை படித்ததும் அந்நாவலைகளை உடனடியாக வாங்கி படிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்ததை தடுக்க முடியவில்லை.


பெற்றோரும்உற்றோரும் தம் பிள்ளைகளுக்கு படித்துச் சொல்ல நல்லபுத்தகம் என்கிறார்திரு அப்பாதுரை , அமுதன் குறள்  என்கிற புத்தகத்தை பற்றிசொல்லும் போது.  இன்றைய காலத்திற்கு ஏற்ற நெறிகளை எளிய முறையில அருமையான தமிழில் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  மேலும்,  தமிழர் இலக்கியம். என்ற புத்தகத்தை பற்றி இவர் குறிப்பிடும்பொழுது ஆரிய திராவிட பிரசாரத்துக்கப்பால்  பார்க்கும் தமிழ் ஆர்வம் உள்ள முதிர்ந்த வாசகர்கள் இந்த புத்தகத்தை விரும்புவார்கள் எனக்கூறுகிறார்.




புத்தக விமர்சனதிற்காகவே பதிவு ஆரம்பித்தது போல உள்ளது சிமுலேஷன் படைப்புகள். திரு சுந்தர்ராமன் எந்த ஒரு புத்தகத்தையும் விட்டுவிடவில்லை, இவரது பதிவிலிருந்து  நமக்கு அரிய பல புத்தகங்கள் கிடைக்கின்றன. 


ஒரு புத்தகத்தை படிப்பது உடனே மறந்துவிடுவதற்கல்ல, அழுகையோ சந்தோஷமோ அதை படித்த நினைவுகள் நம்மை பாதிக்க வேண்டும் அப்பொழுதுதான் அது அருமையான புத்தகம் என்று நான் நினைக்கிறேன்.  “கண்மணி குணசேகரனின் நெடுஞ்சாலை வாசித்து முடித்த அன்றிரவு தூக்கம் பிடிக்காமல் நெடுநேரம் விழித்திருந்தேன். நினைவுகள், அழுகையையும் தாண்டி சொல்ல முடியாத மனதை பிசைகிற மாதிரியான வலியை ஏற்படுத்தியது”.  என்று மிக உணர்ச்சிபூர்வமாக கூறியிருக்கிறார் தான் படித்த புத்தகத்தை பற்றி வித்யா அவர்கள் தன்னுடைய நெடுஞ்சாலை.. என்ற பதிவில்.


”வாழ்கை என்பது,ஒரு சில சம்பவங்கள்-பல பல உணருதல்கள். திரெளபதியின் வாழ்வில் அவளுக்கு நிகழ்ந்த/அவளால் நிகழ்ந்த ஒரு சில சம்பவங்களைப் பற்றியே இதுவரை படித்ததுண்டு.ஆனால் அவளது வாழ்கையைக் கண்டது, அவள் உணர்ந்தவைகளை அவளுடன் சேர்ந்து நானும் உணர்ந்தது, அவளுடன் வாழ்ந்தது இதுவே முதல் முறை” என்று இரண்டே வாக்கியங்களில் அந்தப் புத்தகத்தின் தாக்கத்தை மிக அழகாக நம்மையும் உணர வைக்கிறார் மாதங்கி தன்னுடைய இந்திரபிரஸ்தம் என்ற பதிவில்.



முத்துக்கள் பத்து என்ற புத்தகத்தை பற்றி குறிப்பிடும் போது அதில் முதல் கதையும்,கடைசி கதையுமே தன்னை மிகவும் கவர்ந்ததாக சொல்லுகிறார் மோகன் குமார், அவர்கள், “கதை எழுதுவோரில் பலரும் தங்கள் நேரடி அனுபவங்களை எழுதுவர்இதனால் அவர்களும் கதையில் இருப்பர்ஆனால் வண்ண நிலவன் கதைகளில் அவர் இல்லைஅவர் பார்த்த எளிய மனிதர்கள் தான் கதை மாந்தர்கள்திருநெல்வேலி மொழி இவரது எழுத்தில் நீக்கமற நிறைந்திருக்கிறதுகுறிப்பாக அனைத்து கதைகளிலும் மனைவி திருநெல்வேலி தமிழில் கணவனை திட்டுவது....ஆனந்தமாக உள்ளது. ” என்று குறிப்பிடுகிறார் முத்துக்கள் பத்துகதைத் தொகுப்பின் ஆசிரியர் திரு வண்ண நிலவனைப்பற்றி  குறிப்பிடுகையில்.



விருந்தினரை கை கொடுத்து வர வேற்பது தமிழர் பண்பாடுதானா? என்ற கேள்வியை ”புறநானுறு தமிழ் நாகரிகம்” என்னும் நூலில் தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் முன் வைத்து அதற்கு அவர் கூறும் சான்றான புறப்பாடலை பற்றி விளக்குகிறார் முனைவர் திரு.குணசீலன் அவர்கள். கைகொடுத்து வரவேற்பது மேல்நாட்டு நாகரிகமா? அந்நியர் நமக்கு கற்றுத் தந்த நாகரிகமா? தமிழர் நாகரிகம் அல்லவா? என்ற கேவிகளுக்கு விடை தருகிறார் தமது வருக! வருக! என வரவேற்கிறேன்! என்ற தனது பதிவில்.




”வாசிக்கும் புத்தகத்தில் பிடித்த வரிகளை கோடிட்டு வைப்பது வழக்கம், மாராய் இத்தொகுப்பில் விடித்த வரிகள் வரும் பக்கத்தின் நுனியை மடித்து வைத்துக்கொண்டே வந்ததில்…அனேகமாய் எல்லா பக்கங்களும் மடிப்பில் இருந்து தப்பவில்லை என வாசித்து முடித்ததும் அறிந்தேன்” என்கிறார் லேகா  ’யுவன் சந்திரசேகரன்” அவரிகளின் ’மணற்கேணி’ புத்தகத்தை பற்றி சொல்லும் போது. மேலும், ‘யுவனின் எழுத்துக்களில் விரியும் மாய வெளியை வாசித்து உணர்ந்து விட்டால் அதிலிருந்து மீள்வது எளிதல்ல’ என்கிறார்.. லேகாவின் எழுத்தினை உணர வாருங்கள்,  யாழிசை ஓர் இலக்கிய பயணம்  என்ற பதிவிற்கு.



நாளை மீண்டும் சந்திப்போம்.


அன்புடன்
ரமாரவி.

--------------------------------------------------------------------------------------------

47 comments:

  1. மிக்க நன்றி ராம்வி

    ReplyDelete
  2. நன்றி ராம்வி. அருமையான பதிவுகளாக மேலும் அவற்றில் நல்ல பகுதிகளை மேற்கோள் காட்டியும் சொல்லியுள்ளீர்கள். நிறைய உழைத்துள்ளது தெரிகிறது !

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. எனது பதிவையும் அறிமுகம் செய்தமைக்கு மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் இராம்வி.

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. எனது பதிவையும் அறிமுகம் செய்தமைக்கு மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் இராம்வி.

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. புத்தகங்களின் காதலனான எனக்கு மிகுந்த சிரத்தையுடன் கூடிய உங்களின் தொகுப்பு தேனாய் இனித்தது. உங்கள் கவனத்தில் நானும் இருக்கிறேன் என்பதில் மிக மகிழ்ச்சியடைவதுடன், தங்களுக்கு மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் ராம்வி...

    ReplyDelete
  7. எனது பதிவுக்குத் தாங்கள் தந்த இணைப்பு வேலை செய்யவில்லையே..

    பார்த்தீர்களா..?

    http://gunathamizh.blogspot.com/2011/10/blog-post_19.html

    ReplyDelete
  8. ”பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது ”

    - இதற்கு உண்மையான பொருளை இன்று தான் உணர்ந்தேன். நான் ஏதோ ஜாதக ரீதியில் தான் கூறுகின்றனர் என முன்னர் நினைத்தேன்.

    எழுதுதலும், வாசித்தலும் மிகவும் அருமையான பழக்க வழக்கங்களில் ஒன்று. நமது ஆக்கபூர்வ சிந்தைனையைக் கிளற ஒரு தூண்டுகோலாக அமைகின்றது. இன்றைய தினங்களில் ஒரு பக்க கதையை படிப்பதற்கு கூட அதிக நேரம் செலவிட்டுவிட்டோமோ என எண்ணும் உலகினில் நல்லதொரு நூலினை படித்தததோடின்றி அதனை தங்களது வலைப்பூவில் பதிவேற்றிய பதிவர்களை மனமார வாழ்த்துகின்றோம். வலச்சரத்திற்கே உரிய வித்தியாசமான படைப்புகளாய், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோளினைப் பற்றி அறிமுகம் செய்து வைத்தபிறகு உற்சாகமாய சரம் தொடுப்பது “பலே பலே!” அதற்காய் தங்களுக்கு சிறப்பு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்!

    ReplyDelete
  9. மிக அழகாக உங்கள் பணியைச் செய்கிறீர்கள் ராம்வி! வாழ்த்துக்கள்.

    நம் ரசனை ஒத்துப் போவது மேலும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது!

    ReplyDelete
  10. மிக்க நன்றி மோகன் குமார்.

    ReplyDelete
  11. நன்றி இந்திரா..

    ReplyDelete
  12. மிக்க நன்றி, பிரகாஷ்.

    ReplyDelete
  13. மிக்க நன்றி திரு.குணசீலன்.

    தற்போது சரி செய்துவிட்டேன்.நன்றி.

    ReplyDelete
  14. மிக்க நன்றி திரு.கணேஷ்.

    ReplyDelete
  15. மிக்க நன்றி மூர்த்தி.

    ReplyDelete
  16. மிக்க நன்றி மாதவி.

    ReplyDelete
  17. முகத்தில் அடிக்கிறாற் போல் எத்தனை பெரிய புதன்!
    அமுதன் குறள் அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம். அறிமுகத்துக்கு மிகவும் நன்றி.
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. கிழமைக்கு ஏற்றவாறு கோள்களைப் பற்றி சிறு குறிப்பு தருவது புதுமை.. நல்ல முயற்சி.
    சொச்ச மிச்சத்த படிச்சிட்டு வந்து சொல்லுறேன்.

    ReplyDelete
  19. நல்ல அறி முகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. அருமையான விளக்கத்துடன் அறிமுகங்கள்..

    ReplyDelete
  21. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று முன்னோர்கள் சொல்லியுள்ளதை சுவையாக ஆதாரபூர்வமாக அறிவியலுடன் சேர்த்து அழகாக விளக்கியுள்ளது எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

    இன்றைய அனைத்து அறிமுகங்களும் மிகவும் அருமையாகவே உள்ளன.

    அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள். உங்களுக்கு என் பாராட்டுக்கள்.

    வெற்றிநடை போட்டு தொடருங்கள்.
    நாளை குருவாரத்தில் சந்திப்போம்.
    vgk

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. பொன்னான புத்தகங்கள் பற்றி கூற உகந்த நாள், பொன் கிடைத்தாலும் கிடைக்காத புதன் தான்.மிகச் சரியாக பொருத்தி இருக்கிறீர்கள்.
    அறிமுகங்களும் அருமை.பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  24. பதிவர்கள் அறிமுகம் அருமை, எல்லாருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள், ரமாரவி'க்கு நன்றிகள்...!!!

    ReplyDelete
  25. நல்ல அறிமுகங்கள். புதனை பற்றி நல்ல தகவல்களை தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  26. அழகான நாள் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பதை அருமையாக அறிவியலுடன் ஒப்பிட்டு எழுதி... அற்புதமான பதிவர்களை இந்நாளில் அறிமுகப்படுத்திருக்கீங்க... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. அருமையான பதிவர்கள்
    அருமையான பதிவுகள்
    அறிமுகப் படுத்திய விதமும்
    மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. நல்ல பதிவர்கள் - நல்ல பதிவுகள் அறிமுகத்திற்கு நன்றி...

    அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து நண்பர்களுக்கு வாழ்த்துகள்....

    ReplyDelete
  29. புத்திகாரகனான புதன் ஆதிக்கம் உள்ள நாளில் புத்தகம் பற்றிய பதிவுகள் அறிமுகம். நல்ல அறிமுகங்கள்.

    ReplyDelete
  30. ஒவ்வொரு விஷயத்தையும் அருமையாக சொல்லி மேற்கோள் காட்டி பதிவர்களை அறிமுகப்படுதியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  31. மிக்க நன்றி அப்பாதுரை சார்.

    ReplyDelete
  32. நன்றி மாதவன்.

    ReplyDelete
  33. நன்றி லக்‌ஷ்மி அம்மா..

    ReplyDelete
  34. நன்றி அமைதிச்சாரல்.

    ReplyDelete
  35. நன்றி வை.கோ சார்.

    ReplyDelete
  36. மிக்க நன்றி ராஜி.

    ReplyDelete
  37. மிக்க நன்றி மனோ.

    ReplyDelete
  38. நன்றி ராஜேஷ்.

    ReplyDelete
  39. நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  40. நன்றி வெங்கட்.

    ReplyDelete
  41. நன்றி சாகம்பரி மேடம்.

    ReplyDelete
  42. Thank you so much Ramvi! :) Flattered!

    ReplyDelete
  43. புதன் கிரக விவரத்துடன் அழகிய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சகோதரி

    ReplyDelete